ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு பாலை/ஓதலாந்தையார்/31.செலவழுங்குவித்த பத்து
1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து
11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து
21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து
31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து
41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து
ஐங்குறுநூறு
[தொகு]நான்காவது நூறு பாலை
[தொகு]பாடியவர்: ஓதலாந்தையார்
[தொகு]31.செலவு அழுங்குவித்த பத்து
[தொகு]301. மால்வெள் ளோத்திரத்து மையில் வாலிணர்
அருஞ்சுரம் செல்வோர் சென்னிக் கூட்டும்
அவ்வரை யிறக்குவை யாயின்
மைவரை நாட வருந்துவள் பெரிதே.
302. அரும்பெருள் செய்வினை தப்பற்கும் உரித்தே
பெருந்தோள் அரிவை தகைத்தற்கும் உரியள்
செல்லாய் அயினோ நன்றே
மல்லம் புலம்ப இவள்அழப் பிரிந்தே.
303. புதுக்கலத் தன்ன கனிய ஆலம்
போகில்தனைத் தடுக்கும் வேனில் அருஞ்சுரம்
தண்ணிய இனிய வாக
எம்மொடுஞ் சென்மோ விடலை நீயே.
304. கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய
ஆன்நீர்ப் பத்தல் யானை வெளவும்
கல்லதர்க் கவலை செல்லின் மெல்லியல்
புயல்நெடுங் கூந்தல் புலம்பும்
வயமான் தோன்றல் வல்லா தீமே.
305. களிறு பிடிதழீஇப் பிறபுலம் படராது
பசிதின வருத்தம் பைதறு குன்றத்துச்
சுடர்தொடிக் குறுமகள் இனைய
எனப்பயஞ் செய்யுமோ விடலைநின் செலவே.
306. வெல்போர்க் குருசில்நீ வியன்சுரம் இறப்பின்
பல்கழ் அல்குல் அவ்வரி வாடக்
குழலினும் இனைகுவள் பெரிதே
விழவொலி கூந்தல் மாஅ யோளே.
307. ஞெலிகை முழங்கழல் வயமா வெரூஉம்
குன்றுடை அருஞ்சுரம் செலவயர்ந் தனையே
நன்றில் கொண்கநின் பொருளே
பாவை யன்னநின் துணைபிரிந்து வருமே.
308. பல்லிருங் கூந்தல் மெல்லிய லோள்வயின்
பிரியாய் ஆயினும் நன்றே விரியிணர்க்
கால் எறுழ் ஒள்வி தாஅய
முருகமர் மாமலை பிரிந்தெனப் பிரிமே.
309. வேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்து
செலவுஅயர்ந் தனையால் நீயே நன்று
நின்னயந்து உறைவி கடுஞ்சூல் சிறுவன்
முறுவல் காண்டலின் இனிதோ
இறுவரை நாடநீ இறந்துசெய் பொருளே.
310. பொலம்பசும் பாண்டில் காசுநிரை அல்குல்
இலங்குவளை மெல்தோள் இழைநிலை நெகிழப்
பிரிதல் வல்லுவை ஆயின்
அரிதே விடலை இவள் ஆய்நுதற் கவினே.