ஐங்குறுநூறு/ஐங்குறுநூறு நெய்தல்/அம்மூவனார்/12.தோழிக்குரைத்த பத்து

விக்கிமூலம் இலிருந்து
ஐங்குறுநூறு பக்கங்கள்

ஐங்குறுநூறு மருதம்

1.வேட்கைப் பத்து 2. வேழப் பத்து 3. கள்வன் பத்து 4. தோழிக்குரைத்த பத்து 5. புலவிப் பத்து 6. தோழி கூற்றுப் பத்து 7. கிழத்தி கூற்றுப் பத்து 8. புனலாட்டுப் பத்து 9. புலவி விராய பத்து 10. எருமைப் பத்து

ஐங்குறுநூறு நெய்தல்

11.தாய்க்குரைத்த பத்து 12.தோழிக்குரைத்த பத்து 13.கிழவற்குரைத்த பத்து 14.பாணற்குரைத்த பத்து 15.ஞாழற் பத்து 16.வெள்ளாங்குருகுப் பத்து 17.சிறுவெண்காக்கைப் பத்து 18.தொண்டிப் பத்து 19.நெய்தற் பத்து 20.வளைப் பத்து

ஐங்குறுநூறு குறிஞ்சி

21.அன்னாய் வாழிப் பத்து 22.அன்னாய்ப் பத்து 23.அம்ம வாழிப் பத்து 24.தெய்யோப் பத்து 25.வெறிப் பத்து 26.குன்றக்குறவன் பத்து 27.கேழற் பத்து 28.குரக்குப் பத்து 29.கிள்ளைப் பத்து 30.மஞ்ஞைப் பத்து

ஐங்குறுநூறு பாலை

31.செலவழுங்குவித்த பத்து 32.செலவுப் பத்து 33.இடைச்சுரப் பத்து 34.தலைவி இரங்கு பத்து 35.இளவேனி்ற் பத்து 36.வரவுரைத்த பத்து 37.முன்னிலைப் பத்து 38.மகட்போக்கியவழித் தாயிரங்கு பத்து 39.உடன்போக்கின்கண் இடைச்சுரத்துரைத்த பத்து 40.மறுதரவுப் பத்து

ஐங்குறுநூறு முல்லை

41.செவிலிகூற்றுப் பத்து 42.கிழவன் பருவம்பாராட்டுப் பத்து 43.விரவுப் பத்து 44.புறவணிப் பத்து 45.பாசறைப் பத்து 46.பருவங்கண்டு கிழத்தியுரைத்த பத்து 47.தோழி வற்புறுத்த பத்து 48.பாணன் பத்து 49.தேர் வியங்கொண்ட பத்து 50.வரவுச்சிறப்புரைத்த பத்து


ஐங்குறுநூறு[தொகு]

இரண்டாவது நூறு நெய்தல்[தொகு]

பாடியவர்: அம்மூவனார்[தொகு]

12. தோழிக்கு உரைத்த பத்து.

111. அம்ம வாழி தோழி பாணன்

சூழ்கழி மருங்கின் நாண்இரை கொளீஇச்

சினைக்கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை

பிரிந்தும் வாழ்துமோ நாமே

அருந்தவம் முயறல் ஆற்றா தேமே.

112. அம்ம வாழி தோழி பாசிலைச்

செருந்தி தாய இருங்கழிச் சேர்ப்பன்

தான்வரக் காண்குவம் நாமே

மற்ந்தோம் மன்ற நாணுடை நெஞ்சே.

113. அம்ம வாழி தோழி நென்னல்

ஓங்குதிரை வெண்மணல் உடைக்கும் துறைவற்கு

ஊரார் பெண்டென மொழிய என்னை

அதுகேட் டன்னாய் என்றனள் அன்னை

பைபய வெம்மை என்றனென் யானே.

114. அம்ம வாழி தோழி கொண்கன்

நேரேம் ஆயினும் செல்குவம் கொல்லோ

கடலின் நாரை இரற்றும்

மடலம் பெண்ணை அவனுடை நாட்டே.

115. அம்ம வாழி தோழி பன்மாண்

நுண்மணல் அடைகரை நம்மோடு ஆடிய

தண்ணந் துறைவன் மறைஇ

அன்னை அருங்கடி வந்துநின் றோனே.

116. அம்ம வாழி தோழி நாம் அழ

நீல இருங்கழி நீலம் கூம்பு

மாலைவந் தன்று மன்ற

காலை யன்ன காலைமுந் துறுத்தே.

117. அம்ம வாழி தோழி நலனே

இன்ன தாகுதல் கொடிதே புன்னை

யணிமலர் துறைதொறும் வரிக்கும்

மணிநீர்ச் சேர்ப்பனை மறவா தோர்க்கே.

118. அம்ம வாழி தோழி யான் இன்று

அறன்இ லாளன் கண்ட பொழுதில்

சினவுவென் தகைக்குறவன் சென்றனென்

பின்நினைந்து இரங்கிப் பெயர்தந் தேனே.

119. அம்ம வாழி தோழி நன்றும்

எய்யா மையின் ஏதில பற்றி

அன்பிலன் மன்ற பெரிதே

மென்புலக் கொண்கன் வாரா தோனே.

120. அம்ம வாழி தோழி நலமிக

நல்ல ஆயின அளியமெல் தோளே

மல்லல் இருங்கழி நீரறல்விரியும்

மெல்லம் புலம்பன் வந்த மாறே.