உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/071.அருட் பதிற்றந்தாதி

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



71. பதிற்றந்தாதி

[தொகு]

இலக்கணம்:-

முதற்பாடலில் அந்தத்தில் (முடிவில்) நிற்பது அடுத்த பாடலின் முதலில் வருமாறு பாடல் புனைவது அந்தாதி எனப்படும். எழுத்தோ அசையோ அல்லது சீரோ அந்தாதியாய் வரத்தொடுப்பது இவ்விலக்கியவகை.

வெண்பா பத்து கலித்துறை பத்துப்
பண்புற மொழிதல் பதிற்றந் தாதி
- இலக்கணவிளக்கம் 841
ஈரைந்து வெண்பாக் கலித்துறை யீரைந்
தரும் பொருள் புலப்பட வந்தாதித்துப்
பாடுவனபதிற் றந்தாதி யாகும் 
- முத்துவீரியம்  - 1083
பதிற்றந் தாதியே பாடவல் லோர்கள்
பப்பத்து வெண்பா பப்பத்துக் கலித்துறை
பொருள் தன்மை தோன்ற அந்தாதித்துப் புகல்வர் 
- பிரபந்த தீபம்  - 84

வெண்பா அல்லது கலித்துறை யாப்பில், பத்துப் பாடல்கள் அந்தாதித் தொடையில் அமையுமாறு பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் திருப்புகழ்பதிற்றந்தாதியாகப் பாடப்பெற்றுள்ளது.

அருட் பதிற்றந்தாதி

காப்பு

நேரிசை வெண்பா அந்தாதித் தொடை

பதியாகி நின்று பசுவான எங்கள்
நிதியான மெய்வழித் தேவே! - இதமாய்ப்
பதிற்றந் தாதி யெனும்பனுவல் பாட
பதியுங்கள் பாதம் துணை

நூல்

நேரிசை வெண்பா

துணையொன்றே ஆதி இறையே! திருவே!
இணைநிகரில் எங்கோவே! எம்மை - அணைத்தாண்டு
சாவா வரமருளும் சாயுச்யர் பொன்னரங்கத்
தேவாநும் தாளே கதி. (1)

கதிதந்து ஆளும்மெய்க் காருண்யா! வான்மெய்
மதியே! மலர்த்தாளே தஞ்சம் - விதிமாற்றி
என்றும் இறவா வரமருள்செய் ஏந்தலே!
நன்றே தொழுதேன் நயந்து. (2)

நயனமணி நாயகரே! நாதா சிவமும்
அயன்மாலும் ஒன்றாய்த் திரண்டு - தயவான
மெய்வழிதந் தெங்களுக்கு உய்வழியைக் காட்டியருள்
தெய்வம் உயிர்க்காம் நிதி. (3)

நிதிவேண்டும் நீதியரே! நித்தியர்கள் போற்றும்
மதிவேண்டும் மாதவர் நிலைகாண் - கதிவேண்டும்
காருண்யா! கற்பகமே! நற்பதமே! எம்மவர்க்கு
நீரொன்றே என்றும் நிலை. (4)

நிலைப்பிக்கும் நின்திருவாய்ச் சொன்மலர்கள் வாசம்
தலைப்பெய்து சற்சனராய் உய்க்கும் - கலைமதியே!
நீடாழி சூழ்புவியில் கோடா யிதம்கைக்கொள்
வாடா மணமலரே! வாழி! (5)

வாழியெங்கோன் வான்புகழே வையகத்தும் வானகத்தும்
ஆழியான் மெய்வழியெம் ஆண்டவரே - பூழியரே!
சூழும் எம்படர்தீர் தோன்றலர்நும் பொற்றாளில்
வாழும் எளியேன் உயிர். (6)

உயிர்ப்பயிர்செய் ஓர்உழவர் உத்தமரே! பேதை
அயர்வறுத்து அல்லல் வினைகள் - துயர்தீர
ஓவா தருளமுதம் பொங்கிப் பொலிந்திலகும்
மூவா முதலே! சரண். (7)

சரண்செய்தோர் சாயுச்யர் சற்சனர்கள் அன்னோர்
மரணம் தனில்வீழ்வ தில்லை - அரனடியாழ்ந்
தின்பமே என்னாளும் எம்பெருமான் மெய்வழியே
துன்பமே இல்லா நெறி. (8)
நெறிநின்றார் நித்தியர்காண் நீடுலகில் மெய்யாம்
அறிவறிந்த ஆன்றோர்கள் ஆவர் - பொறிவாயில்
ஐந்தவித்த ஆண்டவர்கள் சந்ததியாய் என்றென்றும்
உய்ந்திருப்பர் என்றே உணர். (9)

உணர்வால் உணரப் பெறும்பெருமான் மேனி
மணம்கமழும் செண்பகமே மாண்பார் - குணம்கமழும்
கோவே! குலதெய்வ தேவே! குருபரரே
ஜீவாவிக் குற்ற துணை. (10)

அருட் பதிற்றந்தாதி இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!