திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/097.திருவரலாற்று வஞ்சி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.✫ 97. வரலாற்று வஞ்சி[தொகு]

இலக்கணம்:-

போர் கருதிப் படை செல்லும் எழுச்சியை வஞ்சிப்பாவால் பாடுவது வரலாற்று வஞ்சி எனப் பெறும். படையின் ஆரவாரம் ஆற்றல் ஆகியவற்றை வஞ்சிப்பாவால் பாடுவது வரலாற்று வஞ்சி என்பர்.

விழுமிய குலமுறை பிறப்பு மேம்பாட்டின்
பலசிறப் பிசையையும் வஞ்சிப்பாவால்
வழுத்துதல் வரலாற்று வஞ்சியா மென்ப
- முத்துவீரியம்  - 1072
வரலாற்று வஞ்சியே வனப்பு ஆற்றல் கல்வி
மரபு குணம் குடி வஞ்சியால் வழுத்தலே
- பிரபந்ததீபம்  - 44
வரலாற்று வஞ்சியாம் வல்லறமுத னான்கும்
வருமாறு உரைத்து வஞ்சி பாடலே
- தொன்னூல் விளக்கம்  - 271
பார்த்துநற் குலமுறை பிறப்புமேம் பாட்டுடன்
பலசிறப்புங் கீர்த்தியும்
பதியவஞ் சிப்பாவி னாற்தொகுத் தேபுலவர்
பகரின்வரலாற்று வஞ்சி
- பிரபந்த தீபிகை  - 15

உலகோர்க்கு இடர் செய்யும் கலியரசன் மேல் அறப்போர் செய்து நீதி ராஜங்கத்தை நிறுவி தர்மபரிபாலனம் செய்ய எழுந்தருளிய பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் புகழைப் பாடுவது இப்பனுவல்.

திருவரலாற்று வஞ்சி

காப்பு

நேரிசை வெண்பா

புரமூன்றோர் மென்னகையால் தாமெரித்தார்- பேரில்
வரலாற்று வஞ்சிதனைப் பாடக் - கரமேந்து
ஏடும் எழுத்தாணி கோணாமல் பாடவருள்
பீடுடையார் பொற்றாள் துணை

நூல்

வஞ்சி நிலைத் தாழிசை
திருக்கயிலை உறைசிவமும்
திருப்பாற்கடல் துயில்மாலும்
திருக்கமலத் தமர்அயனும்
ஒருஉருவாம் பெருமானார் (1)
உழவர்பெரும் குடிமேயினர்
அழகார்திரு வடிவேற்றனர்
வழங்கும்கொடைக் கரப்பண்பினர்
எழுந்துஉயர்ப் பிணிமாற்றினர் (2)
குணக்குன்றெனும் தகையோரிவர்
இணக்கம்மிகு இயல்பேற்றனர்
வணங்கப்படு இறையேஇவர்
குலம்மதங்களை ஒருங்கிணைத்தனர் (3)
இறவாவரம் அருள்மாதவர்
பிறவாநெறி தருவார்பதம்
மறவாதவர் நிறைவாழ்வுறும்
அறவாழியென் உயிர்நாயகர் (4)
அழியாதமெய் வழிகோலினர்
எழிலார்அறம் பொருளின்பமும்
பொழியும்அருள் மறைஈந்தனர்
வழியும்முதல் முடிவும்அவர் (5)
இதுகாலுல கறியாநெறி
மதிமேவிடு நிலைகூர்வழி
கதிஈந்திடு குருகொண்டலென்
பதிமெய்வழி இறைஆண்டவர் (6)
மறலியமல் கிடையாதினி
துறவோர்தொழு திருமாண்பினர்
மறவாவுற விவராயினர்
அறங்கூர்பதி பதமேகதி (7)
மறையாகமம் தெளிவாயின
நிறைமந்திரம் உருவேற்றன
குறைவின்றிய நெறிமெய்வழி
துறைஜீவர்கள் உயிர்உய்வழி (8)
இதுபூமியில் புதிதாம்துறை
இதற்கீடிணை ஏதுமேயிலை
மதம்சாதிகள் சமமேயென
இதம்செய்திடு நெறிமெய்வழி (9)
இனியெங்குமே வளம்பொங்குமே
தனிமெய்ம்முதல் அவதாரமே
கனிகற்பகத்தரு எம்இறை
முனிஆண்டவர் இணைதாள்துணை. (10)

திருவரலாற்று வஞ்சி இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!