உள்ளடக்கத்துக்குச் செல்

ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு மருதம்/ஓரம்போகியார்/3. கள்வன் பத்து

விக்கிமூலம் இலிருந்து
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு

[தொகு]

முதலாவது நூறு மருதம்

[தொகு]

பாடியவர் ஓரம்போகியார்

[தொகு]

3.கள்வன் பத்து (21-30)

[தொகு]

21. முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்

புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும்

தண்டுறை ய்ய்ரன் தளிப்பவும்

உண்கண் பசப்பது எவன்கொல் அன்னாய்

22. அள்ளல் ஆடிய புள்ளிக் கள்வன்

முள்ளி வேரளைச் செல்லும் ஊரன்

நல்லசொல்லி மணந்துஇனி

நீயேன் என்றது எவன்கொல் அன்னாய்

23. முள்ளி வேரளைக் கள்வன் ஆட்டிப்

பூக்குற்று எய்திய புனல் அணி யூரன்

தேற்றஞ் செய்துநப் புணர்ந்தினித்

தாக்கணங்கு ஆவ தெவன்கொல் அன்னாய்.

24. தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனொடு

பிள்லை தன்னும் முதலைத்து அவனூர்

எய்தினன் அகின்று கொல்லோ மகிழ்நன்

பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர்

நலங்கொண்டு துறப்பது எவன்கொல் அன்னாய்.

25. அயல்புறந் தந்த புனிற்றுவளர் பைங்காய்

வயலைச் செங்கொடி கள்வன் அறுக்கும்

கழனி யூரன் மார்புபலர்க்கு

இழைநெகிழ் செல்லல் ஆகும் அன்னாய்.

26. கரந்தைஅம் செறுவில் துணைதுறந்து கள்வன்

வள்ளை மென்கால் அறுக்கும் ஊரன்

எம்மும் பிறரும் அறியான்

இன்னன் ஆவது எவன்கொல் அன்னாய்.

27. செந்நெலம் செறுவில் கதிகொண்டு கள்வன்

தண்அக மண் அளைச் செல்லும் ஊரற்கு

எவ்வளை நெகிழ சாஅய்

அல்லல் உழப்பது எவன்கொல் அன்னாய்.

28. உண்துறை அணங்கிவள் உறைநோய் ஆயின்

தண்சேறு கள்வன் வரிக்கும் ஊரற்கு

ஒண்டொடி நெகிழச் சாஅய்

மெந்தோள் பசப்பது எவன்கொல் அன்னாய்.

29. மாரி கடிகொளக் காவலர் கடுக

வித்திய வென்முளை கள்வன் அறுக்கும்

கழனி ஊரன் மார்புற மரீஇத்

திதலை அல்குல் நின்மகள்

பசலை கொள்வது எவன்கொல் அன்னாய்.

30. வேப்புநனை யன்ன நெடுங்கள் கள்வன்

தண்அக மண்அளை நிறைய நெல்லின்

இரும்பூ உறைக்கும் ஊரற்குஇவள்

பெருங்கவின் இழப்பது எவன்கொல் அன்னாய்.