உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/060.நற்றொகைச் செய்யுள்

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.60.தொகைச்செய்யுள்[தொகு]

இலக்கணம்:-

ஒப்புமை கருதி பலவாகக் கிடக்கும் செய்யுட்களைத் தொகுத்து ஒரு நூலென முடித்துக் காட்டுவது தொகைநிலை அல்லது தொகைச்செய்யுள் எனலாகும்.

பாட்டுப் பொருளிடங் காலந் தொழில் பாட்டளவினெண்ணின்
நாட்டித் தொகுத்தவும் செய்தவன் செய்வித்தவன்றம்பேர்
மூட்டித் தொகுத்தவுமாகி முதனூன் மொழிந்த நெறி
கேட்டுத் தெரிந்துகொள் கிஞ்சுகச் செவ்வாய்க் கிளிமொழியே!
- நவநீதப் பாட்டியல் 66
தொகை நிலை என்பன தோன்றக் கூறில்
கலியடி செய்யுள் கலித்தொகை யாமே
- பிரபந்த தீபம்  51
நெடிலடிப் பாவால் தொகுத்தது நெடுந்தொகை
குறளடிப் பாவால் தொகுத்தது குறுந்தொகை
கலியிற் றொகுத்தது கலித்தொகை போல்வன
தொகைநிலைச் செய்யு ளெனச் சொலப் படுமே
- முத்துவீரியம் 1081
நெடுந்தொகை குறுந்தொகை கலித்தொகை என்னப்
படுந்தொகை செய்யுள் பற்பல ஆகும் 
- இலக்கண விளக்கம் 817

இவ்வகையான் எம்பெருமான் பிரம்மப் பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் திருப்புகழைப் போற்றுவது இப்பனுவல்.

நற்றொகைச் செய்யுள்

காப்பு

கலிவிருத்தம்

திகைத்தி டச்செயும் கூற்றினை வென்றிடும்
வகைய ருள்புரி வார்புகழ் பொற்றிடும்
தகையு யர்தெய்வத் தாள்மலர் காப்பதாம்
தொகைசெ யுள்பாடத் தோத்திரம் செய்குவாம்.

நேரிசை ஆசிரியப்பா

ஞாலத் தோரே! ஞாலத்தோரே!
கோலம் மனுவெனக் கொண்டனீர் நீரே!
சீலம் எதுவெனச் செப்புமின் நேரே
ஆலம் தனையே அமுதென மாந்தும்
காலன் வருங்கால் கருகி நைந்திடும்
ஓலம் புரிந்து உருகிக் கதறிடும்
தூலம் தாங்கிய சீர்பயன் இஃதோ?
வால மெய்யிறை கடவுள் குருபரர்
பூலோ கத்துட் போந்து
கோலம் காட்டும் கழல்பணிந் துய்மினே! (1)

கடவுள் எனில்என் எங்கது இயல்பெது
இடமெது காணல் எங்ஙென் றுரைமின்
இடமகல் ஞாலத் திவர்ந்த மாந்தரீர்!
திடமுடன் உரைப்பீர்! சிந்தை கனிமின்
உடலது ஆலயம் உள்ளுறை கடவுள்
படைத்துட னிருந்தும்ஓர் தலைமுறை காலம்
கிடந்துமக் குள்ளே நலமருள் அதனைக்
கடவுள் குருபிரான் எனவரு போழ்து
அடமுடன் பணிந்து வேண்டில்
மடந்தெளிந்து உம்முள் மலர்ந்திடும் மனமே! (2)

இமிழ்கடல் வரைப்பில் தமிழ்வளர் புவியில்
அமிழ்துகு உத்தியோ வனமது சாலையில்
கமழ்செண் பகமணத் திருவுரு வேற்று
அமிர்த வாரிதி அமரர் கோனவர்
உமையவள் கேள்வர் ஒருதனிமுதல்வர்
நமையாட் கொளவென நண்ணினர் நாடி
கமையுடன் வணங்கிக்க ரங்குவித் திணங்கின்
இமையவர் கோன்நம் ஏரார் தெய்வம்
தமை யுணர்வித்து ஆண்டு
அமரருள் ஆக்கும் அறிமின் மன்னோ! (3)

அந்தமில் இன்பச் செந்தமிழ் வழங்கிடும்
விந்தையார் புவியில் விளங்கெழில் சாலையில்
தந்தையும் தாயும் சற்குரு தெய்வமாய்
எந்தை இலங்கும் இறைநிலை காட்டிச்
சிந்தையுட் புக்கு உயிர்செழிப் பித்து
பந்தம தகற்றிப் பரசுகம் உணர்வித்(து)
அந்தகன் ஏமன் அமல்தவிர்த் தாண்டு
முந்நுறு மெய்ம்மை முகிழ்த்துணர் வருளி
விந்தை புரிமெய்த் தெய்வம்
தந்திடும் அமரவாழ் வெய்திட வம்மின்! (4)

பொங்குமெய்த் தமிழ்வளர் புவியிடத் தெம்மான்
எங்ஙணம் உயிர்க்கு இன்பரு ளும்மென
இங்குரை மின்எனில் இயம்புதும் கேண்மின்
துங்க மணிச்சீர் துலங்கும் மறைமுதல்
தங்கள் திருமணிச் சூல்தனி லேற்று
இங்ஙண் மறுபிறப் பருளி ஈன்று
அங்ஙண் அமரராய் ஆக்கி வளர்வித்து
தங்கள் நாட்டின் வித்தெனத் தேர்ந்து
தங்குறும் நம்மில் ஐயன்
பொங்கிடும் பேரின் பச்சுகம் பெறுமின்! (5)

மணிமொழி தமிழ்வளர் மண்ணுலகீரே!
அணிதிகழ், அருள்மணி ஆண்டவர் தங்களை
அண்டி வணங்கிய அன்பரை ஜீவ
பண்டிதம் செய்து பவவினை யாற்றி
இருவினை தாட்டி எழுமுத் தாபம்
பெருந்துயர் தவிர்த்துப் பெம்மான் தங்கள்
மெய்ப்பொருள் அருளி விண்ணவராக்கி
பொய்ப்போ தகத்தின் புன்மையின் மீட்டு
வானவர் தம்முள் உய்க்கும்
தேனக ராகிய தெய்வமெய்ம் மணியே! (6)

அலைகடல் ஆடை புனைபெரு உலகம்
நிலையிலா அருளும் நிலைமை போலும்
அலைவுறு மனமும் பலதுயர் நினைவும்
குலைதனிற் குறிப்பும் கொள்மனு வினமே!
வாழ்வித னொடுமுடி வதுயிலை கடைநாள்
வீழ்வுறு நிலைதனில் இருவிதம் உளது
தாழ்வுறு துயர மரணம தொன்று
வாழ்வுறு மகிழ்ச்சிப் பயணம் மற்றது
கடைநாள் சிறப்பது எங்ஙன்
விடையது பெறமெய் வழிசார் மின்னே! (7)

ஓய்வில் அலைசெறி கடல்சூழ் உலகீர்!
மாயும் மரணம் வந்துறு தருணம்
நோயுற் றலறி துன்புற் றிறக்கும்
பாய்கசப் பென்னும் புன்னீர் கழியும்
வாய்நீர் ஏற்கா மரித்ததும் விரைக்கும்
புழுக்கும் கனக்கும் அழுகும் வீங்கும்
எழும்பெரு நாற்றம் எமனமல் ஏறும்
இழுக்கென் லுலகோர் இகழ்ந்துமுட் டென்னும்
நிரயம் தன்னில் புக்கும்
தரமில் துன்பச் சாவிது தானே! (8)

பொங்கும் முந்நீர் புனைபுவி யோரே!
மங்கா மணியாய் மதிதெளி வார்ந்து
தங்கும் இன்ப தளிராய்த் தூயராய்
இங்கென் இறைபோந் தழைக்குதும் ஏகுதும்
என்றுரை இயம்பி இன்முகம் பூத்து
நன்றே இளமை நறுமணம் கமழ
இங்ஙண் ஜீவப் பயணம துரைக்கின்
நன்காஷாயத் தீர்த்தம தேற்று
சகத்தோர் போற்றி வாழ்த்த
மகிழ்வுறு துறக்க வாழ்வுறும் மன்னே (9)

பூரண நாளினிற் பொங்கும் அலைசெறி
சீர்கடல் ஆழ்ந்த ஜெகத்தி னோரே!
யார் செயல் இஃது எங்ஙனம் இயலும்
நேர்பெறக் கூறுமின் நெஞ்சமு வந்திட
பாராதி அண்டம் படைத்த பரமனார்
பூரணர் மெய்வழிப் பொன்னரங் கையராம்
காரணர் காரியர் ஆரணர் ஆரியர்
சீரினர் தெய்வத் தயவதா லாயது
ஆரியர் தம்மை நம்பினோர்
ஆருயிர் உய்யும் அனைத்து வரம் பெறும் (10)

நற்றொகைச் செய்யுள் இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!