ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு மருதம்/ஓரம்போகியார்/6. தோழி கூற்றுப் பத்து
1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து
11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து
21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து
31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து
41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து
ஐங்குறுநூறு
[தொகு]முதலாவது மருதம்
[தொகு]பாடியவர் ஓரம்போகியார்
[தொகு]6. தோழி கூற்றுப் பத்து (51-60)
[தொகு]51. நீருறை கோழி நீலச் சேவல்
கூருகிர்ப் பேடை வயாஅம் ஊர
புளிங்காய் வேட்கைத்து அன்றுநின்
மலர்ந்த மார்பிவள் வயாஅ நோய்க்கே
52. வயலைச் செங்கொடிப் பிணையல் தைஇச்
செவ்விரல் சிவந்த சேயரி மழைக்கண்
செவ்வாய்க் குறுமகள் இனைய
எவ்வாய் முன்னின்று மகிழ்நநின் தேரே.
53. துறைஎவன் அணங்கும் யாம்உற்ற நோயே
சிறையழி புதுப்புனல் பாய்ந்தெனக் கலங்கிக்
கழனித் தாமரை மலரும்
பழன ஊர நீயுற்ற சூளே.
54. திண்தேர்த் தென்னவன் நல்நாட்டு உள்ளதை
வேனில் ஆயினும் தண்புனல் ஒழுகும்
தேனூர் அன்ன இவள் தெரிவளை நெகிழ
ஊரின் ஊரனை நீதர வந்த
பஞ்சாய்க் கோதை மகளிர்க்கு
அஞ்சுவல் அம்ம அம்முறை வரினே.
55. கரும்பின் எந்திரம் களிறெதிர் பிளிற்ரும்
தேர்வண் கோமான் தேனூர் அன்னஇவள்
நல்லணி நயந்துநீ துறத்தலின்
பல்லோர் அறியப் பசந்தன்று நுதலே.
56. பகல்கொள் விளக்கோடு இராநாள் அறியா
வெல்போர்ச் சோழர் ஆமூர் அன்ன இவள்
நலம்பெறு சுடர்நுதல் தேம்ப
எவன்பயம் செய்யும்நீ தேற்றிய மொழியே.
57. பகலின் தோன்றும் பல்கதிர்த் தீயின்
ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன
இவள் நலம் புலம்பப் பிரிய
அனைநலம் உடையளோ மகிழ்நநின் பெண்டே.
58. விண்டு அன்ன வெண்ணெல் போர்வின்
கைவண் விராஅன் இருப்பை அன்ன
இவள் அணங்கு உற்றனை போறி
பிறர்க்கு மனையையால் வாழி நீயே.
59. கேட்சின் வாழியோ மகிழ்ந ஆற்றுற
மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர
நினக்குமருந் தாகிய யான்இனி
இவட்குமருந்து அன்மை நோம்என் நெஞ்சே.
60. பழனக் கம்புள் பயிர்ப்பெடை அகவும்
கழனியுரநின் மொழிவல் என்றும்
துங்சுமனை நெடுநகர் வருதி
அஞ்சா யோஇவள் தந்தைகை வேலே.