உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/053.ஒளிர் தாரகை மாலை

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



✫ 53. தாரகை மாலை

[தொகு]

இலக்கணம்:-

கற்புக் கடம் பூண்ட அற்புதப் பெண்டிர்தம் நலம்தனைப் புகழாத நாடோ இனமோ இல்லை. அத்தகு பெண்டிர் பெய்யெனக் கூறின் மழை பெய்யும் என்பர். கற்பரசியர் தெய்வத்தன்மை பெற்றவர்கள். அப்பத்தினிப் பெண்டிரின் தெய்வத் தன்மையைப் புகழ்ந்துரைப்பது தாரகை மாலை. இருபத்தேழு தாரகைகளைப் (நட்சத்திரங்கள்) பெண்டிராகப் பாவித்து அவர்களைப் புகழ்ந்து போற்றுவது இவ்விலக்கியம்.

வகுப்பால் கற்புடை மகளிர்க்கு உள்ள
தகைத் திறம் கூறுதல் தாரகை மாலை
- இலக்கண விளக்கம்  - 867
அருந்ததிக் கற்பின் அரிவையர்க் குள்ள
இயற்கைக் குணங்களை வகுப்பால் இயம்புதல்
தாரகை மாலையாஞ் சாற்றுங் காலே
- முத்து வீரியம்  - 1064
ஓதுசந்தத் தாலுரைத்தல் ஒண்தா ரகைமாலை
கோதிலாக் கற்பின் குலமகளை - நீதிசேர்
மங்கல வள்ளை வகுப்பொடு வெண்பாவால்
இங்காமொன் பானென் றிசை
- வெண்பாப் பாட்டியல் -54
தாரகை இருபத் தேழையும் தகைபெறச்
சொல்ல வகுப்பால் தூசி யணிதக
வழுத்துதல் தாரகை மாலை என்ப
- பிரபந்த மரபியல் -17

தாரகைகள் இருபத்தேழினையும் எம்பெருமான் நாமங்களாகச் சாற்றி அவர்கள் புகழைப் பாடும் பொருண்மையுடையது இப்பனுவல்.

ஒளிர் தாரகை மாலை

காப்பு

நேரிசை வெண்பா

பாராதி அண்டம் பருவயிற்றில் தாங்கியீன்
சீராரும் பத்துவய தானகன்னி - நேராரும்
கூற வியலாத கோமதியே! நின்புகழைக்
கூற அருள்வாய் கனிந்து

நூல்

1. அஸ்வினி

எல்லாம்கற் றாய்நீயே! அஸ்வினித்தாய் அம்மாவே!
நல்லாய்செல் வம்புத்தி பத்தியுடன் - கல்விமிகு
உத்தமியே! நித்தியத்தை சத்தியதைத் தந்தருள்க!
பத்தினிப ராபரை நீயே! (1)

2. பரணி

பரணியெனும் நாமம் தரித்தாயே இந்தத்
தரணியில்வந் தாய்நீ! தருமி - கருணைமிகு
நன்றி திறமை நல்லதிர்ஷ்டம் நல்வாழ்வு
வென்றிமிகு வாழ்வருளும் தாய்! (2)

3. கார்த்திகை

கார்க்கும்தீ கைகொண்ட கார்த்திகையே! காசினியில்
ஆர்க்கும் அழியா வரமருள்வாய் - சீர் கொள்
பத்தியொடு மென்மை பழகற் கினியவளே!
சத்தினிசா யுச்யம் அருள்! (3)

4. ரோகிணி

ரோகிணிநீ! யென்பார் உலகோர்கள் ஓம்காரி
ரோகிநீ யல்லைமிகு கம்பீரம் - பாகுமொழி
பண்பரசி அன்புதரும் தெம்பரசி உத்தமர்க்கு
நண்பரசி நாரீ மணி! (4)

5. மிருகசீரிடம்

மிருகம்சீர் நல்லிடமே மெத்ததைர் யம்தார்
அருட்தே வன்பத்தி னிநீ - உருகியழும்
உத்தமர்க்குப் பத்திசெய நத்தியவை நித்தமருள்
மெத்தஉயர் மேன்மகள் நீயே! (5)

6. திருவாதிரை

திருவா திரையென்னும் தெய்வமணித் தாயே!
திருவாய் திறந்து அருள்வாய்! - குருவாய்
வருவாய்நீ! வாலாம் பிகைத்தாய் வரங்கள்
தருவாய்நின் தாளே சரண்! (6)

7. புனர் பூசம்

புனர்பூசம் பொன்மலைத்தாய் பூதலத்தே எம்மை
அனந்தாதி தேவருள்ளே உத்யோ - வனந்தனிலே
சீலம் சிறந்தொளிர கோலம் அமரரென
ஞாலத்துள் ஆக்கும் நயந்து (7)

8. பூசம்

பூசத்தாய் போதமுயர் நீதமருள் பண்பரசி
நேசத்தாய் நல்லாய்நீ! செண்பகப்பூ - வாசத்தாய்
வாணிகலை வல்லரசி சொல்லரசி வார்தையருட்
காணியுந்தன் தாளே கதி (8)

9. ஆயில்யம்

தாயின் கருணைமிகு தண்ணளியாற் பொன்னெழிலார்
ஆயில்யம் என்னும் அருமைத்தாய் சேயனையாள்
செல்வி திருமிகுந்தாய் பல்கலைதேர் பாட்டரசி
நல்வரங்கள் நல்கும் நற்றாய்! (9)

10. மகம்

மகமாய் மிளிருமெழில் மாதரசி! மாண்பாய்
மகம்மாயி என்றே வழுத்தச் - சுகமருளும்
அந்தரியே! சுந்தரியே! ஆய்வல்லார் தாய் நீயே!
விந்தைமிகு மேன்மைத்தாய் நீ! (10)

11. பூரம்

ஆரம் தலையணிந்த அம்பிகையே! இன்பமருள்
பூரம் எனுமரசி பூரணியே! - சீரிளமை
தங்கித் திருவிளைவு ஆடல்செய் சீரொழுக்கம்
பொங்கப் பெரும்புகழ் உற்றாய்! (11)

உத்திரம்

உத்திரமாய் நின்றொளிரும் ஒண்டொடியே! எம்முயிரின்
சித்திரமே! மெத்தஉங்கள் தாள்பணிந்தோம் - வித்தகமாய்
நாணயமும் பத்தியுடன் நன்றிசுக போகியுமாய்
காணுறுமெய்த் தாயே! கனி! (12)

அஸ்தம்

அஸ்த்தமெனும் ஆரணங்காய் ஆரெழிலார் வானிலங்கி
சொஸ்தம் பிறவிநோய் தீர்த்திடுவாய் - வந்து
வித்தாய்க் கலைவல்லாள் மிக்கதாய் பாசமுள்ளாள்
சுத்தமிகு செல்வமகள் நீ! {{Pline|(13

சித்திரை

சித்திரையே! மெத்தஎழில் உத்தமியே ஞானசத்தி
முத்திரையே மிக்கவலி வுற்றவளே! - முத்தானாய்
கல்வியெனும் பல்கலைதேர் பொன்பொழிவாள் கற்போங்கு
நல்லருளே நல்கு நயந்து! (14)

15. சுவாதி

சுபஆதி என்னும்நா மத்திற்போந் துற்ற
சுபமருளும் ஆதியென் றுத்யோ - தபோவனத்தே
நின்றிலங்கும் நீதித்தாய்! ஆதித்தாய்! நற்றவத்தாய்!
என்றும்நின் தாளே! துணை! (15)

16. விசாகம்

திசையில்லாத் தெய்வமணித் தாயேநின் நாமம்
விசாகம்என் றிங்ஙண் விளங்கும் - பசுவென்னும்
ஜீவன் கடைத்தேற்றி ஜென்மசா பல்யமருள்
தேவீநின் தாளே கதி (16)

17. அனுஷம்

அனுஷம் எனுநாமந் தன்னாய் இயங்கும்
மனுஷர் தமைமாற்றி ஈன்றாய் - தினம் புதியாய்
தேவநிலைக் கேற்றிவிடும் சீர்நேர்மை பேர்திறத்தாய்
பூவடிகள் பூண்டோம் சிரம்! (17)

18. கேட்டை

கேட்டைக் களைந்துதவப் பாட்டை எமக்களிக்கும்
பாட்டைமெய் யாம்வழித்தாய் பண்பரசி - வீட்டை
விழைந்து சரணடைந்தோம் வான்மழையாய்ப் பெய்ய
தழைத்தோம்யாம் தாயே! சரண்! (18)

19. மூலம்

ஆலமுண் டேயமுதம் ஆர்ந்தளித்த தாய்ஆதி
மூலமே மெய்த்தெய்வ மாமணியே! - சீலமே!
நீதியே! நற்றிறமே! நீடுபுகழ் நின்றிலங்க
ஆதித்தாய் ஆனாய் இனிது! (19)

20. பூராடம்

பூராட மென்றே பொலிந்தாய்நின் கோட்டைக்குள்
சீராடல் செய்யும் திருச்செயல் காண் - ஆர்ஞான
எண்ணெண்ணாம் தீட்சைக்குள் இஃதொன்றாய் ஆனதுகாண்
வண்ணமணி வேதத்தாய்! நீ! (20)

21. உத்திராடம்

உத்திரா டம்விண்மீன் உத்தமியே! ஓங்குபுகழ்
சத்தியமே! நம்பினர்க்கு நித்தியமே! - வித்தகியே!
ஆயகலைக் ஞானம்வை ராக்யமொடு அன்புறுதித்
தாயகம்நீ பத்தினித் தங்கம். (21)

22. திருவோணம்

திருவோண மாம்ஞானச் சீரோங்கு உச்சம்
குருகோமான் ஏறியவிண் கோடு - அருள்வாணர்
ஆரும் அளப்பரியர் அற்புதமாய்ப் பெற்றபதம்
நேரும் நிகரில்லை காண் (22)

23. அவிட்டம்

அவிட்டமாம் விண்மீன் அளப்பரிய பண்பும்
உவட்டா தரவணைக்குந் தாயே - தெவிட்டாத
தெள்ளமுதம் ஊட்டிமிகு சீராய் வளர்விக்கும்
வள்ளண்மைச் சாலையம்மா நீ

24. சதயம்

உதயம்செய் உத்தமியே ஊருலகோர் உய்ய
சதயம் எனுநாமத் தேறி - இதயத்தே
செல்வம் பொறுமை திறமை யெலாம்சிறந்த
நல்நலமெய்ச் சாலைத்தாய் நீ! (24)

25. பூரட்டாதி

பூரட்ட ஆதியெனும் பொற்புடைமெய்த் தாய்போற்றி
நீரட்ட ஞானம் நிறைசெல்வம் - பாராட்ட
மங்கலத்தாய்! திவ்ய வதனத்தாய்! மாமணித்தாய்!
எங்களுயி ரில்இலங்கும் தாய் (25)

26. உத்திரட்டாதி

உத்திரட் டாதியென்னும் ஓம்காரி ஒப்பிலியாள்
நித்திரையை வென்றுயர்ந்து நீடுதவப் - பத்தினித்தாய்
சாதுர்யம் கல்வியொடுசற்குணசீ லம்சிறந்தாய்
மாதுரிய மாமணித்தாய் நீ! (26)

27. ரேவதி

தேவத்தாய் எங்களரும் தெய்வப் பெருமாட்டி
ரேவதி எனுநாமம் ஏற்றதனால் - பூவுலகம்
உய்யவென மெய்வழியை உற்பவித்த உற்பவத்தாய்
துய்யமணிப் பொற்றாள் துணை! (27)

ஒளிர் தாரகை மாலை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!