திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/020.திருவூர் இன்னிசை வெண்பா

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



20. ஊர் இன்னிசை வெண்பா[தொகு]

இலக்கணம்:-

ஊர் இன்னிசை வெண்பா என்பது ஊரினைப் புகழ்ந்துரைக்கும் இன்னிசை வெண்பாவால் யாக்கப் பெற்றது . இன்னிசைவெண் பாவிற்கு மொக்கு மியற்பெயர்

அன்னவற்றாள் கட்டுரைத்தாராய்ந்து
- வெண்பா பாட்டியல் 36
ஊரின்னிசையே உயர்செய்யுள் தலைவன்
ஊரினைச் சார இன்னிசை வெள்ளை உரைத்தலே
- பிரபந்த தீபிகை 16.

எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் திருவருள் ஞானச் செங்கோல் ஓச்சிய திருவூர் மெய்வழிச்சாலை. அதனைப் பல்லாற்றானும் புகழ்ந்து இன்னிசை வெண்பாவால் பாடப்பெற்றது ஊர் இன்னிசை வெண்பா.

திருவூர் இன்னிசை வெண்பா

காப்பு

வெண்பாவால் ஊரின் இசைபாட வேட்டேன்
பண்பாய்ப் பகர்சந்தம் பாலித் தருள்புரிக
விண்பாங்கு காட்டும் விமலா வினைதீர்க்கும்
ஒண்பொற் கழல்மலர்கள் காப்பு.

நூல்

பத்துவய தானகன்னி யாம்குமரி பல்லோர்க்கும்
பித்தம் தெளியவைத்த பேரரசி - பேருலகில்
சித்தம் கனியமுது சீரனந்தர்க் கேயருளும்
உத்தமியாள் சாலையம் மை.
(1)

சாவின்பாட் டைவழியே தாம்செல் சகத்தோர்க்கு
ஜீவபாட் டைகாட்டும் சாலையண்ணல் தம்மக்கள்
தேவகோட் டையென்னும் சீரூர்வாழ்ந் துய்கின்றார்
நாவன்கோட் டையின்நல் லூர்.
(2)

சீரைக்காத் தையரருட் பேரைக்காத் தார்கொண்டல்
காரைக் காலைநம்பும் கண்ணியர்காண் நல்லனந்தர்
பாரைக்காத் தின்னருள்பா லிக்கும்தெய் வச்சாலை
ஊரைக்காத் தோர்உய்வர் காண்.
(3)

திடமோங்கு ஞானமுயர் தெய்வப் பெருமான்
அடலேறு அம்புயப்பா தத்தார்பே ரின்பக்
கடலூரார் என்று கழறலாம் மற்றும்
கடவூரென் றும்பேர் அறி.
(4)

விசுவநா தம்பொழியும் மெய்வழிதெய் வம்ஓர்
பசுவேசம் கொண்டுஅவ தாரம் இலங்கும்
நிசஞானச் சாலை சிவகாசி மெய்ம்மைத்
திசைகூட்டும் என்றே தெளி.
(5)

கொற்றவர்மெய்ச் சாலைவளர் கோமகனார் இன்பநடம்
சிற்றம் பலத்தாடும் சீர்காட்சி கண்டுய்வர்
நற்றவர்கள் நாடும்சீர் நல்லூர்மெய் செல்லூர்காண்
பொற்றாள் பணிந்துய்ம்மின் போந்து.
(6)

கருதுபவர் சாகாக் கலைமிளிர வான்சேர்
விருது நகரிதுகாண் மெய்யனந்தர் வாழ்வர்
குருதயவால் சாயுச்யம் கொண்டுய்வர் ஞானம்
பெருகுவரம் பெற்றார் இனிது.
(7)

சாவில் மகிழ்கூடும் தேவன் திருவூராம்
கோவில்பட் டியென்னும் கோவூர்காண் கோதற்ற
தூவெண் மதிசூடும் தோன்றல்மெய்த் தேவாதி
தேவன் திருவூர் இது.
(8)

தன்னில் தலைவரையே தானறிந்து உய்யுமொரு
சென்னி மலையென்னும் சீரூர்காண் சாலையிது
பொன்னின் அரங்கர்தம் போதம் பொலிந்திலங்கும்
தன்னிலக்க ணம்கண்டோர் ஊர்.
(9)

ஆராலும் ஆய்ந்து அளக்கரிய அன்பனந்தர்
சீரார் திருவாரூர் செந்தில்நகர் தேன் பருகூர்
பாரோர் புகழ்தில்லை பொற்பதியாம் சாலையிது
நேரேதும் கூறவொண்ணா வூர்.
(10)

உடல்பொருளா விமூன்றும் உற்றகுரு விற்கே
திடமுடனே தத்தம்செய் மங்கலமாய் சீடர்
அடம்திடம்ஆ சான்கிருபை ஆர்ந்துகொண் டுய்யும்
இடம்சாலை என்றினிது தேர்.
(11)

பொய்யூர் கடந்துயர்ந்த மெய்யூர் புகுதற்கு
ஐயூர் அறந்திகழும் ஆற்றூராம் சாலையிது
வையகத்தே வானகத்தை வைநாடு வானரசர்
மெய்யருள்செய் மேலூர் இது.
(12)

பேர்வாழும் புண்ணியம்சேர் சீர்காழி பொன்னரங்கர்
ஊர்வாழி உற்றவர்கள் நற்றவர்மெய் கற்றவர்கள்
பார்வாழி சாலைப் பதிவாழி பத்திநின்றோர்
சீர்வாழி செந்திருவோங் கும்.
(13)

தமராய்க் குருமணியைத் தான்கொள்ளும் சீரூர்
அமரா பதிவேத ஆரண்யம் ஆன்றோர்
இமையாத நாட்டத் தியல்பறிந்தோர் எங்கோன்
தலைப்பணிந்தோர் உய்வர் சிறந்து.
(14)

தஞ்சாவூர் தானறியீர் ஏமனமல் என்றென்றும்
எஞ்சாவூர் சாலைக்கு ஏகுமின்கள் சற்றும்கண்
துஞ்சாவூர் என்றே தெரிமின் பவவினைகள்
பஞ்சாய்ப் பறக்குமிவ் வூர்.
(15)

பித்தூரில் வாழ்ந்து பெரிதலைவீர் மெய்ஞ்ஞான
முத்தூரைச் சார்ந்து மகிழ்ந்துய்மின் மெய்ச்சாலைச்
சித்தூராம் புத்தூராம் பாற்கடலையே கடையும்
மத்தூரும் இஃதே அறி.
(16)

அலையூரில் வாழ்ந்து அமைந்தீர் ஞான
மலையூர்க்கு வம்மின் வரம்பெறலாம் சாகாக்
கலையூரில் வாழ்ந்திடவே கூவுகின்றேன் பாசம்
தொலையூர்காண் சாலைப் பதி.
(17)

நாரியூர் சார்ந்து நலமிழந்த நானிலத்தீர்
ஆரியூர் வாழ அழைக்கின்றேன் ஆண்டவர்கள்
நேரியராம் நல்வரங்கள் நல்கிடுவார் பெற்றுய்யும்
சாரியினிற் சார்மின் விரைந்து.
(18)

மயலூரில் நின்றே மயங்குகின்றீர் மக்காள்
வயலூர் திருவடைய வம்மின்கள் மெய்ம்மை
இயல்வைகுண் டம்என்னும் ஏரார்கை லாயம்
நயந்தினிது நண்ணிடவம் மின்.
(19)

கருவாயூர் எண்ணிக் கலங்காதீர் சாலைக்
குருவாயூர் சார்ந்து கதிபெறுமின் தெய்வத்
திருவாயூர் பொங்கித் தருமமுதம் கொண்டால்
வருவாயூர் வாய்க்கும் இனிது.
(20)

கரங்குவிவார்க் கென்றும் கதியளிக்கும் சீரார்
பரங்கிரியே! சாலைப் பதியறிமின் ஞானத்
தரங்கனிந்த தெய்வத்தின் சன்னதிமுன் னின்று
சிரங்குவிவார் சேரும் பரம்.
(21)

தீபஅருட் ஜோதி தெரிசனம்கண் டார்க்கென்றும்
பாபநா சம்ஆம் பரகதிவந் தோங்குறுங்காண்
மூபதியர் மெய்வழிதெய் வத்தருளால் வெம்பிறவித்
தாபம் தவிர்த்தருளு வார்.
(22)

வாசிப் பரியேறி வையம்வா னம்வலஞ்செய்
தேசிகர்விஸ் வநாதர் சீரிலங்க வீற்றிருக்கும்
காசிப் பதியிதுகாண் காசினியீர் கண்டினிது
பூசிக்கில் மோட்சம் நிலை.
(23)

காணரிய காட்சிகளைக் காட்டியருள் காட்டூராம்
பூணரிய ஞானமணி யாபரணம் பூட்டும்ஊர்
வேணியர்மெய்ச் சாலைவளர் வேதமுதல் வீற்றிருக்கும்
தோணிபுரம் பொன்னரங்க மாம்.
(24)

காணிக்கை நீதிக் கதிமாத வர்நங்கோன்
ஆணிப்பொன் னம்பலவர் தாமிலங்கும் சீரருளார்
காணியூர் பல்கலைதேர் வாணியூர் காளியூர்
மாணிக்கத் தூர்சாலை யூர்.
(25)

அருட்பாக்கள் சேர்த்து அருமைத்தாய் வைத்த
திருப்பாச்சேத் தியென்னும் சீரூர்காண் எங்கோமான்
திருப்பாதம் ராஜகம் பீரநடை தான்செய்த
குருப்போதம் கொண்டதிரு வூர்.
(26)

விண்ணகரம் மேய விசுவநா தர்எம்மான்
மண்ணகரம் போந்தார்காண் வையகத்தீர் கண்டுய்மின்
பண்ணிறைந்த பாடலூர்ப் பாங்கரசர் இன்னமுதக்
கண்ணனெந்தன் காதலர்காண் மின்.
(27)

வண்ணமணிப் பெட்டகத்தார் வானகரத் தேனகத்தார்
எண்ணமெலாம் இன்பம் நிறைத்தருள்வார் பொன்னரங்கர்
கண்ணகரக் காட்சியெலாம் காட்டியருள் பாலிக்கும்
அண்ணலருட் சாலைப் பதி.
(28)

அதிரவரும் ஏமன் அகன்றோடச் செய்யும்
மதுரா பதியரசர் மாண்புயர்வான் வள்ளல்
முதிரா இளமை முழுமுதல்வர் தெய்வப்
பதமே கதியென்று பற்று.
(29)

செவிச்செல்வம் தந்தனந்தர் சீர்குலம்செய் தோன்றல்
அவிநாசி யப்பரெங்கள் ஆண்டவர்கள், கூற்றால்
தவிப்போர்க் கடைக்கலத்தார் தண்ணருள்செய் பாதம்
புவிபடியச் செய்தார் நடம்.
(30)

போராடி வெல்லெமனைப் போயொழியச் செய்தனந்தர்
சீரோடு வாழ்ந்துய்யச் செய்திறத்தார் செம்மலெங்கோன்
தேரோடும் வீதிச் செழுநகரத் தேவலம்கொள்
ஈரோடு என்னும் நகர்.
(31)

அருள்தேங்கு பள்ளத்தூர் அன்புநிறை உள்ளம்
இருள்தீர்ந்து இன்னமுத வெள்ளத்தூர் ஈடில்
குருகொண்டல் இன்பம் அருள்செய்ய ஞானம்
தருகின்ற சாலைப் பதி.
(32)

கறங்காய்ச் சுழன்றுயிர்கள் கைப்பற்றும் கூற்றன்
இறங்கான்எம் சாலைப் பதியெல்லை எங்கோன்
உறங்காப் பெருந்தவம்செய் உத்தமர்மெய் யூரில்
அறங்காவல் நிற்கும் அறி.
(33)

அருட்குறுகூர் சாலையெனும் அப்பதியில் வாழ்வோர்
இருட்பெருகு ஏமனமல் இல்லை இனிமெய்ப்
பொருட்பெருகு பேரின்ப சித்திப் பெருகும்
திருக்குருகூர் சார்மின் சிறந்து.
(34)

சீரகத்தார் தெய்வபதி சேரகத்தார் ஞானதிரு
ஏரகத்தார்க் கில்லை எமபயமே - எக்காலும்
பாரகத்தார் சாவாப் பரிசருளும் எம்மானை
நேரகத்தார் சாரும் நினைந்து.
(35)

மடியேற்றம் கொண்டோர்கள் மாய்வர்காண் சாலைக்
குடியேற்றம் கொண்டோர் குலமோங்கும் ஜீவன்
விடிவேற்றம் மேவும்மெய்த் தெய்வத்தின் பொன்னாடு
அடிபோற் றனந்தர் குலம்.
(36)

பேரூர் பிறந்தபசும் பொன்மேனி வள்ளல்திரு
வாரூர் வளர்ந்தோங்கும் ஆண்டவர்மெய் யாருயிர்கள்
நேராரும் இல்லாத நித்தியர்மெய் வித்தகத்தார்
பாரோர்க்கு மெய்ம்மைப் பரிசு.
(37)

தென்பாண்டி நாடர் திருவோங்கு மாமதுரை
அன்பாண்டு கொண்ட அழகேசர் ஆரனந்தர்
இன்பாண்டு எக்களிக்க ஈந்தருளும் மெய்த்தெய்வப்
பொன்பூண்ட பொற்றாளைச் சார்.
(38)

பொன்பூவூர் தங்காயூர் செங்கனியூர் சாலையூர்
இன்னருள் ஏரேழூர் அன்பெட்டூர் ஒன்பதைத்
தன்பத்தூர் மெய்வழியின் சாலைவளர் ஆண்டவர்கள்
இன்பத்துள் ஆழ்த்தும் இனிது.
(39)

ஆமனுஎங் கோமான் ஆரருளால் பேரறஞ்செய்
சோமனூர் சிந்தைத் திருப்பூராம் அன்புசிவ
காமனூர் கண்ணியமார் கர்த்தாதி கர்த்தர்திரு
நாமனூர் நன்றாய் அறி.
(40)

ஊர் இன்னிசை வெண்பா இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!