திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/002.திரு அட்டகம்
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
2. அட்டகம்
[தொகு]நூற் குறிப்பு:-
அட்டகம் என்பது எட்டு பாடல்களால் ஆன நூல் எனப் பொருள் பெறும். ஆதி சங்கரர் குரு அஷ்டகம் என்னும் நூல் இயற்றியருளியுள்ளார்கள். அதைப்போன்ற பனுவல் இஃதாமென்க.
திரு அட்டகம்
காப்பு
நட்டமே இல்லா வணிகம் நவின்றார்கள் பட்டாங்கம் ஏந்தும் பரமேசர் - அட்டகம்தான் பாடப் பணித்தார்கள் நாட அகம்தந்தார் கூடவழி தந்தார்தாள் காப்பு
நூல்
ஆதிதேவன்
பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்
ஆதி தேவனொரு நீதி மேனிகொடு
அகில மீதுஅவ தாரமே
ஆண்ட வர்தய வாலே இங்ஙண்
அகன்ற தேபவப் பாரமே
வேத மாமறைகள் மெய்வ ழிதனில்
விளங்க லானது சாரமே
வெற்றி மேடுறவும் ஞான மாலிதவ
வாய்மை யால்விளையு வீரமே
சாதி சாதிகளுள் பேத நீங்கியது
சமர சம்நிலவு நேரமே
தாம்பெ ரிதெனும் மாயை மாய்ந்தது
சாய்ந் தமிழ்ந்தது கோரமே
நாத நாதரருள் பெருக மாய்கையிருள்
நடுங்கி யோடியது தூரமே
நங்கள் நாயகரின் நற்பதம் தனிலே
நாங்கள் சூட்டுமலர் ஆரமே
(1)
திருக்கோலம்
சீரி லங்குசிர பூஷண அணியில்
செம்மை யோங்கிடு கிள்நாமமே
திகழவே இறைவர் மகிழவே உலவு
சேகரர் புகல்க சேமமே
பேரி லங்குபெரு மானெம் மாருயிரர்
பெரியர் வானரசுக் குரியவர்
பொன்ன ரங்கமரர் விண்ண ரங்கரசர்
போற்று மூவரினும் அரியவர்
பாரி லங்குதவ பன்ன சாலைதிகழ்
பரமர் மெய்வழியெம் தெய்வமே
பாத பங்கயம தேபணிந் துஎம
படர்கடந் தினிது உய்வமே
நேரி லாதபெரு நித்யர் சத்யநெறி
நீள்பு விக்க ணிலைக்குமே
நீதி மாதவரெம் ஆதி நாதர்பதம்
நாடி வம்மினென் றழைக்குமே
(2)
சாலை யென்றதிரு மேனி வந்துஅவ
தாரம் செய்தநற் காலமே
சர்வ ஜீவர்களும் உய்க திபெறவே
தந்த மெய்வழியின் சீலமே
கோலம் கொண்டமெய்ச் சாலை ஆண்டவர்
கோதில் மாதவரின் வேதமே
கோடி மாமறைகள் தம்மின் சாரமெனக்
கனிந்தி ருக்குமெய்ப் போதமே
ஆல முண்டவர்பா லாழி யில்துயில்வர்
அங்கணுந் திக்கமல முற்றவர்
அனைவ ரோருருவ மான எம்மிறைவர்
அருளை மாந்து மிகுநற்றவர்
சீல மிங்குநிறை உத்தி யோங்குதிரு
சோலை யில்ஒளிரு நீதமே
சேத மின்றிநமைக் காத்த ருள்புரியும்
தெய்வ பொற்கமல பாதமே
(3)
ஆயுள்
ஆயுள் நூறுகொடு வாழினும் இறுதி
அந்தகன் வருக முடிவுறும்
அந்த நீர்மையினை அறிகி லாதவர்கள்
அல்ல லுற்றிழியும் மாள்வுறும்
சேயின் ஆண்டுபனி ரெண்டொ டேமுதுமை
செப்பில் மூன்றுபனி ரெண்டதாம்
சிந்தை ஓய்ந்து உறக்கமே கொளுமே
செப்பு மேஇருபத் தாறெனும்
ஆயின் இருபத் தாறிலே மனையின்
அறமும் கல்வியும் இன்பமும்
ஆயுள் மீதமு மில்லையே இறைவர்
அடியில் சார்வுறுத லெங்ஙனம்?
தாயின் மிக்கவர் தயானிதி அரனின்
தாளில் சார்பவர்கள் உய்குவார்
தந்தை தாய்குருவும் தெய்வமாய் வருகும்
தேவரால் உயிர்மெய் எய்துவார்
(4)
மறுபிறப்பு
மானு டப்பிறவி வாய்ப்பதே அரிது
வந்த போதுநரன் என்பராம்
மாத வர்திருமுன் நின்று மனுவினமு
மாகி அன்னவரின் தயவினால்
வான வர்திரு மணிநற் சூலினால்
மறுபி றப்புறவு மாகியே
மாறும் தேவனென ஏறும் வானகமே
வாழ்வில் லட்சியமே ஆகுமே
ஞான மாலிதிரு வுருவ மேற்றுபுவி
நண்ணு காலையிது சாத்தியம்
நல்வ சந்தமிது நன்கி சைந்தவர்கள்
நற்கதிக்கு மிக பாத்தியம்
கான கத்திலொரு வான கம்வருகக்
கண்ட பேர்களுயர் அண்டர்கள்
கனியு குக்குஉயர் கற்பகத் தருவைக்
கண்டு அண்டில்நலம் தண்டுமே!
(5)
கடவுள் உண்டு
உண்டு என்றும்இறை இல்லை யென்றுசிலர்
உணர்கி லாதவர்கள் உளறுவார்
உள்ளில் நின்றுஉயிர் இயங்க லாலிதனை
உரைக டவுளென ஓர்கிலார்
கண்டு விண்டமெய்ஞ் ஞானக் காட்சியினர்
கழறு மெய்யுரைகள் கேட்டிலார்
கண்ணி ருந்துமே குருட ராயிந்தக்
காசி னியுறையு மீட்பிலார்
அண்டர் கோனுமிது காலை மெய்வழி
ஆண்ட வர் எனத் தென்றிசை
அமுது பொங்குதமிழ் நிலமி சைஅருள
அதையு மோர்கிலார் பேதையர்
கண்டு கொண்டிடவே வம்மி னென்றுஅறை
கூவினார் எமது தேவனார்
காணி லாதவரைக் கேளி ராதவரைக்
கூற்றுவன் எளிதில் மேவுவார்
(6)
மரணமிலாப் பெருவாழ்வு
மரண மேதவிரு வாழ்வு பேரின்பம்
வாய்க்கும் சித்தியொன் றுள்ளதே
மெய்வ ழியடியார் கள்பெற் றதனில்
வாழ்வர் காணின்பத் தாழ்வர்காண்
கரண மோயுமுனர் கடவுள் மாணடியைக்
கண்டு கைதொழு தேத்தினால்
காத லர்இறைவர் கைத ரும்வரமே
கசிந்து ருகிடில் காணுறும்
அரணு மாலயன் உருவ மாகிய
ஆண்ட வர்அருளு மெய்வழி
அதனைப்பற்றுவர் அகிலக் கொற்றவர்
ஆனந் தம்அவர்க் கென்றுமே
குரும கான்மியர் மெய்வழியருள
கோதில் சாலையின் ஆண்டவர்
கழல்ம லர்பணிந் தேத்தில் நித்திய
கதிபெற் றுய்யும னந்தரே!
(7)
ஒன்றேகுலம் ஒருவனே தேவன
சந்த விருத்தம்
மதமொன்று சாதி குலமொன்று என்று
வழியொன்று நாட்டு பெருமான்
மரணத்தை வென்று வையத்தி லின்று
வாழ்வாங்கு வாழ அருள்மான்
இதமுண்டு கோடா யிதம் கொண்டு வானோர்
இனமுண்டு செய்த குருகாண்
இனமோங் கனந்தர் வனமோங்கு சாலை
தனிலோங்கு ஆறு மருள்காண்
சதமென்று இந்தச் சகவாழ்வை எண்ணி
சாதிக்கில் ஏகு நரரை
சரியென்று ஏற்று கிரியொன்று ஆற்றி
சாகாத வாழ்வு அருளுவார்
பதம்தந்து ஏமன் படர்வென்று தேவ
பதம்தந்த தாள்கள் போற்றி
பரமார்த்த ரூபர் குருமார்க்க வள்ளல்
பதம்போற்றி! போற்றி! போற்றி!
(8)
- மெய்வழி பக்தி இலக்கியங்கள்
- மெய்வழி அடியார்களின் படைப்புகள்
- சமய இலக்கியம்
- அகரமுதலான வரிசையில் படைப்புகள்
- சிற்றிலக்கியங்கள்
- திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108
- கவிதைகள்
- திரட்டு நூல்கள்
- 2017 படைப்புகள்
- பாடல்கள்
- தற்கால புலவர்களின் படைப்புகள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றிய 108 வகைப் பிரபந்தங்கள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் படைப்புகள்