உள்ளடக்கத்துக்குச் செல்

ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு பாலை/ஓதலாந்தையார்/33.இடைச்சுரப் பத்து

விக்கிமூலம் இலிருந்து
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு

[தொகு]

நான்காவது நூறு பாலை

[தொகு]

பாடியவர்: ஓதலாந்தையார்

[தொகு]

33.இடைச்சுரப் பத்து

[தொகு]

321. உலறுதலைப் பருந்தின் உளிவாய்ப் பேடை

அலறுதலை ஓமை அம்கவட் டேறிப்

புலம்புகொள விளிக்கும் நிலம்காய் கானத்து

மொழிபெயர் பன்மலை இறப்பினும்

ஒழிதல் செல்லாது ஒண்டொடி குணனே.

322. நெடுங்கழை முனிய வேனில் நீடிக்

கடுங்கதிர் ஞாயிறு கல்பகத் தெறுதலின்

வெய்ய வாயினை முன்னே இனியே

ஒண்ணுதல் அரிவையை யுள்ளுதொறும்

தண்ணிய வாயின சுரட்திடை யாறே.

323. வள்ளெயிற்றுச் செந்நாய் வயவுறு பிணவிற்குக்

கள்ளியங் கடத்தினைக் கேழல் பார்க்கும்

வெஞ்சுரக் கவலை நீந்தி

வந்த நெஞ்சம் நீ நயந்தோள் பண்பே.

324. எரிகவர்ந் துண்ட என்றூழ் நீளிடைச்

சிறிதுகண் படுப்பினும் காண்குவென் மன்ற

நள்ளென் கங்குல் நளிமனை நெடுநகர்

வேங்கை வென்ற சுணங்கின்

தம்பாய் கூந்தல் மாஅ யோளே.

325. வேணில் அரையத்து இலையொலி வெரீஇப்

போகில் புகாவுண்ணாது பிறிதுபுலம் படரும்

வெம்பலை அருஞ்சுரம் நலியாது

எம்வெம் காதலி பண்புதுணைப் பெற்றே.

326. அழலவிர் நன்ந்தலை நிழலிடம் பெறாது

மடமான் அமபினை மறியொடு திரங்க

நீர்மருங்கு அறுத்த நிரம்பா இயவின்

இன்னா மன்ற சுரமே

இனிய மறையான் ஒழிந்தோள் பண்பே.

327. பொறிவரித் தடக்கை வேதல் அஞ்சிச்

சிறுகண் யானை நிலந்தொடல் செல்வா

வெயின்முளி சோலைய வேய்உயர் சுரனே

அன்ன ஆர்இடை யானும்

தண்மை செய்தஇத் தகையோன் பண்பே.

328. நுண்மழை தனித்தென நறுமலர் தாஅய்த்

தண்ணிய வாயினும் வெய்ய மன்ற

மடவரல் இந்துணை ஒழியக்

கடமுதிர் சோலைய காடிறத் தேற்கே.

329. ஆள்வழக்கு அற்ற பாழ்படு நனந்தலை

வெம்முனை அருஞ்சுரம் நீந்தி நம்மொடு

மறுதரு வதுகொல் தானே செறிதொடி

கழிந்துகு நிலைய வாக

ஒழிந்தோள் கொண்டஎன் உரங்கெழு நெஞ்சே.

330. வெந்துக ளாகிய வெயிர்கடம் நீந்தி

வந்தனம் ஆயினும் ஒழிகஇனிச் செலவே

அழுத கண்ணள் ஆய்நலம் சிதையக்

கதிர்தெறு வஞ்சுரம் நினைக்கும்

அவிர்கொல் ஆய்தொடி உள்ளத்துப் படரே.