உள்ளடக்கத்துக்குச் செல்

ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு மருதம்/ஓரம்போகியார்/7. கிழத்தி கூற்றுப் பத்து

விக்கிமூலம் இலிருந்து
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

முதலாவது மருதம்[தொகு]

பாடியவர் ஓரம்போகியார்[தொகு]

கிழத்திகூற்றுப் பத்து[தொகு]

61. நறுவடி மாஅத்து விளைந்துகு தீப்பழம்

நெடுநீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம்

கைவண்மத்தி கழாஅர் அன்ன

நல்லோர் நல்லோர் நாடி

வதுவை அயர விரும்புதி நீயே.

62. இந்திர விழவின் பூவின் அன்ன

புந்தலைப் பேடை வரிநிழல் அகவும்

இவ்வூர் மங்கையர்த் தொகுத்துஇனி

எவ்வூர் நின்றன்று மகிழ்நநின் தேரே.

63. பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய்

வாளை நாளிரை பெறூஉம் ஊர

எம்நலம் தொலைவ தாயினும்

துன்னலம் பெருமபிறர்த் தோய்ந்த மார்பே.

64. அலமரல் ஆயமோடு அமர்துணை தழீஇ

நலமிகு புதுப்புனல் ஆடக் கண்டோ ர்

ஒருவரும் இருவரும் அல்லர்

பலரே தெய்யஎம் மறையா தீமே.

65. கரும்புநடு பாத்தியில் கலித்த ஆம்பல்

சுரும்புபசி களையும் பெரும்புன லூர

புதல்வனை ஈன்றஎம் மேனி

முயங்கன்மோ தெய்யநின் மார்புசிதைப் பதுவே.

66. உடலினேன் அல்லேன் பொய்யாது உரைமோ

யாரவள் மகிழ்ந தானே தேரொடு

தளர்நடைப் பதல்வனை யுள்ளிநின்

வளவமனை வருதலும் வெளவி யோனே.

67. மடவள் அம்மநீ இனிக்கொண்டோ ளே

தன்னொடு நிகரா என்னொடு நிகரிப்

பெருநலம் தருக்கும் என்ப விரிமலர்த்

தாதுண் வண்டினும் பலரே

ஓதி ஒண்ணுதல் பசப்பித் தோரே.

68. கன்னி விடியல் கணக்கால் ஆம்பல்

தாமரை போல மலரும் ஊர

பேணா ளோநின் பெண்டே

யாந்தன் அடங்கவும் தான்அடங் கலளே.

69. கண்டனெம் அல்லமோ மகிழ்நநின் பெண்டே

பலராடு பெருந்துரை மலரொடு வந்த

தண்புனல் வண்டல் உய்த்தென

உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே.

70. பழனப் பன்மீன் அருந்த நாரை

கழனி மருதின் சென்னிச் சேக்கும்

மாநீர்ப் பொய்கை யாணர் ஊர

தூயர் நறியர்நின் பெண்டிர்

பேஎய் அனையம்யாம் சேய்பயந் தனமே.