ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு முல்லை/பேயனார்/47.தோழி வற்புறுத்த பத்து

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

ஐந்தாவது நூறு முல்லை[தொகு]

பாடியவர்: பேயனார்[தொகு]

47.தோழி வற்புறுத்த பத்து[தொகு]

461. வான்பிசிர்க் கருவியின் பிடவுமுகை தகையக்

கான்பிசிர் கற்பக் கார்தொடங் கின்றே

இனையல் வாழி தோழி எனையதூஉம்

நின்துறந்து அமைகுவர் அல்லர்

வெற்றி வேந்தன் பாசறை யோரே.

462. எதில பெய்ம்மழை காரென மயங்கிய

பேதையம் கொன்றைக் கோதைநிலை நோக்கி

எவன்இனி மடந்தைநின் கலிழ்வே நின்வயின்

தகையெழில் வாட்டுநர் அல்லர்

முகையவிழ் புறவுஇன் நாடிறந் தோரே.

463. புதன்மிசை நறுமலர் கவின்பெறத் தொடரிநின்

நலமிகு கூந்தல் தகைகொளப் புனைய

வாராது அமையலோ இலரே நேரார்

நாடுபடு நன்கலம் தரீஇயர்

நீடினர் தோழிநம் காத லோரே.

464. கண்ணெனக் கருவிளை மலரப் பொன்னென

இவர்கொடிப் பீரம் இரும்புதல் மலரும்

அற்சிரம் மறக்குநர் அல்லர்நின்

நல்தோள் மருவரற்கு உலமரு வோரே.

465. நீர்இருவு அன்ன நிமிர்பரி நெடுந்தேர்

கார்செய் கானம் பிற்படக் கநடைஇ

மயங்கு மலர் அகலம் நீஇனிது முயங்க

வருவர் வாழி தோழி

செருவெம் குருசில் தணிந்தனன் பகையே.

466. வேந்துவிடு விழுத்தொழில் எய்தி ஏந்துகோட்டு

அண்ணல் யானை அரசுவிடுத்து இனியே

எண்ணிய நாள்அகம் வருதல் பெண்ணியல்

காமர் சுடர்நுதல் விளங்கும்

தேமொழி அரிவை தெளிந்திசின் யானே.

467. புனைஇழை நெகிழச் சாஅய் நொந்துநொந்து

இனையல் வாழியோ இகுளை வினைவயின்

சென்றோர் நீடினர் பெரிதெனத் தங்காது

நம்மினும் விரையும் என்ப

வெம்முரண் யானை விறல்போர் வேந்தே.

468. வரிநுணல் கறங்கத் தேரை தெவிட்டக்

கார்தொடங் கின்றே காலை இனிநின்

நேர்இறை பணைத்தோட்கு ஆர்விருந் தாக

வருவர் இன்றுநம் காத லோரே.

469. பைந்தினை உணங்கல் செம்பூழ் கவரும்

வன்புல நாடன் தரீஇய வலன்ஏர்ப்பு

அம்கண் இருவிசும்பு அதிர ஏறொடு

பெயல்தொடங் கின்றே வானம்

காண்குவம் வம்மோ பூங்க ணோயே.

470 இருநிலம் குளிர்ப்ப வீசி அல்கலும்

அரும்பனி அளை இய அற்சிரக் காலை

உள்ளார் காதல ராயின் ஒள்ளிழை

சிறப்பொடு விளங்கிய காட்சி

மறக்க விடுமோநின் மாமைக் கவினே.