உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/103.திரு விருத்தம்

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



103. விருத்தம்

[தொகு]

இலக்கணம்:-

ஓர் அரசனின் நாடு, நகரம், வில், வாள், வேல், குதிரை, யானை, கொடி ஆகியவற்றைச் சிறப்பித்துப் பாடும் பொருண்மையுடையது இவ்விலக்கியம். இவ்வுறுப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனி இலக்கியங்களின் பாடுபொருளாக அமைய வேண்டுவது விருத்தவகை இலக்கியங்களுக்கான இலக்கணம் ஆகும். இஃது விருத்தத்தால் பாடப்பெறுவதாகையால் விருத்தம் எனக்கூறலாயிற்று.

பரிசிலை யானை வாள்குடை வேல்செங்
கோலொடு நாடூர் உறுப்பின் அகவல்
விருத்தம் பத்தென வேண்டினர் புலவர்
- பன்னிருபாட்டியல் 178
நிலையார் குடைசெங்கோ லூர்நாடு நீள்வேல்
கொலையார் களிறு குதிரை - சிலைவாள் 
இவற்றின் மேன் மன்விருத்த மீரைந்தாய் வந்தால்
அவற்றின்பேர் நாட்ட லறிவு
- வெண்பாப் பாட்டியல் 43
விருத்த இலக்கணம் வில்வாள் வேல்கொடை
கரிபரி நாடூர் செங்கோல் ஒன்பதும்
பப்பத்து விருத்தமாய் பகுத்துப் பாடலே
- பிரபந்ததீபம்  - 88
விருத்த இலக்கணம் விளம்புங் காலைக்
குடையூர் நாடுகோல் பரிகரி வில்வடி
வாள்வேலொ ன்பான் வகுப்புமன விருத்த
மீரைந் தவ்வவற் றியற்பெயர் கொள்ளுமே 
- தொன்னூல்விளக்கம் 273

இஃதாவது, தவஞானச் செங்கோல் ஓச்சும் பேரரசராகிய பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் அரச அடையாளங்களான மேற்குறித்த பத்து உறுப்புகளுள் திருக்கொடியின் மாட்சியை விதந்தோதுமுகத்தான் இஃது இயற்றப்பெற்றதாமென்க.

திரு விருத்தம்

காப்பு

எழுசீர்க்கழி நெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்

ஒருத்த ராமெய் வழிசாலை ஆண்டவர்கள் வான்புகழ்
விருத்த மாய்க விகள் பாட விழைந்த தெந்தன் சிந்தையே
குருத்தி யானம் செய்து மேஎ ழுதுகோல் கைகொண்டனன்
பொருத்த மாக மெய்ச் செயல் பொருள் தரவே காப்பிதே!

நூல்

எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்

ஆதி மூல ஆவி யேஅ ருட்க னிந்து மேவியே
நீதி யைநி லமி சைநி றுவவே திருவுளம்
வேத வேதி யர்ப ரமர் மெய்வ ழியை நாட்டவே
நாதர் சாலை ஆண்ட வர்கள் என்னு நாம மேற்றனர்! (1)

ஏற்று ஞான மோங்க வேசெங் கோல்செ லுத்து காலையில்
ஏற்றி னார்கிள் நாமமே இலங்கு காவியின் கொடி
நாற்றி சையின் மாந்த ரையேஞான மெய்தக் கூவியே
ஆற்றல்மே விசைந்தசைந்து அருளினா லழைக்குதே! (2)

தேவ தேவர் கோனின் வான நாடித னின்சீர்க் கொடி
ஜீவ ஜோதி யேற்ற வேசி றந்த ருள்க னிந்துமே
ஆவி நின்றொ ளிரு மையர் ஆண்ட வர்தி ருவுளம்
பூவு லக மாந்தர் மெய்ப்பொ ருள் பெறஅ ழைக்குமே (3)

அழைக்கு தேவே தமணி யின்ஆ ழி யில் வி டிவெள்ளி
இழைக்கு தேஒ ளிர்ந்து ஞானம் ஏற்றி டும்வெ ற் றிக்கொடி
அழைக்கு தேநு டங்கி விண்ணில் அசைந்த சைந்து மேவியே!
தழைக்கு மேஅ னந்த ராதி திருக்கு லம்சி றக்குமே! (4)

மேதி னியில் பூந்து றைநன் நாட்டி னில்பூ ராங்கொடி
ஆதி தேவன் வந்து மேஅ ழகொ ளிர ஏற்றுமே!
நீதி நாய கர்தி ருவுள் நீணி லமிக் கோங்கவே
வேதம் யாவு மேதி ரட்டி மெய்ந்நி லைப்போ தம்தரும் (5)

தருவெ னும்வான் கற்ப கம்தா ரணியில் போந்துமே
அருள் பெருகு செங்க மல வாவி யில்வி டிவெள்ளி
திருமி ளிர செவ்வற் கொடி தெய்வ மேவந் தேற்றினார்
குருகு லமெய்ச் சாலை வாழ்வர் க் கேஅ றமெய் யோங்கவே (6)

வேத வள நாடு என்னும் மெய்வ ழித்திருப்பதி
நாதர் எங்கோன் வெண்ட ரள நற்கொ டியை ஏற்றியே
பூத லத்தோர் பொய்ம டிந்து மெய்வி டிந்து உய்யவே
சீத னம்தந் தேஅ ருள்செய் செம்ம லர்த்தாள் போற்றுமே! (7)

போற்று வம்மே பொன்ன ரங்கர் பொன் மலர்த்தாள் பற்றியே
ஏற்றுவம்மே காவிக்கொடியை எங்கணும் மெய்யோங்கவே
கூற்று வன்தன் ஆற்றல் வென்ற கோம கன்மெய் யாண்டவர்
தேற்றுவர்நம் ஜீவன் உய்யத் தென்றிசைக் கையிலாயர்காண் (8)

காண ரிய காட்சி களும் கேட்ட றியாக் கேள்விகள்
பூண ரிய பொற்ப தங்கள் பூட்டி டுமெய்த தெய்வமே
மாண்பு யர்ந்த மூதூர் தன்னில் முத்தர் கொடி ஏற்றியே
பேணி டுவோம் பொன்ன ரங்கர் பொற்ப தங்கள் நெஞ்சிலே! (9)

நெஞ்சி லேநி றைந்து ருகி நிர்ம லர்மெய்ப் போதமே
அஞ்ச லஞ்சல் என்ற ணைக்கும் ஆண்ட வர்கள் மாட்சியே
பஞ்ச வர்கள் நாட்டில் எழில் வெண்கொ டியை ஏற்றுமே
வஞ்ச எமன் வாத னையை வேர றுப்பர் எந்தையே!

திரு விருத்தம் இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!