உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/100.கலியை வெல் வாகை மாலை

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.✫ 100. வாகை மாலை[தொகு]

இலக்கணம்:-

அந்தணன், அரசன், வணிகன், வேளாளன், கணியன், வீரன், துறவியர் ஆகியோர் தத்தம் துறையில் கொண்ட வெற்றிச் சிறப்பைக் கூறுவது வாகை என மொழிவர்.

வெற்றியுரை வாகையாம் வேந்தன்பா வொன்றினால்
உற்றுரைத்து மாலைப் பேரோது.
- வெண்பாப் பாட்டியல் 53
(வேந்தன்பா - ஆசிரியப்பா)
வென்று மிகுபுகழ் விளைத்தல் வாகை
- பிரபந்த மரபியல் 17
வென்று புகழ்படைத்தல் வாகையது மாலை
- சிதம்பரப்பாட்டியல் 38.2.3
மாலையே யகவலால் வழங்கும் மவற்றுட்
டானைப் போர் வெற்றி தனித்தனி புகழ்வது
தானை வஞ்சி வாகையென மூன்றாம்
- தொன்னூல் விளக்கம் 268
பொருபகையை வென்றவா கைமாலை யணிவதைப்
புகல்வ தாசிரிய கவியா
வரும் வாகை மாலையாம்
- பிரபந்ததீபிகை 17

உலகுயிர்கள் அனைத்தும் எமன்கையடக்கம், அந்த எமன் எம்பெருமான் திருக்கரத்தடக்கம். இஃது உயர்வு நவிற்சியன்று, உண்மை. எம்பிரான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் ஈடு, இணை, நிகர், ஒப்புவமையற்ற தபோபல வல்லபத்தால் தங்களை அண்டி, வணங்கி, அன்பு பூண்டு, பக்தி செய்தொழுகும் அடியார்களை எமபயம் கடத்தி, அவர்கட்கு இறவாப் பெருவரம் வழங்கி, பேரின்பசித்திப் பெருவாழ்வில் வாழ்ந்திடச் செய்தருள்பாலிக்கின்றார்கள். அவர்களின் மாட்சியை, மறலி என்கிற எமனுடைய அமலை வென்று வெற்றி மேடேறிய மகோன்னதத்தை, விதந்தோது முகத்தான் இப்பனுவல் இயற்றப்பெறலாயிற்று.

கலியை வெல் வாகை மாலை

காப்பு

நேரிசை வெண்பா

நீடாழி சூழ்உலகில் நேர்நிகரில் நாயகராம்
வாடா நெறியோங்கு மெய்த்தெய்வம் - கோடா
யிதம்கொண்டு ஏமன் மதம்வென்ற மாட்சி
பதம்நன்று பற்றும் துணை.

நூல்

நேரிசை ஆசியப்பா

ஆதியில் இருளாம் கோளமென் றிருந்து
நீதமாய் உசும்பி நிலம்நீர் தீ வளி
உற்பவ மாகி உதிப்பிடம் நால்வகை
பொற்புகு வித்தண் டம்சினை புழுக்கம்
இவ்வகை யானே ஏழ்வகைத் தோற்றம்
செவ்விதின் படைத்து திருவுயர் பிரம்மம்
தருக்கினம் புள்ஊர் வனம்நீர் வாழினம்
பெருக்குயர் காலி மனுவொடு அமரர்
எனப்படைத் தேந்தல் மனுவின் இதயத்
தினிதமர்ந் தருளினிர் அம்மனுக் கடமை (10)
தன்னை அறிந்து தலைவனை அறிதல்
நன்னய மாக நித்தியம் அடைதல்
என்றே வகுத்த இறைபரம் பொருளே!
நன்றே இதனை நனியுண ராத
மாந்தர் மாயை வயத்தின ராகி
தாந்தாம் மறலி தன்கைப் பட்டு
வீய்ந்தனர் ஈதே விரிவுல கெங்கும்
சூழ்ந்தே கலியிருள் செறிந்தது என்று
தாமறிந் திறைநீர் சான்றோர் தம்மை
பூமிசை யனுப்பினிர் பெருவழி காட்ட (20)
வந்தனர் தூதர் தேவர்கள் கர்த்தர்
சிந்தை தெளிந்த சித்தர்கள் நபிமார்
அன்னோர் மாட்சி அறியா மாந்தர்
வன்னெஞ் சினராய் வம்புகள் இயற்றி
இன்னல் புரிந்து எண்ணவொண் ணாத
துன்பம் இயற்றித் தொலைத்துத் தொலைந்தனர்
கல்லால் எறிந்தும் கடுவிடம் ஈய்ந்தும்
சொல்லால் வருத்திச் சிலுவையில் அறைந்தும்
மதவெறி சாதித் திமிர்கொடு அலைந்து
இதமிகு ஏந்தலர் தமக்கிடர் புரிந்து (30)
வதைத்தனர் வருத்தினர் மாதவர் தம்மை
சிதைத்தனர் சித்திர வதைசெய் தழித்தனர்
தேவர்கள் எனினும் தேகம் மானுடம்
ஆவர்கள் அன்றோ அல்லல் பட்டனர்
அவரெலாம் கூடி அரனயன் மாலாம்
தவத்திருச் சன்னிதி அருள்முன் போந்து
சிவபரம் பொருளே! திருவுயர் மாலே!
தவமிகு பிரம்ம சொரூபமே! யாங்கள்
பொய்ம்மலி கலியர சோச்சும் புவிமிசை
மெய்ம்மை நிறுவ விழைந்த காலை (40)
வையக மாந்தர் வன்கொடு மைகள்
செய்தனர் துன்பம் தேகம் உகுத்தோம்
சாதி மதம்இனம் மொழிவெறி அடர்ந்து
மேதினி மிசைமிக மண்டின, ஆகலின்
தேவரீர் இரங்கி அவதரித் தருளுக!
பூவுல கினிலே பொன்னுல கியற்றுக!
வையகம் தன்னில் வானகம் கொணர்க!
மெய்யகம் மேதினி மிசைவளர் வுறுக!
வானகம் சிறக்க ஞானம் பெருகுக!
கலியர சழிந்திடர் காசினி தனில்மெய் (50)
வலிமைமிக் கோங்கிட வளர்கயி லாயம்
பொலிந்திட வருள்க! பொற்புகு உற்பனா!
இன்னனம் வேண்டிட இறைதிரு வுள்ளம்
தென்னகம் மேவித் திருத்தவத் தரசே!
சிவபரம் பொருளோர் திருவுரு வேற்று
பவப்பிணி கடத்தப் பிரம்மமே! போந்தருள்!
அருண்மணி தாங்கள் அவதரித் தினிதே!
பொருண்மெய்ப் புவியோர் பெறவருள் புரிமின்
எனவவர் விழையவும் இணைதுணை நிகரில்
தினம்புதி யவராய்த் திகழுமெம் பெரும! (60)
பூமியின் பவக்கொடும் பாரம்தீர் வுறவும்
சேமமிக் கோங்கும் புதுயுகம் படைக்கவும்
இளஞா யிறுபோன்ம் எழுந்தவ தரித்தீர்!
இளமைப் பருவத் திருவிளை வாடல்
அனைத்தினும் வெற்றி அனைத்தினும் நன்மை
நினைத்தது முடித்த நேரியர் தாங்கள்
தவப்பெருந் திருவினர் தனிகையர் வள்ளல்
உவப்புயர் பாட்டனார் உயர்தகை மாட்சியர்
தேவரீர் தம்மை திருமக வெனக் கொண்(டு)|r}}
ஆவி யெடுத்து அகில வலஞ்செய் (70)
திருவளர் காலம் சிந்தை கூர்ந்து
அருள்வளர் தங்களை அவர்செய் சோதனை
பயம்பசி காமம் பல்வகை யானும்
இயற்றிய அனைத்தினும் எம்பிரான் தாங்கள்
அயர்வில ராகி அடைந்தனிர் வெற்றி
வள்ளல்பாட் டையர் வழங்கிய உத்தியான்
தெள்ளியர் தாங்கள் திருப்பரங் குன்றில்
என்றெங் கெவரும் இயற்றிடாக் கடுந்தவம்
நன்றே புரிந்து நண்ணும்சன் னதங்கள்
வளர்திரு ஞான மாலிநும் பேரருள் (80)
ஒளிசிறந் தோங்க உலகோ ரிடையே
தெளிவுற லாயின திருமறை யாவும்
பன்னிரு சன்னதப் படைக்கலம் ஏற்ற
பொன்னரங் கையரே! பொற்பதம் பணிந்தோர்
வின்னமில் லாத மெய்ப்பொருள் பெற்றனர்
வன்கலி யிருளன் வலிமை பொடிந்தது
காம அரக்கன் கடிதொழிந் தேகினன்
தீமைப் புலைநுகர் தீங்கு மடிந்தது
களவெனும் கொடுமை கழிந்தது சூது
உளத்தினின் றேகி ஒடுங்கி அழிந்தது (90)
பொய்ம்மை பொசுங்கிட பொல்லா மதுவெனும்
மெய்ம்மை ஒன்றே மேன்மை பெற்றது
தீங்கனந் தாதி தேவர்விட் டகன்றது
பாங்குயர் மெய்வழி பரிமளித் தோங்கவும்
எமன்படர் கடந்தது இன்னில மாந்தர்
சமரச நன்னெறி சார்ந்து களித்தனர்
சாவெனும் கொடுமை தவிர்ந்தது மாந்தர்
ஜீவப்ர யாணச் செம்மைபெற் றுய்ந்தனர்
எங்குமெப் போதும் எத்திறத் தாரும்
சங்கா முயற்சி தானெடுத் தலைந்தும் (100)
சாதிச்சிக் கறுக்கத் தாம்வழி பெற்றிலர்
நீதிமெய் தெய்வம் நிலமிசைப் போந்தீர்
சாதி வெறியர் சமயக் கொடியர்
நீதியர் உள்ளம் நடுங்கிடச் செய்த
இனப்படு கொலைகள் எழும்பிடு மதவெறி
தினம்தினம் நடைமுறைச் செயல்கள் ஆயின
மெய்யறி யாத பொய்ப்போ தகர்கள்
வையக மெங்கும் மலிந்தர சாண்டனர்
புரட்சி புரட்சி எனஉல கோர்கள்
வரட்சிமிக் கோங்க வாய்ப்பறை முழக்கி (110)
மக்களைக் கொலைசெய் வன்செயல் மிகுந்தது
தக்கோர் சிந்தை தவித்திட லானது
இத்திறம் மாற ஏந்தல்நும் மருளால்
சத்தியம் நிலவச் சாந்தம் நிலைத்தது
நித்தியம் பெற்றனர் நிற்சார்ந் தோர்கள்
பத்தியர் யாவரும் பரசுகம் பெற்றனர்
ஆயுத மின்றி ஆயிதம் கொண்டு
தாயெனும் தயவுடைத் தனிப்பொருந் தகையே!
பண்பாடு கொண்டு பாரிலுள் ளோர் தம்
புண்பாடு போக்கி பெருவரம் நல்கினீர்! (120)
நின்பா டியம்ப நிலமிசை யார்வலார்?
இன்போடு யாங்கள் இனிதுநல் வாழ்வுற
மண்படா மலரடி வருந்த நடந்த
விண்ணக வேந்தே! வெற்றிமே டேறிய
தென்னா டுடை சிவ பரம்பொருள் தெய்வமே!
என்னாட் டவர்க்கும் இறையே போற்றுதும்
மாகயி லாய வானாட் டிருந்து
பூகயி லாயம் பொருந்தச் சிறந்து
ஈகைப் பெருக்கினால் எம்முயிர் உய்ந்தனம்
வாகை சூடிய மாதவா! போற்றி! (130)
வெற்றிமே டேறிய வேந்தே! போற்றி!
நற்றவா போற்றி! நாதரே போற்றி!
கொற்றவா! கோதகல் கோவே போற்றி
பொற்றாள் பற்றினம் புகல்இது வேகதி
உற்றநற் றுணையே! ஒருதனி முதலே!
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியே!
பெற்றநற் பெரும்உயர் பரிசே!
வெற்றிகை வல்யம்! வெற்றிகை வல்யம்! (138)

கலியை வெல் வாகை மாலை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!