திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/105.வீர வெட்சி மாலை

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



✫ 105. வீர வெட்சி மாலை[தொகு]

இலக்கணம்:-

மாற்றரசனின் ஆநிரையைக் கவர்ந்து வருதலைக் கூறும் புறத்திணைக்கு வெட்சித்திணை என்று பெயர். (வெட்சியென்னும் குறுஞ்செடியின் பூவால் தொடுக்கும் மாலை வெட்சி மாலை)

வேந்துவிடு முனைஞர் வேற்றுப்புலக் களவின்
ஆதந்து ஓம்பல் மேவற் றாகும்
- தொல்காப்பியம்  - பொருளதிகாரம்  - 60
மகிழ்நிரை கொள்வது - வெட்சி
- சிதம்பரப் பாட்டியல்  - 38
ஆநிரை கவர்ந்து வருபவன் வெற்றி
விளம்புதல் வீர வெட்சி மாலை
- முத்து வீரியம்  - 1069
வீர வெட்சி மாலையே  வீரன் ஒருவன்
வெட்சித்தார் சூடி வேண்டார் ஊர்நாடி
நிரைமீட்டு வந்த நெடுவெற்றி பாடலே
- பிரபந்ததீபம்  - 42

மனுக்களின் ஆயுட்காலமாகிய மூச்சின் எண்ணிக்கை முடிவடைந்தவுடன், எமன் அவ்வுயிர்களை எளிதாக எடுத்துக் கொள்வான். அவ்விதம் எமன் கை வசப்படாமல், தம்மை நம்பிய மனுக்களின் உயிர்களை, மெய்வழி ஆண்டவர்கள் தம் வசமாக்கி, நித்திய வாழ்வருளும் செயல் இங்கு ஆநிரை கவர்தல் (ஆ=பசு=ஜீவன்) என்னும் திணையாகக் கற்பித்துப் பாடப்பெற்றுள்ளது, இவ்வீர வெட்சி மாலை என்னும் பனுவல். எமனின் கைவசப்படாது பிரம்மப் பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் கைவசமானோர் என்றும் நித்திய வாழ்வு பெறுதல் சத்தியம்! சத்தியம்! சத்தியம்!

வீர வெட்சி மாலை

காப்பு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

எல்லாஉ யிர்களையும் யானே வென்று
என்வெற்றிக் கொடிநாட்டும் என்று கூறும்
பொல்லாத கூற்றுவனின் ஆற்றல் வென்று
பூதலத்தில் நித்தியத்தைப் பொன்றா வாழ்வை
எல்லார்க்கும் ஈந்தருள அமர்மேற் சென்று
எளிதாய்வெட் சிமாலை சூடி ஓங்கும்
வல்லார்மெய் வழிச்சாலை தெய்வ பாதம்
வந்தித்துப் பாடயிது காப்ப தாமே!

நூல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தோற்றம்

புழுக்கம்வித் துஅண்டம் சினையென் னும்நாற்
பிறப்பிடத்துள் உயிரினங்கள் தோற்றம் உண்டாம்
எழுவகையாம் தருக்கினம்புள் ஊர்வ காலி
எழிலாம்நீர் வாழ்வனவும் மனுவும் தேவர்
பழுதில்லா திவைபடைத்த இறைவன் நித்யப்
பண்புமனு வின்இதயத் தமர்ந்தார் அந்த
எழிலான மனுவினத்தை நித்யத் திற்கே
எம்பெருமான் இனிதாகப் படைத்தார் மன்னோ!
(1)

ஆயுள்

மன்னியசீர் மனுவினத்தின் ஆயுள் தன்னை
மாதேவர் மூச்சினிலே வைத்தார் அஃது
அன்னையிடம் தந்தையிணை காலம் தன்னில்
அவர்நினைவில் சுவாசத்தில் அமைத்தார் ஓர்நாள்
நன்னியிரு பத்தோரா யிரத்தாற் நூறு
நவிலுவார் இதுமூச்சின் இயல்பென் பார்கள்
இன்னவிதம் இருப்பதிலும் நுணுக்கம் உண்டு
இது தந்தை மூச்சின்நிலை தன்னில் காணும்
(2)

இடகலையும் பிங்கலையும் சுழிமு னையும்
இயல்பாக மூன்றுவிதம் உண்டுதானே
நடக்குமிது ஐந்தென்னும் நாழிக் கொன்று
நல்மூச்சு மாறுமது ஓர்க லைக்கு
திடமாக ஐந்துநா ழிகைக்கு ஆன
தெளியாயுள் நூறெனவும் செப்புவார்கள்
இடமான கருசுரோணி தத்துள் விந்து
இழையாயுள் சக்கரத்தை இயம்புவோமே
(3)

கலையதுதான் தொடங்கும்போ துதித்தால் அந்தக்
குழவிக்கு நூறாயுள் என்பார் மற்றும்
கலையதனில் ஐந்திலொரு பாகம் சென்றால்
கருக்குழவிக் கெண்பதெனக் கணித்துச் சொல்வார்
நிலையிதுபோல் ஐந்திலொரு பாகத் திற்கு
நீங்கிவிடும் இருபஃது ஆண்டு ஆயுள்
கலைமுடியும் போதுகருத் தரித்தால் சேய்தான்
கட்டாயம் பிறந்தவுடன் மரிக்கும்தானே
(4)

காலத்தின் அளவதுபோல் ஆயுள் காணும்
கணக்கதனில் இம்மியுமே பிசகி டாது
காலத்தின் அதிபதியைக் காலன் என்பர்
கணக்குமுடிந் தக்கணமே அழைப்பான் காண்மின்
ஞாலத்தில் நடுவனென்று அவற்குப் பேராம்
நல்லவர் கெட்டவரென்றோ எண்ணார் அன்னோர்
ஆலகா லவிடம்போல் ஆவிப் பாய்ந்து
அனைத்துயிரைப் பறிப்பதொன்றே அன்னோர் வேலை
(5)

தென்றிசையின் காவலனென் றெமனுக் குப்பேர்
செப்புவர்காண் யமதர்ம ராஜன் என்பர்
மன்பதையுள் மிருத்யுவை வஸ்வ தாய
விருகோதர் தத்னாய பரமேஸ் டினே
துன்பமிழை ஔதும்ப ராய நீலன்
சித்ரகுப்த காலாய சர்வபூதர்
தென்திசையை நோக்கிசந்த்யா வந்த னத்தோர்
செப்பிதமைக் காக்கவென்று வணக்கம் செய்வர்
(6)

பொன்கொடுத்தால் பொருள்கொடுத்தால் போகான் மற்றும்
போற்றிடினும் வணங்கிடினும் விடுவானில்லை
முன்பின்னோ தாமதமோ கருதான் கூற்று
முத்தாப வகையானே முடிப்பன் மன்னோ
தன்பெயரில் அணுவளவும் குற்றம் ஏலான்
தவறெல்லாம் அவரவர்க்கு சாற்றி ஈர்ப்பன்
வென்னோயாம் மரணமது இயற்கை என்று
வியனுலகோர் விளம்பிடவே வைப்பன் காண்மின்
(7)

 தாயென்றும் பிள்ளையென்றும் பாரான் ஏமன்
தமர்பிறரென் றெதனையுமே கருதான் மேலும்
நோயென்றும் நொடியென்றும் விபத்தென்றும் பேர்
நுண்மையதாய் உயிரீர்ந்து கொல்வான் மற்றும்
தீயகொடு மரணத்துன் பத்தைத் தந்து
சிறிதுசிறி தாய்உயிரைப் பறிப்பதாலே
கூய்உந் தவனை கூற்றுவனென் றேயுரைப்பார்
கூற்றைவென்றார் குவலயத்தில் இல்லை யென்பர்
(8)

நாளொன்றை நாழியெனக் கொண்டு அந்த
நமனுயிரை உண்டிடுவான் கடைசி நாளை
வேளைவந்த தென்றுலகோர் விளம்பு வார்கள்
வையகத்தோர் அனைவரையும் வெல்லும் ஆற்றல்
காளையந்தக் கூற்றுவற்கே உண்டு இந்தக்
காசினியென் கைக்குள்ளே அடக்கம் என்பன்
பூளையது புயல்முன்னர் பறத்தல் போலே
பூவுலகோர் அஞ்சுமெமன் கைப்பட் டாக்கால்
(9)

எமன்தன்னின் ஆட்சியிந்த உலகமெங்கும்
இலங்குகின்ற தென்றெண்ணி இறுமாப் பெய்தும்
எமதர்ம ராஜனென்றோர் பேரும் உண்டு
எமனென்றால் இறைசாரார் தமக்கே ஆகும்
தமையுணர்ந்து தலைவரைக்கண் டறிந்த பேர்க்கு
தர்மரா ஜாவாவர் எவ்வா றென்னில்
இமையவர்கோன் இணைமலர்த்தாள் படிந்த பேர்கள்
இறவாத வரம்பெற்றார்க்(கு) எமன்தீண்டான் காண்
(10)

சாவுத்துன்பம்

மறலிவந்து தீண்டுங்கால் வெடகால் வெட்டும்
மண்ணுயிரெ லாம்நடுங்கும் கபம்மே லேறி
உறுமியே அலறியே உளறும் காத்த
உடலதுவும் அணுவணுவாய் துடிக்கும் நாற்றம்
முறுகியே எழும்கசப்பு வெளியே கக்கும்
மேனியது விறைக்கும்சீ தளமிக் கோங்கும்
உறுவர்நர குலகதனில் கற்ப கோடி
உழன்றிடுவர் துன்பமதில் என்றென்றும் காண்
(11)

(கசப்பு என்றால் இறுதிநேரத்தில் ஆணுக்குச் சுக்கிலமும்
பெண்ணுக்குச் சுரோணிதமாகிய தீட்டும் வெளியாதல்)

ஆநிரை கவர்தல்

ஆநிரையைக் கவர்வதென்றால் பசுக்கூட் டத்தை
அரசரென்போர் கவர்ந்தேகல் என்பர் எங்ஙன்
ஆநிரையைக் கவர்வதென்றால் ஜீவன் தன்னை
அந்தகன்எ மன்கவர்தல் என்றே கொண்டோம்
ஆநிரையாம் ஆருயிர்கள் தம்மைக் காத்து
அருட்கருணை மீக்கூர எல்லாம் வல்லார்
வானவர்கோன் ஆண்டவர்கள் தடுத்தாட் கொண்டு
மன்னுயிரைக் காத்தலென்று அறிமின் மன்னோ
(12)

ஆண்டவர்கள் இயல்பு

தசாங்கம்

(நாடு, ஊர், மலை, ஆனை, பரி, நதி, முரசு, செங்கோல், கொடி, குடை)
உலகுயிர்கள் அனைத்தையுமே படைத்துக் காத்து
உவந்தருளி மறைத்தழித்து ஐந்தொழில் செய்
நலமனைத்தும் ஓருருவாய்த் திரண்ட தெய்வம்
நாடுவளர் கயிலாயம் மெய்குண் டம்பேர்
வலமுயர்த்த மெய்வழிச்சா லையூர் என்னும்
வயல்சார்ந்து இலங்குகின்ற நல்லூர் என்றும்
நிலைதிரியா இமயகிரி அகத்தில் ஊரல்
ஏரார்ந்த மலைச் சாரல் எங்கோன் வாழும்
(13)

மண்ணகத்தோர் கண்காணா வெள்ளை யானை
வாசியெனும் வெண்பரிமீ தூர்வர் எம்மான்
விண்ணகத்தி னின்பெருகா காய கங்கை
வெற்றியுரை நகராத முரசு என்பர்
வண்ணமிளிர் கிள்நாமம் விளங்கும் காவி
வெண்கொடி பூராங்கொடியும் கம்பந் தன்னில்
அண்ணல்வரு கைகுறித்து அடங்கிக் கூவி
அம்புவியோர் வருகவென அழைக்கும் மன்னோ
(14)

அற்புதமாம் ஜீவசிம்மா சனத்தின் மேலே
அழகொளிர வெண்கொற்றக் குடையி லங்கும்
நற்பதவான் கொடைவிஞ்சும் திருக்கரத்தில்
நவிலரும்ஞா னச்செங்கோல் திகழும்; மார்பில்
பொற்புயர்ந்த அனந்தர்சிர மாலை சூடும்
பொன்வண்ணச் செண்பகம்மல் லிகை யணிந்து
சொற்றவறா மெய்யர்களின் இதய மென்னும்
திருத்தேரில் இன்பவுலா வருகும் எங்கோன்
(15)

சன்னதங்கள்

எம்பெருமான் இறைசொரூபர் சாலை தெய்வ
இருதிருவார் எழிற்கரத்தில் இலங்கா நின்ற
தம்பதமார் வில்வேல் வாள் சங்கு சக்ரம்
டமருகம்கோ தண்டம்பா ராங்கு சம்மாம்
தெம்புயர்பட் டயம்சூலம் கிள்நா மம்தான்
சீரோங்கத் தரித்தருளி செகத்தோர் உய்ய
அம்புயப் பொற்பாதங்கள் வருந்த இந்த
அம்புவியில் போதந்தார் அமரர் கோனே
(16)

மாதவத்தின் விளைவதனால் மாண்பார் ஐயர்
மாற்றறியாச் சன்னதங்கள் ஏற்றார் காந்தள்
போதனைய பொற்கரத்தில் மிளிரும் அந்தப்
பெருவலிமை மறலியமல் தன்னை வெல்லும்
பூதலத்தில் இதற்குமுனர் எவரும் எங்கும்
புரிந்தறியாப் பெருங்கொடையைத் தெய்வம் ஈந்தார்
சீதனமாய் மனுக்குலமப் பேறு பெற்று
ஜென்மசா பல்யர்களாய்ச் சிறந்தார் தாமே
(17)

வஞ்சஎமன் வாதனைக்கு அஞ்சிச் சான்றோர்
மாசுமறு வில்லாத தவத்தில் ஆழும்
தஞ்சமென்று இறையடியைச் சார்ந்து நோற்கில்
சாயுச்யப் பிரம்மத்தின் தயவுள் கூடும்
எஞ்சாது பேரின்ப வாழ்வே என்றும்
இன்பமே எந்நாளும் துன்ப மில்லை
அஞ்சலஞ்சல் எனச் சாலைஆண்ட வர்கள்
அடிமலரில் ஏற்றருள்வார் அறத்தின் தந்தை
(18)

வெல்லரிய ஏமனமல் வென்றார் எம்மான்
வையகத்தில் இச்சீர்மை என்று மில்லை
செல்லாது இனிமறலி ஆட்சி இந்தச்
செகத்திலுள்ள அனந்தாதி தேவர் உய்ந்தார்
நல்லாராய் நன்மனத்தோ டிதனை அன்பால்
நனிதொடர்ந்தார் அனைவருமே உய்கின் றாரால்
எல்லார்க்கும் எல்லாமும் ஈய்ந்து மெய்யாய்
இனியவழி தனைத்தொடர்ந்தோர் வாழ்வர்காணே
(19)

காலனுக்குக் காலமில்லை நேரம் இல்லை
கடுகிவந்து உயிர்கவர்தல் எளிதாம் வேலை
ஆலமர்கண் டர்தெய்வ அடியார் பக்கல்
அவன்போக உரிமையில்லை வேலை யில்லை
வாலகுரு விரசூல்மெய்த் தெய்வத் தாள்கள்
வணங்கியபேர்க் கெமன்பயமே இல்லை யில்லை
கோலமிகு திருமலர்த்தார்க் கன்பர் தம்மை
கூற்றுவன்கண் டஞ்சிடுவான் சத்யம் சத்யம்
(20)

உலகுயிர்க்கெல் லாம்எதிரி ஏமன் அந்த
உயிர்கவர்வார்க் கெதிரிஎங்கள் சாலைத் தெய்வம்
நலமருள்மெய் தெய்வத்திரு நாமம் செப்பில்
நமன்விலகும் பிணிபலவும் நடுங்கி யோடும்
வலமிகுந்த வாழ்மகதி ஆண்டவர் தம்
மலரடியே பிறவாழி கடத்தும் நாவாய்
குலமுழுதும் குடியனைத்தும் கூற்றி னின்று
கோமான்மெய் வழிதெய்வம் காப்பார் காணே
(21)

கோடானு கோடிமனு தேக முற்றோர்
காயசித்தி கற்பமென்றும் பற்பம் உண்டும்
பாடான பாடுபட்டும் யோகம் நிஷ்டை
பழகிவந்தும் எமன்படரை வென்றாரில்லை
ஈடிணையில் தேவரா ஜாங்கத் தெய்வம்
இணையடிகள் தஞ்சமுற்றோர் பாடில்லாமல்
கூடழியா தேகமுத்தி ஜீவன் முத்தி
கொண்டினிதே வாழ்கின்றார் கூறக் கேண்மின்
(22)

ஜீவப்பிரயாணத்தின் தன்மை

வெண்ணெயினில் மயிர்போட்டு இழுத்தல் போலும்
மேனியதில் புதுஅங்கி புனைவ போன்றும்
கண்ணியமாய்ச் சிறுபறவை கொம்பை விட்டுக்
கனிவோடு மறுகொம்புக் கேகல் போலும்
எண்ணமதில் சலனமின்றி இன்ப மாக
எல்லோர்க்கும் பயணம்சொல்லி ஏகல் போலும்
விண்ணேகும் ஜீவப்ர யாண மென்று
விளம்பிடுவார் மெய்வழிதெய் வத்தின் சீரே
(23)

கோரமிகு எமனைதர்ம ராஜா வாக்கி
கனிவோடு செல்கின்றேன் அந்நா டென்று
ஆர்வமிக மேனியது கசங்கி டாமல்
அழகொளிரப் பசுமஞ்சள் வண்ணம் பூத்து
சீராரும் மலர்மாலை போல்து வண்டு
தீர்த்தமது உள்வாங்கி மணம் கமழ்ந்து
பூரணமாய்ப் பரமரடிக் கினிது ஏகல்
பொற்புயர்ந்த பேரின்ப நிலைக்கு ஆக்கும்
(24)

வீராதி வீரன்வில் விஜயன் கையின்
வெற்றிமிகும் காண்டீபம் பறித்தான் ஏமன்
பாராதி அண்டங்கள் படைத்த தெய்வம்
பரமாத்மா அதைமீட்டுப் பார்த்தர்க் கீந்தார்
கோரமுற்று வருமறலி தன்னை வென்றார்
குலதெய்வம் மெய்வழிஆண் டவர்கள் நன்றே
சீரார்விஸ் வரூபம் காட்டல் போலும்
சிறந்தீன்று காட்டினர்காண் செகத்தோர் உய்ந்தார்
(25)

மறலியெனும் எமனைக்கண் டஞ்சா மாந்தர்
மண்ணுலகில் எங்குமே எவரும் இல்லை
அறவாழி வேற்கரத்தார் தெய்வ மக்கள்
அந்தகன்ஏ மனைக்கண்டு அஞ்சல் இல்லை
நறவாரும் தார்அணிந்த நாதர் எம்மான்
நற்றாளைப் பற்றினர்க்கு இறப்பே இல்லை
சிறப்போங்க சாலைத்தெய்வ நற்றாள் சார்ந்தோர்
திருவிளங்கும் ஜென்மசா பல்ய ராகும்
(26)


எமனெல்லை ஈசனெல்லை இரண்டு உண்டு
ஏமன்தன்னின் எல்லைவரை உயிரை ஈர்ப்பன்
இமையவர் கோன் எம்பெருமான் எல்லை தன்னில்
எட்டியடி வைப்புரிமை எமனுக் கில்லை
தமருகந்த திருமேனி சாலை யண்ணல்
தம்மக்கள் திருக்குலத்தை மறலி தீண்டான்
சமரசமாய்ச் சாலைத்திரு நெறியைச் சார்ந்தோர்
சாயுச்யர் இறவாத வரம்பெற் றோரே!
(27)

வாதனைசூழ் துன்பமிகும் மரணம் விட்டு
வானவர்கோன் தெய்வத்தின் திருநா டேக
சாதனையாய் மகிழ்ச்சிகொண்டு பயணம் சொல்லி
ஜீவப்பிர யாணமது செய்தல் என்பர்
சீதனமாம் இறையுணர்தல் இன்ப மாட்சி
ஜென்மசா பல்யமெனச் செப்பு வார்கள்
மாதனலா பம்இதற்குத் தங்கத் தேகம்
மாதவர்மக் களுக்களிக்கும் பரிச தாமே!
(28)

மாவீரர் மைத்ரேய புத்தர் எங்கோன்
மகதியண்ணல் மலரடியில் பணிந்த மாந்தர்
சாவாத நிலையெய்தும் சாயுச்யர் காண்
ஜீவப்ர யாணமது ஆவர் மேனி
மூவாது இளமையது பூக்கும் வேர்க்கும்
மஞ்சள்நிறத் தங்கமென ஒளிரும் மென்மை
தேவாதி தேவர்திருப் பாக்கள் கேட்கில்
திருவனைத்தும் நிரம்பிநிற்கும் கனமி ராதே!
(29)

தேடரிய பெருஞ்செல்வம் சாலை அண்ணல்
திருவுளத்துக் கினிதிணங்கி யருள் பெற்றோர்கள்
வாடாத தவச்செல்வம் வள்ளல் ஈய
வரம்பெற்றார் உரம்பெற்றார் துன்பமற்றார்
ஆடகப்பொன் னருட்தாளே தஞ்ச முற்றார்
அழியாத பெருநிதிபெற் றந்நா டென்னும்
வீடேறும் மறலியின்கை தீண்டா மேலாம்
மெய்வழியாம் உய்வழியில் நிலைப்பார் வாழி!
(30)

வீர வெட்சி மாலை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!