ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு பாலை/ஓதலாந்தையார்/39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து
1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து
11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து
21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து
31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து
41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து
ஐங்குறுநூறு
[தொகு]நான்காவது நூறு பாலை
[தொகு]பாடியவர்: ஓதலாந்தையார்
[தொகு]39. உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து
[தொகு]381. பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து
செங்கால் மராஅத்த வரிநிழல் இருந்தோர்
யார்கொல் அளியர் தாமே வார்சிறைக்
குறுங்கால் மகன்றில் அன்ன
உடன்புணர் கொள்கைக் காத லோரே.
382. புன்னொலிக்கு அமர்த்த கண்ணன் வெள்வேல்
திருந்துகழ் காளையொடு அருஞ்சுரம் கழிவோள்
எல்லிடை அசைந்த கல்லென் சீறூர்ப்
புனையிழை மகளிர்ப் பயந்த
மனைகெழு பெண்டிர்க்கு நோவுமார் பெரிதே.
383. கோள்சுரும்பு அரற்றும் நாள்சுரத்து அமன்ற
நெடுங்காண் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி
வல்ஞ்சுரி வாலிணர் கொய்தற்கு நின்ற
மள்ளன் உள்ள மகிழ்கூர்ந்துஅன்றே
பஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும்
அம்சாய் கூந்தல் ஆய்வது கண்டே.
384. சேண்புலம் முன்னிய அசைநடை அந்தணிர்
நும்மொன்று இரந்தனென் மொழிவல் எம்மூர்
ஆய்நயந்து எடுத்த ஆய்நலம் கலின
ஆரிடை இறந்தனள் என்மின்
நேர் இறை முன்கைஎன் ஆயத் தோர்க்கே.
385. கடுங்கண் காளையொட்ய் நெடுந்தேர் ஏறிக்
கோள்வல் வேங்கை மலையிறக்கொழிய
வேறுபல் அருஞ்சுரம் இறந்தனள் அவளெனக்
கூறுமின் வாழியோ ஆறுசெல் மாக்கள்
நல்தோள் நயந்துபா ராட்டி
என்கெடுத்து இருந்த அறனில் யாய்க்கே.
386. புன்கண் யானையொடு புலிவழங்கு அத்தம்
நய்ந்த காதலற் புணர்ந்துசென் றனளே
நெடுஞ்சுவர் நல்லில் மருண்ட
இடும்பை உறவிநின் கடுஞ்சூல் மகளே.
387. அறம்புரி அருமறை நவின்ற நாவில்
திறம்புரி கொள்கை அந்தணீர் தொழுவலென்று
ஒள்தொடி வினவும் பேதையம் பெண்டே
கண்டனெம் அம்ம சுரத்திடை அவளை
இந்துணை இனிதுபா ராட்டக்
குன்றுயர் பிறங்கல் மலையிறந்த் தோளே.
388. நெரும்பவிர் கனலி உர்ப்புசினந் தணியக்
கருங்கால் யாத்து வரிநிழல் இரீஇச்
சிறுவரை இறப்பின் காண்குவை செறிதொடிப்
பொன்னேர் மேணி மடந்தையொடு
வென்வேல் விடலை முன்னிய சுரனே.
389. செய்வினை பொலிந்த செறிகழல் நோந்தாள்
மையணல் காளையொடு பைய இயலிப்
பாவை யன்னஎன் ஆய்தொடி மடந்தை
சென்றனள் என்றிர் ஐய
ஒன்றின வோஅவள் அம்சிலம் படியே.
390. நல்லோர் ஆங்கண் பர்ந்துகை தொழுது
பல்லூழ் மறுகி வனவு வோயே
திண்தோள் வல்வில் காளையொடு
கண்டனெம் மன்ற சுரத்திடை யாமே.