திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/065.அறம் நாற்பது

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



65.நாற்பது[தொகு]

இலக்கணம்:-

எண்ணால் நூற்பெயர் ஏற்றுள்ள இலக்கிய வகைகளுள் நாற்பது என்னும் பெயரிய இவ்விலக்கிய வகையும் ஒன்று. நாற்பது பாடல்களால் அமைய வேண்டுவது இந்நூலாகலான் இது நாற்பது எனப் பெயர் வழங்கப் பெற்றதாயிற்று.

காலம் இடம் பொருள் கருதி நாற்பான்
சால உரைத்தல் நானாற்பதுவே
- இலக்கண விளக்கம் 851
இடம் பொருள் காலம் இவற்றிலொன்றனை
வெண்பா நாற்பதால் விளம்ப னாற்பது
- முத்து வீரியம் 1113
சார்பொருள் காலத்தின் முற்பா நாற்பது
- நவநீதப்பாட்டியல் 10
நாற்பது என்பதுவே நாள் இன்ப துன்பமே
பொருள் இடம் வெற்றி புண்ணியம் எட்டில் ஒன்றை
எட்டு வெண்பாவால் அறைவர் நூலோரே.
- பிரபந்த தீபம் 77
உற்றிடுங் காலமிடமும் 
பொருளுமா கியவிவற் றுள்ளினொவ் வொன்றினைப் 
பொருந்தி நாற்பது வெள்ளையாற்
புகல்வதே நாற்பதாம்.
- பிரபந்த தீபிகை 26

என்னை ஆண்டு கொண்ட குருபரரின் திருப் புகழை நாற்பது வெண்பாக்களால் பாடியது இப்பனுவல்.

அறம் நாற்பது

காப்பு

நேரிசை வெண்பா

பாற்பதமாய் மெய்யமுதைப் பாலிக்கும் பாங்கரசே
நாற்பதுபா டச்சிறியேன் நண்ணினேன் - மாற்றறியாப்
பொன்னே! நவமணியே! பொன்னரங்க நாயகரே!
மன்னேநின் மென்றாள் துணை.

நூல்

கடவுள்

அண்டம் படைத்தளித்து ஆளும் பரம்பொருளே
பிண்டத்து ளும்உறையும் பெற்றியதால் - தொண்டர்
கடவுள்என் றேநாமம் கூறுவர்காண் கண்டு
அடைவதுவே மாந்தர் கடன். (1)

தெய்வம்

நாலாம் பிறப்பிடத்துள் ஏழ்வகைத் தோற்றத்தில்
மேலாம் பிறப்பு மனுஅறிமின் - சீலமாய்
தெய்வம் மனுஇதயம் தன்னில் உறைவதனை
உய்வோர்கண் டேஉணர்வார் காண். (2)

குறிப்பு:- நால்வகை யோனி(பிறப்பிடங்கள்):- 1.புழுக்கம், 2.வித்து, 3.அண்டம், 4.சினை; ஏழ்வகைத் தோற்றம்:- 1.அமரர், 2.மனு, 3.விலங்கு(நடப்பன), 4.புள்(பறவை), 5.ஊர்வன, 6.ஜலம்வாழ் ஜந்துக்கள், 7.தருக்கினம்.

தன்னை உணர்தல்

தன்னில் இறைஉறைதல் தான்காணல் சான்றோர்கள்
தன்னை அறிவதெனச் செப்புவர்காண் - முன்னை
முழுமுதலே, மன்பதைக்குள் போந்தார் குருவாய்
தொழுதுதொடர் வார்உய்வர் காண். (3)

மறுபிறப்பு

நரராய்ப் பிறந்தவரை நன்மனுவாய் மாற்றிச்
சுரராய்ப் பிறப்பிப்பார் தெய்வம் - அரனார்
குருவடிவம் ஏற்றுக் குவலயத்தில் வந்து
அருள்பொழிந்து ஆற்றும் அறி. (4)

மெய்வழிச் சாலை ஆண்டவர்கள்

எந்நாட் டவர்க்கும் இறைவர்திரு வுள்ளிரங்கி
தென்னாட்டில் போந்தார் தெளிந்தறிமின் - அன்னவரே
மெய்வழிச்சா லைஆண்டார் என்னும்நா மத்தார்காண்
உய்வழிதந் தாண்டார் அறி (5)

மூவாசை

மூவாசை யால்மயங்கி மாயை வசப்பட்டுத்
தேவாசை விட்டார் சிறுசெயலோர் - தேவாதி
தேவர் திருவருளால் சிந்தை தெளிந்தவர்கள்
தேவரென ஆனார் தெளிந்து.
(மூவாசை - மண், பெண், பொன்) (6)

அமரர்

தூலப் பிறப்பே பிறப்பென்று எண்ணாதீர்
ஏலவல்லார் ஈவார் மறுபிறப்பு - சீலமாய்
அப்பிறப்புப் பெற்றோர் அமரர் எனப்படுவர்
செப்பமுறத் தேர்ந்து தெளி. (7)

நம்பிக்கைகள்(ஈமான்)

ஒன்றிறைவர் உண்டுமறை தீர்க்கத் தரிசியர்கள்
நன்றுண்டு வாழ்வுமுடி வுண்டிறுதி - மன்றத்தில்
தீர்ப்புநாள் உண்டென்று சீரோங்கு நம்பிக்கை
சீர்பரிசு மானிட ருக்கே! (8)

நித்திய வாழ்வு

இத்தோடு வாழ்வு முடிவதில்லை அப்பாலே
நித்தியவாழ் வுண்டென்று நன்கறிமின் - இத்தேகம்
சிற்றின்பத் தின்நுகர்வால் சீரழியும் நித்தியத்தைப்
பெற்றுப்பே ரின்பம் நுகர். (9)

நான்கு தேகங்கள்

இத்தேகத் திற்கப்பால் சூக்குமம் காரணமும்
வித்தகம காகார்ண தேகமுண்டு - அத்தனெனும்
சற்குருவின் நற்றுணையால் தானவற்றைத் தாம்பெறலாம்
பொற்குருமெய்த் தெய்வம் புகல். (10)

பொய்ஞ்ஞானிகள்

காவியுடை தண்டு கமண்ட லம்தரித்தே
பூவுலகில் எத்தனையோ பேர்திரிவர் - தேவாதி
தேவர் திருமேனி தாங்கிவந்து சற்குருவாய்
ஜீவன்கடைத் தேறஅருள் வார். (11)

மூக்குக்கு வெளியே மூச்சோடாதவர் குரு

நாசிவெளி மூச்சோடா நற்றவரே சற்குருவாம்
வாசிப் பரியேறும் வானவர்மெய் - நேசர்
இமையாத நாட்டத் தமரர்காண் அன்னவரே
எமையாளும் எந்தை பிரான். (12)

ஜென்ம சாபல்யம்

இறைவனே சற்குருவாய் இவ்வுலகிற் போந்து
மறைதெளிய மெய்ப்பொருள்தந் துய்யும் - துறைகாட்டி
ஜீவர்க்கு ஜென்மசா பல்யம் வழங்கியருள்
நாவலர்மெய்த் தெய்வம் அறி. (13)

சற்குருவின் செயல்

ஜீவன் கடைத்தேறச் செய்பவரே சற்குருவாம்
தேவாதி தேவன் தரணியினில் - ஜீவ
குருவாய் வருவார் அருள்வார் உயிர்க்குத்
தருவார்சா யுச்யம் தெளி. (14)

நான்கு பதவிகள்

சாலோகம் சாமீபம் சாரூபம் சாயுச்யம்
மேலாம் நிலைநான்கு மெய்யருள - பூலோகத்
தெம்பெருமான் சாலை இறைகுருவந் தாட்கொண்டார்
நம்பினர்க்கு நாலாம் பதம். (15)

மெய்வழி

வந்தார்மெய்ச் சாலை வளவரசர் மெய்வழியைத்
தந்தாண்டார் தாரணியீர் கேண்மின்கள் - சிந்தா
குலம்தவிர்த்து மெய்யாம் குலமருளி இன்ப
நலம்கொடுத்தார் நற்றேவர் காண். (16)

இறப்பு

சாவென்னில் தன்ஜீவ சக்தி வெளியேறி
ஓவா தலறித் துடிதுடித்து - தீவா
தனையிருளுட் புக்கு யுகங்கோடி காலம்
வினைத்துன்பத் தாழும் செயல். (17)

செத்தவர் அடையாளம்

செத்தவர்கள் மேனி விறைக்கும் புழுக்கும்
மெத்தஅழு கல்நாற்றம் கோரமாம் - வித்து
வெளியேறி யேகனக்கும் வெந்நரகத் துய்க்கும்
தெளிவாய் இதைத்தேர்ந்து கொள். (18)

சாவாமை பெற்றோர் அடையாளம்

சாவாமை ஜீவன் பிரயாணம் சான்றோர்கள்
தேவன் பரிசுத்த மாய்த்திகழும் - பூவாசம்
மென்மை இணக்கம் பசுமஞ்சள் வண்ணமுறும்
தன்மைமண் காக்கும் தெளி. (19)

மூவகை அகமியம்

சாகாக் கலைக்கலா சாலைக்கு வம்மின்கள்
போகாப் புனல்பெற்று உய்யலாம் - வேகாத
காலும் விளக்கமுற மெய்ம்மை துளக்கமுற
சீலம் செழிக்கும் சிறந்து. (20)

செம்பொருள்

ஆழிவாழ் ஐயர் அரங்கர் குருகொண்டல்
ஊழி முதல்வர்மற் றொப்பில்லார் - வாழி
எம்பெருமான் மெய்வழிசா லைஐயர் மெய்யென்னும்
செம்பொருளைத் தந்தார் தெளி. (21)

சர்வ மூலமந்திரம்

வையத்துள் வானகத்தைக் கொண்டுவந்து அண்டினர்க்கு
மெய்யகத்தைத் தந்து விடியவைத்து - மெய்யாக
சர்வமூ லமந்த்ர ரூபகநி ரூபிகராம்
சர்வேசர் சாலை தெய்வம். (22)

ஊண் உறக்கமற்றவர்

ஊணும் உறக்கமற்ற ஒருவர் தனித்தலைவர்
பேணி எமைக்காக்கும் பேராளர் - சாலை
பெருமானார் மெய்ம்மை தருமானார் நித்யம்
அருள்வானோர் என்றே அறி. (23)

முன்பின் இல்லாதவர்

முன்பின்இல் லாத முழுமுதல்வர் சாலைவள்ளல்
அன்பின் இனியர் அறவாழி - உம்பர்பதத்
தெம்மை இனிதேற்றி ஈடில் பதம்வழங்கும்
அம்மையப்பர் ஆண்டவர்கள் காண். (24)

நித்தியம்

ஆயிரம் ஆயிரம் தீர்க்கத் தரிசியர்கள்
பாயிரம் பாடிப் பரவிநின்று - தாயின்
கருணைமிகு மெய்தெய்வ கர்த்தரை வேண்டும்
அருள்நித்யம் என்றே பணிந்து. (25)

தெய்வச் செயல்

கல்லார்க்கும் சர்வகலை கற்பிக்கும் கானவரே
நல்லார்க்கும் நற்பாக்யம் நல்குபவர் - பொல்லாப்
பிணிதவிர்க்கும் பெம்மானே! போற்றிப் பணிந்து
அணிவோம்நும் தாள்கள் சிரம். (26)

மெய்வழி பத்தியங்கள்

சாலை வளநாடர் சற்குருதாள் சார்வதற்கு
ஏலும் தகுதியென்ன என்பீரேல் - சீலம்
புலைகொலை கள்களவு காமம் சினிமா
தொலைபுகையும் மன்னனிக ழேல். (27)

குறிப்பு:- தவிர்க்கப் படவேண்டியவை : கொலை, களவு, கள், காமம், பொய், புலை, சினிமா, புகை, அரசை இகழ்தல்.

நான்கு வருணம்

ஞானநெறி எண்ணாதான் சூத்ரன் அதைநயந்தோன்
ஆனதொரு வைசியனாம் தேட்டுடனே - தான்முனைந்தோன்
சத்திரியன் சற்குருதாள் சார்ந்து பிறப்புற்றோன்
முத்திநெறி அந்தணனாம் காண். (28)

ஞானி

ஆசான்பால் ஆருயிரன் பேகொண்டோன் ஞானியெனும்
ஆசானே ஈசன் அயன்மாலாம் - தேசுயர்ந்த
ஆசான்பால் முப்பொருளும் தத்தம்செய் தோன்சீடன்
மாசில்லா மாணாக்கன் காண். (29)

ஏழ்வகை அமானிதம்

காலம் நியதி கலைவித்தை ராகமொடு
சீலம் புருடன்சுத் தம்மாயை - கோலமாய்
இவ்வேழும் சீதனம் இறைவர் மனுவுக்கே
செவ்வையாய்த் தந்தார் தெரி. (30)

அறிவின்பம்

ஆறறிவு பெற்றமனு ஐயறிவு தன்னுகர் வால்
ஊறுபட்டுப் போனான்காண் உற்றறிமின் - ஆறாம்
அறிவின்பம் ஒன்றுண்டு அஃதறி கல்லான்
அறிவிருந்தும் இல்லாத வன். (31)

தன்னை அறிதல்

தன்னை அறிந்து தலைவனைத் தானறிதல்
முன்னைப் பெரியோர் மொழிந்த நெறி - முன்னை
முழுமுதலே சற்குருவாய்மேதினியிற் போந்து
செழுங்கலையைத் தந்தருள்வார் தேர். (32)

ஐவழிக்கப்பால்

ஐவழியின் தன்னுகர்வுக் கேதாங்கா தேஉடலம்
மெய்வழியின் செய்வழிக்கு மேவியதால் - தெய்வம்வந்து
உய்வழியைக் காட்டி உவந்து உயிரின்பம்
எய்து(ம்)துறை கூட்டும் இனிது. (33)

சிவபெருமான் உறைவிடம்

தன்னில் இறைதன்னைக் காட்டிடுவார் சற்குருகாண்
தன்ஜீவ னுட்சிவத்தைத் தானுணர்வார் - அன்னியமாய்
விண்வெளியில் பொன்சிலையில் காணவிழையும் முயற்சி
திண்ணமாய் வீணென் றறி. (34)

தூல, ஜீவ, ஞான பண்டிதர்

தூலபண் டிதர்என்போர் தூலப் பிணிதவிர்ப்பார்
ஞாலத்தில் நல்லுயிர்க்கு உற்றபிணி - சீலமாய்த்
தீர்ப்பவரே ஜீவ பண்டிதராம் மெய்யருள்வார்
ஆர்ஞான பண்டிதராம் காண். (35)

அனன்னியம்

ஆண்ட குருபரர்பால் அன்னியம் மின்றியே
வேண்டிப் பணிந்தோர்வெல் வார்மாயை - ஆண்டவர்பால்
அன்பும் பணிவும் பயபக்தி கொண்டிடுதல்
இன்பமிகு சாலை நெறி. (36)

மெய்ஞ்ஞானம்

ஞான நெறியென்று நம்பிப் பலரும்பொய்ஞ்
ஞானியரால் கெட்டோர் பலகோடி - வானவரே
சற்குருவாய் வந்தருளி ஜீவனைக் காட்டவல்லார்
விற்பனர்மெய்ஞ் ஞானம் விளம்பு. (37)

ஜென்ம சாபல்யர்

ஜீவனைக் கண்டோர்கள் ஜென்மசா பல்யரென
தேவன் அறிவித்துக் காட்டிடுவார் - பூவுலகில்
மெய்வழிதெய் வம்வந்து உய்வழியில் கூட்டி
செய்திறனைப் போற்றி மகிழ். (38)

நாம் செய் பணி

பிறவா நெறியருளும் பெம்மானைப் போற்றி
இறவா நிலையெய்து மின்கள் - மறவாது
சாலைஆண் டார்பாதம் சார்ந்திருந்து வாழ்வதுவே
ஞாலத்தில் நாம்செய் பணி. (39)

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

சாதியுட் பேதமிலை சர்வமத மும்ஒன்றே
நீதி இதைநிறுவி ஓர்இறையாய் - வேதியர்
மெய்வழி ஆண்டவர்கள் செய்திறத்திற் கொப்புவமை
வையகத்தில் என்றெங்கும் இல். (40)

அறம் நாற்பது இனிது நிறைவு பெற்றது

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!