ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு பாலை/ஓதலாந்தையார்/36.வரவுரைத்த பத்து
1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து
11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து
21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து
31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து
41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து
ஐங்குறுநூறு
[தொகு]நான்காவது நூறு பாலை
[தொகு]பாடியவர்: ஓதலாந்தையார்
[தொகு]36.வரவுரைத்த பத்து
[தொகு]351. அத்த பலவின் வெயில்தின் சிறுகாய்
அருஞ்சுரம் செல்வோர் அருந்தினர் கழியும்
காடுபின் ஒழிய வந்தனர் தீர்கினிப்
பல்லிதல் உண்கண் மடந்தைநின்
நல்லெழில் அல்குல் வாடிய நிலையே.
352. விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுகிஅல் அன்ன விழுப்பிணர்ப்
பெருங்கை யானை இருஞ்சினம் உறைக்கும்
வெஞ்சுரம் அரிய என்னார்
வந்தனர் தோழிநம் காத லோரே.
353. எரிக்கொடி கநலை இய செவ்வரை போலச்
சுடர்ப்பூண் விளங்கும் எந்தெழில் அகலம்
நீ இனிது முயங்க வந்தனர்
மாயிருஞ் சோலை மலையிறந் தோரே.
354. ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றாஇ
மறியுடை மான்பிணை கொள்ளாது கழியும்
அரிய சுரன்வந் தனரே
தெரியிழை அரிவைநின் பண்புதர விரைந்தே.
355. திருந்திழை அரிவை நின்னலம் உள்ளி
அருஞ்செயல் பொருட்பிணி பெருந்திரு உறுகெனச்
சொல்லாது பெயர்தந் தேனே பல்பொறிச்
சிறுகண் யானை திரிதரும்
நெறிவிலங்கு அதர கானத் தானே.
356. உள்ளுதற்கு இனிய மன்ற செல்வர்
யானை பிணித்த பொன்புனை கயிற்றின்
ஒள்ளெரி மேய்ந்த சுரத்திடை
உள்ளம் வாங்கத் தந்தநின் குணனே.
357. குரவம் மலர மரவம் பூப்பச்
சுரன்அணி கொண்ட கானம் காணூஉ
அழுங்குக செய்பொருள் செலவுஎன விரும்பிநின்
அம்கலிழ் மாமை கவின
வந்தனர் தோழிநம் காத லோரே.
358. கோடுயர் பன்மலை இறந்தனர் ஆயினும்
நீடவிடுமோ மற்றே நீடுநினைந்து
துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி
உடிஅத்தெழு வெள்ள மாகிய கண்ணே.
359. அரும்பொருள் வேட்கைய மாகிநின் துறந்து
பெருங்கல் அதரிடைப் பிரிந்த காலைத்
தவநனி நெடிய வாயின இனியே
அணியிழை உள்ளியாம் வருதலின்
அணிய வாயின சுரத்தைடை யாறே.
360. எரிகவர்ந் துண்ட என்றூழ் நீளிடை
அரிய வாயினும் எளிய அன்றே
அவவூறு நெஞ்சம் கலவுநனி விரும்பிக்
கடுமான் திண்தேர் கடைஇ
நெடுமான் நோக்கிநின் உள்ளி வரவே.