திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/009.திருஇணைமணிமாலை

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



9. இணைமணிமாலை[தொகு]

இலக்கணம்:-

அஃதாவது தேர்ந்துகொண்ட இருவேறு யாப்புகளில் ஒருயாப்பிற்கு இரண்டு பாடல்கள் என்ற வரையறை. ஒரு யாப்பின் இணையினை அடுத்து மற்றொரு யாப்பின் இணை வருமாறு பாடல்கள் அமைதல் வேண்டும். வெண்பாவும் கலித்துறையுமான இவ்விரு யாப்புகளும் அந்தாதித் தொடையாய் அமையப் பாடப் பெறுவது இணைமணிமாலையென இலக்கண நூலார் வகுத்துரைக்கின்றனர்.

வெண்பா கலித்துறை ஈரிரண் டியைந்த 
ஒண்பா நூறவை இணைமணி மாலை
-பன்னிரு பாட்டியல் 85
வெண்பா தொகைமுதற் பாகலித்துறை நன்கு 
இணைய இயம்புவது இணைமணிமாலை
-பிரபந்த மரபியல் 8
வெண்பா அகவல் வெண்பா கலித்துறை
பண்பா லிரைம் பஃது அந்தாதி
இயலின் வகுப்பது இணை மணி மாலை
-இலக்கண விளக்கம் 818
இணை மணிமாலை யிணை வெண்பாக் கலித்துறை
யகவன் மனவிருத்த தொடர்நூ றியம்பலே
-தொன்னூல் விளக்கம் 282

எவ்விதத் தகுதியுமின்றிய எளியேனையும் ஒரு பொருட்டாக - தங்கள் பிள்ளையாக, அங்கமாக தங்கள் இணையடி மலர்களில் ஏற்றுக் கொண்டு அருள்பாலித்து வரும் அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணைத் தெய்வம் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் பொன்னார் கமலமலர்த் தாள்கட்குக் கடைச்சிறியேனின் மழலைச் சொல் இணைமணிமாலை இஃது.

திருஇணைமணிமாலை

காப்பு

நேரிசை வெண்பா

துணைஆதி யேஎன்று தோத்தரித்துப் போற்றும்
இணைமணிமா லைபாட எம்மான் - இணைநிகரில்
பொற்பாதம் பூணும் சிரமிசையே அஃதொன்றே
நற்பாக்யம் நல்லுயிர்க் கென்றும்

நூல்

நேரிசை வெண்பா

அருவுருவாய் நின்றிலங்கும் அவ்விறையே பாரில்
குருவுருவாம் கோலத்தில் வந்து - அருள்புரிவார்
என்னும்பே ருண்மை இயல்பறிந்தோர் இப்பாரில்
மன்னும் அமரரெனத் தாம் (1)

தாமே சிவனயன்மால் தாமே குருபரராய்த்
தாமே வடிவெடுத்துத் தானிவர்ந்து - பூமிசையே
மக்களைத் தேவரென மாற்றிப் பிறப்பிக்கும்
தக்கா ரெனத்தான் அறி (2)

கட்டளைக் கலித்துறை

அறிவோங்கு வேதம் புராணம் இதிகாசம் மந்திரங்கள்
நெறியோங்கு வித்தைகள் யந்திரம் மோகனம் ஆகமங்கள்
குறியோங்கு சாங்கியம் ஆகமம் யாவுமே கற்றிடினும்
அறிவாகும் சற்குரு உண்மையைக் கல்லார் பயனிலரே (3)

பயனாவ துண்டு பரனே குருவென்று கண்டுகொண்டு
தயவா லவரருள் பெற்றுப் பிறவிக் கடல்கடந்(து)|r}}
இயல்பாய்மெய்த் தேவ நிலையெய்த லொன்றே இறைஞானமாம்
பயனீயும் ஞான குருவின்றி யேசிவம் கூடொணாதே! (4)

நேரிசை வெண்பா

கூடும் ஜபம்தபம் யாகம் விரதமும்
ஆகும்தீர்த் தம்தானம் யாவையுமே - நாடும்
குருவருள் ஒன்றால் நலமாகும் இன்றேல்
திருவின்றி ஏகும் தெளி (5)

தெளிவாம் குருவருள் தன்னால் திருமெய்
ஒளியோங்க நன்கு விளக்கும் - களிகூர்ந்து
மெய்க்குருவைத் தேடி மிகப்பணிந்து ஆட்பட்டால்
பொய்மலங்கள் தூளாகிப் போம் (6)

கட்டளைக் கலித்துறை

போமே இருவினை முத்தாபம் பொற்குரு புண்ணியரால்
ஆமே அனைத்து அறஞ்செயல் அற்புத மெய்ஞ்ஞானமும்
சேமம் சிறக்கும் திருவருள் ஒங்கும் தரிசனத்தால்
பூமிசைப் போதரும் பொன்னரங் கர்பாதம் போற்றுவமே (7)

போற்றிப் புகழ்ந்து பணிந்திறைஞ் சும்ஐயர் பொற்பதத்தை
ஏற்றி வணங்கி இனிதுப ராவிடும் இன்பநடம்
ஆற்றும் அரனார் குருபரர் மெய்வழி ஆண்டவரே
கூற்றை உதைக்கும் கொழுநிழற் சேவடி கொண்டுய்வமே (8)

நேரிசை வெண்பா

மேவும்அஞ் ஞான இருள்கடத்தும் வெங்கொடுமைப்
பாவம் அனைத்தும் பறந்தோடும் - தேவர்
குருவடிவாய் வந்தருளும் கோமான்மெய்ச் சாலை
அருளரசர் தெய்வம் துணை (9)

துணைசெய்யும் தெய்வப்பா தோதகத்தை உண்டால்
இணையில் நலமெல்லாம் எய்தும் - புணையாகும்
வெம்பிறவிச் சாகரத்தை நீந்திக் கரையேறத்
தெம்பருளும் தீர்த்தம் தெளி (10)

கட்டளைக் கலித்துறை

தெளிவு திருவார் குருவின் திருநாமம் செப்பிடுதல்
ஒளிசேர் எழிலார் திருவுரு கண்டு தரிசித்தலும்
களிகூர் குருகொண்டல் வான்புகழ் போற்றி விதந்தோதுதல்
தெளிவு திருமூல மந்த்ரம் ஜெபித்தல் கடைத்தேற்றுமே (11)

தேற்றும் குருகொண்டல் வாசம் செயுமிடம் கைலாசமாம்
ஏற்றும் திருவாக்கு பாவங்கள் தீர்க்குமா காயகங்கை
மாற்றும் இருட்குல வான்கதிர் பேரொளி நேர்மேனியின்
தோற்றம் திருவுரு சிந்திக்கில் அஃதே பெருந்தவமே! (12)

நேரிசை வெண்பா

தவமே புரிந்து பலனெமக்கே ஈயும்
சிவமே திருவோங்கு தேவே! - அவமே
கிடந்துழன்ற பேதைக் கிடந்தந்து ஏற்று
மடந்தீர்த்த தற்கென் இணை (13)

இணையில்லா ஏந்தல் அருளமுதம் தேக்கும்
அணையெங்கோன் ஆருயிர்வ ளர்க்கும் - துணைதெய்வம்
ஜீவசிம் மாசனமேல் சீர்துலங்க வீற்றிருக்கும்
தேவாதி தேவர் குரு (14)

கட்டளைக் கலித்துறை

குருவான கோல மதுதாங்கி இந்தக் குவலயத்தே
திருவோங்கு ஞானத் தெளிவோங்கு சாலைத் திருப்பதியில்
அருளாரும் மெய்ம்மைப் பொருளீயும் சாலை ஆண்டவரால்
மருள்வீயும் நித்ய மதுதோயும் இன்பம் பொலிந்திடுமே (15)

பொலிந்திடும் வேத மறைகள் துலங்கிடும் பொன்னரங்கில்
மலிந்தெழில் காட்டிடும் மந்த்ரங்கள் ரூப மதுவிளங்கும்
நலியாத வாழ்வினை நல்கும் பிரான்வந்து நானிலத்தே
ஒலியோங்க மெய்வணக் கம்புரி சாலைஉத் யோவனத்தே (16)

நேரிசை வெண்பா

உத்யோவ னச்சோலை ஒண்பொழிலார் சாலையதில்
நித்தியர்மெய் ஆண்டவர்கள் நல்லருளால் - சத்தியர்கள்
பத்திமிகச் செய்து பரமபதம் எய்துகின்றார்
எத்திசையும் போற்ற இனிது (17)

இனிதெம்மான் இன்பவடி வேற்றார் புவியோர்
இனித்தமுற மெய்ப்பதம்நன் கேற்க - தனித்தயவால்
ஓவா தறம்புரிந்து சாவா வரமளிக்கும்
மூவா முதல்வரெங்கள் கோன் (18)

கட்டளைக் கலித்துறை

கோனவர் எங்கள் குலமுழு தாண்டுயிக் காசினியில்
வான்செல்வம் நன்கு வழங்குகின்றார் வாங்க வம்மின்களே
ஆனவர் எல்லாமாய் அம்புவி போந்தெமை ஆண்டுகொண்டு
வானவர் ஆக்கிடும் மீட்புக் குலமுழு துய்ந்திடுமே (19)

உய்ந்திடச் செய்குரு மந்த்ரம் உலகில் உயர்பதமாம்
நைந்திடச் செய்யிருள் 'கு'வெனும் 'ரு'வேப்ர காசமென்பார்
ஐந்தெழுத் தாறெழுத் தெட்டெழுத் தென்னும் அனைத்துமந்த்ரம்
ஐயனின் மூலமந்த் ரத்துள் அடங்கி ஒளிர்ந்திடுமே! (20)

நேரிசை வெண்பா

ஒளிர்ந்திடுமே வேதங்கள் மந்திரங்கள் எல்லாம்
தளிர்ந்தினிது ஓங்கும் குருவால் - மிளிர்ந்து
மெய்ம்மை மிகத்துலங்க பொய்ம்மை பொடிந்தழிய
வையகத்துள் வான்வந் துறும் (21)

உறுமே அனைத்தறமும் ஓங்குகுரு ஈயப்
பெறுமே பரஞானம் வாய்க்கும் - திறமோங்கு
மெய்க்குருசற் றெண்ணிடில் மெய்ம்மண ஞானந்துலங்கும்
ஐயமின்றி ஆர்ந்தினிது கொள் (22)

கட்டளைக் கலித்துறை

கொள்ளும் திமிரம் அகங்கா ரமெலாம் கோதகலும்
வள்ளல் குருவின் தவமார் தயவால் வளம்நிறையும்
ஒள்ளிய ஞானத் திருக்கண் திறந்து உவந்தினிதே
தெள்ளிய ராகிடத் தேவ குருவின் திருவருளே (23)

திருவே! திறமே! தவமே! என்றும் நிலைபெறுமோர்
குருவே! பரனே! குறையா நிதியே! கற்பகமார்
பெருமா மறையே! தெளிவே! பெருந்திரு கற்பகமாம்
தருவே! ஞானம் தருமோர் இறையே! தயாநிதியே! (24)

நேரிசை வெண்பா

நிதியானார் என்றென்றும் குன்றாத வற்றா
நதியானார் நற்றவமெய் யற்குப் - பதியானார்
பண்பார்ஜீ வர்க்குக் கதியானார் பொற்குருவே
ஒண்பொருளும் தானானார் ஓர் (25)

ஓர்ந்தார் சிவபதமே சார்ந்தார் உயர்வுற்றார்
ஆர்ந்தார் அருட்குருவே ஆதரவாய் - நேர்ந்தார்
சிவகுருவே மெய்யர் தவத்திருவே என்றும்
பவம்கடத்தும் பண்பாளர் பார். (26)

கட்டளைக் கலித்துறை

பாரே உயிரின் நிலையாம் பயனே நித்தியமே!
சீரே மெய்யார் குருசொல் என்றும் சத்தியமே!
பாரே உய்ந்திடு துணையே பிடிக்கும் பத்தியமே!
ஏரார் குருவே திருவுள் துறக்கம் எத்திடுமே! (27)

எத்தும் பரவெளிக் கெந்தை திருவுளம் எண்ணிடிலே
முத்தர் குருபிரான் மெய்ம்மொழி ஒன்றால் வினைகெடுமே
அத்தனும் அன்னையும் ஆன்ற குருவெனும் எம்தெய்வமே!
எத்தான் இவர்திரு மாட்சித் திறத்தை இயம்புவனே! (28)

நேரிசை வெண்பா

புவனம் முழுதாளும் பொன்னரங்கர் தெய்வத்
தவமேரு தாள்மலரே சார்ந்தால் - பவப்பிணியைத்
தீர்க்கும் திருவருளே தேக்கும் பரவெளியுட்
சேர்க்கும் குருகொண்டல் காண் (29)

காணரிய காட்சியெலாம் காட்டும் கலைஞானம்
பூணரிய பொற்பதத்துள் ஆக்கும்காண் - மாணெழிலார்
சற்குருவாய் வந்த தர்மதுரை சொல்லொன்றால்
அற்பதச்சா யுச்ய குருவே! (30)

கட்டளைக் கலித்துறை

குருவிற்கு ஆடை அணிகலன் வாகனம் தந்துதவி
குருவிற்கு உடல்பொருள் ஆவியும் தத்தம்செய் தேவணங்கி
குருவை மனம்மொழி மெய்யால் பணிவுடன் தோத்தரித்து
குருவின் கடாட்சத்தைக் கண்டபேர் மெய்ந்நிலை கண்டவரே! (31)

கண்டநற் காட்சியும் கேள்வியும் யாவுமே சற்குருவால்
கொண்டது என்றே குருபதம் தன்னில் கனிவுடனே
விண்டு சமர்ப்பணம் செய்து வணங்குவன் சீடனென்போன்
அண்டர்க் கரியவர் தொண்டர்க் கெளியர் அருட்குருவே! (32)

நேரிசை வெண்பா

அருட்குருமெய் யன்பின் தயவால் அனைத்துத்
திருவும் விளைந்தோங்கும் சீராய் - பெருங்கருணை
கொண்டார் அருள்ஞானம் விண்டார் அதுபெற்றார்
அண்டர் பதம்பெற்றார் ஆர்ந்து (33)

ஆர்ந்த குருவே இறையின் மனுவடிவம்
ஓர்ந்து தெளிந்தவர்நம் உள்ளத்தே - சீர்திகழ
உள்ளார்ந்து அன்னிய மின்றி உணர்வார்க்குக்
கள்ளம் கருகி விடும் (34)

கட்டளைக் கலித்துறை

விடுமே வினைகள் தொடுமே புண்ணியம் மெய்க்குருவைத்
திடமாய்ப் பணிந்து திருவுள் கனியப் பணிந்தேத்திடில்
படுமே பிணிகள் மரணம் தவிரும் இனிதுயிர்தான்
தொடுமே இறைதாள் அனைத்தும் நிறைவே தவமேரே (35)

தவமே ராகிய குருவே பரனென் றறிமின்கள்
சிவனும் அயனும் திருமா லெனுமும் மூர்த்திகரம்
நவமெய் யுணர்த்தும் குருவே நினைத்த மாத்திரத்தில்
பவமே தவிரும் உயர்ஞா னம்தான் பொலிந்திடுமே (36)

நேரிசை வெண்பா

மேலான ஞானம் மிளிரும் அச்சற்குருவுள்
சீலமோ டெண்ணில் சிறந்திடுமே - ஞாலத்தில்
சற்குருவுக் கீடிணையில் சம்பத்தும் வேறிலைஅப்
பொற்குருவைப் போற்றிப் பணி (37)

பணிந்து பராவிக் குருபதத்தைப் போற்றில்
அணியாம் அனைத்துச்செல் வங்கள் - கனிந்துரைக்கில்
ஈசன்கோ பம்குருவால் காப்பாம் குருகோபம்
ஈசனா லும்காவா தாம் (38)

கட்டளைக் கலித்துறை

தாமே இ றைவர் குருவாய் மனுப்போல் உருவேற்று
சேமம் வழங்க வருவார் அவர்தம் திருத்தாள்கள்
தாமே புணையாம் பிறவிக் கடலைக் கடந்துய்ய
ஆமோர் நெறிகாண் அதுபெற் றுய்மின் அருளார்ந்தே (39)

ஆர்ந்தே குருவின் திருநா மமதே ஜெபம்செய்ம்மின்
சார்ந்தே திருவார் உருவை தரிசித் துதிசெய்மின்
நேர்ந்தே அவர்தம் சேவை தவமாம் இதையுணர்ந்து
கூர்ந்தே உளமார்ந்தினிதே சிந்தித் தோங்கிடுமே (40)

நேரிசை வெண்பா

ஓங்குமுயர் சற்குருவே நான்முகமில் பிர்மாவாம்
பாங்குயர்ந்த நாற்புயமில் விஷ்ணுவாம் - ஈங்கு
திரிநேத் திரமில்லா சாட்சாத் சிவமாம்
தெரிந்தறிந்தோர் மெய்யறிவி னார் (41)

மெய்யறிவைக் காட்டியிந்த வெம்பிறவிக் கட்டறுக்கும்
ஐயனே சற்குருவென் றாய்ந்தறிமின் - துய்ய
குருவின் திருவுருவம் கண்ணுடையோர் காண்மின்
அருமை இதனின்வே றில் (42)

கட்டளைக் கலித்துறை

இல்லை குருதாட் கிணைவே றெங்கும் இதுபணிமின்
நல்லார் இதனை நற்கல் வியின்பயன் நன்குணர்வார்
பொல்லாப் பிறவிப் பிணிதீர் மருந்தே பதமலரே
எல்லா வலதும் எய்தத் துணைசெய் யியல்பினதே (43)

இயல்சற் குருவின் இணைதாள் உளதிக் கேதுதிமின்
மயல்கொண் டவர்தாள் வணங்கிச் சிரமீ தணிமின்கள்
உயிரைக் காட்டி உயிராய் விளங்கும் உயர்குருவே
துயரம் தவிரும் துணையாம் இதுகண் டறிவீரே! (44)

நேரிசை வெண்பா

அறிமின்கள் நாசி வெளியேமூச் சோடா
நெறிநின்றார் ஊணுறக்க மற்றார் - குறிகுணம்சீர்
கொண்டார் மறைதெளிய விண்டார் எமதிறைவர்
தொண்டர்க் கெளியார் குரு (45)

குருவே சிவமானார் கோதகன்றார் வானின்
திருவே ஒருமேனி தாங்கி - பெருஞாலத்
துற்றார் முழுமுதல்வர் ஓங்குதவ மெய்த்தெய்வம்
பற்றற்றார் தாளே பணி (46)

கட்டளைக் கலித்துறை

பணிமின் பாதம் பரவிப் பாதத் துகள்சிரமேல்
அணிமின் அகிலம் எங்கும் அவர்மெய்ப் புகழ்தன்னை
கணித்தற் கரியார் கடவுட் புகுந்த கருணையர்கண்
மணியைப் போற்றி வழுத்தி வாழ்வீர் மனுக்குலமே (47)

குலமே தழையும் குடியோங் கிடுமே குருகிருபை
பலமே சிறந்தால் பவவெவ் வினைகள் பொடிபடுமால்
நலமே உயிருய்ந் திடுமே நமனின் அமல்கெடுமே
வலமே பிறவிப் பயனைத் தருமெய்க் குருவருளே (48)

நேரிசை வெண்பா

அருளேஆ னந்தம் வழங்கும் உளத்தின்
இருளை விலக்கிடும் மெய்யாம் - பொருள் சேர்
குருவைத் தியானித்தால் கோதறுசௌ பாக்யம்
தருமோட்சம் தானெய் துறும் (49)

உறுமரண வாதனையே ஓடும் சுவர்க்கம்
பெறுதுறையும் கூடிடும் பொய்ம்மை - அறுந்தழியும்
ஞானகுரு வாய்த்ததனால் வானகமும் தான்திறந்து
மோனநிலை யெய்தும் உயிர் (50)

கட்டளைக் கலித்துறை

உயிருக் குயிராம் பரப்பிர் மம்மெனும் சற்குருவே
செயிர்தீர் காட்சித் திருவும் கதியும் குருதயவே
துயர்செய் எமனின் இடர்தீர்ப் பதுவும் அருட்குருவே
அயர்வில் நித்திய வாழ்வை அருள்வார் குருபரரே! (51)

குருவைத் தரிசித் தகணம் வினைகள் பறந்தேகும்
பெருவைப் பெனுமெய்ஞ் ஞானம் இனிதே நிறைந்தோங்கும்
அருளார் குருவே உறவும் துணையும் அனைவர்க்கும்
திருமெய் யருட்தாள் பணிவோர் இறவா வரம்பெறுமே! (52)

நேரிசை வெண்பா

வரந்தருவார் ஆனந்த ரூபகுரு தேவத்
தரந்தருவார் சாயுச்யம் ஈவார் - உரந்திகழும்
ஞான சபாபதியாம் நல்லுயிர்க்கு உள்ளுயிராய்
வான்செல்வம் எல்லாம் தரும் (53)

தருமமுத வாரி கலைக்ஞானம் என்றும்
பெரும்பதங்கள் யாவும் பொலியும் - குருபெருமான்
ஆதியந்தம் இல்லாதார் ஆதியந்த மும்அவரே
சோதிசுயஞ் சோதியவ ரே! (54)

கட்டளைக் கலித்துறை

ஏகாட் சரமும் பஞ்சாட் சரமும் இருளறச்செய்
யோகாட் சரமெட் டாட்சரம் யாவும் ஒருமொழியாய்
சோகம் எனும்வெம் மறலி தவிரச் செய்திறுதித்
தாகம் தவிர்க்கும் தண்ணென் கங்கை சற்குருவே! (55)

சற்குரு சத்தியர் நித்தியர் இதய மாளிகையில்
பொற்குரு அங்குஷ் டப்பிர மாணம் பொலிந்திலங்கும்
நற்குரு வாலே யோகம் ஞானம் சித்திக்கும்
அற்புதர் தாளே கதிமெய்ந் நிலையோர் அறிவதிதே (56)

நேரிசை வெண்பா

அறியாமை என்னும் இருள்விலகும் ஆன்ற
அறிவே உருவான மெய்ம்மை - நெறியோங்கும்
தெய்வம் உருவெ டுத்து சற்குருவாய் வந்தினிது
உய்வழியைக் காட்டும் உவந்து (57)

உவந்தோர் புழுவை குளவியின்ரீங் காரம்
சிவந்த குளவியெனச் செய்யும் - தவத்தோர்தம்
ஆன்றகுரு வின்தயவால் அன்புநிறை பேர்க்கெல்லாம்
சான்றாண்மை தேவரெனத் தாம் (58)

கட்டளைக் கலித்துறை

தாமே குருவின் தியான மதனால் பிரம்மமயம்
ஆமே முத்திப் பதமும் பெற்றுச் சிறந்திடுமே
காமா தியராம் அசுரர் கிளையும் அழிந்திடுமே
சேமா தியெனும் பரமார் நலங்கள் சிறந்திடுமே (59)

சிறந்தார் குருவை நயந்தார் ஞானம் வைராக்யம்
நிறைந்தார் திருவும் கீர்த்தி குறையா ஐஸ்வர்யம்
அறந்தேர் நெறியில் அழைத்தேகிடுமெம் அருட்குருவே
மறந்தே னுமெமன் வாரான் சீடன் முன்னிலைக்கே (60)

நேரிசை வெண்பா

முன்னிலையில் சற்குருவாய் தன்னிலை பராபரராய்
முன்னுபின்னு இல்லா முழுமுதலாய் - தென்னன்
பெருந்துறையார் ஞானம் தருந்துறையார் மெய்ம்மை
பொருந்துறைவார் பொன்னரங்கர் தான் (61)

தானே மணிகர்ணி காஷ்டகராய் சீர்திகழும்
வானே திருமேனி தாங்கிவந்து - கோனே
குருவான கோலம் அவர்ஆதி மூலம்
தருவான கற்பகமே ஆம் (62)

கட்டளைக் கலித்துறை

ஆமாறு காட்டும் அருட்குரு எம்பிரான் வெவ்வினைகள்
போமாறு காட்டும் பொய்ம்மை பொசுங்கிட மெய்வழியே
சேமாறு என்று தெளிவித்து ஆட்கொண்ட தென்னரங்கர்
நாமேரு நற்றுறை சாலையென் றாக்கிடும் நற்றுணையே (63)

நற்றுணை யாகவே நானிலம் போதரு நாதமணி
சொற்றுணை வேதியர் சோதிய னாதியர் தூமலர்த்தாள்
பொற்றுணை யாகிடும் போதமி கும்எழில் பொன்னரங்கர்
வெற்றிவி ராட்பதி மாகுரு மூர்த்தமாய் வந்தனரே! (64)

நேரிசை வெண்பா

வந்தருள்செய் வானவர்கோன் மென்மலர்வாய் தான்மலர்ந்து
தந்தருள்வார் சாவா வரங்களெல்லாம் - விந்தைகுரு
மூர்த்தமதாய் மெய்ஞ்ஞானப் பொக்கிஷங்கள் தான்திறந்து
கீர்த்தியருட் செல்வம் தரும், (65)

தருமநெறி தானருளும் சற்குருசா யுச்யர்
அருமைமிகு மெய்வழியை மாந்தர் - இருமைகெட
ஓவாத் தவத்தாலே உவந்தளிக்கும் வான்பதங்கள்
தூயோர்பெற் றுய்வர் சிறந்து (66)

கட்டளைக் கலித்துறை

சிறந்தார் படைத்தல் புரத்தல் அழித்தல் மறைத்தலொடு
நிறைந்து அருளல் எனுமைந் தொழிலும் இயற்றுமிறை
அறந்தேர் எமது குருகொண் டலராம் முழுமுதல்வர்
சிறந்தேம் எளியேம் திருவுள் இறங்கி ஏற்றனரே! (67)

ஏற்றார் திருமணிச் சூலில் இரண்டாம் பிறப்பருளி
போற்ற அருளார் அமுதம் வழங்கி வளர்வித்து
கூற்றுவன் ஆற்றல் கெடவே இறவா வரமருளி
ஆற்றுப் படுத்திய அன்பின் திறத்திற் கிணையுளதோ! (68)

நேரிசைவெண்பா

இணை நிகரில் எம்பெருமான் பொற்பாத தூளி
புணையாம் பவக்கடலைத் தாண்ட - துணைமெய்ப்
பெருவெளியே இன்பம் தருவழியே சீரார்
குருவழியே கொள்வோம் கனிந்து (69)

கனிச்சுவைவிஞ் சும்எம்மான் காருண்யர் வாக்யம்
இனிமைபொழிந் தின்பநெறிக் கேற்றும் - தனித்தலைமைப்
பொற்பதியர் பொன்னரங்கர் போதிவிருட் சம்சாலை
நற்பதியே நாடு நயந்து (70)

கட்டளைக் கலித்துறை

நயந்தார் குருபொற் பதங்கள் பவச்சே றுலர்த்திட்டார்
வியந்தார் பெருமான் அருளை திருவைப் புகழ்ந்தினிதே
இயைந்தார் பிரம்மப் பிரகாசம் கொண்டு இலங்கிடுமே
உயர்ந்தோர் குருவே உயிரென் றுணர்ந்தார் சிறந்தவரே! (71)

சிறந்தார் மெய்வழி தெய்வத் திருத்தாள் அபிஷேகித்(து)|r}}
அறந்தேர் உதகம் அருந்திச் சிரமிசைத் தாம்தெளித்து
நிறைந்தே கனிந்தார் அனந்தா தியராம் குருமந்த்ரத்
துறைந்தார் உலகில் உயர்ந்தோர் உத்தம பாக்கியரே! (72)

நேரிசை வெண்பா

பாக்கியர்கள் தம்மிதய பத்மநடு கர்ணிகையில்
நோக்கரிய சற்குருவைத் தர்சித்து - ஆக்கமிக
சிந்தை கனியத் தியானிப்பர் மெய்ஞ்ஞான
சுந்தரர்மெய் யூர்செல் பவர் (73)

பவக்கடலைத் தாண்டும் புணையாவார் ஆசான்
தவத்ததிகா ரம்மிக்கார் சீரார் - சிவபரமே
மண்ணகத்தே வந்துற்ற தெய்வம் எனஉணர்ந்தார்
விண்ணகத்தே வர்என்று தேர் (74)

கட்டளைக் கலித்துறை

தேர்ந்தறி சற்குரு சிவமே மாலே பிரம்மமதே
ஆர்ந்தினி அன்னவர் தாளே சிரம்புனை அணியாகும்
சார்ந்தினி தன்னவர் நாமம் ஜபித்தல் பவம்தீர்க்கக்
கூர்ந்தவர் பொன்னுரு சிந்திப் பதுவே செய்பணியே (75)

பணிபவர் சற்குரு பொற்றாள் பதும மலர்சிரமேல்
அணிபவர் உத்தமர் அன்னவர்க் கீடெதும் எங்குமிலை
மணிமொழி வேத மாமறை யும்மவர்க் கேதுலங்கும்
பிணியாம் பிறவித் துயரம் தவிர்மெய்ப் பெருவழியே! (76)

நேரிசை வெண்பா

வழிமெய் தனைப்பற்றி வாழ்வோர்க்கு என்றும்
அழிவில்லை எக்காலும் தீராப் - பழியில்லை
தெய்வம் குருபரராய் வந்தயின்னாள் பொற்காலம்
உய்பவர்க்கு ஓர்பரிசு காண் (77)

காணரிய காட்சியெலாம் காட்டுவித்த ஞானமணி
பூணரிய ஆபர்ணம் பூட்டுவிக்க - ஆண்குருவாய்
வையகத்தில் வந்தினிது வானகத்து வித்தெடுக்கும்
ஐயர்திருப் பொற்றாள் துணை (78)

கட்டளைக் கலித்துறை

துணைபொற் றாளே விளங்கும் திசையைத் தொழுதெழுதல்
வணக்கம் கிபுலா என்னும் குருதிசை நோக்கியெதும்
இணக்க முடனே இயற்றல் இனிதே நலம்தருமே
இணையில் குருகொண் டலுடன் உறைவோர் உயர்தேவர் (79)

தேவர்கள் மூவர்கள் யாவரென்றாலும் குருவின்றேல்
மேவார் துறக்கம் மேனிலை யெய்தார் இதுசத்யம்
நாவல ராம்குரு நாதரின் ஒருசொல் பிறவிதவிர்
மாவலி யோங்கிய சாதனம் உய்கதி பெற்றிடவே! (80)

நேரிசை வெண்பா

பெற்றசுகம் எல்லாமே மெய்வழிதெய் வத்தருளால்
பெற்றதுவே என்றுணர்தல் பெற்றியதாம் - கற்றபயன்
மெய்தெய்வ நற்றாள் தொழுவதே என்றுணர்தல்
உய்வழி தருவதிஃ தொன்றே (81)

ஒன்றே திருப்பணியென் உத்தமரைப் போற்றுதலே
நன்றே அவர்நாமம் நன்குரைத்தல் - என்றும்
குருதாள் மறவாமை கோடிபெறும் என்று
இருதாள் பணிந்தேத்து மின் (82)

கட்டளைக் கலித்துறை

பணிந்தேத் துமினோ குருவின் பாதத் துகள்சிரமேல்
அணிந்தேத் துமினோ உடலும் பொருளும் ஆவியதும்
கணித்தற் கரிய குருபக வானவர்க் கர்ப்பணித்தே
பணிந்தே புகழ்ந்து வரம்பெற் றுய்மின் என்மனமே (83)

மனமும் மொழியும் உடலும் கடந்தார் வான்குருவே!
மனமும் மொழியும் உடலும் கடத்தி ஆட்கொளுவார்
தினமும் புதியர் இறையே குருவாய் வந்தனரே!
இனமே சுரராய் இலங்கும் குருவின் அருளாலே! (84)

நேரிசை வெண்பா

அருளாளர் சற்குருதான் ஆசாபா சங்கள்
இருளாய மோகம்இல் லாதார் - மருள்நீங்கி
ஜீவன் கடைத்தேறச் செய்வல்லார் அன்னவரே
தேவாதி தேவன் அறி. (85)

அறிவுருவாய் நின்றவரே ஆன்றகுரு தெய்வம்
நெறிதனிலே ஜீவர்கடைத் தேறப் - பொறிவாயில்
ஐந்தடக்கிச் சார்ந்தோர் ஆன்மலா பம்பெற்று
உய்ந்திடச்செய் வாறென் றுணர் (86)

கட்டளைக் கலித்துறை

உணர்வால் உணரப் படுமெய்ப் பொருளாய் உயிராகி
குணமோங் கிடுமெய்ச் சீடர்கள் தம்மைக் கடைத்தேற்றும்
மணமோங் குயிர்கட் குருவாய் வருவார் மெய்த்தெய்வம்
கணமும் பிரியா துறைவர் கழல்கள் போற்றுவமே! (87)

போற்றுவம் சற்குரு வித்தகர் வானவர் பூதலத்தே!
ஏற்றுவம் பொன்னடி இன்முகம் சேர்த்தணைத் தின்புறுவோம்
கூற்றுவன் வந்தணு கானவன் கானம்உத் யோவனத்தே!
மாற்றறி யாதபொன் னின்அரங் கர்வந்துற் றாரினிதே! (88)

நேரிசை வெண்பா

இனிதாகும் சாதல் இன்குருசார்ந் தார்க்குக்
கனிகற் பகத்தருவாம் தெய்வம் - தனித்தலைவர்
பொன்னா ரடிக்கமலம் பற்றிப் பராவுவற்கு
என்னாளும் இன்பம் நிலை. (89)

நிலையிற் றிரியாதார் நித்தியவாழ் வெய்தும்
தலைவர் குருபெருமான் தாளில் - அலைவின்றி
ஓர்மனதாய்ப் பற்றி உவந்திருப்பார் மெய்ஞ்ஞானச்
சீர்ஜென்ம சாபல்யர் காண் (90)

கட்டளைக் கலித்துறை

காண்பார் தரிசனை கேட்பார் திருமொழி கர்த்தரருள்
பூண்பார் திருவரம் பொன்னரங் கையர் குருகொண்டல்
மாண்பார் ஞான தபோதனர் தாளை வணங்கினர்க்கு
சேண்மெய்ஞ் ஞானம் திருவிளை யாடல் துலங்கிடுமே! (91)

துலங்கும் மெய்வாழ்வு திருவோங்கு சீர்குரு பேர்தயவால்
கலங்கா திதயம் காரிடி ஏமன் கடுகிவரில்
இலங்கும் எழில்மறை ஆகமம் யாவும் பளிங்கொளிரும்
அலங்கம் எனும்மூல மந்திரம் நற்றுணை நல்கிடுமே! (92)

நேரிசை வெண்பா

நல்கும் இகபர சௌபாக்யம் சீடர்க்குப்
பல்கும் பரம குருதயவால் - வெல்வர்
வெம்பிறவிக் கட்டறுப்பர் தம்பிறவி யின்பயனை
நம்பெருமா னைப்பணித லால். (93)

பணிவார் குருதிருமுன் பல்வரங்கள் பெற்று
அணிவார் அழியாமெய் வாழ்வு - கணிக்கரிய
பேரின்ப சித்திமிகப் பெற்றுய்வர் அஃகாத
சீரின்பம் என்றும் நிலை. (94)

கட்டளைக் கலித்துறை

நிலையா துருளும் நீணில மீது நிலைபெற்று
குலையா வாழ்வும் கோதறு கோகுரு வானமுதக்
கலைஞா னத்தின் கருவூ லமதும் கைபெறுமால்
நலமோங் கிடுமெய் வழிசார்ந் தினிது உய்ந்திடுமின் (95)

உய்வழி ஒன்றே உலகோர்க் கென்றும் எக்காலும்
செய்வழி காட்டும் திருநிறை ஆற்றல் தவவாய்மை
மெய்வழி தெய்வம் மகிதல மீமிசைப் போதரலால்
நைவழி நீங்கும் நலவழி ஓங்கும் நற்பரிசே (96)

நேரிசை வெண்பா

பரிசிலுயர் மெய்க்குருவைப் பெற்றால் அவர்தம்
தரிசனையால் சர்வவரம் கொள்ளும் - விரிகருணை
தன்னாலே நித்தியமும் சத்தியமும் ஈந்தருளும்
பொன்னரங்கர் பேரார் குரு. (97)

குருபதமே கோடி நிதியாகும் மற்று
வருசெல்வம் எற்றுக்காம் நெஞ்சே! - இருள் கெடவும்
அன்னா டகம்துலங்கும் ஆரமுதம் பொங்கிவரும்
பொன்னாடர் பொற்றாள் துணை. (98)

கட்டளைக் கலித்துறை

சரணார விந்தம் சிரஞ்சூடி ஏற்றில் அன்னவர்க்கு
மரணாவஸ் தையில்லை மிக்கின்ப நித்திய வாழ்வுறுமால்
அரனும் அரியயனும் ஓர்மேனி கொண்டு வந்துபரா
பரன்மெய் வழிதெய்வம் பொன்னார் கமலம் பணிந்துய்ம்மினே! (99)

உய்யும் வழிகொண்டு வந்தார்என் ஐயர் உயிர்க்குயிராய்
வைய மிசையமுத வான்செல்வம் பொங்கி வரம்பெறவே
செய்யும் பேரின்பமார் சித்திப் பெருவாழ்வு சீர்தருங்கோன்
மெய்வழி ஆண்டவர் என்னும் வரோதயர் தானவரே! (100)

திருஇணைமணிமாலை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!