திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/003.திரு அட்ட மங்கலம்

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



3. அட்ட மங்கலம்[தொகு]

இலக்கணம்:-

அட்ட மங்கலம் என்னும் சொல் அஷ்ட மங்கலம் என்பதன் திரிபு வடிவம். அஷ்ட என்பதற்கு எட்டு என்பது பொருள். பாட்டுடைத் தலைவரைக் காக்குமாறு வேண்டி இறைவனை ஏத்தி எட்டுப் பாடல்களால் பாடப்பெறுவது இப்பனுவல்.

ஒருவனைக் காக்கவென் றிறைவனை ஏத்திய 
எண்வகை அகவல் விருத்தம் புணர்த்தல் 
நண்ணிய அட்ட மங்கலம் என்ப
- பன்னிரு பாட்டியல் 189
கடவுள் காக்க எனக்கவி இருநான்கு
அடைவுற அகவல் விருத்தம் அதனால்
வகுப்பது அட்ட மங்கலம் ஆகும்
- இலக்கணவிளக்கம் 843
கடவுளைப் பாடி அக்கடவுள் தானே
காக்கவென் றகவல் விருத்தம் இருநான்கு
அந்தாதித் தறைகுவ(து) அட்டமங்கலமே
- முத்து வீரியம் 1047
அட்ட மங்கலமே ஆதிக் கடவுளை
ஆசிரிய விருத்தம் எட்டு அந்தாதித்து உரைத்தலே
- பிரபந்ததீபம் 3
உதயதிசை (கிழக்கு)த் தலைவன் இந்திரன்
தென்கிழக்குத் திசைத் தலைவன் அக்கினி
தெற்குத் திசைத் தலைவன் யமன்
தென்மேற்கு திசைத் தலைவன் நிருதி
மேற்கு திசைத் தலைவன் வருணன்
வடமேற்கு திசைத் தலைவன் வாயு
வடக்குத் திசைத் தலைவன் குபேரன்
வடகிழக்குத் திசைத் தலைவன் ஈசானன்

என்னும் இந்த எட்டுத் திக்குப் பாலகர்களை அழைத்து “இப்பிரபஞ்சத்தை உற்பவித்துக் காத்து, மறைத்து, அருளி, அழித்து ஐந்தொழில் இயற்றும் இறைவன் ஒரு திருமேனி தாங்கி இப்பூவுலகில் வந்துள்ளார்கள்; அவர்களைத் தரிசிக்க வாருங்கள்; அவர்களின் மாட்சியைக் காணுங்கள்”, எனப் பாடுவது இப்பனுவலின் நோக்கம்.

இச்சிற்றிலக்கியத்தின் பாட்டுடைத்தலைவர் முழுமுதற் பொருளாகிய எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள். இஃது அந்தாதித் தொடையாகப் பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தால் இயன்றது.

திரு அட்ட மங்கலம்

காப்பு

அறுசீர் ஆசிரிய விருத்தம்

எட்டிதழ் ஆயி ரத்தின்
எழில்மலர்ப் பீட மேறி
மட்டில்மெய்ஞ் ஞானச் செங்கோல்
ஓச்சிடும் சாலை தெய்வ
அட்டியில் மாண்பை வாழ்த்தி
அற்புதத் தமிழால் சீரார்
அட்டமங் கலமே பாட
அருள்மலர்த் தாள்கள் காப்பே!

நூல்

உதயதிசை (கிழக்கு)

பதினான்குசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
உதயதிசை நின்றுமே உலகுகாத் திடுபாலர்
உயர் இந்த்ரன் எனும் பெயரினீர்!
ஓங்கும் ஐராவதக் கரியின்மிசை ஏறிவரும்
உத்தமா! நிற்குஒரு சொல்
மதிகதிர்கள் வையகம் வானகம் உற்பவர்
வானோங்கு அருட் ஜோதியர்
முழுமுதற் பொருளொரு திருமேனி ஏற்றுமே
மண்ணகத் தவத ரித்தே
பதியவர் மெய்வழிச் சாலை ஆண்டவரென்று
பல்கலைக் கதிப ராகி
பைந்தமிழ்ப் பூமியில் பேரருள் அரசாட்சி
புரியெழில் வந்து காண்மின்
புதியதருள் பழமையர் பொன்னரங் கர்பாதம்
போற்றிடில் மீட்சி பெறலாம்
பொன்றாத வாழ்வுமகிழ் குன்றாத வரமருள்
பூரணர் ஞானமணி காண்
(1)

தென்கிழக்கு திசை (அக்கினி)

காணும்தென் கீழ்த்திசைக் காவலா சத்தியும்
கமண்டலம் ஜப மாலையும்
கரமேந்து அக்கினி தேவனே நிற்கொரு
கனிவான சேதி புகல்வேன்
பூணார மார்பினர் பொற்பதிக் கரசர்மெய்ப்
பொன்னரங் கையர் இந்தப்
பூதலத் துற்றுதம் பாதம்மண் தோயநடம்
புரிந்தருள் ஆட்சி செய்து
காணரிய காட்சிகள் கேட்கரிய கேள்விகள்
கருதரிய இன்ப மெல்லாம்
கையேந் தனந்தாதி தேவர்கட் கருளிடும்
காட்சி கண்டிட வம்மினே
'ஆண்குரு' என்றுரைச் சாத்திடும் ஐயரின்
அருளடைய முந்து மின்னே
அன்பருக் கெளியவர் அண்டினோர்க் கபயமளி
அண்ணல் மெய்வழி தெய்வமே!
(2)

தெற்கு திசை (இயமன்)

“தெய்வமே! மெய்வழி சாலையப்பா!” எனத்
தோத்தரித் தோர்கள் தம்மைத்
தீண்டாத தென்திசைக் காவலா ருத்ரனே
செப்புமொழி ஒன்றுண் டுகேள்
வையகம் தனில்நரர் ஆகிவந் தோர்களை
மனுவாக்கி மறுபி றப்பால்
வானவர் ஆக்கவே வந்ததோர் அவதாரம்
மெய்வழி தெய்வம் அறிமின்
பொய்யருக் கேயம ராசன்நீ மெய்த்தெய்வப்
புதல்வர்க்கு தர்ம ராசன்
பூமியில் சாலோக சாமீப சாரூப
சாயுச்யம் தருமெங்கள் கோன்
மெய்வழி தெய்வத்தை வேண்டினோர் யாவரும்
முத்தாபம் தீர்ந்து உய்வர்
முழுமுதல்வர் தனிகைதரு புதல்வரின் தரிசனம்
மெய்ப்பரிசு பெற வம்மினே
(3)

தென்மேற்கு திசை (நிருதி)

வம்மின்தென் மேற்றிசை காவலா! வல்லவா!
வாளேந்து கர நிருதியே!
மகிழ்வோடு நிற்கொரு நற்செய்தி செப்பவே
வந்தனன் செவி யேன்மினே!
செம்மலர்த் தாளினர் திருமறைக ளருள் செய்யும்
தெய்வமெய்ச் சாலை யெம்மான்
செகமுழுது உய்யவெனத் திருவரம் கைக்கொண்டு
சீரோங்கு மெய்ச் சாலையில்
தம்மருள் அரசாட்சி உயிர்மாட்சி புரிமீட்சி
தவமாட்சிக்கி ணையே துகாண்
தம்பதம் கண்டவர் உம்பர்க ளாவரால்
தரிசனைசெய் யெம்பி ரானை
உம்மையே வருகென உவந்தழைத்தேன் உய்ய
உளமுவந் தோடி வருக
ஒருமையுள முடையவர்கள் அருள்மெய்பெற அருள்தருகு
ஓங்கு மெய்வழி ஐயனே!
(4)

மேற்கு திசை (வருணன்)

ஐயனும் அன்னையும் அத்தனும் சற்குரு
ஆகிமெய்த் தெய்வ மாகி
அகிலமிசை வந்தெமை ஆண்டு கொண்டருளுமெய்
ஆண்டவர் புகழ் கூறுதும்
வையக மேற்றிசை வல்லதிக் பாலகர்
வருணரே மதியொளி யினேர்
வண்ணரே மகரா சனம் ஏறு சீலரே!
வார்த்தை சற்றே கேண் மினே!
உய்யஇவ் வுலகுபயிர் வளரவருள் மழைபொழியும்
உத்தமர் எம் ஆண்டவர்
உயிர்ப்பயிர் செழிக்கவே அமுதமழை பொழிதலை
உவந்து கண்டிட வம்மினே
மெய்யாக அந்நாட்டு வித்தெடுத்தே விண்ணில்
விளைவுறச் செய்யும் அண்ணல்
விமலரது கமலபதம் எமதுசிர மிசையுறும்
மெய்ப்பயிர் தழைத்த தம்மே!
(5)

வடமேற்கு திசை (வாயு)

அம்மே வடமேற்கு திக்பால கர்வாயு
அஞ்சனா தேவி கணவா
அண்ட சராசரம் அனைத்தும் படைத்தஇறை
அகில முய்யும் பொருட்டாய்
இம்மா புவிக்குளோர் திருமேனி ஏற்றுமே
இனிதுஅவ தாரம் செய்து
ஏன்று கொண்டோருக்கு இறவா வரம்தனை
ஈயுமிறை மாட்சி விண்ணோர்
பெம்மான் பெருந்துறைப் பேரருள் சிவகொண்டல்
பெருந்தயவு ஏற்க வம்மின்
பிடித்தெமை ஆண்டிடும் பேரரசு எம்சாமி
பொற்பாதம் பணிய வருக
நம்மாருயிர்க்கு ஒரு நற்றுணைவர் நாதர்காண்
நற்றாள்கள் பற்றி னோர்கள்
நமனிருளில் ஒளிபரவ நமதுயிர்கள் கதிபெறும்
நல்வரம் வேண்டி வாழ்த்தும்
(6)

வடக்கு திசை (குபேரன்)

வாழ்கவே வடதிசை காவல குபேரரே!
வளையுருவர் பொன் னிறத்தில்
வளர்செல்வ அதிபரே! மனங்கனிந் தொருவார்த்தை
விள்ளுவேன் கேண்மின் நன்றாய்
ஆழிசூழ் வையகத் தாருயிர்கள் உய்யவே
அகிலாண்ட கோடி யெங்கும்
அருளார் தபோநிதிக் கரசுநா யகமிங்கு
அவதாரம் செய்த ருளியே
ஊழுழி காலமாய் உயிர்மாய்கை நிலைமாற்றி
உவந்து தேகம் ஜீவனும்
உற்றிடும் முத்திகள் ஈயும்வான் வள்ளல்காண்
ஒருபெருங் கருணை தெய்வம்
ஏழாம் பிறப்புடலம் எமையெடுக்க ஈன்ற
ஏராரும் தெய்வ அன்னை
இனியகனி மொழியரசி இணைநிகரில் மாதுபேர்
இணையில் மார்க்கக் காரியே (7)

வடகிழக்கு திசை (ஈசானன்)

மார்க்கங்க ளெல்லாம் மயங்கிநின் றேங்கியே
மறைகள் தெளியா திருக்க
வையக முற்றுமே மதசாதி வெறிமண்டி
மாந்தர் துன்புற்ற காலை
ஆர்க்குமும் மூர்த்திகரம் ஒன்றாகி நின்றோங்கி
அகிலமிசை அவதா ரமே
அரியமெய் வழிசாலை ஆண்டவர்கள் எனுநாமம்
அருளொடே ஏற்ற மாட்சி
பார்க்குள் ஈசான்யதிசைப் பாலரே முக்கண்ணர்
பரமனே சூல பாணி
பாம்பணியர் இவைசூடு பெம்மான் இரங்கியே
பருவுடல் தாங்கி னீரே!
தீர்க்கும்எம வாதையைச் சேர்க்கும் அருளார்நிதித்
தெய்வமே! நித்ய வாழ்வில்
திருவளர அருள்தருகு அமுதரஸச் செல்வரே!
தெய்வமே போற்றி! போற்றி!
(8)

திரு அட்ட மங்கலம் இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!