திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/106.வெற்றிக் கரந்தை மஞ்சரி

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



✫ 106. வெற்றிக் கரந்தை மஞ்சரி[தொகு]

இலக்கணம்:-

ஓர் அரசனின் ஆநிரைகளைக்(பசுக்கூட்டத்தை) கவர்ந்து சென்ற மாற்றரசனைப் பின் தொடர்ந்து கரந்தைப்பூ சூடிச்சென்று அவனுடன் போரிட்டு வென்று தம் ஆநிரைகளை மீட்ட வீர அரசனின் வெற்றியைப் புகழ்ந்து பாடுவது வெற்றிக் கரந்தை மஞ்சரி என்னும் நூலாகும் (மஞ்சரி - மாலை).

தழுவார் கொண்ட தந்நிரை மீட்போர்
கரந்தை புனைந்து கனன்றுலவையிற் செலிஇ
மீட்பதைக் கூறல் வெற்றிக் கரந்தை
- முத்துவீரியம் -1070
வெற்றிக் கரந்தை மஞ்சரி விளம்பில்
கரந்தைப் பூமாலை களத்தில் அணிந்து
தரியலர் ஊர்ப்போய்த் தன்னிரை மீட்பதே
- பிரபந்த தீபிகை -43
மாற்றலர்கள் கொண்டநிரை மீட்போர் கரந்தைப்பூ
மாலைசூ டிப்போகி மீள்
வகையினை விரித்தோதலை வெற்றிக் கரந்தையின்
மஞ்சரியெ னக்கூறுவார்
- பிரபந்த தீபிகை -15
பகைவர் கொண்ட தந்நிரை மீட்போர்
கரந்தைப் பூமாலை சூடிப் போய் மீட்பதைக்
கூறுவது
- தொல்காப்பிய விளக்க உரை  - ப. 203

பதியாகிய எம்பிரான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள், பசுக்களாகிய ஜீவர்களைப் பூவுலகில் உற்பவம் செய்து, வளர்வித்து, வாழ்வித்து வருங்காலை கலிபுருஷன் காமாதி அசுரர்கள் படை கொண்டு அப்பசுக்களைக் கவர்ந்து செல்லலாயினான். பன்னிரு சன்னதாலங்கிர்தராகிய எம்பிரான் தங்களின் தவ வலுவேற்றத் திருவேற்கர வலிமை கொண்டு அன்னானை வென்று, அகில உலக மாந்தர் அழியாப் பொன்னுடம்பெடுத்து, செழிப்பேறி நித்திய நிலைபெரும் நல்வாழ்வில் வாழ்வுறச் செய்யும் நிகழ்வினை விதந்தோதுவது இப்பனுவலின் நன்னோக்கம்.

வெற்றிக் கரந்தை மஞ்சரி

காப்பு

கலி விருத்தம்

வெற்றி என்றும் விளைதிரு வேற்கரர்
நற்ற வர்தொழு நாதர்மெய் யாண்டவர்
வெற்றி கொள்கரந் தைமஞ் சரிசொலப்
பற்றும் பொற்பதம் பாரகர் போற்றவே

நூல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியச் சந்தவிருத்தம்

நால்வ கைப்பி றப்பிடத்து ஏழ்வ கையின் தோற்றமே
ஆலமுண்ட கண்டருற் பவம்செய் துஆளுநாள்
கோலமார்தி ருக்கரர் கூற்றை வெல்லும் ஆற்றல்சால்
சீலமோங்கு மெய்வ ழிஇயின் தெய்வம் வந்து தோன்றினார் (1)

உற்பவித்த போது எங்கும் உண்மை நீதி நன்னெறி
அற்புதம் நிறைந்து நின்ற றம்சி றந்து ஓங்கியே
நற்பதங்கள் ஓங்கு நாளினில் நீசனாம் கலியனால்
நற்செயல்கள் மங்கினவே நானிலம் மயங்குமே (2)

எங்கெவர்வந் தாலுமே தன் இணையிலாத ஆற்றலால்
பங்கம் செய்து பாருலகில் பற்பல்கோடி மாந்தரை
சங்கா ரம்செய் தேதிரியும் சீற்றமிக்கு மேவிடும்
பொங்கும் கூற்றம் அகங்கரித்துப் போந்தனரிப் பாரினில் (3)

கால தேசம் வர்த்தமான மேதுமே கருதிடான்
காலன் வந்து மாந்தரைக் கடும்பிடி கொண்டேகுவான்
சாலை ஆண்ட வர்நன் னாமம் சாற்றுவோரைத் தீண்டிடான்
ஆலமுண்ட கண்டரெங்கள் ஐயர்மாட்சி விந்தையே (4)

கூற்ற மேவு மூவழிக் கொடுமை யோங்கு காலையில்
ஆற்று நின்அ ருஞ்செயல் அறமிளிரும் சாலையில்
ஏற்ற வோஇ றைஞ்சவோயிங் கென்செயப் புகுவன்யான்
கூற்றினை யுதைத்த பாதம் கொள்ளுவேன் சிரமிசை (5)
(மூவழி : 1. ரோத தரித்திரியம் 2.ஜெகமிருகபாயபயம், 3.திண்டாடும் இறுதியினாள் துன்பம்)|r}}

கலியனின் ஆயுதங்கள்

கோபம்

கோப னாம்அ ரக்கன் வந்து கோடிகோடி மாந்தரை
பாபம் செய்து பற்று நட்பு பண்பு யாவும் மாய்த்திடும்
தீபத்துள்விட் டில்கள்போல சார்வர் மாய்வர் அக்கணம்
ஆபத்தான அஃதினை ஐயன் மாற்றும் ஆற்றலால் (6)

சேர்ந்த பேரைச் சுட்டெரிக்கும் சீறிடும் சினமதை
ஆர்ந்துமேவி வென்றொழிக்கும் ஆண்டவர்கள் தாள்நிழல்
சார்ந்து நிற்கும் மெய்வழிச் சாலை தெய்வ வான்பதம்
சேர்ந்த பேர்க்கு சாந்தமே சிறந்திருக்கும் நீதமே (7)

ஆணவம்

தானெனு மகந்தைஆண வம்மது எழுந்துமே
ஈனமாக மாந்தரை இழிந்திடச்செய் காலமே
வானவர் சேர்மெய்வழி வாழ்வரசர் வந்துமே
தீனர்தம் தயாளராய்ச் சிறந்து வென்றி கொண்டனர் (8)

மாயை

மாயை வந்து மோதியே மயக்கிடும் வெங்காலமே
ஆய்கலைக் கதிபர் எங்கள் ஆண்டவர் வந்திங்ஙணே
தாயினும் கருணை மிக்குத் தான்தெளிவு கூட்டியே
தூய இன்ப மெய்வரம் வழங்கி வென்றி நாட்டுமே (9)

காமம்

காமமென்னும் வஞ்சகனிக் காசினியுள் புக்கனன்
சாம்ராஜ்யம் கோடிகள்ச ரிந்தொழிந்து மாய்ந்தன
தீமைகள் செறிந்தன திரவியங்கள் வீய்ந்தன
ஆமனு என் ஆண்டவர் பேர்அருட்பார்வை வென்றதே (10)

மோகம்

மோகமென்னும் வல்லரக்கன் மூண்டெழுந்து மோதினான்
கூகைபோல்ப கற்கண்தோன்றாக் கொடியவனும் ஆடினான்
பூகையிலாயத்தரசர் பொன்னரங்கர் நோக்கினார்
மோகம்தாண்டி ஆகுமான யாவும் வந்து ஓங்கிற்றே! (11)

கன்மம்

கன்ம மென்ற முன்வினைக் கபடன் வந்து மாந்தரை
ஜென்ம மேயி டர்ப்படவும் செய்துவெல்ல மேயினான்
பொன்னரங்கர் போந்துமே நற்பேரருள் பொழிந்துமே
இன்னல்தீர வெற்றிமேடு ஏறியே சிறந்தனர் (12)

மதம்

மதமெனும் கொடிய யானைக் கூட்டம் வந்து மோதலால்
இதமெனும்சம் மதமழிந்து அதமிகுந்து ஓங்கவே
நிதம்புதியர் எம்பிரான்அங் குசபாசம் கொண்டுமே
மதகரிகள் யாவையும் மடக்கியே அடக்கினர் (13)

இறைவரொன்று நாமமாயிரங் களுண்டு என்றுமே
இறைவரின் திருவருளால் ஈடில்லாத மாட்சியால்
இறப்பிலா நிலையொடுபே ரின்பசித்தி வாழ்வுறும்
இறைவனை வணங்கு நோக்கம் இஃதொன்றென்று நாட்டினார் (14)

இறைவர்வந்து இங்ஙனம் இயல்பெடுத்து ணர்த்தியும்
இறைவனே இருதயத்து லிலங்கு காட்சி காட்டியும்
இறைவரொன்று துறையும்ஒன்று ஏதும்பேதமில்லையென்(று)|r}}
இறைமத மொன்றென்று நன்றுஎம்பிரான் மெய்நாட்டினார் (15)

சாதி பேத மென்னுநோய் சகத்திலே பரந்துமே
வேதனைக்குள் மாந்தரை வீழச்செய்து மாய்த்துமே
நாதரெங்கள் தெய்வம் மெய்வழிக்குள் மாந்தர் போதர
சாதியொன் றெனநிறுவிச் சற்சனர்க் குளாக்கினார் (16)

வருணம்

வருணம் நான்கு என்றுகூறி மாந்தர் பேதம் கூறுவர்
அருணயந்த தெய்வம் மக்கள் யாவரையும் கூட்டிமெய்ப்
பொருளறிந்த மாந்தரே வர்ணம் என்று நிறுவினார்
இருள்கெடுத்து ஒளிவிரித்து எந்தை வெற்றி ஈட்டினார் (17)

புகை

புகையெனும்ப கைய ரசன்பூதலத்தில் வந்துமே
சிகைபிடித்து ஆட்டுமாறு செகத்தினில் கோலோச்சினான்
தகையுயர்த்த எம்பிரான் தனித்தலைமைப் பெரும்பதி
புகையெனும் பகையொழித்து புண்ணியர்க்குள் கூட்டினார் (18)

கொலை

கொலைமலிந்து நாட்டிலே கொடுமை யோங்கி நிற்குநாள்
கொலைதவிர்த்து நலம்சிறந்து வளம்நிறைந்து மாந்தர்கள்
நிலையினிற் திரிந்திடாத நேர்மைபொங்கும் வாழ்வினில்
தலைசெழிக்கச் செயததெய்வத் தாள்கள் வாழி வாழியே! (19)

களவு

களவுசெய்தல் திறமையென்று காசி னியில் தீயர்கள்
அளவிலாக் கொடுமைவீங்க ஆரவாரம் செய்குநாள்
அளவிலாத ஆற்றலர்மெய் ஆண்டவர்கள் ஆக்ஞையால்
உளந்தெளித்து நலம்சிறந்த உத்தமர்கள் பல்கினார் (20)

சினிமா

நிழற்ப டங்கள் கண்டு நெஞ்சில் நீச எண்ணம் வளரவே
அழற்படும் விட்டில்கள் போலே அம்புவியோர் அழுந்துநாள்
எழில்கலைகள் இலகுதேவர் எம்பிரான்மெய் ஆண்டவர்
முழுமையாக எம்மைமீட்டு வெற்றிமேடு ஏற்றினார் (21)

நாத்திகம்

கடவுளால் பிறந்து அந்தக் கடவுளால் வாழ் காதகர்
கடவுளில்லை யில்லை யென்று கர்த்தபம்போல் கதறுநாள்
கடவுளைக்கண் காணக்காட்டி கடவுளுக்குள் ஆக்கிடும்
கடவுளெங்கள் கர்த்தர் தெய்வக் கழல்கள் போற்றி போற்றியே (22)

அகந்தை

கற்று ளோம்எனும் அகந்தைக் கசடர் பல்கி வாழுநாள்
கற்றிடும்கல் விப்பயனும் கலையுமான தெய்வமே
தெற்றென மெய்க் கல்வியைச் செகத்திலே கற்பிக்குநாள்
வெற்றிநாளிதற்கிணை தான்வேறு இல்லை இல்லையே (23)

செருக்கு

செல்வமிக் குடையம்யாமெனும் செருக்கு மேவினால்
பல்வகை யினாலெளிய ரைப்படுத்து பாடெலாம்
வல்லவர்க்கு வல்லவர்நன் மார்க்கர் வன்மை நிற்றலால்
எல்லையில் கருணைமூர்த்தி யாவரையும் வென்றனர் (24)

வலிமை

வலியம்யாம் எனும்திமிரில் வாழுகின்ற பேதையர்
வலிய ஏமன் கைப்பட்டே மருண்டொழிந்து மாள்குவார்
வலிய ஏமனைவெல்லாற்றல் மாதவர் மெய்யாண்டவர்
வலிமைக்கீடு வையகத்தில் வானகத் திலில்லையே (25)

நித்திரை

நித்திரை எனும் கொடிய சத்துருவந் தார்பரித்(து)|r}}
எத்திறத்த ராலினும் எளிதில் வெல்லும் ஏந்திழை
அத்திறத்தை வெல்லுகின்ற ஆற்றல் சான்ற எம்பிரான்
மெய்த்தவ சாயுச்யர் சாலை ஆண்டவர் தாள் வாழியே (26)

நான்பெரிதென் றேதிமிர்கொள் நிசத்தன்மை ஓங்கியே
தீனராக்கி மாந்தரைத் தீங்கினிற் கொண்டாழ்த்துமாய்
வான்பெரி தென்றே யுணர்த்தி வாழவைக்கும் எம்பிரான்
வான்பதத்தை சிந்தை வைத்துவாழ்வமிந்த பூமியில் (27)

தீங்கெலாம் திரண்டுள உருவினன்வெங் கலியனாம்
ஓங்கியே உலகமுற்றும் ஆள்கை செய்துலாவு நாள்
பாங்குயர்ந்த மெய்வழிப் பராபரர்மெய் தெய்வமே!
ஈங்குவந்து கலியை வென்று இன்ப ஆட்சி நிறுவினர் (28)

நாகரிகம் என்று சொல்லி நாசமேவு நெறியிலே
தேகமாவி ஒப்படை செய்தேஅழியும் உலகவர்
சோகமே தவிர்த்து மெய்யின் சீருகந்து வாழ்வருள்
ஆகமகலைக் கதிபர் ஆண்டவர்வந் தாட்கொளும் (29)

கலியனாட்சி தீர்ந்ததே பொய்ப் புலியின் தீமை மாய்ந்துமெய்
ஒலியினாட்சி ஓச்சியிந்த உலகில் மெய்ம்மை ஓங்கியே
கலியுகத்தை மாற்றிமெய்த் தலையுகம் படைத்தனர்
வலிமையோங்கு பொன்னரங்க மாதவர்தாள் வாழியே! (30)

வெற்றிக் கரந்தை மஞ்சரி இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!