உள்ளடக்கத்துக்குச் செல்

ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு நெய்தல்/அம்மூவனார்/14.பாணற்குரைத்த பத்து

விக்கிமூலம் இலிருந்து
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு

[தொகு]

இரண்டாவது நூறு நெய்தல்

[தொகு]

பாடியவர்: அம்மூவனார்

[தொகு]

14.பாணற்கு உரைத்த பத்து

[தொகு]

131. நண்றே பாண கொண்கனது நட்பே

தில்லை வேலி இவ்வூர்க்

கல்லென் கௌவை எழாஅக் காலே.

132. அம்ம வாழி பாண புன்னை

அரும்புமலி கானல் இவ்வூர்

அலரா கின்றுஅவர் அருளு மாறே.

133. யானெவன் செய்கோ பாண ஆனாது

மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்

புல்லென் றனஎன் புரிவளைத் தோளே.

134. காண்மதி பாண இருங்கழிப் பாய்பரி

நெடுந்தேர்க் கொண்க னோடு

தான்வந் தன்றுஎன் மாமைக் கவினே.

135. பைதலம் அல்லேம் பாண பணைத்தோள்

ஐதுஅமைந்து அகன்ற அல்குல்

நெய்தலம் கண்ணியை நேர்தல்நாம் பெறினே.

136. நாணிலை மன்ற பாண நீயே

கோண்ஏர் இலங்குவளை நெகிழ்த்த

கானலம் துறைவற்குச் சொல்உகுப் போயே.

137. நின்னொன்று வினவுவல் பாண நும்மூர்த்

திண்தேர்க் கொண்கனை நய்ந்தோர்

பண்டைத் தந்நலம் பெறுபவோ.

138. பண்பிலை மன்ற பாண இவ்வூர்

அன்பில கடிய கழறி

மென்புலக் கொண்கனைத் தாரா தோயே.

139. அம்ம வாழி கொண்க எம்வயின்

மாண்நலம் மருட்டும் நின்னினும்

பாணன் நல்லோர் நலம்சிதைக் கும்மே.

140. காண்மதி பாணநீ யுரைத்தற் குரிகை

துறைகெழு கொண்கன் பிரிந்தென

விறைகேழ் எல்வளை நீங்கிய நிலையே.