உள்ளடக்கத்துக்குச் செல்

ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு முல்லை/பேயனார்/48.பாணன் பத்து

விக்கிமூலம் இலிருந்து
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு

[தொகு]

ஐந்தாவது நூறு முல்லை

[தொகு]

பாடியவர்: பேயனார்

[தொகு]

48.பாணன் பத்து

[தொகு]

471. எவ்வளை நெகிழ மேனி வாடப்

பல்லிதல் ஊண்கண் பனி அலைக் கலங்கத்

துறந்தோன் மன்ற மறங்கெழு குருசில்

அதுமற்று உண்ர்ந்தனை போலாய்

இன்னும் வருதி என்அவர் தகவே.

472. கைவல் சீறியாழ் பாண நுமரே

செய்த பருவம் வந்துநின் றதுவே

எம்மின் உணரா ராயினும் தம்வயின்

பொய்படு கிளவி நாணலும்

எய்யார் ஆகுதல் நோகோ யானே.

473. பலர்புகழ் சிரப்பின்நும் குருசில் உள்ளிச்

செலவுநீ நய்னதனை யாயின் மன்ற

இன்னா அரும்படர் எம்வயின் செய்த

பொய்வ லாளர் போலக்

கைவல் பாணஎம் மறாவா தீமே.

474. மையறு சுடர்நுதல் விளங்கக் கறுத்தோர்

செய்யரண் சிதைத்த செருமிகு தானையொடு

கதம்பரி நெடுட்ந்தேர் அதர்படக் கடைஇச்

சென்றவர்த் தருகுவல் என்னும்

நன்றால் அம்ம பாணனது அறிவே.

475. நொடிநிலை கலங்க வாடிய தோளும்

வடிநலன் இழந்தஎன் கண்ணும் நோக்கிப்

பெரிதுபுலம் பிணனே சீறியாழ்ப் பாணன்

எம்வெம் காதலொடு பிரிந்தோர்

தம்மோன் போலான் பேரன் பினனே.

476. கருவி வானம் கார்சிறந்த் ஆர்ப்ப

பருவம் செய்தன பைங்கொடி முல்லை

பல்லான் கோவலர் படலைக் கூட்டும்

அன்புஇல் மாலையும் உடைத்தோ

வன்புறை பாண அவர்சென்ற நாடே.

477. பனிமலர் நெடுங்கண் பசலை பாயத்

துனிமலர் துயரமொடு அரும்படர் உழப்போள்

கையறு நெஞ்சிற்கு உயவுத்துணை யாகச்

சிறுவரைத் தங்குவை யாயின்

காண்குவை மன்ஆல் பாணஎம் தேரே.

478. நீடினம் என்று கொடுமை தூற்றி

வாடிய நுதல ளாகிப் பிறிதுநினைந்து

யாம்வெம் காதலி நோய்மிகச் சாஅய்ச்

சொல்லியது உரைமதி நீயே

முல்லை நல்யாழ்ப் பாணமற்று எமக்கே.

479. சொல்லுமதி மாண சொல்லுதோறு இனிய

நாடிடை விலங்கிய எம்வயின் நாள்தொறும்

அரும்பனி கலந்த அருளில் வாடை

தனிமை எள்ளும் பொழுதில்

பனிமலர்க் கண்ணி கூறியது எமக்கே.

480. நினக்குயாம் பாணரும் அல்லேம் எமக்கு

நீயும் குருசிலை யல்லை மாதோ

நின்வெம் காதலி தனிமனைப் புலம்பி

ஈரிதழ் உண்கண் உகுத்த

பூசல் கேட்டு மருளா தோயே.