ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு குறிஞ்சி/கபிலர்/30.மஞ்ஞைப் பத்து
1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து
11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து
21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து
31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து
41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து
ஐங்குறுநூறு
[தொகு]மூன்றாவது நூறு குறிஞ்சி
[தொகு]பாடியவர்: கபிலர்
[தொகு]30 மஞ்ஞைப் பத்து
[தொகு]291. மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும்
துறுகல் அடுக்கத்து அதுவே பணைத்தோள்
ஆய்தழை நுடங்கும் அல்குல்
காதலி உறையும் நனிநல் லூரே.
292. மயில்கள் ஆலப் பெருந்தேன் இமிரத்
தண்மழை தழீஇய மாமலை நாட
நின்னினும் சிறந்தனள் எமக்கே நீநயந்து
நன்மனை அருங்கடி அயர
எம்நலம் சிறப்பயாம் இனிப்பெற் றோளே.
293. சிலம்புகமழ் காந்தன் நறுங்குலை யன்ன
நலம்பெறு கையின்என் கண்புதைத் தோயே
பாயல் இந்துணை யாகிய பணைத்தோள்
தோகை மாட்சிய மடந்தை
நீயலது உளரோஎன் நெஞ்சமர்ந் தோரே.
294. எரிமருள் வேங்கை இருந்த தோகை
இழையணி மடந்தையின் தோன்றும் நாட
இனிதுசெய் தனையால் நுந்தை வாழியர்
நன்மனை வதுவை அயர இவள்
பின்னருங் கூந்தல் மலர் அணிந் தோரே.
295. வருவது கொல்லோ தனே வாராது
அவணுறை மேவலின் அமைவது கொல்லோ
புனவர் கொள்ளியின் புகல்வரும் மஞ்ஞை
இருவி யிருந்த குருவி வருந்துறப்
பந்தாடு மகளிரின் படர்தரும்
குன்றுகெழு நாடனொடு சென்றஎன் நெஞ்சே.
296. கொடிச்சி காக்கும் பெருங்குரல் ஏனல்
அடுக்கல் மஞ்ஞை கவரு நாட
நடுநாள் கங்குலும் வருதி
கடுமா தாக்கின் அறியேன் யானே.
297. விரிந்த வேங்கைப் பெருஞ்சினைத் தோகை
பூக்கொய் மகளிரின் தோன்றும் நாட
பிரியினும் பிரிவ தன்றே
நின்னொடு மேய மடந்தை நட்பே.
298. மழைவரவு அறியா மஞ்ஞை ஆலும்
அடுக்கல் நல்லூர் அசைநடைக் கொடிச்சி
தான்எம் அருளாள் ஆயினும்
யாம்தன் உள்ளுபு மற்ந்தறி யேமே.
299. குனற நாடன் குன்றத்துக் கவாஅன்
பைஞ்சுனைப் பூத்த பகுவாய்க் குவளையும்
அம்சில் ஓதி அசைநடைக் கொடிச்சி
கண்போல் மலர்தலும் அரிதுஇவள்
தன்போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே.
300. கொடிச்சி கூந்தல் போலத் தோகை
அம்சிறை விவரிக்கும் பெருங்கல் வெற்பன்
வந்தனன் எதிர்ந்தனர் கொடையே
அம்தீம் கிளவி பொலிகநின் சிறப்பே.