திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108 - நூல் பின் அட்டை படம்

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக
ஆதியே துணை

காணிக்கை


அருட் பெருஞ்சோதியர், ஆதிமுழுமுதல்,
இறப்பிலா நித்தியம் ஈந்தருள் வான்வள்ளல்,
உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவர்,  
ஊணுறக்கம் இல்லார், ஓங்கு தவத்தினர்,
எண்ணரும் மாட்சியர், ஏந்தலர், ஈடிலார்,
ஐந்தொழிற் கரசர், அறவாழி அந்தணர்,
ஒருதனித் தலைவர், ஓங்கும் வரோதயர்,
ஔடதம் ஆருயிர்க்கு, ஃகெனும் முக்கண்ணர்

ஸ்ரீவித்து நாயகம் பிரம்மப் பிரகாச மெய்வழி சாலை ஆண்டவர்களின்
பொற்பாத கமலங்கட்குச் சமர்ப்பணம்

குரு வாழ்க! குருவே துணை!
எல்லாம் ஆண்டவர்கள் தயவு!


பனுவலும் பாவினமும் (நூல் நிரல் அட்டவணை):

எண்
#
சிற்றிலக்கிய வகை
சிற்றிலக்கியத்தின் பெயர்
இயற்றப்பெற்ற பாவினம்
01

அங்கமாலை
திரு அங்கமாலை
கலிவெண்பா
02
📜
அட்டகம்
திரு அட்டகம்
பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
03

அட்ட மங்கலம்
திரு அட்ட மங்கலம்
பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
04
💎
அனுராக மாலை
ஆன்மராக மாலை
நேரிசை வெண்பா, கலிவெண்பா
05
📜
அம்மானை
திரு அம்மானை
தரவு கொச்சகக் கலிப்பா
06
💎
அரசன் விருத்தம்
ஞானப் பேரரசர் திருவிருத்தம்
கலிவிருத்தம், கட்டளைக் கலித்துறை, கலித்தாழிசை
07

அலங்கார பஞ்சகம்
அண்ணல் அலங்கார பஞ்சகம்
கட்டளைக் கலித்துறை, நேரிசை வெண்பா, நேரிசை ஆசிரியப்பா, 6,7,8 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
08

ஆற்றுப்படை
திருவருட்சாலை ஆற்றுப்படை
நேரிசை ஆசிரியப்பா
09

இணைமணிமாலை
திருஇணைமணிமாலை
நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை,
10

இயன்மொழி வாழ்த்து
அருள் இயன்மொழி வாழ்த்து
நேரிசை ஆசிரியப்பா, கலிவெண்பா
11

இரட்டைமணி மாலை
திரு இரட்டைமணி மாலை
நேரிசை ஆசிரியப்பா, கலிவெண்பா
12

இருபா இருபஃது
அருள் இருபா இருபஃது
நேரிசை வெண்பா, நேரிசை ஆசிரியப்பா
13
📜
உந்தியார்
திரு உந்தியார்
நேரிசை வெண்பா,
14

உலா
திரு உலா
நேரிசை வெண்பா, கலிவெண்பா
15

உலா மடல்
திரு உலா மடல்
நேரிசை வெண்பா, கலிவெண்பா
16
💎
உழத்திப் பாட்டு
மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
நேரிசை வெண்பா, 6,7,8 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், தென்பாங்கு, சிந்து ,ஆனந்தக் களிப்பு
17
💎
உழிஞை மாலை
கலியை வெல் உழிஞை மாலை
கலிவிருத்தம்
18
💎
உற்பவ மாலை
அருள் உற்பவ மாலை
நேரிசை வெண்பா, பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
19

ஊசல்
திருப்பொன்னூஞ்சல்
எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
20

ஊர் இன்னிசை வெண்பா
திருவூர் இன்னிசை வெண்பா
இன்னிசை வெண்பா
21

ஊர் நேரிசை வெண்பா
திருவூர் நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
22

ஊர் வெண்பா
திருவூர் வெண்பா
சிந்தியல் வெண்பா
23

எண் செய்யுள்
அருள் எண் செய்யுள்
கலித்தாழிசை
24

எழுகூற்றிருக்கை
திருஎழுகூற்றிருக்கை
நிலைமண்டில ஆசிரியப்பா,
25

ஐந்திணைச் செய்யுள்
மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
நேரிசை ஆசிரியப்பா,
26

ஒருபா ஒருபஃது
திரு ஒருபா ஒருபஃது
பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
27

ஒலியந்தாதி
திரு ஒலியந்தாதி
திருப்புகழ்ச் சந்தம்
28
💎
கடிகை வெண்பா
நற்கடிகை வெண்பா
நேரிசை வெண்பா
29
💎
கடைநிலை
வான் கடைநிலை
நேரிசை வெண்பா, நிலைமண்டில ஆசிரியப்பா,
30
💎
கண்படை நிலை
திருக்கண்படை நிலை
கலித்தாழிசை, கலிவிருத்தம்
31

கலம்பகம்
சாலைக் கலம்பகம்
பாவும் பாவினங்கள் அனைத்தும்
32
💎
காஞ்சி மாலை
நன்காஞ்சி மாலை
நேரிசை வெண்பா, கலிவிருத்தம்
33

காப்பியம்
தெய்வ காப்பியம்
கலிவிருத்தம், 6,7,8 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
34

காப்பு மாலை
திருக் காப்பு மாலை
பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
35
📜
காவடிச் சிந்து
பூவடிப் போற்றிகள்
சந்தப் பாடல்கள்
36
📜
கும்மி
விண்பாங்கரசர் தென்பாங்கு
கும்மிப் பாடல் சந்தம்
37

குழமகன்
ஞானக் குழமகன்
கலி வெண்பா
38

குறத்திப்பாட்டு
ஊறல்மலைக் குறமங்கை
6,7,8 சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்,கீர்த்தனைகள், சந்தப் பாடல்கள்
39

கேசாதி பாதம்
எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
40
💎
கைக்கிளை
அருட் கைக்கிளை
நேரிசை வெண்பா
41

கையறு நிலை
மெய் பெறு நிலை
மருட்பா
42

கோவை
திருவருட்கோவை
கட்டளைக் கலித்துறை
43

சதகம்
திருச்சதகம்
பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
44

சாதகம்
அருட் சாதகம்
பல்வகைப் பாசுரங்கள்
45

சின்னப்பூ
வண்ணப்பூ
நேரிசை வெண்பா
46
💎
செருக்களவஞ்சி
அறக்களவஞ்சி
வஞ்சி நிலை விருத்தம்
47
📜
செய்ந்நன்றி சாற்று
செய்ந்நன்றி சாற்று
கலித்தாழிசை
48

செவியறிவுறூஉ
திருச் செவியறிவுறூஉ
மருட்பா
49

தசாங்கம்
திருத்தசாங்கம்
கலி வெண்பா
50
💎
தசாங்கத்தயல்
திருத்தசாங்கத்தயல்
பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
51

தண்டக மாலை
அருள் தண்டக மாலை
நேரிசை வெண்பா
52

தாண்டகம்
அறம் வேண்டகம்
அறுசீர், எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
53
💎
தாரகை மாலை
ஒளிர் தாரகை மாலை
நேரிசை வெண்பா
54
💎
தானை மாலை
அருட்சேனை மாலை
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
55
📜
திருக்கண்ணெழில்
திருக்கண்ணெழில்
நேரிசை வெண்பா
56
📜
திருவருளெம்பாவை
தெய்வத் திருவருளெம்பாவை
கொச்சகக் கலிப்பா
57
💎
தும்பை மாலை
அறப்போர் மாலை
கலிவிருத்தம்
58

துயிலெடை நிலை
அறிதுயிலெடை நிலை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
59

தூது
அன்பு விடு தூது
கலி வெண்பா
60

தொகைச் செய்யுள்
நற்றொகைச் செய்யுள்
நேரிசை ஆசிரியப்பா
61
💎
நயனப் பத்து
அருள் நயனப் பத்து
கட்டளைக் கலித்துறை
62

நவமணிமாலை
எழில் நவமணிமாலை
பல்வகைப் பாசுரங்கள்
63
📜
நவரத்தின மாலை
சிவரத்தின மாலை
பல்வகைப் பாசுரங்கள்
64

நாம மாலை
திரு நாம மாலை
குறளடி, சிந்தடி வஞ்சிப்பாக்கள்
65

நாற்பது
அறம் நாற்பது
நேரிசை வெண்பா
66

நான்மணி மாலை
வான்மதியரசர் நான்மணி மாலை
வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரியப்பா, ஆசிரிய விருத்தம்
67

அருள் நூற்றந்தாதி
அருள் நூற்றந்தாதி
கட்டளைக் கலித்துறை
68
💎
நொச்சி மாலை
நறு நொச்சி மாலை
கலிவிருத்தம்
69
📜
பண்ணலங்காரம்
பொன்னரங்கர் பண்ணலங்காரம்
பல்வகைப் பாவினங்கள்
70

பதிகம்
தெய்வமணிப் பதிகம்
பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், நேரிசை வெண்பா
71

பதிற்றந்தாதி
அருட் பதிற்றந்தாதி
நேரிசை வெண்பா
72
💎
பயோதரப் பத்து
அமுத பயோதரப் பத்து
கட்டளைக் கலித்துறை
73

பரணி
யுக உதயப் பரணி
கலித்தாழிசை, சந்தப் பாடல்கள்
74

பல் சந்த மாலை
நல் சந்த மாலை
பல்வகைப் பாவினங்கள்
75
💎
பவனிக் காதல்
திரு பவனிக் காதல்
கலி வெண்பா
76
📜
பள்ளு
சாலையூர்ப் பள்ளு
பல்வகைப் பாவினங்கள்
77

பன்மணிமாலை
நன்மதியரசர் பன்மணிமாலை
பல்வகைப் பாவினங்கள்
78

பாதாதி கேசம்
குரு திருவடி எழில் மணிமுடி
கலித்தாழிசை
79

பிள்ளைத் தமிழ்
அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
பன்னிருசீர், பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
80

புகழ்ச்சி மாலை
மெய்ப்புகழ்ச்சி மாலை
குறளடி வஞ்சிப்பா
81
💎
புறநிலை
திருப் புறநிலை
மருட்பா
82
💎
புறநிலை வாழ்த்து
அருள் புறநிலை வாழ்த்து
மருட்பா
83

பெயர் இன்னிசை வெண்பா
திருப்பெயர் இன்னிசை வெண்பா
இன்னிசை வெண்பா
84

பெயர் நேரிசை வெண்பா
திருப்பெயர் நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
85

பெருங்காப்பியம்
தவத்ததிகாரம்
நேரிசை ஆசிரியப்பா மற்றும் பல்வகைப் பாவினங்கள்
86
💎
பெருமகிழ்ச்சி மாலை
அருட்பெருமகிழ்ச்சி மாலை
கட்டளைக் கலித்துறை
87
💎
பெருமங்கலம்
திருப்பெருமங்கலம்
கலி வெண்பா
88
💎
போர்க்கெழுவஞ்சி
அறப்போர்க்கெழுவஞ்சி
வஞ்சி நிலைத்துறை
89

மங்கல வள்ளை
நித்திய மங்கல வள்ளை
வெண்பா
90

மடல்
திருமடல்
கலி வெண்பா
91

மணிமாலை
மெய்ப்பொருள் மணிமாலை
நேரிசை வெண்பா, கலித்தாழிசை
92

முதுகாஞ்சி
மெய் முதுகாஞ்சி
நிலைமண்டில ஆசிரியப்பா,
93

மும்மணிக் கோவை
இறைதிரு மும்மணிக் கோவை
நேரிசை ஆசிரியப்பா, கட்டளைக் கலித்துறை, நேரிசை வெண்பா
94

மும்மணி மாலை
அருள் மும்மணி மாலை
நேரிசை ஆசிரியப்பா, கட்டளைக் கலித்துறை, நேரிசை வெண்பா
95

மெய்க் கீர்த்தி
தவ மெய்க் கீர்த்தி
ஆசிரியப்பா
96
💎
வசந்த மாலை
நல் வசந்த மாலை
பஃறொடை வெண்பா
97
💎
வரலாற்று வஞ்சி
திருவரலாற்று வஞ்சி
வஞ்சி நிலைத்துறை
98

வருக்கக் கோவை
மறலியை வெல் வருக்கக் கோவை
கட்டளைக் கலித்துறை
99

வருக்க மாலை
உயர் வருக்க மாலை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
100
💎
வாகை மாலை
கலியை வெல் வாகை மாலை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
101
💎
வாதோரண மஞ்சரி
அருள் வாதோரண மஞ்சரி
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
102

வாயுறை வாழ்த்து
திருவாயுறை வாழ்த்து
நேரிசை ஆசிரியப்பா
103

விருத்தம்
திரு விருத்தம்
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
104
💎
விளக்கு நிலை
ஞான விளக்கு நிலை
மருட்பா
105
💎
வீர வெட்சி மாலை
வீர வெட்சி மாலை
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
106
💎
வெற்றிக் கரந்தை மஞ்சரி
வெற்றிக் கரந்தை மஞ்சரி
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
107
📜
வெற்றி மணி மாலை
வெற்றி மணி மாலை
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
108
💎
வேனில் மாலை
இதயம் நெகிழ் மாலை
கலி வெண்பா


💎 96 சிற்றிலக்கியங்களுள் இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு புதிதாகப் இந்நூலில் பாடப்பெற்ற இலக்கியங்கள்:


 1. அனுராக மாலை
 2. அரசன் விருத்தம்
 3. உழத்திப் பாட்டு
 4. உழிஞை மாலை
 5. உற்பவ மாலை
 6. கடிகை வெண்பா
 7. கடைநிலை
 8. கண்படை நிலை
 9. காஞ்சி மாலை
 10. கைக்கிளை
 11. செருக்களவஞ்சி
 12. தசாங்கத்தயல்
 13. தாரகை மாலை
 14. தானை மாலை
 15. தும்பை மாலை
 16. நயனப் பத்து
 17. நொச்சி மாலை
 18. பயோதரப் பத்து
 19. பவனிக் காதல்
 20. புறநிலை
 21. புறநிலை வாழ்த்து
 22. பெருமகிழ்ச்சி மாலை
 23. பெருமங்கலம்
 24. போர்க்கெழுவஞ்சி
 25. வசந்த மாலை
 26. வரலாற்று வஞ்சி
 27. வாகை மாலை
 28. வாதோரண மஞ்சரி
 29. விளக்கு நிலை
 30. வீர வெட்சி மாலை
 31. வெற்றிக் கரந்தை மஞ்சரி
 32. வேனில் மாலை


📜 96 சிற்றிலக்கியங்களுடன் புதிதாக இந்நூலில் சேர்க்கப் பெற்ற 12 இலக்கியங்கள்தோத்திரம்

ஆதியின் தாள்வாழ்க! ஆண்டவர்பொற்றாள்வாழ்க!
நீதித் திருவுருவாம் நின்மலர் தாள்வாழ்க!
வேதங்கள் போற்றும் விமலரின் தாள்வாழ்க!
பேதங்கள் நீக்கியருள் பெம்மான்பொற் றாள்வாழ்க!
மாதவர் தாள்வாழ்க வான்மணிமன் னாவாழ்க!
பூதலர்க்காய் வந்துதித்த பொன்னரங்கர் தாள்வாழ்க!
மெய்வழி தெய்வத்தின் மென்பதுமத் தாள்வாழ்க!
உய்வழி எங்கட் குவந்தளித்த தாள்வாழ்க!
வினைகெடவெங் கட்கருள்செய் வேதியரின் தாள்வாழ்க!
தனைத்தந் தெனைக்கொள் தருமரின் தாள்வாழ்க!
எம்பயத் தைத்தீர்த்த எந்தையடி வெல்க!
உயிர்க்குயிராய் எம்முள் உறைநற்றாள் வெல்க!
செயிர்தீர்த்து மெய்வழங்கு செம்மல்நற் றாள்வெல்க!
சாலைஉத்தி யோவனம்சார் தெய்வமணித் தாள்வெல்க!
காலங் கடந்த கதியேநின் தாள்வெல்க!
கோலம் சிறந்த குருமணிபொற் றாள்வெல்க!
ஐயரடி போற்றி அமலவாழ் வேபோற்றி!
மெய்யர் அரவிந்த மென்பொற் கழல்போற்றி!
தெய்வத் திருமணியாம் தேவேசர் தாள்போற்றி!
உய்யும்வீ டேற்றும் உத்தமர் தாள்போற்றி!
வெய்ய பிறப்பறுத்த வேதன் கழல்போற்றி!
ஐவழியி லெம்மயக்கம் அறுத்த அடிபோற்றி!
நைவழியி னின் மீட்ட நாதரடி போற்றி!
சமயப் பிணக்கறுத்த சாமிபதம் போற்றி!
எமையோர் பொருளாய் எடுத்தணைத்த தாள்போற்றி!
சாதிச்சி க்கெல்லாம் தவிர்த்த கழல்போற்றி!
நீதி யுகம்புரக்கும் நற்றவர்நற் றாள்போற்றி!
தாழ்வகற்றித் தண்ணளியால் தாங்கும் கழல்போற்றி!
வாழ்வளித்த வான்கொடையே வள்ளல் பதம்போற்றி!
சந்தித்துத் தங்கள் தரிசனம்பெற் றேபணிந்து
வந்தித்த பேர்க்கருள்செய் வள்ளல் அடிபோற்றி!
கந்தம் தவழ்சீரார் கர்த்தர் அடிபோற்றி!
ஆடகச்சீர் ஆவிடையில் அன்பாய் எமையீன்று
வாடாத வாழ்வளித்த வள்ளல் பதம்போற்றி!
தேடற் கரிய திரவியமாம் மெய்வழிநற்
கூடகத்தில் ஆக்கிவைத்த கோமான் கழல்போற்றி!
நாடகத்தி லேமயங்கி நெஞ்சழிந்த எம்மைவிண்
ஏடகத்தில் ஏற்றிவைத்த ஏந்தல் அடிபோற்றி!
பூடகமாய் அன்றிருந்த பொன்மறைதம் மெய்தெளிய
மேடேற்றிக் காட்டிவைத்த மேலோர்பொற்றாள் போற்றி!
வேதத்தின் உட்பொருளே! விள்ளரிய நுண்ணுணர்வே!
நீதத்தை எங்கட்கு நல்கும் நவோதயமே!
மாதவமே! மாமேரே! வாழ்வே! வரோதயரே!
அன்னாய்! என் அத்தா! அருட்குருவே ஆண்டவரே!
பொன்னார் திருமேனிப் பேரின்ப நாயகரே!
விண்ணுலகை விட்டிறங்கி மண்ணுலகில் வந்தருள்செய்
கண்ணாளா! எங்கள் கதிவான் நிதியே!
எழிலார்ந்த கற்பகமே! எரார்மெய்ஞ் ஞானப்
பொழில்மலர்ந்த வாசப்பொற் றாமரையே என்றும்
அழியா நிதியருளும் ஐயா! அருளார்
மொழியா லெமைக்கவர்ந்த மோனப் பொருளே!
சலியாத் தவமே! சகம்புரக்க வந்து
நலியா தெமையாண்ட நாயகவிண் முத்தே!
மதிவான் அரசே மாமேரு நீரே!
கதிவேறில் லையையா காத்தருளும் தேவே!
நிதிவான் மதிச்செல்வ நித்திலமே வித்தகரே!
தேவாதி தேவா திருவாரும் பொன்னரங்கா!
சாவா வரந்தந்த சாயுச்ய நாதா!
திகட்டாத தேனே! தனிகைதரும் சீரே!
உவட்டா அமுதம் உவந்தளித்த வானதியே!
எக்கோடி காலத்தும் இன்பம் இலங்குலகில்
புக்கோடி வாழப் பெருந்தயவு செய்தவரே!
செப்பரிய மேனிலையே! சீரார் செழுஞ்சுடரே!
ஒப்புவமை கூறாவொண்ணா ஓர்தனியாம் வான்தலைவா!
வாடாத வான்மலரே மங்கா மணிவிளக்கே!
தேடக் கிடைக்காத செல்வமே! செம்பொருளே!
சூடா மணியே! சுகவாரி எங்கோவே!
கோடா யிதங்கைக்கொள் கோமானே! சீமானே!
சற்சனரை ஏற்றருளும் சங்கப் பலகைநீர்!
பொற்புயர்பொன் னாட்டு மனுமகனே! ஓங்கும்
அறங்காத்த சான்றோரே! அண்ணலே! என்றும்
உறங்காப் பெருந்தவஞ்செய் ஓங்கும் புகழ்அரசே!
சிற்பி செதுக்காச் சிலையே மணிவிளக்கே!
கற்பகமாய் நின்றிலங்கும் காருண்ய நாயகரே!
பாரினில் ஒப்பில் பரிசேசர் வோதயமே!
தூரிகை யிட்டெழுதாச் சுந்தர ஓவியமே!
பூரிக்க இன்பமழை பெய்வான் முகிலே!
இதயம் ஒளிர்கதிரே! ஏமனிருள் மாற்றும்
உதய முழுமதியே! உம்மடியே சார்ந்தோம்
இகத்தீர்ப்பில் எம்முயிரை ஏற்றுத் தவமருளி
யுகத்தீர்ப்பி லும்காக்க உம்தாளே தஞ்சம்
பிழை பொறுத்த பெம்மானே! பேறே! உயிர்க்கு
மழையாக வந்தவரே மாமணியே போற்றுகின்றேன்
மந்திரங்கள் மெய்யாய் மிளிரும் திருவுருவே!
எந்திறமே! என்னுயிரே! எட்டுணையும் கள்ளமிலாச்
சிந்தையினின் நீங்காச் செழுநிதியே! தென்னகத்தே
வந்த சிவமுதலே! முச்சுடரே! வேதாந்தம்
தந்த தயாநிதியே! சாதிகளின் கர்த்தாவே!
எந்தாய் இணையில்லா இன்பநிறை பெட்டகமே
தத்துவங்கள் அத்தனையும் தன்னுள் உணர்வித்து
முத்திபெறும் மார்க்கம் முறையாய்த் தெளிவித்த
சித்தர்களின் கோவே! ஜீவன்தே கம்இரண்டும்
நித்தியத்தில் என்றுமே நிற்குமொரு சூதானம்
காட்டும் குருமணியே காசினியில் பல்வேதப்
பூட்டுக்கும் ஓர்திறவுப் பொற்கோலே! பொன்னரசே!
வித்தில்லா வித்தே!சீர் மெய்ம்மணஞா னச் சுடரே
எத்தியெனை அந்நாட்டு வித்தாக்கும் ஏந்தலரே
ஏழ்பாத கம்தீர்த்து எம்மை நெறிப்படுத்தி
வாழ்வாங்கு வாழவைக்கும் வள்ளால் அடைக்கலமே!
சாமி உமக்கபயம் சர்வேசா நிற்கபயம்!
மாமேரே நிற்கபயம் மாதேவா! நிற்கபயம்!
வாமணரே மெய்வழிமெய் மாதவரே! நிற்கபயம்!
தூமணியே சாலைவளர் தேவாதி தேவேமெய்
மாமணியே மெய்ச்சாலை ஆண்டவரே தாள் போற்றி
பூமணிநின் பொற்றிருத்தாள் காப்பு.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!


இந்தப் படைப்பு released under the Creative Commons Attribution-Share Alike 4.0 International license, which allows free use, distribution, and creation of derivatives, so long as the license is unchanged and clearly noted, and the original author is attributed—and if you alter, transform, or build upon this work, you may distribute the resulting work only under the same license as this one.