உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/095.தவ மெய்க் கீர்த்தி

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



95. மெய்க் கீர்த்தி[தொகு]

இலக்கணம்:-

மெய்க்கீர்த்தி எனும் சொல் உண்மையான புகழ் என்னும் பொருள் தரும். ஓர் அரசனின் ஆட்சியில் நடந்த சிறப்புடை நிகழ்வுகள், தெரியவரும் செய்திகள், பெற்ற வெற்றிகள், பெறலரும் பேறுகள், குலமுறை மேன்மை முதலியவற்றை விதந்தோதுவது மெய்க்கீர்த்தி என்னும் பனுவல்.

சொற்சீர் அடியான் தொழில்படு கீர்த்தியைப்
பொற்புற மொழிதல் மெய்க்கீர்த்தி மாலை
- இலக்கண விளக்கம்  - 865
தொழிலார்ந்த மெய்க்கீர்த்தி சொற்சீ ரடியால்
எழிலரசர் செய்தி இசைப்பர்
- வெண்பாப் பாட்டியல்  - 56
நிலைபெறு சீர்மெய்க் கீர்த்தியின் அந்தம்
உரையாய் முடியும் என உரைத்தனரே.
- பன்னிரு பாட்டியல்  - 122
சிறந்த மெய்க்கீர்த்தி அரசர்செயல் சொற்றனவாய்ச் செய்யுள்
அறைந்த தோர் சொற்சீ ரடியாம்
- நவநீதப் பாட்டியல்  - 53

எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் நீதி அரசாங்கத்தின் நிலையான மாமன்னர்; தவஞானத் திருச்செங்கோலாட்சி புரியும் முனிவர்கட்கரசர், அவர்களின் அற்புதத் திருவருள் மாட்சிகள், கீர்த்தி, வெற்றி முதலியவற்றை விதந்தோதுவது இப்பனுவல்.

தவ மெய்க் கீர்த்தி

காப்பு

நேரிசை வெண்பா

சர்வ புவனம்விண் ணாளும் முழுமுதல்வர்
சர்வேசர் சாலை வளநாடர் . சர்வமுமே
வல்லவரின் மெய்க்கீர்த்தி வானோங்கக் கூவ
நல்லாரின் நற்றாளே காப்பு.

நூல்

நேரிசை ஆசிரியப்பா

ஸ்வஸ்தி ஸ்ரீ!
தென்னாடுடைய சிவபரம் பொருளே!
எந்நாட் டவர்க்கும் இறையெனும் அருளே!
போற்றி ஜயஜய! போற்றி ஜயஜய!
ஏற்றி இறைஞ்சி இருபத முளரிகள்
சிரமிசைச் சூடிப் பரவுதும் பாடி
வரந்தரு திருவே வாழிய! வாழி!
ஆதிசே ஷணையில் அருட்பாற் கடலுள்
நீதமோ டறிதுயில் நிகழ்த்தும் நீரே!
உந்திக் கமலத் தமர்ந்துல கியற்றும்
வந்தித் தற்குரித் தாமயன் தாங்கள் (10)
வேதவே தாந்தம் ஆகமம் அனைத்தும்
நீதம் நிறைந்த நித்தியம் நீரே!
ஆதியும் அந்தமும் அருமறை வைப்பும்
நாதநா தாந்தமும் நற்றவத் தரசும்
காலகா லங்களும் கணிக்கொணா நிலையுநீர்!
ஆலமுண் டாரெனும் ஐயரே! இந்த
ஞாலமுற் றுய்ய நற்றிரு வுள்ளம்
சீலமிக் கோங்கும் திருவருட் தயவு
கொண்டனிர் கோமான் குவலயம் தனில்வந்து
அண்டர்க் கரியராய் அருமறைப் பொருளாய் (20)
திருக்கயி லாய பரம்பரை நந்தி
அருள்மர பினராய் மச்சமுனிவர்தம்
கோத்திரத் துற்பவம் கொண்டனிர் கோமான்
தீத்திறம் தீய்ந்தழி திருநெறி கொணர்ந்தனிர்
சோகம் தனில்கடல் சூழ்புவி ஆழ்நாள்
மோக வெயில்தனில் உயிர்தவித் திடுகால்
அசோக நீழல் அமர்ந்தருள் அருகர்
பசுவே சம்கொடு பதிவரு காலம்
நின்றிலங் கிடவென நும்முளம் இரங்கி
அன்றொன் பானவ தாரம் நிகழ்த்தினிர்! (30)
இன்றுபத் தாவதாய் எழில்மிகு கல்கியாய்!
நன்றுபோந் தனிரே! நாயக போற்றி!
உலகுயிர்க் குணவளி உழவர்தம் பெருங்குடி
நலமெலாம் திரள்திரு அவதரித் தருள்குடி
நாழியோர் மேனி கடிகையோர் வண்ணம்
ஆழிவாழ் ஐயன்நிர் அழகுற வளர்ந்தனிர்
கல்வியும் கலைகளும் கவின்மிகு திறன்களும்
பல்விற் பனங்களும் பாங்குயர் பண்புகள்
நீதநின் றிறைநெறி நிதம்வளர் அன்பினர்
ஓதா துணர்ந்தனிர்! ஒளிர்ந்தனிர்! சிறந்தனிர்! (40)
ஊழிவந் துவந்து உமை எமக்காக
வாழியல் வணிகத் தூக்கிட அத்துறை
ஓங்கி வளர்ந்திட உறுபொருள் பெருகிட
பாங்குயர் திருமணம் பாரினில் வாய்த்தது
தேங்கெழில் திருவொளிர் மதலையும் வாய்த்தது
பூங்கமழ் தாரணி பொன்மணி வேந்தே
ஈங்குநும் இளமைப் பருவத் தெதனினும்
வெற்றிமே டேறிய வித்தக ராயினீர்
நற்றிறப் பண்புகள் நலந்திகழ்ந் தோங்கினீர்
இறைவ! நீர் எமக்காய் எழுந்தநன் நோக்கம் (50)
நிறைவே றிடுபொன் னாள்நிகழ் வுறவே
அம்புவி போந்து அறுநூ றாண்டுகள்
தெம்புடன் காத்திருந் தேங்கிய திருவினர்
செம்பா கின்மொழி செல்வர்பாட் டையர்
உம்பர்கோன் உம்மை உவப்புற நேர்ந்தனர்
அறமிளிர்ந் தோங்கும் அண்ணல் நுந்தம்மை
பூபதி அரசராய்ப் பொலிந்த தங்களை
வான்பதி மன்னராய் மாற்றிட விழைந்து
தனிகையர் வள்ளல் தாமொரு உத்தி
இனிதுதோர்ந் தனர்காண் எம்முயிர் உய்ய (60)
திங்களூர் நாட்டில் திருமகன் தங்களை
எங்கள்பாட் டையா இனிதுசந் தித்தனர்
உண்டனர் உவந்தனர் உயிருரை விண்டனர்
கண்டனிர் காண்டற் கரும்திருக் காட்சிகள்
கடலெனப் பெருகின கனிந்தது நேசம்
உடல்பொருள் ஆவிகள் தத்தம் செய்தனிர்!
கள்ளம் கபடிலா காரிகை துணைவி
அள்ளும் அழகிய அரும் பெறற் குழவி
பெரும்பா டுற்றுப் பெருக்கிய செல்வம்
அருமைப் பெற்றோ ரன்புநட் புறவு (70)
அனைத்தும் துறந்தனிர் அக்கணம் தன்னில்
நினைத்தும் பார்த்திலா நிகழ்வு நடந்தது
யாண்டுஓர் இருபத்தேழில் குருபரர்
ஆண்டு கொண்டனர், துறந்தறம் ஏற்றது
குருபரர் கூடத் தொடர்ந்தனிர் ஐய!
அருட்பெருங் கடலில் ஆழ்ந்தனிர் அம்ம!
திங்களை இளங்கதிர் தொடர்ந்து நன்றே!
எங்கள் உயிருய்மு கூர்த்தம் நிகழ்ந்தது
கபட நாடகரெனக் கருதவும் ஆமோ!
தபநிலை கருதிசெய் தேர்வெனக் கூடுமோ! (80)
இளவர செங்கோன் இயல்பைசோ தனைசெய்
உளவென கொளவும் ஆமோ அறிகிலம்
பணிவுயிர் அண்ணல் பண்பறிந் திடவும்
துணிவையும் ஆய்ந்தனர் தனிகையர் இனிதே
அறிமுக மாந்தரூர் அதன்வழி ஏகினர்
அறிமுக மில்லாப் பகுதியுள் தொடர்ந்தனிர்
சிறிதும் தாங்கள் சிந்தை தளர்ந்திலிர்
செறியிருள் வனத்தே சென்றனிர் அயர்ந்திலிர்
கொடுமிரு கம்வாழ் கானகத் தேகினீர்
கடும்குளிர் காடுகள் தம்மையும் கடந்தனிர் (90)
பயம்குளிர் தமையே போர்வையாய்க் கொண்டனிர்!
அயர்வலுப் பறிந்திலிர் அச்சமும் கொண்டிலிர்!
பசியாற் றாமற் பன்னாள் கடத்தினர்
ருசிபுசி கொள்ளா வகையில் நடத்தினர்!
திடமன முடைய செம்மல்நீர் தாங்கினீர்!
அடம்திடம் ஆசான் கிருபையென் றுணர்ந்தனிர்!
காமக் கொடுமைக் கட்டினை வென்றனிர்!
சேமநன் நெறியுள் சிறப்பாய் நிலைத்தனிர்!
தாழ்மைத் தனக்காய் தனிகையர் தங்களை
வாழ்மறி மேய்ப்பில் வைத்தனர் ஏற்றனிர்! (100)
தயக்கம் கொண்டிலிர்! தரும்பணி யாற்றினீர்!
மயக்கம் அணுவும் கொண்டிலிர் மணியே!
திருப்பரங் குன்றத் திருக்குகை யதனில்
அருட்தவ மியற்ற அண்ணல் பணித்தனர்
இப்பெரும் புவியில் எவரும் இயற்றிடா
செப்பரும் தவத்தில் சீர்செழித் தோங்க
ஊண்உறக் கம்மில் ஒருபெருந் தவத்தில்
மாண்புடன் என்பும் இளகிடப் பசியால்
குடலும் கருகிட கோமகன் தாங்கள்
உடலும் மெலிந்திட உடற்றினிர் தவமே (110)
உலகம் தோன்றிய நாள்முதல் இதுவரை
வலமிகு கடுந்தவம் மாதவர் நும்போல்
எவரும் செய்திலர் எம்பெரு மானே!
தனிமை அச்சம் தாங்கரும் உடல்வலி
இனியுயிர் போம்என் றியல்நிலை வந்தும்
தயக்கம் கொண்டிலிர் தவமே டேறினீர்!
மயக்கம் கொண்டிலிர் மாதவ மாமுனி
சிவபதம் மால்நிலை பிரம்மரந்திரமும்
தவநிலை ஏறினீர் தங்கமா மேரு
செய்யருங் கடும்தவம் செய்விளை வதனால் (120)
ஐயன் தாங்கள் அடைபெரும் பலன்பின்
சூர்தடிந் திடுமெய்க் கூர்வேல் தானும்
ஆனையும் வெல்கோ தண்டமாம் வில்லும்
அச்சுறுத் தோங்கும் ஆரொலிச் சங்கும்
துர்ச்சனர் தமைத்துணித் திடுசக் கரமும்
பேய்மையை ஓட்டும் துடியுடுக் கையும்
தீயரை சேதித் திடு பட்டயமும்
மதமதை வெல்லும் வல்லபா ராங்குசம்
இதமதை நிலைபெறச் செய்பா சமதும்
அண்டரைக் காக்கும் தண்டா யிதமும் (130)
பேதம தோட்டும் மோதகம் தானும்
ஆசீர் பாதக் கங்கண மதுவும்
மாசீர் தருகு கிள்நா மம்மொடு
பன்னிரு சன்னதம் தாங்கினீர் பரமே!
என்னிரு தயமிளிர் ஏந்தலே இதுபோல்
எக்கா லத்தும் எப்பெருந் தவத்தரும்
தக்கபேர் தவம்செய் திலர்காண் மன்னோ?
சன்னதம் பெற்றார் சகத்திலென் றும்மிலை
நற்றவ மகவின் நண்ணரும் தவத்திறம்
கொற்றவர் குருபரர் தனிகையர் உணர்ந்தார் (140)
தவகுகை போந்து தன்னரு மகவாம்
சிவபரம் பொருள்நுமை திருவிழி நோக்கால்
தடவித் தழுவிச் சன்னிதி யிருத்தி
திடமிகு செல்வமே! சர்வப ராபரா!
உமையறி விக்கவே உலகிடைப் போந்தேன்
இமையா நாட்டத் திறைவர்நீ ரென்றார்
ஆண்டுகள் அறுநூ றாய்க்காத் திருந்தேன்
காண்டகு சிறப்பின் கண்மணி வாழ்க!
ஒன்றே குலமும் ஒருவனே தேவன்
என்றே நிறுவி இக்கலி மாய்த்து (150)
இதமிகு புதுயுகம் இயற்றிடல் வேண்டும்
நிதம் புதியவராம் நிர்மலர் நீரே!
நினக்கு நிகரிந் நால்யுகத் தில்லை
எனக்கேற் பவர்க்கும் இனிக்கதி நீரே
ஞானச் செங்கோல் ஏற்றிடல் வேண்டும்
வானாட் டரசர் மதிமணி நீரே!
என்தலை மதிச்சுமை இறக்கினன் நும்பால்
என்பணி தீர்ந்தது நின்பணி ஆர்ந்தது
நிகருமக் கில்லை நீள்புவி எங்கணும்
மகவே! செல்க மாந்தர்காத் துள்ளார் (160)
கைகுவி யேல்என் கண்மணி யே!என
மெய்க்குரு பரரும் விளம்பினர் ஏற்றனிர்!
ஆக யாண்டோர் நாற்பதில் தேவரீர்
யோக தனமேய்ப் போற்றனிர் மன்னோ!
குருபரர் பிரிவை மனுமகன் நினைந்து
பெருந்துய ருழந்து உருகினிர் இதயம்
உயிர்பிரி உடலாய் நகம்பிரி சதையாய்
துயர்மிக எய்தித் துடித்தது நும்முளம்
பிரியோம் எனவே தொடர்ந்தநும் உயிர்உடல்
தரியோம் என்று தளர்ந்து களைத்தது (170)
தாயினும் மிக்க தயவுடை அண்ணலின்
நேயம தெண்ணி நெகிழ்ந்தது நும்மனம்
ஆயினும் குருபரர் ஆணையின் வண்ணம்
தூயவர் தனிகையர் குகைதனி லிருப்ப
உதய திசைதனை நோக்கிநீர் நடந்தனிர்!
ஜீவனைப் பிரிந்து செல்லுடல் போலும்
தேவனைப் பிரிந்து திருமகன் ஊர்ந்தனிர்!
மக்கள் குழாத்திடை புக்கும் விலகியும்
சொக்கர் சுந்தரர் மதுரை மேயினீர்!
மகிழ மரத்தடி இகத்துடை மாந்தர் (180)
நெகிழ மூதுரை நிகழ்த்தினீர் மன்னோ!
கேட்டனர் எனினும் கிளர்ந்துமுன் போந்திலர்
தேட்டினர் இலையெனச் சிந்தை இளைத்தது
அந்திக் கடையெனும் பொட்டலிற் சார்ந்து
செந்தீ வண்ணத் துவருடை அணிந்த
துறவியர் போலும் தோற்றமுற் றவர்க்கு
அறவுரை பகர்ந்தனிர் அவரும் ஏற்றிலர்
பிச்சையேற் றுண்ணும் பேதையர் போதையர்
அவர்தமை வெறுத்து துவருடை களைந்து
புவியினர் போலும் புணைந்தனிர் ஆடை (190)
நம்போ தனைகளை நன்கேற் பவர்கள்
சம்சா ரிகளெனச் சிந்தையுட் கருதி
அருட்‍பெருஞ் சோதி ஆண்டவர் தாங்கள்
திருப்புத் தூர்க்கு சென்றவண் தங்கினீர்
சீதளிப் பொய்கைப் படித்துறை களிலும்
மூதுரை ஆர்வலர் திரள்இடம் பலவினும்
அண்ணல் சீருரை ஆற்றினீர் மற்றும்
திருப்புத் தூர்சூழ் சீரூர் யாவினும்
பொன்னார் திருவடி புண்ணாய் உளைய
மன்னே! நடந்து மாந்தரைக் கரைசேர் (200)
பிரசங் கங்கள் பொழிந்தனிர் தேவே!
தரமுணர்ந் தேற்பவர் தேறிலர் எங்கும்
ஒன்பான் ஆண்டுகள் உணர்பவர் கிட்டிலர்
தன்ஜீ வனுக்குயர் செந்நெறி வேண்டிலர்
உண்பது எங்கே? உறைவதற் கேதிடம்?
பண்பாய் ஆதரிப் பார்கள் யாவர்?
இவ்வண மாக எம்முயிர்க் கரசே!
தங்கள் பாடு சாற்றவும் எளிதோ!
உம்முசல் மாவின் உயர்பெரும் குடும்பம்
செம்மை நெறியிற் சார்ந்தனர் முதன்முதல் (210)
ஒவ்வொரு வராய் உத்தமர் போந்தனர்
அவ்வை தங்களின் அருட்பால் மாந்தினர்
இங்ஙனம் நிகழ்கால் இனியபாட் டையர்
அங்குவந் தும்மொடு அளவளா விப்பின்
ஆசீர் பதித்து அற்புத உத்திகள்
மாசீர் வழங்கி மூல வளநகர்
ஏகிட விழைந்தனர் எம்மான் கலங்கினிர்
மாகொடும் பிரிவு வந்தது மன்னோ
காரையூர்ப் பொட்டல் தனில்பிரிந் தேக
சீர்சிற கிழந்த பட்சிபோல் துடித்தனிர் (220)
ஒருவா றுள்ளம் தேறிய பின்னர்
திருவார் நெறிபிர சங்கம் தொடர்ந்தனிர்!
இவ்வா றாக இறைநெறி வளர்கால்
தெவ்வர் என்னும் தீயவர் இடையிடும்
சொற்பெருக் காற்றுகால் கற்கள் எறிந்தனர்
நற்பெயர் கெடுக்க அற்பர் முயன்றனர்
கூட்டம் கூடிக் கொலைசெய முந்தினர்
ஈட்டம் பல்கிய இவ்விடர் இடையில்
ஆசிரமத்திற் கனல்கொளு வினர்காண்
தீச்செயல் புரிய தீங்கினர் முனைந்தனர் (230)
மாதவர் தாங்கள் வாட்டம் கொண்டிலிர்
தீதவர் புரினும் துணிந்ததை மேவினீர்

அதுநாள்

பல்லவ தாரம் பயின்றனாள் துணைவரு
தொல்பெரு நாயகி தோற்றமுற் றங்குற
பனிமா மதியெனும் கன்னியர் சம்சுஎம்
இனிய பெரிய நாச்சியார் அவர்களை
வெண்கலை புனைவித் தின்மணம் கொண்டனிர்
பத்தியத் திடமுடைப் பார்பதித் தாயவர்
நித்தியர் நும்திருப் பணிதுணை யாயினர்
அன்னை உடன்வர ஹஜ் யாத்திரை செய (240)
நன்னய மக்கா மதினா ஜெருசலேம்
சென்றுவந் தனீர்நீர் தெய்வநா யகமே!
நன்றெம் அன்னை தனுர்கலை கற்று
அன்றுநும் முடன்வர நைமிசா ரண்யம்
ஏகியோ ராண்டு இயற்றினீர் மாதவம்
பூகயிலாயப் பொன்னரங் கரசே!
இப்புவி மாந்தர் இடர் செயல் கருதி
செப்பரும் மைசூர் செல்ல முனைந்தனிர்

அஃதறிந்து

வருந்து மாணாக்கர் விழைவினை ஏற்று
இருந்தனிர் மதுரை எழில்நகர் தன்னில் (250)
கற்றளி ஒன்று கவினுறச் சமைத்தீர்
கொற்றமார் பொன்னரங் கம்அதன் பெயர்காண்
தேவதே வேசர் திருவுயர் செங்கோல்
ஜீவசிம் மாசனம் ஏறினீர் ஐய!
ஞானத் திருவருள் ஆட்சியின் நன்னாள்
ஈனர்கள் கற்றளி இயல்திறம் கண்டு
ஊனப் போர்க்களக் கொட்டிலுக் காக
தேன்பொழில் சோலைசார் ஆலயம் தன்னை
விலைமதிக் கொண்ணா விமலர்கோ வில்தனை
விலைகொடுத் தேற்றான் மெய்யர் கலங்கினர் (260)
மதுரைவிட் டகன்று மாதவர் தாங்கள்
உதய திசைநேர் ஊர்ந்தனிர் ஐய!
யாண்டுசென் றெங்குறை வோமென ஆய்ந்து
ஆண்டே! கீழ்த்திசை போந்தனிர் அங்ஙண்
புதுமெய்க் கோட்டை பெருநகர் சார்ந்த
இதமிகு ஊறல் எழில்மலை மேற்பால்
பொழில்வனம் தன்னில் பொன்னரங்கியற்றி
அழியா நிதியருள் அரசு புரிந்தனிர்
கொடிதனை ஏற்றிக் குவலயத் தோர்க்கு
மிடிமை தவிர்த்து மெய்வழி காட்டினீர் (270)
ஆர்க்கும் அருண்மழை ஆங்கு பொழிந்தனிர்
தீர்க்கத் தரிசனச் செயல்நிறை வேறின
தேவே! சற்சனர் திரண்டவண் போந்தனர்
சாவா வரம்சா யுச்யம் பெற்றனர்
ஒன்றே குலமும் ஒருவனே தேவன்
என்றே நவின்றது இங்கது வென்றது
ஞானம் சிறந்தது வான்மெய் ஒளிர்ந்தது
ஈனம் மறைந்துபே ரின்பம் நிறைந்தது
பேதம் விலகிட வேதம் விளங்கிட
நீதம் செழித்துமெய்ப் போதம் கொழித்தது (280)
பாதம் பணிந்துமெய்ப் பணியே அணிந்தனர்
சேதம் இலாவழி திருவுயர் மெய்வழி
முனிவர்கட் கரசே! மூதுரை நாதரே!
தனிப்பெருங் கருணைத் தலைவ! மன்னவரே!
எங்கும் மங்களம் பொங்கிடும் ஆட்சி
தங்கள் செங்கோல் திருத்தவ மாட்சி
சார்ந்தோர்க்கெல்லாம் சாவினின் மீட்சி
ஆர்ந்து பணிந்தவர்க் கற்புதக் காட்சி
சாதிச்சிக் கறுத்தனிர் சமரசம் நிறுவினிர்
நீதியுள் உயிர்கள் நெறிப்படச் செய்தனிர் (390)
மதமெனும் காளையை வென்று அடக்கினீர்
இதமிகும் மெய்ம்மதம் இலங்கிய திங்ஙணே
இனவெறி தன்னை எரித்து ஒழித்தனிர்
கனவினும் நனவினும் கருத்தழி காம
மளவிருள் மடிந்தது மெய்ம்மனம் விடிந்தது
கோபம் என்னும் கொடுந்தீ தணிந்தது
தாபம் மூன்றும் தீர்ந்துமெய் கனிந்தது
அஞ்ஞா னம்மெனும் ஆரிருள் மறைந்தது
மெய்ஞ்ஞா னக்கதிர்ப் பேரொளி நிறைந்தது

மற்று

அரசன் ஒருவனின் மண்ணா சையினால் (400)
முரசு முழக்கி மாந்தரைக் கொன்று
பரிசிதுவென்று பகர்தலோ வென்றி?
அரியபல் உயிர்களைக் காவு கொடுத்து
மறலியின் கைக்கு மாந்தரைப் பலியிடல்
அறமிது காணோ? அதுவோ கீர்த்தி?
பொன்னா டறியாப் புல்லர்கள் மயங்கி
என்னா டிதுவென எல்லை வகுத்தல்
பொன்னா சையின்கைப் படுமடப் பேதைமை
பெண்ணா சைகொடு பேதுறு போதையர்
மண்ணக மாந்தரை வதைத்திடல் நீதமோ (410)
மூவா சைவசம் வலைப்படு மூகையர்
சாவா நெறியறி யாத சழக்கர்
பல்கியிப் பூமியைப் பாழ்படுத் திடுநாள்
நல்விதம் மெய்வழி நாதர் கொணர்ந்தனிர்
மண்ணாள் மயக்கினர் மாதவர் அருளால்
விண்ணாள் புரிஅற விந்தைசெய் வித்தனிர்
அழிவில் அலறும் அம்புவி மாக்களை
அழியா நிலைபெறு அமரராய் ஆக்கினிர்
மாட்சிமிக் கோங்கும் வானநாட் டரசுநும்
ஆட்சியென் றென்றும் அகிலத் தோங்குக! (420)
மெய்வழி ஒன்றே மேன்மைதந் துய்க்கும்
ஐவழி வீயும் அறவழி வாய்க்கும்
உய்வழி மாந்தர் உவந்துறும் செழிக்கும்
நைவழி இனியிலை நானிலம் பொலியும்
அழிந்து அழுகி நாறிடும் நிலையில்
அழியா நிலைமணம் ஆர்தரும் அடக்கம்
விண்ணார் வேந்தர் விமலர்நும் மருளால்
மண்தீண்டாத மாட்சிமை வந்துறும்
எனனே வியப்பு! யாரிவ் வாற்றலர்!
மன்னே! மாதவ! மெய்வழி தேவே! (430)
அன்னே! அத்தா! அருட்குரு தெய்வமே!
பொன்னரங் கண்ணலே! பொற்புயர் வேந்தரே!
தென்னவ! சாலைத் தேம்பொழில் மலரே!
இன்னமு தே!உயிர்க்கினித்திடு கனியே!
நின்னருட் கிணைநிகர் நீள்புவி தனிலிலை
கண்ணா ளா!எம் கருத்தமர் சுடரே!
எழில்மணி மலையே! இறப்பறும் கலையே!
கற்பகத் தேனே! காத்தருள் வோனே!
பண்கனி இசையே! பலன்நல விளைவே!
வாழிய வாழி வாழ்த்துதும் வள்ளலே! (440)
பூழியர் கோன் நுமைப் போற்றுதும் ஐயனே
ஆதி முழுமுதல் ஆண்டவர் தங்களின்
நீதி நிறைந்த நெறிப்படு மாந்தர்
பாதம் பணிந்தவர் பரசுகம் எய்தினர்
ஓதா துணர்ந்தனர் உண்மை தெளிந்தனர்
ஆய்மதிச் சிந்தையர் அருட்பால் அமுதால்
தாய்மைத் தகையால் ஈகைத் திறத்தால்
பேய்மை விலகின தூய்மை துலங்கின
வாய்மை விளங்கின வள்ளல் தயவினால்
தீரா வல்பிணி தீர்ந்தது நோக்கால் (450)
வாராச் செல்வம் வருகும் கிருபையால்
ஆரா அமுதே! அரசே! அரனே!
நேர்நிக ரில்லா நீதிமன் னவரே!
பாரதம் காக்கும் பதியே! எளியேம்
சீரகத் திலங்கும் தெய்வ நாயகமே!
குருடர் பார்த்தனர் செவிடர் கேட்டனர்
திருடர் திருந்தினர் குடியர் மறந்தனர்
ஊமைகள் பேசினர் தீமைகள் போயின
காமுகர் ஒழுக்கம் கடைப்பிடித் துய்ந்தனர்
எமனை வென்றார் எவருமில் உலகில் (460)
எமனை வென்றீர் என்னோ ஆற்றல்
எமன்கைப் பட்டுயிர் ஏகும் காலை
எமன்கையின் மீட்டு இன்னுயிர் காத்தனிர்
விதிவழிப் பட்டு வீயும் மாந்தரை
மதிவழி நடத்தி வரந்தரு திருவே!
தரிசனை செய்தவர் சாவினின் மீண்டனர்
திருப்பெயர் உரைத்தவர் தெய்வ பதம்பெறும்
மாட்சி யுரைத்தவர் மீட்சி யடைந்தனர்
காட்சிகள் கண்டு களித்தனர் செழித்தனர்
உலகின் மாந்தர் உடல்மருத் துவத்தான் (470)
நலம் பெற நண்ணுவர் நாயக! இந்நாள்
உயிர் மருத்துவத்தான் பிறவிப் பிணிதவிர்
உயிர் மருத்துவரே துயர்தவிர்ப் பவரே
“தென்றலெம் மான்புகழ் திக்கெலாம் செப்புமின்
மன்றிலா டண்ணல் மாட்சிமை உரைமின்
குயில்காள் எம்மிறை கீர்த்தியைக் கூவுமின்
மயில்காள் வானவர் புகழ்நினைந் தாடுமின்
மணிகாள் மாதவர் திறம்வாழ்த் தொலிமின்
அணிமுர சதிர்ந்து அம்புவிக் குரைமின்
தக்கார் எம்பிரான் தவத்திறன் மாட்சியை (480)
எக்கா ளங்காள் எடுத்தெழுந் தூதுமின்
மண்ணக மாந்தர்கள் வந்துபோற் றுங்கள்
விண்ணக வேந்தர்கள் வியந்துஏற் றிடுமின்
எஞ்சுகத் திறைவரின் இணையில் கீர்த்தியை
அஞ்சுகங் காள்நீர் கொஞ்சிக் குலவுமின்
வானம் பாடிகாள் வாழ்த்தித் திரிமின்
தேனமர் சோலைத் திரிவண் டினங்காள்!
வானரசின் புகழ் போற்றி முரலுமின்
புதியவர் நாடொறும் பொன்னரங் கையரைக்
கதிரவ! தரிசினை கண்டிட வம்மின்! (490)
மதியே! வந்தொளிர் மதினா வேந்தர்
கதிதரப் பெறவே கறையற மிளிர்க!
ஆழிவாழ் ஐயரின் அருட்புகழ் போற்றி
ஊழி முதல்வரின் ஓங்குயிர் மாட்சி
பூழியர் கோனினைப் புகழ்ந்துயர் கீர்த்தி
வாழி வாழியென வாழ்த்தமுந்துமினே!
ஆலமுண் டாரெங்கள் ஆண்டவர் சீர்திறம்
ஞாலமெங் கும்சென் றேநவின் றிடுமின்
மேலை மெய்மருந்தேகொணர் மெய்வழி
சாலை ஆண்டவர் புகழ் சாற்று மெங்கெங்கும்” (500)
என்றே போற்றுதும் எம்பெரு மானே!
நன்றே வாழ்த்துதும் நலமுயர் நாதரே!
கற்பூர வாடை கமழ்திரு வாயினர்
பொற்றிரு பொன்மேரு அனைதிரு மேனியர்
செண்பக மணம்கமழ் திருவுயர் திருவுரு
பண்பொருங் கிடுதிடம், பாண்டியர் எங்கோன்
இறுதி நீதி நடத்திடு ஏந்தலர்
உறுதீவண்ணர் ஓங்குமெய்க் கிளர்த்திடு
பெருகுறு ஞானம் வழக்குயர் ஈகையர்
திருமிகு கற்பகத் தருவெனும் கொடையினர் (520)
சீர்திகழ் செம்மலே! திருவுயர் நாதரே!
கீர்த்தியென் பதுநின் கீர்த்தியே இறையே!
ஆர்த்திடும் கடலின் அலைகாள் முழங்குமின்
பார்க்குளும் பரத்திலும் பரமரின் புகழே
பாடுதும்! ஆடுதும் நாடுதும் தாள்மலர்
சூடுதும் சிரமிசை தெய்வமே! தெய்வமே!
வெற்றியென் பதெலாம் மறலியை வெல்தலே
பற்றுதல் பதமலர் பற்றுமற் றில்லைகாண்
உற்றுழி உதவியெம் உயிர்காத் தருள்மின்
நற்றாள் வாழி! நாதர்தாள் வாழி! (530)
அற்றதென் அழிதுயர் அனைத்து நின்னருளால்
இற்றது பாசவேர் இனிமைவந் துற்றது
முற்றிய பவவினை முறிந்தழிந் தொழிந்தது
கொற்றவ நின்செங் கோல்நீ டூழி!
எற்றினை மேலேழ் நிலைகடந் தேற
வெற்றிநிற் கென்றும் வேந்தே!
கற்றவர் சிரமணி கற்பக மலரே!
புவன முழுதுடையான்
வானாட்டரசர் கோன் உடையவர்
திரிபுவனச் சக்கரவர்த்தி பிரம்மப் பிரகாச (540)
திரிலோக சஞ்சார மூர்த்தியர்க்கு
திடமோங்கு யாண்டு
நூற்றிருபத்தொன்று

தவ மெய்க் கீர்த்தி இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!