உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/075.திரு பவனிக் காதல்

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
✫ 75.பவனிக் காதல்

[தொகு]

இலக்கணம்:-

திருவுலா வரும் தலைவர் ஒருவரின் அதியற்புத அழகை வியந்து எழுபருவத்தினரும் அன்பு மீதூரப் பெற்றனர். அவருள் தலைமகள் ஒருத்தி தலைவர்பால் காதல் கொண்டும் அக்காதல் கைகூடாமையால் காமம் மீதூரப் பெற்று அத்துயரைப் பிறரிடம் எடுத்து மொழிவதாக அமைவது பவனிக்காதல்.

காமரு முலாவற் காட்சியாலே
அடைந்த காம மிக்கால வற்றைப் 
பிற ரொடு மெடுத்துப் பேசி வருந்துதல்
பவனிக் காதலாம் பகரும் காலே
- முத்துவீரியம் 1121
வீதியிலுலாக்காட்சி யாலதிக காமமாய்
மிக்காலவைப் பிறரொடும்
வெட்கா துரைத்தே வருந்துவ துரைத்தலது
மேவுபவனிக் காதலே
- பிரபந்த தீபிகை 26
இயல் உலாவினில் ஆசை பிறரொடு சொற்று
இரங்கல் இவை பவனிக் காதல் 
- சுவாமி நாதம்  - 168

எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் திருவுலாக் காட்சியின் மாட்சியை இங்ஙன் விதந்தோதப் பெறுகிறது.

பவனிக் காதல்

காப்பு

நேரிசை வெண்பா

சிவமோர் திருமேனி சீர்புவியில் ஏற்றுப்
பவனி வருந்திருவைப் போற்றி - அவனிமிசை
பேதைகொள் காதலின்ப வேதனையைச் சேதியினை
ஓதிடச்செய் ஒண்மலர்த்தாள் காப்பு

நூல்

கலி வெண்பா

ஆதிமூ லம்என்றன் ஆருயிரின் சீருயிராம்
நீதி எழிலுருவர் நீணிலத்தில் - போதரவே
வேத மறைகளெல்லாம் மெய்துலங்க மந்திரங்கள்
தீதில் திருக்காட்டத் தென்னாட்டில் - மாதவர்தாம்
மண்தீண்டாப் பாதங்கள் மண்மாது பூரிக்க
கண்ணாளர் மென்னடைசெய் காட்சியினை - தண்ணெழிலைக்
கண்ட திருக்கோலம் கண்ணிறைந்து உட்புகுந்து
விண்ட எழில்புகழ மிக்குவந்தேன் - மண்டுபுகழ்
தென்னா டுடைசிவனார் சீரார்மெய் ஆண்டவர்கள்
என்னாட் டவர்க்கும் இறைவரவர் - பொன்னரங்கர் (10)
மின்னுநவ ரத்ன கிரீடம் தரித்தழகு
மன்னும் மணிமாலை முத்தாரம் - பொன்புரிநூல்
பொங்கெழிலார் ஊப்பாசுக் கச்சணிந்து நீண்டநிலை
அங்கி தரித்து அருட்தாளில் - துங்கஎழில்
பொற்பாது கையணிந்து கொண்டற் கொடைவழங்கும்
நற்கரத்தில் பொற்பிரம்பு நன்கிலங்க - கொற்றவரும்
சத்யப் பிடிமூப்பர் சீரமைச்சர் பண்பார்ந்த
நித்ய வரம்பெற்ற நல்லனந்தர் - மெத்த
அறுபத்தொன் பான்சாதி மன்னர்குழு ஆர்ப்ப
மறுவில்சீர் மாந்தர்களும் வாழ்த்த - அறவாழி (20)
எக்காள நாதம் எழில்துந்து மிநகரா
மிக்கின்ப நன்மணிகள் வானோசை - எக்களிக்க
வண்ண விருதினங்கள் மக்கள் புடைசூழ
அண்ணல் உலாவரும் அவ்வெழிலை - பண்பணிந்த
இன்னிசை வானோர் இசைமுழங்கக் கட்டெழிலார்
கன்னியர் பூர்ணகும்பம் கையேந்த - வின்னமிலார்
பேரின்ப சித்திப் பெருவாழ்வை ஈந்தருள்செய்
சீரின்ப தெய்வத் திருவுலாக் - காருண்யர்
தங்கள் தரிசனம்காண் சற்சனர்கள் போற்றிசெய
பொங்குமகிழ் ஓசைபோய் விண்முட்ட - எங்கள் (30)
கட்டாணி முத்தனையார் கண்மணியர் ஊர்கோல
மட்டில்லா மாட்சி விதந்தோத - எட்டுணையும்
ஏலாது பேதை எளியாளால் எம்பெருமான்
ஆலால சுந்தரராம் ஆண்டவர்கள் - கோலம்
உலாக்கண்ட எல்லோரும் உள்ளம் நெகிழ்ந்தார்
பலாக்கனிசூழ் ஈக்கள்போல் மொய்த்தார் - நிலாக்கண்ட
அல்லி மலர்போல் உளம்அலர்ந்தார் உள்ளங்கை
நெல்லிபோல் ஞானத் தெளிவடைந்தார் - வெல்லரிய
ஏமனையும் காமனையும் எற்றிவெற்றி கண்டார்கள்
சேமநெறி நின்றார் நலமுற்றார் - கோமானை (40)
நம்பிய பேர்களெல்லாம் நாலாம் பதம்பெற்றார்
வெம்பியோர் வேதனைதீர்ந் துய்ந்தார்கள் - எம்பெருமான்
தந்த திருவரங்கள் சாயுச்யம் ஏறினர்காண்
அந்தமில் இன்பத் தழுந்தினர்காண் - சிந்தையினில்
ஓயாது பற்றிநின்றோர் ஓங்கும் பரவாழ்வில்
தேயா நிலவெம்மான் தேர்மின்கள் - தூயோர்
உள்ளில் நிலைத்திருக்கும் ஓங்குதவத் தெங்கோமான்
தெள்ளத் தெளிந்தார்க்கு தெய்வமணி - அள்ளும்
அருட்பாற் கடல்முத்து ஆரணர்தம் சொத்து
இருளிரிய வந்தஎழில் சூர்யன் - மருவினிய (50)
கோலம்கொள் சொர்க்கம் கோதிலிறை வர்க்கம்காண்
ஞாலத்தில் என்றும் நிலைநிற்கும் - சீலமிகு
பொன்னரங்க மன்னவர்தம் பேரெழிலி லேமயங்கும்
கன்னிஎன துள்ளம் கவர்கள்வர் - அன்னவர்பால்
காதல் மிகக்கொண்டேன் காசினியீர்! காத்தருள்வார்!
ஆதலினால் பேதை அரற்றுகின்றேன் - மாதிறத்தார்
பொற்பாதப் பொன்மலரில் போய்ப்படிந்தேன் பண்பார்ந்த
நற்பதங்கள் நல்கும் நலமுடைத்து - தற்பரர்தாள்
பங்கயம்போல் காட்சிதரும் பேதை முகம்சேர்ந்து
தங்கும் தலமாய்த் திருவிளங்கும் - பொங்கெழிலார் (60)
முன்தாள்கள் வெண்கலம் மிக்குருக்கி வார்த்தனபோல்
மின்னொளிரும் நன்முழந்தாள் முட்டுவரைப் - பொன்கரங்கள்
நீண்டிருக்கும் கொண்டற் கொடைவிஞ்சும் நத்தினரை
ஆண்டிருக்கும் அண்டினரை ஆதரிக்கும் - வேண்டுவரம்
எல்லாம் இனிதருளும் இன்பவடி வானவராம்
பொல்லாப் பிணிநீக்கும் பேரருள்சேர் - வல்லார்
மறுவில் முழுமதியார் வட்டமுகம் காண்பார்
உறுவர்பே ரின்பஒளி வீசும் - அறவாழி
காருண்யம் பொங்கும் கமலத் திருநயனம்
ஆரூரர் எங்கோன் அமுதுமொழி - சீராரும் (70)
செங்குமுத நன்மலர்வாய் வான்மறையாம் தேன்அருவி
பொங்கிவரும் ஊற்றாய் பொலிந்திலங்கும் - துங்கஎழில்
முத்தாரப் பெட்டகமாய் மிக்கிலங்கும் இவ்வனமாய்
எத்தனையோ மாட்சி எழிலுடையார் - வித்தகர்காண்
மெய்த்தவசா யுச்ய விறல்வேந்தர் ஆருயிர்க்கு
உய்ப்பருளும் ஓங்குதவ மாட்சியினர் - மெய்ப்பதியாம்
உத்தமர்கள் வாழ்ந்துறையும் உத்யோவ னச்சோலை
சித்திமிகு கானகமெய்ச் சாலையதில் நித்தியர்சேர்
ஊரான ஊராம் உயிர்ப்பயிர்செய் வேளாண்மைச்
சீரூரில் வாழ்ந்திறையைச் சந்திக்க - ஆர்வமிகக் (80)
கொண்டேனிப் பேதை கொழுநரிவர் பால்நேசம்
விண்டேனவ் வேந்தரெனை ஏற்றருளிக்- கண்டதிருக்
காட்சியெலாம் எண்ணிக் கருத்தழிந்தேன் காதலினால்
மாட்சிமிகு மன்னவரை வாழ்த்துகின்றேன் - மீட்சியெனக்
கேதும் இனிவேண்டேன் இன்னவர்தாள் என்கதிகாண்
மாதென் மனக்கினியர் வள்ளலெங்கோன் - ஆதரவை
நாடி நலிகின்றேன் நானிலத்தீர் வானவரைத்
தேடி எனதுள் தியங்குகின்றேன் - கூடி
மகிழ்ந்திருக்கும் நன்னாள் எதிர்நோக்கி மாது
நெகிழ்கின்றேன் நெஞ்சம் சமூகம் அகலாது (90)
மன்னவரிவ் வேந்திழையைச் சேர்ந்தணையும் பொற்காலம்
என்னவரே! என்றும் பிரியாத - தென்னவரே!
சாவா வரமருளும் சாயுச்யர் சற்குருகோன்
மூவா முதல்வர் முனியரசு - தேவாதி
தேவர் திருவடியில் யான்படிந்து இன்புறவே
ஆவல் கனிந்ததம்மா ஆருயிர்க்குத் - தேவையது
எட்டாக் கனியதுதான் என்றாலும் என்சாமி
அட்டாங்க யோகத் தரசர் - இட்டம்
கனிந்திரக்கம் கொண்டால் கைக்கனியாய்க் கிட்டும்
இனிதாகும் எவ்வுயிரும் உய்யும் - தனித்தலைமை (100)
மன்னவரைச் சார்ந்தோரே மாதவர்கண் காட்சியரே
என்னவரென் னையேற்க இன்மொழியால் - தென்னவர்பால்
என்பால் இரக்கமுற்று அன்பால் பரிந்துரைமின்
இன்பால் எளியாட்கும் எய்துமின்றே - துன்பம்
தொலைந்தேகும் இன்பம் நிறைந்தோங்கும் ஓவா
அலைந்தேங்கும் நெஞ்சம் அமையும் - நிலைவாழ்வில்
நித்தியர்தாள் நத்தியிங்கு பத்தியம்கை பற்றிநின்று
சத்தியமெய் கொள்ளும் இனிது. (108)

திரு பவனிக் காதல் இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!