உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/034.திருக் காப்பு மாலை

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



34. காப்பு மாலை

[தொகு]

இலக்கணம்:-

பாட்டுடைத் தலைவரைக் காக்குமாறு கடவுளரை வேண்டுவது காப்பு மாலை எனப்பெறும்.

கடவுள் காத்தலாக வொருமூன்
றைந்தே ழானு மறைவது காப்பு
மாலை யெனப்பெயர் வைக்கப் படுமே
- முத்துவீரியம் 1061
அரியதெய் வங்காத்த லாகமூன் றைந்தேழி
னறை செய்யுள் காப்பு மாலை 
- பிரபந்த தீபிகை
காப்பு மாலையே தெய்வம் காக்கஎன
மூன்று ஐந்து ஏழ்செய்யுளின்
மொழிப கற்றோரே
- பிரபந்த தீபம்  - 35
தெய்வம் காத்தலாக மூன்றுசெய்யுளானும்
ஐந்து செய்யுளானும்
ஏழ் செய்யுளானும் பாடுவது
- தொல்காப்பிய விளக்கவுரை ப.203

ஈண்டு ஆதி முழு முதல்வர் நீதியொரு திருமேனி கொண்டு அவதாரம் செய்தருளிய பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களே ஆதி விநாயகரும், ஆதி சிவனும், ஆதி நாராயணரும், ஆதி பிரம்மமும், திருமுருகப் பெருமானும், நந்தீசரும் என ஆத்மார்த்த அனுபவ வாயிலாக உணரப் பெற்றமையின் எம்முயிர்க்குக் காப்பென அவர்களை விதந்தோதி அன்னாரை எமக்குப் பரிசாக வழங்கிய எங்கள் உரிமைப்பாட்டனார் தனிகை மணிப் பெருமானையும் வேண்டுவதாக அமைந்தது இப்பனுவல்.

திருக் காப்பு மாலை

காப்பு

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆருயிர் காக்கும் அருட்பெருஞ் சோதி
அண்ணலர் பதமலர் போற்றி
பாருல கனைத்தும் பரமர்மெய் வழியைப்
பற்றியே நித்தியம் பெற்று
நேரிய ராக நாதர்வந் தருள்செய்
நீர்மையை நன்கினி நேத்து
சீருயர் காப்பு மாலையைப் பாட
தெண்டனிட் டெழுந்தனன் தேவே!

நூல்

பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆதி விநாயகம்

ஆதிவி னாயகா அகிலமெ லாமுந்தன்
அகட்டிடை யேபொ திந்து
ஐந்தொழில் இயற்றிடும் ஐயனே! மெய்யனே!
அன்புவடி வான இறையே!
நீதியொரு திருமேனி நீனெடுத் தேயியந்த
நீணில மாந்தர் கட்கு
நித்தியம் அருளவே நிகரில்மெய் கொடுபோந்த
நன்மார்க்க ராஜ ரிஷியே!
வேதாக மக்கலைக் கதிபரே! தங்களின்
மெல்லடி பற்றி உய்ந்தோம்
விமலரே! வித்தகா! விரைகழல் துணையாக
வேண்டிடும் போற்றி போற்றி
ஆதிநா யகம்தாங்கள் அவதாரம் செய்தனிர்
அடியேங்கள் உய்வதற்காய்
அருமைமிகு அறவாழி அந்தணர் தாள்மலர்
அனைத்துயிர்க் கும்காப் பதாம்
(1)

ஆதி நாராயணர்

ஆதிசே ஷணைமீது அருட்பாற்க டல்துயில்
ஆதிநா ரணரு மாகி
அருள்மார் பிலங்கிடும் அணிதிகழ் திருச்சாலை
ஆண்டவர் எனுமை யனே
நீதிநட வாதியின் மூலமே! சீலமே!
நித்யவர மருளும் தேவே!
நின்மலர்ப் பொன்னடிகள் தஞ்சமுற் றோமிந்த
நமன்வா தனைத விர்ந்தோம்
வேதவே தியரிந்த மேதினியில் ஒன்றுகுலம்
ஒன்றுதெய் வம்என் றதோர்
மெய்ச்செயல் நிறைவேற்றி மாபெரும் செயலாலிவ்
வையகம் உய்ந்தோங் கவே
சாதகம் செய்வித்த சாயுச்ய வேந்தரே
தனிப் பெருங்கருணை மணியே
தருமமுயர் சாலைவளர் அருளமுத வாரியே
தாள்மலர் காப்ப தாமே!
(2)

ஆதி சிவன்

இமையமகா மேருகிரி தனிலெழுந் தருள்செயும்
இன்பநட மிடுசிவபரம்
இகபர மிரண்டினும் சகமாந்தர் யாவரும்
சுகமடைய தயவு கூர்ந்து
உமையவள் பனிமதித் தாயொடு புவிபோந்து
ஒப்புவமை கூறவியலா
ஒருபெரிய நெறியான உய்வழி மெய்வழி
ஓங்க ஈங்கே கொணர்ந்து
எமனிருளில் ஒளிபரவி எங்கும்ப் ரகாசமாய்
எழிலோங்க அருட்ஜோதியை
ஏற்றிவைத் தெமையாளும் எங்கள் குலகுருதெய்வம்
இணையில்மெய் வழி ஆண்டவர்
சமரசம தாகவே சாதிமத பேதமில்
சீருயர் நன்மார்க்கமே
தந்தருளு எந்தையே விந்தையே தங்கள்பொற்
றாள் மலர் காப்பதாமே!
(3)

ஆதி பிரம்மம்

மாலுந்திக் கமலமிசை விளங்கிடு பிரம்மமே
வையம்வா னம்படைத் தனிர்
வளர்கரு ணைப்பெருக்கி னால்மனு வினமுய்யவே
வருகைதரு திரு மேனியே
சாலைதிகழ் தெய்வமே சர்வமத சமரசம்
சர்வ குலமொன் றாக்கினீர்
சற்சனர் சமுகப்பு ரட்சிசெய் தீரினிது
சகத்திலிதற் கிணை யில்லையே
கோலமிடு மெய்வழி சலைஆண் டவரென்று
கோமகன் நாம மேற்றீர்
குவலய மீதுபத மலர்கள்வ ருந்தநடம்
கோன்புரிந் தருள் செய்தனிர்
சீலமிகு சான்றோ ரனந்தாதி தேவர்கள்
சிந்தை கனிந் தேவ ணங்கத்
திருவளர்க அருள்பெருக ஒருமெய்வழி தருகுகுரு
தேவரே காப்பெமக் கே!
(4)

திருமுகப் பெருமான்

தவவேல் வலிமையான் சூர்ந்தடிந் தமரரைச்
சிறைமீட்ட திருமுருக ரே!
தனிகைமணி குமரரே சர்வேஸ்வ ரா!எங்கள்
ஜீவன் செழிக்க வந்த
சிவகொண்ட லேசுப்ர மணியாயி லங்கியெம்
சிந்தையின் இருள் மாய்த்தனிர்
தீயெமன் படரெறிய ஆறுமுகமாய் நின்ற
செல்வமே! ஜீவகுகை யுள்
நவமே உயிர்க்கெலாம் நன்மெய் வழிதந்த
நாயகா நாத மணியே
நற்சிந்தை யோக்கியர் நித்தியம்பெறவருள்
நற்கார்த்தி கைக் கையரே
பவமே கெடுத்துயிர் பரபோகம் எய்தவருள்
பரமரே சாலை யரசே!
பண்போங்கு பாரோர்க்கு விண்பாங்கு பெறவருள்
பாதமலர் காப்பெமக் கே!
(5)

நந்தியெம் பெருமான்

திருக்கயி லாயத்தின் பரம்பரை நந்தியெம்
பெருமானின் மரபு என்று
திருவோர்கள் உரைவண்ணம் ஓங்கிடும் தவஞான
சீருரைப் படியிங்ங ணே
திருவோங்கு மெய்வழிச் சாலை ஆண்டவர்களாய்
தேவரீர் அவதார மே!
செய்வழி அறியாமல் உய்வழி புரியாமல்
செகத்தோர்கள் அலைகின்ற கால்
அருளோங்கு தெய்வம்வந் தமுதனா மடைதிறந்
தானந்த மெய்ஞ்ஞான மே
அகிலமெங்கும் தழைத் தோங்கிடச் செய்தனிர்
ஐயநின் தாள்கள் போற்றி!
பொருளோங்கு முத்தியருள் பரபோக சித்திமிகு
போதமே நன்நாத மே!
பற்றினேம் நும்பதம் வெற்றியே பெற்றனம்
பண்போங்கு காப்பி தாமே!
(6)

திருத்தனிகை மணி வள்ளல்

இனியொருகை நிகரிலா ஏந்தலே! ஈடிலா
இறையில் கொடைதரு கொண்டலே
எங்களின் பாட்டனார் எனுமுரிமை கொண்டாட
ஈந்தனிற் தவஞான மார்
கனியொன்று எம்முயிரக் கணியென்று அருளாகும்
மணியென்ற எங்களின் மெய்க்
கண்கண்ட தெய்வத்தைக் கட்டாணி நவரத்னக்
கசிதபே ழைதந் தனிர்
இனியெமக் கின்பமே எங்கென்றும் பொங்குமே
எமன மல்துய ரேதுமில்
என்கடன் போற்றுதல்!இப் பரிசுக் கேநன்றி
எங்களால் கூற வியலா
தனிகைதிரு முகம்மது சாலிகெனும் உயர்
தவப்பெயர்க் குரிய பெரும
தங்கள் தயவெங்களுயிர் பொங்கிமகிழ் தங்கருள்
சீர்திகழ் காப்பதாமே!
(7)

திருக் காப்பு மாலை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!