திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/070.தெய்வமணிப் பதிகம்

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



70. பதிகம்[தொகு]

இலக்கணம்:-

பத்துப் பாடல்கள் கொண்டது பதிகம் எனப்பெறும். ஆசிரிய விருத்தம், ஆசிரியத்துறை கலி விருத்தம் ஆகிய நான்கடிச் செய்யுள்களாலும், எட்டடி அளவுடைய பஃறொடை வெண்பாவாலும் பாடப்பெறுவது இவ்விலக்கியம்.

ஆசிரியத்துறை அதனது விருத்தம்
கலியின் துறை அவற்றின் நான்கடி
எட்டின் கூறும் உயர்ந்த வெண்பா
மிசைவைத் தீரைந்து நாலைந் தென்னப் 
பாட்டுவரத் தொடுப்பது பதிகம் ஆகும்
- பன்னிரு பாட்டியல்  - 197
கோதிலோர் பொருளைக் குறித்தையிரண்டு
பாவெடுத்துரைப்பது பதிகமாகும்
- முத்துவீரியம்  - 1116
பப்பத்தாய் எத்துறையும் பாடல் பதிகமதே
- சுவாமிநாதம்  - 168
பதிகம் என்பதுவே பலபொருள் பற்றி
பத்துப் பாட்டால் பாடல் பான்மையே
- பிரபந்ததீபிகை  -80

இப்பிரபந்தமாவது எம்பெருமான் பிரம்மப் பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் திருவருட் பெருமையைப் பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தாலும், பதிக வெண்பா எனப்படும் பத்து நேரிசை வெண்பாக்களாலும் விதந்தோதுவதாக அமைக்கப் பெற்றுள்ளது.

தெய்வமணிப் பதிகம்

காப்பு

நேரிசை வெண்பா

ஆய கலைக்கதிபர் தூயமலர்ப் பொற்றாள்கள்
நேயமுடன் என்சிரத்தே நன்கணிந்து - நாயகர்தம்
வான்புகழைப் பாட வரந்தரவே வேண்டுகின்றேன்
கோன்சாலை ஆண்டவர்தாள் காப்பு

நூல்

பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

இறைவா!என் தெய்வமே! எனையாளும் ஈசனே!
ஈடிணையில் தவ மேருவே!
இனிதாக எனதுயிர் தனில்மேவி அருள்தரு
இன்பவடி வான குருவே!
குறையாத நிதியமே! கறையிலா மதியமே!
கோதிலா ஞான உருவே!
கோடிசூர் யப்பிர காசமே! நேசமே!
கொண்டல்கொடை விஞ்சு கரமே!
நிறைவான இதயமே! நிஜஞான உதயமே!
நித்ய செல்வப் புதையலே!
நிகரிலா மெய்ச்சுகம் நீதியின் மெய்யகம்
நிலைகற் பகத்தா ருவே!
மறையோ(து) அனந்தர்கள் முறையால் வணங்குதவ
மணிஆ ருயிர்க்கு அணியே!
மறலிகெட வரமருளு மதியொளிரு கதியுதவு
மெய்வழி தெய்வ மணியே!
(1)

நாடோறும் புதியரே! நல்லுயிர்க் கதியரே!
நற்பதம் அருள் மதியரே!
நானிலம் இதுகாறும் காணாத முதியரே!
நலமோங்கு தவநி தியரே!
பாடேறும் தவராஜ கம்பீர பதியாண்ட
பண்போங்கு வேத முனியே!
பலகலைகள் இலகுதமிழ் வேதவே தாந்தமும்
பண்ணாரும் அமிர்த கனிகள்

கோடானு கோடிதரு கற்பகக் காவெனும்
கோவே!பொன் னரங்கை யரே!
கோதகலப் போதமருள் நாதமணிச் சீதனமெய்க்
குல தெய்வ தேவேசரே!
நீடாழி சூழ்புவியில் நீதியர சாளவரு
நித்யவர மருளு மரசே!
நமனிடர்கள் தவிரவழி துணையருளு மெய்வழி
நாதாந்த தெய்வமணியே!
(2)

அற்பனேன் புழுவினும் கடையேனை ஆட்கொண்டு
அடிமலரில் ஏன்ற தயவே!
அமிர்தவா ரிதிஅன்னை தந்தையும் சற்குரு
அனைத்துமா யினதெய் வமே!
பொற்பதப் பொன்மலர் வருந்தநட மிடுசாமி
புவிமிசை யவத ரித்து
பொல்லாத மரணமெனும் பிறவிப் பிணிதீர்க்கப்
போந்தபொன் னரங்கை யரே
நிற்பாத சேவையே என்பாக்யம் எனதுதுரை
நேசமே சுகவா சமே!
நீடுபுகழ் பாடவே நெஞ்சுவந் தேன்ஐய!
நின்தயவு வேண்டி நின்றேன்
நற்போது இப்போது நன்றாள்கை செய்யுமென்
நாயகா! அருட்ஜோதி யே!
நமன்முடுகி வருபொழுது இடர்தவிரத் துணைஎற்கு
நல்குமெய் தெய்வ மணியே!
(3)

பஞ்சமா பாதகம் புகைதிரைக் காட்சிகள்
பாராத பத்ய நெறியர்
பாரகத் தோங்குநற் பண்பார்அ னந்தர்கள்
பரப்பிரம்மம் தனைய றிந்து
நெஞ்சகமெ லாமுங்கள் நினைவுஅன வரதமும்
நின்புகழ் பராவு மொழியர்
நித்தம் திருப்பணி இயற்றுதிற மும்கொண்ட
நிதமுயர் நற்றே வர்கள்
விஞ்சையர் அனந்தாதி தேவருள் எளியேனும்
மிக்குறவு கொளவைத் தனிர்
வேதமணியே! அருளு நாதமுனியே! இனிய
மெய்ப்பொருள் கனிந்த கனியே!
தஞ்சமென வந்துமது தாள்மலர் பணிந்தனன்
தயவருள வேணு மரசே!
தென்றிசைக் காவலன் யமன்வருகு பொழுதுதுணை
தந்தருள்க தெய்வ மணியே
(4)

பொற்சரிகை யிட்டசிர பூஷணம் அதனிலே
பொருந்து கிள்நாம அழகும்
பொங்குமெழில் பூரணச் சந்த்ரதிரு வதனமும்
பிறைநெற்றி இந்த்ரதனு போல்
நற்கனி விற்புருவம் கமலமார் திருநயனம்
நல்எள்போன்ம் மலர்நா சியும்
நல்லுயிர்கள் உய்யஅருள் பெருகுமழை பொழிதரும்
நற்குமுத மலரமுத வாய்
அற்புத வலம்புரிச் சங்குமிட றணிதிகழ்
ஆனைமத் தகமார் பகம்
அழகொளிரு திருவுதரம் ஆருயிர் பணிந்தேத்த
அம்புயம் பதும மலரார்
பொற்பதம் காண்விழிகள் பாரில்பிற காணுமோ
பூதலத் திணையில் பேறு
பொருபடையோ டெமன்முடுகி வருகுபெரு நாளினில்
புரிகதுணை தெய்வ மணியே!
(5)

மறையாத கதிருநீர்! கறையிலா மதியுநீர்!
வரையிலா வான்மாரி நீர்!
மதிப்பினில் அடங்காத மாணிக்கப் பரிசுநீர்!
மாதவத் தவமேரு நீர்!
குறையாத நிதியுநீர்! கோதிலாப் பதியுநீர்!
கூற்றை வெல் ஆற்றல் நீரே!
கோலந் திகழ்ந்தோங்கும் கற்பகத் தாருநீர்!
குலதெய்வ தேவேசர் நீர்!
நிறைஞான கருவூலம் அருள்வான குருகோலம்
நீதிமெய் தரு சீலமே!
நெறியாகும் இனிதாக ஒருசேரு வடிவோடு
நிலமீது அவதார மே
இறையேநின் அருள்பாத மலரேஎன் சிரமேவில்
இணை யேது சுகவாரிதி!
எமனிருளில் ஒளிபெருக தவனிதிய மிகவருளு
ஈசர் மெய்த் தெய்வ மணியே!
(6)

தங்கநற் றாள்மலரில் தஞ்சமுற் றாரன்பு
நெஞ்சமுற் றோங்கு மரசே!
தவநிதியை எமதுயிருள் பதியவர மருள்செய்கு
தன்னேரி லாத குருவே!
எங்களுக் காகவே இனியதிரு மேனிகொண்(டு)|r}}
இப்புவியில் அவத ரித்து
எம்மையும் ஒருபொருளென் றேற்றிணையில் திருவுளம்
இறவாத வரம் தந்தனிர்!
தங்கள்திரு முனர்நின்று பணிந்தே வணக்கமும்
தான்புரிந் திடவேண்டி னேன்
தருமதுரை யேஎமது உயிருள்அணி யேதங்கள்
தரிசனம் அதுபோ துமே
எங்கும்நிறை இனியரே இன்பமருள் கனியரே
ஈடில் மெய்ச்சாலை அரசே
எமன்முடுகி வருபொழுது இடர்தவிரத் துணை தருகு
இறைவர் மெய்த் தெய்வ மணியே
(7)

மந்திரமெல் லாம்மெய்யின் திருநாம மென்றெம்மை
மன்றினில் வைத்து ணர்த்தி
மாமறைகள் யாவுமே ஒன்றெனத் தெளிவித்த
மணிமந்த்ர திருவுரு வமே!
இந்த்ரதனு வெனவண்ண எழிற்கோலம் காட்டியே
எமையாண்டு கொண்ட குருவே!
இமையவருள் எமையுமொரு பொருளென்றேற் றெமதுயிர்க்
குயிரான இறைசொரூ பரே!
சந்த்ரமண் டலநடு வொளிகாட்டி வெளிகாட்டி
சாயுச்ய மேற்றுதவ மே!
தனிமுழு முதற்பொருள் கருணையா ரமுதமே!
தெய்வநா யகமா தவா!
எந்த்ரவள் ளால்எமது சிந்தையுறை பந்தமே!
விந்தைமிகு வேதாந் தமே
எமபடரை வெலவருளு பாக்யமே போக்யமே
எந்தைமெய்த் தெய்வ மணியே!
(8)

மூவாசை விட்டிலேன் நாவாசை மட்டிலேன்
முழுதுமாய் நுமைப் பற்றிலேன்!
முந்நான்கு ஆண்டுகள் குருபணி இயற்றிலேன்
மாதவம் எதும்புரி கிலேன்!
ஓவாது றங்கினேன் உணவாசை கருதினேன்
உன்மத்த னாய்த்தி ரிந்தேன்
ஊர்சுற்ற ஆவலுடையே னெனினும் ஏழையை
உங்கள்பிள் ளையென் றனிர்
தேவாதி தேவ!நின் திருவுண்மை அறிதிறம்
செப்பி யென்னுட் புகுந்தீர்!
சிறியஉளம் எனதெனினும் பெரியர்நீர் என்ஜீவ
சிம் மாசனம் உற்றனிர்!
சாவாத வரமெனும் சீர்பரிசு தந்தருள்
தயவினுக் கிணையு முளதோ!
சீறிஎமன் வருபொழுது மாறில் கருணைநல்கு
திருவோங்கு தெய்வ மணியே!
(9)

நீடாழி சூழ்புவியில் நித்யவர மருள்செய
நீதிதிரு மேனி கொண்டீர்
நித்தம் தவம்செய்து எத்தும் பரவெளியில்
நேயமுறு மனுமாந் தரை
கோடா யிதம்கொண்ட கொழுஞான தவநாதர்
கோத்திரம் அருள்செய் தனிர்!
குருகுலம தோங்கிவளர் கொண்டலே அண்டர்தம்
கோதறும னந்தர் கோவே!
பாடான பாடுமது பலன்எமது எனுநீர்மை
பாரகத் திதன் முனுண்டோ
பாதமலர் அருள்சாமி அருள்வாமி தவநேமி
பற்றினேன் பாத மூலம்
தேடாத நிதியமே! தெளிஞான அமுதமே!
திருவுயர்மெய் குரு ராஜரே!
தீண்டஎமன் வருபொழுது ஆண்டுஎமை மீட்டருளும்
திருவோங்கு தெய்வ மணியே!
(10)

தெய்வ மணிப்பதிக வெண்பா
நேரிசை வெண்பா
அந்தாதித் தொடை

சென்றவிட மெல்லாம் ஜெயக்கொடிகள் நாட்டுகிறேன்
வென்றிடுவேன் மன்னாதி மன்னரையும் - என்றுயிரைக்
கொல்எமனே நின்னாட்சி சாலையண்ணல் பிள்ளைகள்பால்
செல்லாது என்றும் இனி.
இனிஎமனின் அச்சம் எமக்கிலையென் றிங்கே
முனியரசு மெய்த்தெய்வ மக்கள் - இனிதுரைக்கக்
காணுமினோ காசினியீர் கர்த்தாதி கர்த்தரெழில்
மாணடிகள் சார்ந்துய்மின் வந்து.

வந்துலகில் வாழ்ந்தோர் மறலியம லால்வீழ்வர்
இந்தநிலை மாறிற்றிங் கேசாலை - விந்தைமிகு
பாதமலர் பற்றிப் பணிந்தோர்க்கு சாயுச்யம்
நீதமெனத் தந்தார் வரம்.

வரம்தந்தார் சாவாத் திறந்தந்தார் பொன்மைத்
தரந்தந்தார் மெய்வழியெம் தெய்வம் - பரந்தாமர்
பேரின்ப சித்திப் பெருவாழ்வு பெற்றுய்ய
நீரின்பம் கொண்மின் நிலத்து.

நிலமங்கை நித்தியரைக் காப்பாள் குகையாம்
தலம்செய்வாள் சாலையண்ணல் ஈன்ற - குலமெல்லாம்
ஜீவப் பிரயாணம் என்றானோர்க் கென்றென்றும்
தேவப்பொன் மேனியெனும் சீர்.

சீரோங்கும் தெய்வத் திருவடிசேர் சற்சனர்க்கு
பாரோங்கும் ஜீவப் பயணம்காண் - தேரூர்ந்து
தெய்வம்வந் தாரழைக்கக் காண்மின்கள் என்றுரைத்து
எய்தும் பரவெளிக்கே தான்.

தானென்ப தற்றுமெய்ச் சாலைவளர் தெய்வத்தாள்
தான்மெய்யென் றுற்றுத் திருவருளார் - வான்பதமே
பெற்றோர்க்கு இல்லை மரணபயம் பேரின்பம்
எற்றும் சுவர்க்க பதம்.

பதமருளும் பொன்னரங்கர் பண்போங்கு பொற்றாள்
நிதம்வணங்கும் நித்தியர்க்கு நன்னாள் - இதம்பெருகும்
இன்பம்ஜீ வப்பயணம் எந்நாளும் விண்ணாளும்
அன்பர்க்கே ஆகும் சிறந்து.


சிறந்தார்கள் சாலையண்ணல் தாள்சேர்ந்தார் மற்றோர்
இறந்தார்கள் என்றறிமின் மக்காள் - அறந்திகழும்
சத்தியமெய்ச் சாலைவளர் நித்தியர்க்குப் பத்தியர்க்கு
முத்தியருள் வித்தகரைப் போற்று.

போற்றிப் பணிந்து புகழ்ந்துயிருள் பூரித்து
ஏற்றி மகிழ்வர் பிறவியரே! - கூற்றினிடர்
மாற்றிப் பரமபதத் தேற்றித் தவமாற்றும்
ஆற்றலரென் தெய்வம் அறி.

தெய்வமணிப்பதிகம் இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!