உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/054.அருட்சேனை மாலை

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.✫ 54. தானை மாலை[தொகு]

இலக்கணம்:-

தானை என்பது படையைக்குறிக்கும் சொல். ஓர் அரசன் மாற்றரசனின் மீது போர் தொடுக்கும் போது படையின் முன்னே அவ்வரசனின் கொடியை ஏந்திச் செல்லும் போர்மறவரைக் கொண்டது தூசிப்படை. அப்படையின் சிறப்பைப் பாடுவது தானை மாலை எனப்படும்.

படைத்திறஞ் சொல்லின் பகர் தானை
- வெண்பாப் பாட்டியல் 53'

தானையை விரித்தல் தானை மாலை
- பிரபந்த மரபியல் 17
புகல்வர் தானை அகலமுரைப் பதுதானைமாலை
- சிதம்பரப் பாட்டியல 38
ஆசுஅற உணர்ந்த அரசர் பாவால்
தூசிப் படையைச் சொல்வது தானை மாலை ஆகும்
- இலக்கண விளக்கம் 869
எப்பாட்டாலும் முப்பஃ தியம்பின்
அப்பெயர் வர்க்கத்து அவ்வம் மாலை
- பிரபந்த மரபியல் 17

எம்பெருமான் பிரம்மப் பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்களுடைய தேவாலயத்தின் திருமுன்றிலில் அமைந்துள்ள கொடியின் சிறப்பைக் கூறுவது இப்பனுவல்.

அருட்சேனை மாலை

காப்பு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியச் சந்தவிருத்தம்

ஞானம் இன்றி உலகோர்கள்
நமன்கைப் பட்டு அழிகாலம்
வானின் தனிகை மணிக்குமரர்
வள்ளல் கோமெய் வழிச்சாலை
தேனின் சுவையார் அமுத மொழிச்
செல்வர் தெய்வம் உயிர்காக்க
தானை எழும்பும் திருவுரைக்கத்
தம்பி ரான்தாள் காப்பாமே!

நூல்

ஆதி தேவன் ஆண்டவர்கள்
அகிலம் உய்ய எழுந்தருளி
நீதி மெய்ம்மை நிலைபெறவெ
நிஜமெய்ஞ் ஞானம் தழைவுறவே
தீதாம் பொய்ம்மை யதுமடிய
திருவேற் கரம்கொண் டெழுந்தனரே!
பேதம் இல்லாச் சமுதாயப்
புரட்சி ஒன்றும் இயற்றினரே!
(1)
அறமோர் உருவாம் எமதையர்
அருளார் கிள்நா மக்கொடியை
திறமாய்க் கம்பம் தனிலேற்றி
திருவேண் டுலகீர் வம்மினென
மறலி யமல்மீண் டுய்யவிழை
மாந்தர் வருக! வருக!வென
நிறமார் காவி வெண்கொடியும்
நெடிதோங் கும்கம் பத்தேற்றும்
(2)
மாசு மறுவொன் றில்லாது
மாதே வர்மெய் வழிச்சாலை
ஆசான் ஆண்ட வர்தங்கள்
அழகார் கிள்நா மக்கொடியை
தேசோங் கினிது சிரமேந்தித்
திருவோங் கனந்தர் படை எழுக
தேசம் எங்ஙும் மெய்வழியே
செழிக்க அறப்போர் புரிமின்கள்!
(3)
தனிகைக் குமரர் தவவாய்மை
தன்னே ரில்லாத் தனித்தலைமை
பனிமாம தித்தாய் பங்கரெங்கள்
பரமர் சிவமாம் பெரும்பதியர்
இனியென் றெங்கும் இணையில்லா
எங்கள் மெய்யாம் வழிசிறக்க
புனிதப் பெரும்போர் நிகழ்த்திடவே
புறப்பட் டதுமுன் கொடிப்படையே!
(4)
வாட்டம் செய்யும் மறலி தனை
வெல்ல அனந்தர்க் கரசர்படை
ஈட்டம் எழக்கண் டினிநமக்கு
இங்கே ஆட்சி இல்லை யென
ஓட்டம் எடுக்க முரசதிர்ந்து
உம்பர் கோன் மெய் வழிதெய்வ
ஊட்டம் பெருகக் கொடியேந்தி
உயிர் காத திடவே எழுந்ததுவே!
(5)
துடும்து டும்என் றேநகரா
முழங்கப் படைகள் ஊக்கமுற
எடும் எடும்மென் றேயிசைக்க
எழும் எழும்மென் துந்துமிகள்
கடும்ப கைவன் கலியரசன்
கலங்கக் கர்த்தர் சேனையிது
இடும்கிள் னாமக் கொடிசிரசில்
இலங்க அனந்தர் படை செலுமே!
(6)
தூசிப் படையென் றுலகோர்கள்
சொல்வார் கொடிநற் சேனையிதை
ஆசி வழங்கும் ஆண்டவர்கள்
அடிகள் தொழுது அனந்தாதி
மாசில் லாத மனுமக்கள்
வஞ்ச எமனை வெல்லவென
வீசும் புகழார் மெய்வழியே
விளங்க உலகிற் பரந்தனரே!
(7)
கலியன் என்னும் கொடும் பகைவன்
கர்த்தர் படைத்த மக்கள்தமை
நலியச் செய்யப் படைஎடுக்க
நாதர் மக்கள் திரண்டெழுந்து
வலிமை பரவக் கிள்நாமம்
விளங்கச் சிரமார் பாகையணி
பொலியப் போந்தார் பொன்னரங்கர்
புகழைப் புவியில் சாற்றினரே!
(8)
எங்கும் என்றும் மெய்வழியே
இனிதே ஓங்கச் சிரோமகுடம்
தங்கும் கிள்நா மக்கொடியைத்
தாங்கி எழிலார் அனந்தர்குலம்
பொங்கிப் பெருகிப் பொன்னரங்கர்
புகழ்சைன் யம்என் றுலகறிய
மங்காத் தவத்தோர் மாண்புரைக்க
மறலி அஞ்சி நடுங்கினனே!
(9)
சாதி மதங்கள் தம்முள்ளே
சண்டை பிணக்கு முரண்டாட்டாம்
பேதம் கொண்டு திரிவதனைப்
பெருமான் கண்டு மக்களெலாம்
ஆதி நாளில் இருந்தபடி
ஆக்க வென்றே எண்ணினரால்
பேத மற்ற சமுதாயம்
பிறக்கக் கொடியின் படையனுப்பும்
(10)
புலையும் கொலையும் கள்காமம்
பொய்யும் சூதும் புகைசினிமா
அலையும் அரசு கோல்எதிர்த்தல்
அனைத்து பாத கங்களெலாம்
தொலையும் நெறிமெய் வழிபற்றித்
தரணி யோர்கள் உய்யவென
கலையோங் கெழிலார் கிள்நாமக்
கொடியும் வீசிப் பறந்ததுவே!
(11)
நிலையா வாழ்வை நிலையென்று
நினைந்தே மாந்தர் அலைகாலம்
நிலையாம் நித்ய வாழ் வருளி
நீடு பேரின் பம்துய்க்கும்
கலையே சாகாக் கல்வியருள்
கர்த்தர் சாலை ஆண்டவர்கள்
மலையாம் மேரு மகதியென
வந்தார் என்று கொடியசையும்
(12)
மும்ம லங்கள் மாய்ந்தேபோய்
முனிபுங் கவராய் மனுமாறி
செம்மை நலஞ்சேர் தேவரெனத்
திருவோங் கிடவே அருள் தெய்வம்
எம்மான் சாலை ஆண்டவர்கள்
இனிதே அவதா ரம் செய்தார்
வம்மின் உலகீர் வந்துவரம்
வழங்கப் பெறுகென் கொடிஅழைக்கும்
(13)
போலிப் பாசாண் டியர்போந்து
பொய்ம்மை பரப்பிப் புவிமாந்தர்
சீலம் நிறைமெய் ஞானநெறி
சிறக்க வொட்டாத் தடைசெய்ய
ஆலம் உண்ட அருட்சிவமே
அகிலம் போற்று ஆண்டவராய்
கோலம் காட்டும் எனக் கூவிக்
கொடியும் அசைந்து பறந்ததுவே
(14)
எமனின் அமலை வென்றோர்கள்
இலையென் றுலகோர் அழிகாலம்
இமையோர் தலைவர் எழுந்தருளி
இறவா வரமும் அருள்செய்யும்
சமயம் சாதிமதம் யாவும்
சமர சம்என் றினிதாக்கி
கமழ்செண் பகமென் மேனியரைக்
காண வரவே கொடிகூவும்!
(15)
வாழ்வின் நோக்கம் அறியாமல்
வையம் மயங்கி உறுகாலம்
தாழ்வில் லாத மெய்வழியைச்
சார்மின் உலகீர்! வாழ்வாங்கு
வாழ வம்மின்! எனக்கூவி
வள்ளல் கிள்நாமக் கொடிதான்
பூழி யர்கோன் பொன்னரங்கர்
புகழைப் பாட அசையுங்காண்!
(16)
ஊணும் உறக்கம் பொருள் வேட்கை
உழலும் காம வெறிவீக்கம்
பேணும் மாந்தர் தமையழைத்துப்
பேரின்பம் ஆர்வாழ்வளித்து
மாணும் தவமார் மணிமொழியர்
வந்தார் சாலை ஆண்டவராய்
காண வம்மின் எனக்கூவிக்
கொடியும் அசைந்து பறந்ததுவே!
(17)
ஞானம் என்றே பெயர்கூறி
நானிலத்தில் பலபேரும்
ஈனச் செயலில் மயக்குற்று
எமன்கைப் படச்செய் இழிதகையர்
ஊனப் பட்டு ஒழிந்தழிய
ஒருமெய்த் தெய்வம் அவதாரம்
ஆன முதல்பெற் றுய்ம்மின் என
அசையும் கிள்நா மக்கொடியே!
(18)
நடுங்கி மாந்தர் நலிந்தழிய
நமனின் இடரே மீக்கூரும்
ஒடுங்கிப் புலன்செய் மாய்கையினால்
உலகோர் தவிக்கும் இக்காலம்
நடுவண் நடுங்க நலமருள்செய்
நாதர் போந்தார் எனவீசி
கொடுங்கா லன்தன் னைவெல்லும்
கோமான் வரவைக் கொடிகூறும்!
(19)
அறமல் லாத நெறிதன்னை
அழிக்க வென்று கங்கணம்கொள்
அறவோர் கோமான் ஆண்டவர்கள்
அருளார் புகழைவிதந் தோதி
இறவா வாழ்வை எய்துமின்கள்
என்றும் இன்பம் நின்றோங்கும்
உறவாய் வம்மின் எனக்கூறும்
உயர்ந்த கிள்நா மக்கொடிகாண்.
(20)
மாய்கை தானும் மண்ணுலக
மாந்தர் தம்மை அழித்திடவே
ஓய்வில் லாமல் நின்றுழலும்
உம்பர் கோன்மெய் ஆண்டவர்கள்
தாய்கை யெனவே தாங்கியிந்தத்
தரணியோரைக் காத்தருளும்
ஆய்மெய்ச் சிந்தை அதுவோங்க
அழகாய்க் கொடியும் அழைத்திடுமே!
(21)
ஓர்நோக் கதனால் திரிபுரமும்
ஒழியச் செய்த எம்பெருமான்
பாரோர் செய்த பவவினைகள்
பொடிய அருவீர்என வேண்டும்
சீராய் ஞானம் செழித்தோங்கச்
செய்மெய்த் தெய்வம் பணிந்தேற்ற
வாரீர்! என்று இசைந்தசைந்து
வீசும் கிள்நா மக்கொடியே!
(22)
கொடியோன் மாய்கை எமனமலால்
குவல யத்தோர் மடிகாலம்
கொடியை ஏந்திக் கர்த்தர்படை
குருகொண் டல்தம் பதம்போற்றி
விடியட் டும்பொன் னுலகென்று
வையத் தோரை வரவிழையும்
அடியா ரவர்க்கு அண்மையுளார்
அடிகள் புகழும் அனந்தர்குலம்
(23)
வேத வளநா டிங்கிதனில்
மெய்ம்மை துலங்கும் அருளோங்கும்
நீதர் சாலை மனுமகனார்
நித்யம் அருளும் பெறவருக
சேத மில்லா திருநெறியில்
சேர வாரும் செகத்தீரே!
ஆதி தேவன் அடிதொழவே
அண்டி வரவே கொடியழைக்கும்
(24)
மாந்தர்க் குற்ற மயக்கொழிந்து
மறலி யமலின் மீட்டெடுக்க
பூந்து றைநன் நாட்டில்விடி
வெள்ளி பொலிந்து தோன்றியதே
காந்தன் எம்மான் கலியழிக்க
கொடியின் படையை முன்செலுத்தும்
பூந்தார் அணிபொன் னரங்கையர்
புகழை முழங்கிப் படைசெலுமே
(25)
மனுவைத் தேவ ராக்கவென
மனும கன்மெய் வழிகாட்டி
இனிதே அருள்செய் காலத்தே
எழுந்து தடைசெய் கலியழிக்க
புனிதர் எம்மான் படைதடைசெய்
போக்கும் வரவும் தெளிவாக
கனிந்தே அசைந்து அழைக்கும்எம்
கோவை என்னுள் கொடியேற்றும்
(26)
அனந்தா தியர்தம் சிரமேறி
அழகர் கிள்நா மக்கொடிதான்
கனமெய் வழியே எங்கெங்கும்
ஏற்றம் பெறவே இசைந்தசைந்து
தனமா தியர்தம் தவமாட்சி
தரணி அறியக் கூற்றைவெல
தினமும் புதியர் கிள்நாமத்
திருவார் கொடியின் படைஎழுமே!
(27)
வானத் தரசர் வள நாடர்
வஞ்சக்க லியின் படைவெல்ல
தான்தன் கொடியின் படைதன்னை
திருவோங் கிடவே முன்னனுப்ப
கோனெம் சாலைக் குரு கொண்டல்
கோமான் பொன்னின் அரங்கையர்
ஞானம் சிறந்த செங்கோல்செய்
நன்மை உலகில் சிறந்ததுவே!
(28)
வேஷப் புலையர் பொய்ஞ்ஞானம்
விண்டு நிஜம்போ லேபுகட்டும்
கூசாக் கொடியர் பொய்த்துறவோர்
குருடர் வழிகாட் டலைவெல்ல
தேசம் எங்கும் மெய்ஞ்ஞானம்
செழிக்க எங்கோன் கொடிப்படையை
மாசொன்றில்லா தேயனுப்பும்
மெய்ம்மை இங்ஙண் வெற்றிபெறும்
(29)
பூராங் கொடியும் கிள்நாமம்
பொறித்த காவி வெண்கொடியும்
சீரோங்கிடவே நெடுங்கம்பம்
தன்னில் ஏறிப் பறந்ததுவே
பேரோங் கும்மெய்த் தேவரெலாம்
பெருமெய்ப் பொருளே உலகறிய
நேரோங் கிடுமெய்க் கொடிப் படையே
நீடு புகழைப் பரப்பியதே!
(30)

அருட்சேனை மாலை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!