திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/045.வண்ணப்பூ

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
45. சின்னப்பூ[தொகு]

இலக்கணம்:-

ஓர் அரசனின் சின்னங்களான தசாங்கத்தைப்(நாடு, மலை, ஆறு, ஊர், யானை, குதிரை, கொடி, முரசு, மாலை, பெயர் என்னும் பத்து) புகழ்ந்து பாடுவது சின்னப்பூ என்னும் இலக்கிய வகை ஆகும்.

நேருந் தசாங்கத்தை நேரிசை வெண்பாவால்
ஈரைம்பது தொண்ணூறீண் டெழுபான் - ஒரைம்பான் 
தேர்ந்துரைக்கில் சின்னப்பூ.
- வெண்பாப் பாட்டியல் 42
நேருந் தசாங்கத்தை நேரிசை வெண்பாவின் ஈரைம்பது
சேரவோர் தொண்ணூறு எழுபதோடைம்பது செப்பிடுங்கால்
ஆரியர் சின்னப்பூ வென்றே யுரைப்பர்.
- நவநீதப் பாட்டியல் 40
கூவு தசாங்கத்துக்குப் பத்தாய் நேரிசைவெண்
பாவுரைத்தல் சின்னப்பூ பார்.
- பிரபந்தத் திரட்டு 15
மிக்க நேரிசை வெண்பா அதனால்
தக்க தசாங்கந் தன்னை நூறு
தொண்ணூ றெழுபது ஐம்பது முப்பஃது
எண்ணப் பாடின் சின்னப்பூவே
- இலக்கண விளக்கம் 846

ஞான ராஜாங்கம் நடத்தும் எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் தசாங்கங்களை போற்றிப் பாடுவது இப்பனுவல்.

வண்ணப்பூ

காப்பு

நேரிசை வெண்பா

மன்னும் தவவாய்மை வாடா நெறியரசே!
பொன்னரங்க நாயகரே! நும்புகழை - சின்னப்பூ
பாடுதுறைக் கெற்குப் பதமும் பொருளருள்வீர்
நாடிப் பணிந்தேன் நயந்து.

நூல்

திருநாமம்

ஆயிரம் ஆயிரமாம் நாமங்க ளுக்குரியர்
தாயின் மிகுந்த தயாநிதியர் - நேயமிகு
மெய்வழிச்சா லைஆண்ட வர்கள் உலகோர்க்கு
உய்வழியைத் தந்தார் உவந்து. (1)

தன்னரங்கத் தேமிளிரும் தண்ணளியர் தர்மதுரை
பொன்னரங்க நாயகர்தாள் போற்றுவமே - இன்னமுதம்
வையகத்து மாந்தர் மரணமிலா வாழ்வுதனை
எய்த அருள்செய் இறை. (2)

ஆதி முழுமுதல்வர் நீதி நிறைபரமாம்
வேதியர் ஸ்ரீவித்து நாயகர்காண் - நாதி
உலகிற்கு மெய்த்தெய்வம் ஒன்றே அறிமின்
நலமாம் பெருந்துறையே இஃது. (3)

தவமார் தனிகைமணி தந்தபெரும் செல்வம்
சிவமோர் அவதாரம் செய்து - பவம்கடத்திப்
பேரின்ப சித்திப் பெருவாழ் வருள்மகதி
சீராரும் தெய்வமணி காண். (4)

பல்கலையும் தாண்டிப் பிறவா நெறியருளும்
கல்கிஎம் கோமான் கனிந்துருகி - வெல்லரிய
ஏமன் இடர்கடத்திச் சேம நிதிவழங்கும்
சீமன்சா லையையர் தேர். (5)

திருவூர்

ஊரான ஊராம் உயிர்ப்பயிர் ஏற்றும்ஊர்
சீராரும் மெய்வழிச் சாலையூர் - பேராரும்
பெம்மான் பெருந்துறையார் பொன்னரங்கர் மெய்ஜீவ
சிம்மா சனம்ஏறும் ஊர். (6)

சித்தர் தலைவரெங்கள் தேவாதி தேவர்பதி
உத்யோ வனச்சோலை ஊரிதுகாண் - நித்தியர்கள்
மெய்யனந்தர் போற்றிசெய் மெய்வழிதெய் வம்இலங்கும்.
மெய்யூரிஃ தென்றே விளம்பு. (7)

எல்லைகூ றவியலா ஏற்றமிகு மெய்ச்சிவமார்
தில்லைப் பதியிதென்று செப்பிடலாம் - இல்லையெங்கும்
இப்பதிபோல் பேரின்ப சித்தியருள் ஏரார்ஊர்
ஒப்பில் திருப்பதிகாண் இஃது. (8)

சீர்பொங்கும் ஞானத் திருவோங்கும் மெய்யர்வாழ்
சீரங்கம் என்னும் திருவரங்கம் - பாரெங்கும்
மெய்க்கல்வி யைப்பயிற்றும் மேலோர்பே ரின்பம்மே
துய்க்கின்ற சீரூர் இது. (9)

வாசிப் பரியேறும் வானாடர் சாலைவள்ளல்
நேசிப்போர்க் குவிஸ்வ நாதமருள் - காசிப்
பதியிதென்ற பேருண்மை காசினியீர் சார்மின்
கதிவிஸ்வ நாதர் கழல். (10)

திருநாடு

ஜோதித் திருமிளிரும் சீரனந்தர் வாழ்புகழார்
ஆதித் திருநாடு எம்நாடு - நீதி
நிறைபொருள்வந் தெங்களுக்கு நித்தியத்தைத் தந்த
இறைநாடு இந்நாடு காண். (11)

பாத மலர்கள் சிரமேற் பதித்தபிரான்
வேத வளநாடு மெய்ந்நாடு - நீதமுயர்
தென்னாடு பொன்னாடு சீரோங்கு தென்பாண்டி
நன்னாடு எம்நாடு காண். (12)

சீலம் சிறந்துயர்ந்த செவ்வியர்கள் நல்லறஞ்செய்
மேல வளநாடு மெய்ந்நாடு - காலம்
கடந்த கலிக்கடையில் கற்பகர்தாள் நோக
நடந்தஎழில் நன்னா டிது. (13)

வாடா நெறிமுழங்கும் வள்ளல்பிரான் சாலையண்ணல்
கோடானு கோடிசெல்வம் கொட்டிவைத்த - நாடான
ஞான குபேரர் நன்மார்க்க ராஜரிஷி
வானத் திருநாடு காண். (14)

சார்ந்தோர்கள் யாவரையும் சற்சனர்கள் ஆக்கிவிடும்
பூந்துறைநன் நாடெங்கள் பொன்னாடு - தீந்தமிழே
கொஞ்சி விளையாடும் கொற்றவர்மெய்ச் சாலைவள்ளல்
பஞ்சவர்கள் நாடெம்நா டே. (15)

திருமலை

அருட்கையால் ஆருயிர்க்கு ஆர்வரங்கள் ஈயும்
திருக்கயிலைத் தெய்வம் திருவார் - உருக்கொண்டு
எல்லாரும் இன்புற் றிருக்கவென்று மெய்வழியை
வல்லார்கொண் டிங்குற்றார் வாழி. (16)

மந்திரம லையெங்கள் மாதேவர் பொற்றாள்கள்
வந்திப்போர்க் கென்றும் வராதிடர்காண் - எந்தைபிரான்
விந்திரம் அருள்மாட்சி வந்தேன்று கொண்மின்கள்
சிந்தைகவர் கள்வரெம்கோ மான். (17)

ஊரல் மலைச்சாரல் உத்யோவனச் சோலை
சேரல் உயிர்ப்பயிர்க்குச் சீர்செழிப்பாம் - பேராரும்
பொன்னரங்கர் பொற்றாள் பணிஜீவர்க் கென்றென்றும்
இன்னல்கள் வாரா தறி. (18)

மாமேரு பொன்மலைசார் மண்ணுயிர்கள் பொன்னிறமே
ஆமாறு போலும்மெய் சாலைவளர் - கோமானே
தென்னா டுடைசிவனார் சீரமலர்த்தாள் சார்வார்க்கு
மன்னுபர போகம் தரும். (19)

திருகோண மேருமலை ஞானமிளிர் சீரார்
குருமேனி கொண்டார் குபேரர் - அருளாரும்
மெய்வழிச்சா லைதெய்வம் மண்ணுலகிற் போந்தினிது
உய்வழிதந் தாண்டார் உவந்து. (20)

திருநதி

பாகார் மொழியமுதம் பண்ணார் திருவாக்யம்
ஆகாய கங்கை அதுபாய்ந்து - சாகா
வரமருளும் மண்ணவரை விண்ணவராக் கும்காண்
பரமேசர் சாலை இறை. (21)

ஐயாறு போக்கில் அலமந்தேன் ஆண்டவர்கள்
செய்யாறு காட்டிச் செழிப்பித்தார் - வையமிதில்
சாலைத் திருநெறியில் சார்ந்தவர்பால் ஏமனுக்கு
வேலை இலையென் றறி. (22)

காவிரிந்து பூமலர்ந்து வாசமது வீசுமெங்கள்
தேவாதி தேவர்திருத் தாள்பணியும் - ஜீவருக்கு
வற்றாத வான்அமுதம் பொங்க அருள்பொழியும்
நற்றாளே ஜீவ நதி. (23)

ஏடு எதிரேறும் வைகை நதிக்கரையில்
ஈடில்லாச் சீர்கற் றளியெழுப்பிப் - பீடுபெற
வீற்றிருந்து ஞானச்செங் கோலோச்சு காலம்மெய்
ஊற்றுப் பெருக்கென் றுணர். (24)

தாம்பரனோர் சீர்மேனி தான்கொண்டார் தாரணியோர்
தாம்பரனின் ஆற்றின் கரைசேர்ந்தோர் - மேம்பாடாம்
மெய்வழியில் உய்வழிகண் டைவழியின் அப்பாலாய்
செய்வழியிற் தேர்ந்துய்மின் கள். (25)

திரு யானை

வெள்ளானை தன்னில் பவனிவரும் வேந்தரிவர்
கள்ளம்இலார்க்கே கனிந்தருள்வார் - தெள்ளத்
தெளிந்தோர்கள் தேவாதி தேவனருள் பெற்று
ஒளியார்ந்து உய்வார் உணர். (26)

காட்டானை மெய்யமுது ஊட்டானை நித்தியமெய்த்
தேட்டானை தீங்கிலுளம் நாட்டானைப் - பூட்டானை
மெய்திறக்கும் வேதாந்த மாமறைசேர் ஏட்டானை
உய்வருளும் ஆட்டானைக் காண். (27)

கல்லானைக் கற்பித்து மாட்டானை வாழ்வித்து
வல்லானை மாற்றியெதும் இல்லானை - நல்லானை
எம்முயிரில் உள்ளானை ஈடில்லா வெள்ளானை
செம்மையுறத் தோத்தரிப்பாய் தேர்ந்து. (28)

எண்டிசையும் நின்றினிது காக்கு(ம்)கஜம் அத்தனையில்
அண்டர்கோன் ஏறி வலம்வந்தார் - தொண்டரெலாம்
பாடிப் பணிந்து வணங்கி அவர்தாளை
நாடிப் பணிவோம் நயந்து. (29)

கஜம் : அஷ்டதிக்கஜங்கள்

கஜமா யிரம்வென்றீர் காருண்யா எற்கு
நிஜஞானம் நல்கினீர் நாதா! - புஜபல
தாட்டீகர் தங்கள்தாள் தாழ்ந்து பணிந்தோர்கள்
வேட்டவலம் எய்தும் விரைந்து. (30)

திருப்பரி

வெண்டரள வாசி விரைந்தேறி வையகத்தோர்
கண்டறிய நற்கோலம் காட்டியவர் - எண்டிசையும்
கண்டறியா எந்தாயாய் காத்தருள்செய் தந்தையுமாய்
அண்டர்கோன் ஆனார் இனிது. (31)

ஓர்நொடிக்கு ஓரண்டம் ஒப்புவமை யில்வேகம்
பாராதி யெங்கும் பரந்தேகும் - சீராரும்
வாசிப் பரியேறும் வாசமா கேசவர்தாள்
நேசிப்போர்க் கில்லை யிடர். (32)

பஞ்சகல் யாணிப் பரியேறும் அண்டினர்க்கு
வஞ்சஎமன் வாதனைகள் தீர்த்தருளும் - கஞ்ச
மலர்த்தாளே மாபெரிய நற்றுணையே நெஞ்சில்
அலர்ந்தெழில்வீ சும்எங்கள் கோன். (33)

இறக்கும் படிநின்ற இப்புவியோர் உய்ய
பறக்கும் பரியேறிப் போந்து - உறக்கம்
ஜெயக்கொண்ட செம்மல் ஜென்மாச பல்யம்
நயங்கொண்டு நல்கும் விரைந்து. (34)

அறுவகை வேகம் அதற்கதிகம் கொண்டு
உறுமெய்ப் பொருளுவந்து ஈயும் - அறவாழி
மெய்வழி தெய்வ மலரடிகள் சார்ந்தோர்கள்
எய்தும் பரபோகம் காண். (35)

திருக்கொடி

வம்மின் உலகியலிர்! வானாடர் போந்தார்!
செம்பொருளும் சாகா வரமீயும் - உம்பர்கோன்
என்றே நுடங்கி இனிதசைந் தேஇசைக்கும்
நன்றேகிள் நாமக் கொடி. (36)

இனியொருகை ஈடில்லா எம்பாட்ட னாராம்
தனிகையர் ஈன்ற தவச்செல்வர் - கனிஞான
வள்ளல் வழங்குகின்றார் வந்துபெற முந்துமினென்(று)|r}}
விள்ளும்மெய்ப் பூராங் கொடி. (37)

ஒன்றே குலமும் ஒருவனே தேவனென
நன்றே நிறுவினரிந் நானிலத்தே - குன்றாண்டார்
மெய்வழி தெய்வமிவ் வையகந்துற் றாரென்னும்
செய்திசொல் காவிக் கொடி. (38)

இறவாப் பெருவரம்கை ஏந்தினோர்க் கீயும்
அறவோர்மெய்ச் சாலைவள நாடர் - நறவாரும்
தார்புனைந்தார் சீரனந்தர் தம்தாதை என்றசைந்து
ஊரறியச் சொல்வெண் கொடி. (39)

வள்ளல்பி ரானெங்கள் வானாடர் சாலையெங்கோன்
அள்ளும் அமுத மொழிக்கரசர் - தென்ளுதமிழ்த்
தென்பாண்டி நாட்டில் திகழப்போ ந்தாரென்று
முன்னுடங்கிக் கூவும் கொடி. (40)

திருமாலை

கார்கொண்டல் விஞ்சும் கொடைவள்ளல் எம்சிரமார்
தார்புனைந்த மன்னவர்காண் சாலையண்ணல் - சீர்சிறந்த
மெய்வழியை மேதினியோர் உய்யவெனக் கொண்டுவந்த
ஐயரருட் தாளே சரண். (41)

செண்பகப்பூ வாசமிலங் கும்பொன் திருமேனி
பண்பகத்தே கொண்ட பரபோகர் - நண்பகத்தார்
ஈடில்லா பேரின்ப சித்திப் பெருவாழ்வை
நாடிப் பணிந்தார் நனி. (42)

தேன்சிந்தும் பூந்தார் அணிந்தருள்செய் எங்கோன்
வான்கொண்டல் ஆர்ந்து பொழியமுதம் - தான்மாந்தி
எக்களிப்புக் கொண்டார் இனியவர்தம் சீடர்குழாம்
துக்கமவர்க் கில்லை இனி. (43)

வாடாத கற்பகமாம் வாசமலர்த் தாரணிந்து
நீடாழி சூழ்உலகில் நித்தியமாம் - தேடாப்
பெருஞ்செல்வம் வாரி வழங்கும் பெருமான்
அருட்பாதம் போற்றிப் பணி. (44)

குய்யென்று வண்டினங்கள் கொஞ்சித்தேன் மாந்துமெழில்
அய்யன் அணிமலர்த்தாள் காணீரோ! - வெய்ய
வினைகெடுத்த வேதியர்மெய்ச் சாலை அழகர்
தனைப்பணிந்தோர் உய்வர் தெளி. (45)

திருமுரசு

நகரா முரசறைமின் நற்றவர்மெய்த் தெய்வம்
சகம்போந்தார் சாயுச்யம் ஈய - அகம்நெகிழ்ந்து
போற்றிப் பணிந்தேநல் புண்ணியம்கைக் கொண்டுய்மின்
ஆற்றின் துறைமெய் வழி. (46)

'துடும்துடும்'மென் றேமுழங்கும் தெய்வ முரசு
எடும்எ டும்வணக்கம் செய்யப் - படும்எம்
வெய்ய வினைக்குவைகள் வீய்ந்திடவே மெய்வணக்கம்
செய்யப் புறப்படுமின் என்று. (47)

ஆர்ந்து முழங்கும் அணிமுரசு ஆலயத்தைச்
சார்ந்து வணங்கமெய்ச் சற்சனர்கள் - கூர்ந்து
தொழவம்மின் உய்ந்து எழவம்மின் ஞானப்
பழம்உண்ண வாரும் விரைந்து. (48)
முழங்கும் நகரா முரசொலிகேண்ம் ஐயன்

வழங்கும் வணக்கப் பலனால் - அழுங்கும்
வினையும் எமபடரும் வீயும் இறைவர்
தனைத்தந் துனைக்கொள்வார் காண். (49)

இல்லை இனிக்கதிவே றெங்கும் எனமுழங்கும்
எல்லைமெய்ச் சாலை நகராகாண் - தொல்லை
பிறவிப் பிணிதீரும் பேரின்பம் ஆரும்
இறைவர் திருத்தாள் பணி. (50)

வண்ணப்பூ இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!