திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/091.மெய்ப்பொருள் மணிமாலை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.91.மணிமாலை[தொகு]

இலக்கணம்:-

தன்னை ஆண்டு கொண்ட குருபரரைப் போற்றி இருவகைப் பாவினங்களால் (வெண்பா, கலித்துறை) பாடிப்பரவுவது மணிமாலை என்னும் இவ்விலக்கிய வகையாகும்.

மணிமாலை வெண்பா வகைநா லைந்துடன்
இணையாய்க் கலித்துறை இரட்டைப் பாடலே
- தொன்நூல் விளக்கம்  - 279
எப்பொருண் மேலும் வெண்பா இருபதும்
கலித்துறை நாற்பதும் கலந்து வருவது
மணிமாலை யாகும் வழுத்துங் காலே
- முத்துவீரியம்  - 1056
சொல்லுமெப் பொருளின் மேலும்
தூய வெண் பாவிரு பஃதுநாற் பதுகலித்
துறை விரவின் மணிமாலையாம்.
- பிரபந்ததீபிகை  - 12
மணிமாலை தானே மன்னும் எப்பொருளினும்
வெண்பா இருபான் கலித்துறை நாற்பான்விரவிப்பாட விதித்தனர் புலவர்
- பிரபந்ததீபம்  - 30

மெய்ப்பொருள் வழங்கி உய்கதி தந்த எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் மாட்சியைப் போற்றும் வகையான் இயற்றப் பெற்றது இப்பனுவல்.

மெய்ப்பொருள் மணிமாலை

காப்பு

நேரிசை வெண்பா

அணிதிகழும் அண்ணல்தம் அம்புயத்தாள் போற்றி
மணிமொழியால் மாட்சிவிதந் தோத-மணிமாலை
பாடிப் பரவப் பதம்கொள் பொருள்வேண்டி
நாடிப் பணிந்தேன் நயந்து

நூல்

நேரிசை வெண்பா

ஆதியும் அந்தமுமாய் ஆனவரே! ஆண்டவரே!
நீதியாய் நின்மலராய் நின்றீரே - ஓதி
உணர்வால் உணரப் படுபொருளே மெய்ம்மை
மணஞான மாதவரே வாழி! (1)

கட்டளைக் கலித்துறை

பெறுதற் கரிய மானுட வாழ்வைப் பெறச்செய்தனை
உறுமெய்ப் பொருளே உவந்தென் உயிருள் கலந்துற்றனை
அறம்என் நினைவில் அகலாது காத்து வளர்வித்தனை
அறவாழி யேதரு ணம்பார்த்து ஏற்றது தான்விந்தையே! (2)

இல்லையே என்று உளந்தடு மாறிக் கலங்குறாதும்
எல்லையில் செல்வம் உடையேனென் றெண்ணித் திமிர்கொளாதும்
நல்லதே எல்லாம் நமக்குரித் தாயின நல்குமிறை
வல்லவர் தாங்களே என்றெண்ணம் அன்றே வளர்த்தனையே! (3)

நேரிசை வெண்பா

இல்லையென் றீனர் இயம்புங்கால் ஏலாது
எல்லையில் வல்லார் உளரென்று - நல்லை
நினைத்தேடித் தேடி அலைந்துற்ற காலை
நினைக்காட்டிக் கொண்டீர் நயந்து (4)

கட்டளைக் கலித்துறை

கோடிபல் கோடியாம் மாந்தர் குவலயத் தேயலைந்தே
தேடினர் செல்வம் திரட்டினர் அஃதுகண் டேமயங்கி
வாடிடா துங்களைத் தேடும் நினைவினைத் தந்துங்களை
கூடிடக் கோமான் அருள்தந்த மாட்சிக்கு ஏதிணையே! (5)

புல்லர் மயக்கில் புழுக்குழி போய்த்தொலை யும்கொடிய
பொல்லாத காமப் புலைச்செயல் புக்கழி யாமலென்னை
நல்லாறு காட்டி நலநினை வொன்றே உளம்புகவே
எல்லாம்வல் லாயெனை யேதடுத் தாண்டதுதான் விந்தையே! (6)

நேரிசை வெண்பா

அழியும் பொருள்தேட்டத் தேநுழைந் தாழ்ந்து
அழியாமற் காத்து அளவாய்ப் - பழியிலா
நற்றொழில் ஈந்து நலமாய் வளர்வித்து
நற்றாளில் ஏற்றீர் நயந்து (7)

கட்டளைத் கலித்துறை

பொருளாசை யில்லை சுகபோக வாழ்வில் திளைத்திடுமோர்
இருளாசை இல்லை புகழில் மயங்கிக் கிடந்திடுமோர்
மருளாசை யில்லை மாதவத் தோங்கும் மணிமொழியாம்
அருளாசை கொண்டேன் அருளாலே ஏற்றீர்அருட்பதத்தே! (8)

கலையென்று சொல்லிச் சமூகமுன் தன்னை மிகைப்படுத்தும்
வலையுட் புகாமற் தடுத்தாண்டு கொண்ட வளவரசே!
தலைமைத் தனத்தே நிலையெனைச் செய்தாய்நல் லாய்ஓர்தனித்
தலைமைப் பெரும்பதி யேயுங்கள் பேர்தய வேவிந்தையே! (9)

நேரிசை வெண்பா

குறைவற்ற தேகம் கொடுத்தீர்கள் என்றும்
நிறைவுற்ற நெஞ்சும்நற் பண்பும் - இறைபற்றும்
தந்தென்னை ஆண்ட தனிமுதல் தங்களையே
தந்தீர்கள் என்னோ தயை! (10)

கட்டளைக் கலித்துறை

தெய்வீக நாட்டம் உடையவர் தாமே துணையாயினார்
பொய்ம்மொழி யாதும் புலைநுக ராத பெருந்தகையர்
செய்வழி நன்றே எனத்தெளி வார்ந்த திறனுடையோர்
மெய்வழி காட்டிநும் பொற்றாட்குக் காணிக்கை ஆக்கினரே! (11)

அண்ணல்நும் அங்கத்தில் ஏற்றிட வேண்டிட அன்புரைசெய்
பண்ணகர் அந்தப் பெருந்தகை காட்டிய மெய்நெறியில்
விண்ணவர் தங்கள் பதாம்புயம் தன்னில் சமர்ப்பித்தனர்
கண்ணகன் ஞாலத்தில் யான்பெற்ற பேறு கழறரிதே! (12)

நேரிசை வெண்பா

இப்பரிசு யார்க்கெங்கு கிட்டிடுமோ எம்பெருமான்
செப்பரிய பொன்மேனி தன்னினிலோர் - ஒப்பரிய
அங்கமாய் ஆகத் தகுதியுண்டோ பேதைக்கு
எங்கும்கிட் டாத பரிசு. (13)

கட்டளைக் கலித்துறை

பரிசெனக் கேதந்த பாண்டியர் தாங்கள் பெறற்கரிய
தரிசினை தந்துதம் அங்கத்தில் ஏற்ற தனிக்கருணை
பெரிதெனச் சிந்தை புளகித்து பூரித்து வையகத்தே
அரிதிற் பெருஞ்செல்வம் பெற்றேன்நன் றேஎன் அகம்மகிழ்ந்தே! (14)

நிறையான சந்தர்ப்பத் தேயிந்த தேகத்தை வெந்நெருப்பில்
உறவோர்கள் இட்டு விதியிதென் றேயுரைத் தேகலின்றி
மறைபோற்றும் வள்ளலே காஷாயம் தந்து தடுத்தாண்டனிர்
குறைவற்ற செல்வம் கிடைத்ததே என்னுட் குதூகலமே! (15)

நேரிசை வெண்பா

குருச்சேத்ரம் தன்னில் அருச்சுனர்க் கன்று
தருச்சேத்ரம் விஸ்வவமாம் காட்சி - பெரும்பேர்
அருட்ஜோதி கண்டேன் பெரும்பாக்யம் பெற்றேன்
குருபாதம் கொண்டேன் புகல் (16)

கட்டளைக் கலித்துறை

தாய்க்கரு வுற்றுப் பிறந்த பிறப்பதைத் தான்மாற்றியே
ஆய்மதிச் சிந்தையர் ஆண்டவர் தங்கள் அருள்மணிச்சூல்
தூய்மையுள் தாங்கிப் பிறப்பித்த மாட்சிக்கு ஈடுமுண்டோ!
தாய்மணியே ஆன்ற தயாநிதியே பேதை தஞ்சம்நிற்கே! (17)

சுயம்ப்ர காசமாய் நித்தியா னந்த பிரம்மமெனும்
அயன்பெருங் காட்சி அதுஜீவ சாட்சி அகம்மொளிரும்
நயம்பெரு மாட்சி நல்லசித் தர்முத்தர் யோகியர்கள்
வியந்துகண் டானந்த வெள்ளத்தில் ஆழ்விஸ்வ ரூபமிதே! (18)

நேரிசை வெண்பா

சதுர கிரியென்று சாற்றினீர் எந்தை
மதுரத் திருவாய் மலர்ந்து - இதம்கனிந்து
ஏழையேன் அங்கேக இன்பக்கட் டாணிமுத்துப்
பேழையொன் றீந்தீர் பரன். (19)

கட்டளைக் கலித்துறை

நானென் றகந்தைகொள் பேதையர் காணாத காட்சியிது
வான்பெரி தென்றே வணங்கிப்பூரித் தோர்க்கு மாட்சியிது
கோன்தய வுற்ற குருகுலத் தோர் ஜீவ சாட்சியது
தேன்மலர் செண்பக வாசர் எனையாண்டு ஆண்டனரே! (20)

பொதிகை மலைமேலே போய்க்காண் முனிவர் அகத்தியரை
மதிமிகுந் தாரவர் வாழிடம் ஜோதி விருட்சமென
இதமிகுந் தேயுரைத் தென்னுட் துலங்க இமயகிரி
விதிகடந் தாண்ட விமலர் பரிசு வழங்கினிரே (21)

நேரிசைவெண்பா

மேரு கிரித்தவம்செய் மேலோர்கள் வாழுமிடம்
சீரும் சிறப்படையச் சேருமிடம் - பாருலகில்
ஒன்றே உயிர்நிலைக்கும் மன்றே மனமடங்கிச்
சென்றேறும் குன்றளித் தீர். (22)

கட்டளைக் கலித்துறை

குகப்பெரு மான்வாழ் குகையிது ஆன்ற முனிவரெல்லாம்
தகவுடன் மெய்த்தவம் செய்திடும் சீரார் தலமிதுமெய்ச்
சுகமெனும் பேரின்பம் சொக்க உயிரொடுங் கும்இடம்காண்
மகவுநீ ஆழ்ந்திரு இங்ஙண் நிலைத்திரு என்றனையே! (23)

முப்புரி நூலொளிர் மேனியர் வேதியர் என்றறிவர்
செப்பரி தாகிய சீரது உன்னில் தரித்திருநீ
ஒப்பரி தாக ஒளிர்வதுகண்டு உயர்நிலைசென்(று)|r}}
அப்பதி தன்னில் அமர்ந்திரு என்றெனை ஆக்கினிரே! (24)

நேரிசை வெண்பா

பத்துவய தானகன்னி பார்பதியாள் பத்தினியாள்
உத்தமியாள் சத்தினியாள் வித்தகியாள் - முத்துமணி
மங்கையிவள் செங்கைவளை நங்கையிவள் துங்கமணி
பங்கயத்தாள் எங்களின்தாய் காண் (25)

கட்டளைக் கலித்துறை

ஆறு மதில்சூழ் அரண்மனை காணிது ஆலயமே!
கூறு குகப்பெரு மானுறை குன்றிவை ஆறெனுமே
மாறுபடாத மணியொளிர் மந்திர மாமலையே!
ஊறுப டாநிலை மேவிடச் சென்றங் குறைந்திருவே! (26)

ஜீவ பதியுமைச் சேர்பவர் வாழ்வர்கள் என்றென்றுமே
தேவர்கள் ஆவர்கள் மாவலர் சாவிலர் ஆகிடுவர்
பூவுல கில்எழில் பொன்னொளிர் மேனியர் பெருமானே!
கோவலர் நும்பத மேபணி வோருயிர்க் குய்விடமே (27)

நேரிசை வெண்பா

தச்சன் உளிபடாச் சக்கரமார் வாகனத்தில்
அச்சன் உலாவருங்காண் அம்புவியீர!- நச்சினர்க்(கு)|r}}
என்றும் இனியர் அருள்கற்ப கக்கனியர்
குன்றிலங்கும் கோமான்நீர் தான் (28)

கட்டளைக் கலித்துறை

பதியிது கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலராம்
விதியது மாறிடம் கதிபர மேகிடும் வேதியர்தாள்
புதியவர் என்றும் புராதனர் ஆனவர் பூதலத்தே
மதிமணி வானவர் வைப்பினி லென்றும் மகிழ்ந்திருவே! (29)

ஆகாய கங்கை அதுபொங்கும் மானச சரோவரமே!
பூகயி லாயமாம் பொன்னரங் கப்பதி பேர்பெறுமே!
பாகார் மொழியினர் பண்ணகர் தாளில் பதிந்திடுமே!
போகாப் புனலினைச் சாகாத காலினைக் காட்டினிரே! (30)

நேரிசை வெண்பா

இறையாத தீர்த்தத் துறைசேர்ந்த பேர்கள்
மறைபடாத் தேவர்கள் மாற்றுக் - குறையாத
தங்கத் திருமேனி தான்வழங்கும் வான்வள்ளல்
துங்கத்தாள் சார்வோர் உ(ய்)யும் (31)

கட்டளைக் கலித்துறை

பேசாத மந்திரம் பெற்றவர் எற்றுவர் கூற்றினையே
கூசாது கங்கை குதித்தங்கண் நீந்திடில் கோதகலும்
நீசாமுன் சாகும் திறம்தரும் மாந்தர் மலைவறுமே
ஆசான்மெய்ச் சாலையர் ஆண்டவர் அம்புயத் தாள்சரணே (32)

வாடாத கற்பக வான்மலர் நன்மணம் தானுகர்வோர்க்(கு)|r}}
ஈடாக யாருறும் எம்பெரு மானந்தக் கற்பகமே
தேடாத செல்வம் திரள்நவ ரத்னக் குவையவரே!
மேடான ராஜகம் பீரத் திலங்கும் துரையவரே! (33)

நேரிசை வெண்பா

காட்டா தனவெல்லாம் காட்டினீர் உங்கள்தவப்
பாட்டால் கிடைத்த பரிசிதுவே - தேட்டில்
உயர்ந்த ஒருபொருளே உத்தமரே அன்பால்
இயைந்தோர்க்கு எல்லாம் தரும் (34)

கட்டளைக் கலித்துறை

முப்பொருள் தத்தம்செய் தோர்க்கே முகிழ்த்திடு மெய்ப்பொருளே
எப்பொரு ளும்ஈயா ஏழைக்கும் இஃதுமே எய்தியதே!
செப்பரும் நற்றவத் தென்னன் பெருந்துறைச் சாலையிறை
ஒப்பரும் நற்றய வாலிது வாய்த்தது ஓர்மின்களே! (35)

தூரிகை தொட்டெழு தாதவண் ணம்மிளிர் ஓவியமே
ஆரிய ரே!என தாருயி ரே!கலைக் காவியமே!
நேரியர் நெஞ்சிலென் றென்றும் நிலை நேமியரே
பாரினில் எந்தமை காத்திட வந்த பராபாரே! (36)

நேரிசை வெண்பா

நெஞ்சமெல் லாம்நிறைந் தின்பம் கொழித்திலங்கும்
செஞ்சொற் கனியுதவும் தேவதரு - துஞ்சா
வரமருளும் வாரிதியே! மாமேரே! மென்தாள்
சிரமணிந்தேன் தேவே சரண். (37)

கட்டளைக் கலித்துறை

எட்டாத மேனிலைக் கேற்றிடும் எங்கள் தயாநிதியே!
கிட்டாத செல்வக் குவைதந்த வள்ளலே கோமகவே!
மட்டிலா இன்பமே வான்மலர் வாசமே மாமதியே!
கட்டாணி முத்தே! கனவயிர மாமலைக் கற்பகமே! (38)

இனியில்லை துன்பம் எனக்கென்றும் இன்பம் அருள்நிதியே!
கனிதந்து ஞானம் கதிதந்த வானக் கலாநிதியே!
தனிநின்று எல்லாம் தருதேவ தாரு தயாநிதியே!
இனியுங்கள் பாதம் மறவாத வண்ணம் சிரம்உறையே! (39)

நேரிசை வெண்பா

ஆண்டவரே! பொன்னார் அருட்தாள் பணிந்தவர்க்கு
வேண்டுவரம் ஈயும் விமலரே! - ஈண்டு
இறவா வரமருள்க எக்காலும் நும்தாள்
மறவாத் திறமருள் மன்னோ! (40)

கட்டளைக் கலித்துறை

அடைக்கலம் காவற் பாடது தேடும் அடியவர்க்குப்
படைக்கலம் கொண்டெமன் பாய்ந்திடான் எங்கள் பரந்தாமரே!
விடைக்குலம் கொண்டினி மெய்ம்மறை யாவும் விளக்கியிங்ஙன்
கிடைத்தற் கரியமெய்ந் ஞானக் கனியினைக் கைதருமே! (41)

ஊணும் உறக்கமும் அற்றவர் எம்மான் ஒருதனிமெய்
வானோர் இறப்பும் பிறப்புமில் முன்பின் இலாமுதல்வர்
தேனார் மொழியமு தூட்டியே ரட்சித்துக் காத்தருள்வீர்!
கானகம் உத்யோ வனச்சோலை வீற்றுள கற்பகமே! (42)

நேரிசை வெண்பா

அறிந்தும் அறியாமற் செய்பாவங் கள்தாம்
சிறிதும் பெரிதும் பலவாம் - குறித்து
வருந்தி மனங்கலங்கி வேண்டுகின்றேன் தேவே!
பெருந்தகையான் மன்னிப்பீர் இன்று. (43)

கட்டளைக் கலித்துறை

மனம்மொழி மெய்யால் மயங்கியாம் செய்தபா வங்களெண்ணி
தினம்நெகிழ்ந் தேயுரு கிப்பணி கின்றனன் தேவேசரே!
கனமுயர் காருண்யர் மன்னித்துக் காத்தருள் செய்குமின்னே
அனல்நர கேகிடா(து) ஆதரிப்பீர் மெய்யெம் ஆண்டவரே! (44)

தண்டனை எண்ணித் தடுமாறு கின்றேன் தயாநிதியே!
எண்டிசை கண்டறி யாதநும் தாளில் இறைஞ்சிநின்றேன்
வண்டக் கலியெமன் வாட்டி நரகுற வையாமலே
பண்டைப் புராதனப் பாண்டியர் காப்பீர் பரந்தாமரே! (45)

நேரிசை வெண்பா

எண்ணிலாப் பாவம் இழைத்தேம் எரிதீய்த்த
புண்ணிலே வேல்நுழையும் வாதையென - மண்ணிலே
துன்பம் சுமந்தலுத்தோம் தோன்றலரே! ஆண்டவரே!
இன்ப நெறியருளு வீர் (46)

கட்டளைக் கலித்துறை

கோடா நெறிதந்து கோதகற் றும்திருக் கோமதியே!
வாடாத சீமான் கொழித்திடும் வேதாந்த மும்மணியே!
தேடரும் பாவ விமோசன மந்திரம் ஓதுகின்றோம்
நீடாழி சூழ்புவி யில்வந்த தெய்வமே ஏற்றருளே! (47)

பாவம் கணக்கின்றிச் செய்துளோம் பொன்னரங் கத்தெய்வமே!
பாவம் இனிச்செய்வ தில்லை உறுதி பராபரரே!
பாவ விமோசனக் கோட்டைக்குள் வந்துளோம் பாண்டியரே!
பாவத்தை மன்னித்துக் காத்தருள் செய்மின்கள் ஆண்டவரே! (48)

நேரிசை வெண்பா

பரகதி எண்ணாது செய்பாவத் திற்காய்
நரகது காத்துள தந்தோ - பரமேசா
மன்னிப்புத் தந்தருள்வீர் மாதவரே! ஆண்டவரே!
நின்பொற் பதமே கதி (49)

கட்டளைக் கலித்துறை

பிரிவற் றிருக்கும்வே தாம்பரர் தங்கள் பெருந்தயவால்
பரிவுற்று மன்னித்துப் பேரருள் ஐஸ்வர்யம் பாலித்தருள்
தெரிசினை தந்து இருவினை தீர்த்தருள் தேசிகேந்த்ரா
பிரிவற்று நின்தாள் படிந்திட வேண்டுதும் ஆண்டவரே! (50)

அநித்திய யாக்கைக் குடிலையை யாம்விடு காலத்திலே
இனிக்கதி ஜீவமெய்த் தேகத்தில் போய்ப்புக ஏற்றருள்வீர்
தனித்தெமைத் தாட்டி நரகுற எமன்வருங் காலையிலே
தனிப்பெருங் காருண்யம் காட்டும்தயாநிதி ஆண்டவரே! (51)

நேரிசை வெண்பா

காலன் கணவாய் கடூரகோ ரஎல்லை
ஏலென் றெனையிழுத்துப் போங்காலை - சீலங்கொள்
தெய்வமே ரட்சித்துச் சிந்தை கலங்காமல்
மெய்யாகக் காத்தருளு வீர் (52)

கட்டளைக் கலித்துறை

திருப்பா லிப்பாம் திருவருள் எம்பால் திரும்பவருள்
அருட்பேர் நிதியே அடியனேன் கண்கலங் காமலருள்
நெருப்பா றதுவும் மயிர்ப்பா லம்கடந் தேசெல்லுதும்
குருப்பேர் அருளாளர் கூட்டத்துள் என்னையும் கூட்டிக்கொளே! (53)

ஆர்ப்பரிக் கேமன் கொடுமை அகற்றி அருள்நயந்து
தீர்ப்புமை தான அமளியில் நின்றும் சிறிய னெனை
கார்ப்பது தங்கள் கடன்தயை சாமி கலங்குகின்றேன்
சீர்ப்பெருஞ் சீமான்கள் தம்முடன் என்னையும் சேர்த்துக்கொண்மே! (54)

நேரிசை வெண்பா

மின்னல்போல் மேலோர்கள் வெந்தணல் பேராறு
தன்னைக் கடந்திடும் தாட்டிமையில் - என்னையுமே
அன்னவா றேக அருள்புரிமின் ஆண்டவரே!
பொன்னரங்கா! பொற்றாள் சரண். (55)

கட்டளைக் கலித்துறை

நன்மைதீ மைநிறு வைசெய்யும் நாளில் இடத்தட்டது
பொன்மையாய் மேலேறி நன்மைதீர்ப் பேறிடும் பட்டோலையை
என்மென் கரத்தில் இலங்கிடத் தீதார் தரிசினையால்
பொன்னுலகத்தில் புகுத்தாட்ட வேண்டுதும் பொற்பதியே! (56)

கோதில் கருமானக் குன்றேறும் கோமான்வெள் ளானையின்மேல்
தீதார் தரிசினைதந் தேபவனி வந்திடு மங்கலமாம்
ஏதமில் நன்மணக் காட்சி எளியேன் இருகண்களால்
மீதுறக் காண விழைந்தேன் அருள்தரும் ஆண்டவரே! (57)

நேரிசை வெண்பா

பொன்னின் அரங்கப் பெருமானே தங்களின்
சன்னிதி யைப்பிரியாதிந்த - சின்னவள்
என்றும் இருக்க வரந்தர வேண்டியே
நன்றே பணிந்தேன் நயந்து. (58)

அமானிதம் ஏழை அறியவைத் திட்டீர்கள் ஆண்டவரே!
உமாம கேஸ்வரா! உத்தம மாலே! அயன்உருவே!
இமைப்பொழுது தும்மற வாதவர் கூட்டத்தில் எந்தனையும்
அமரெனக் கொள்ளத் தயவருள் செய்மின் தயாபரரே! (59)

கண்கள்பல் லாயிரம் கொண்டுமே காணரு காட்சியினை
எண்களால் எண்ணப் படாப்புகழ் ஏந்தலே எம்பெருமான்
மண்ணுல கோர்மர ணம்மிலாப் பேரின்ப வாழ்வு பெற்று
விண்ணவ ராக வரந்தரு வேதியர் ஆண்டவரே! (60)

மெய்ப்பொருள் மணிமாலை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!