உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/005.திரு அம்மானை

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



5. அம்மானை

[தொகு]

நூற்குறிப்பு:-

அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூவர் விளையாடும் இவ்வகை விளையாட்டில் முதலாமவள் ஒருசெய்தியைச் சொல்லுவாள்; இரண்டாமவள் அதில் ஓர் ஐயத்தை எழுப்புவாள்; மூன்றாமவள் அவ்வையத்தைத் தெளிவுறுத்தும் வகையில் பதிலளிப்பாள், இவ்விளையாட்டினைக் கொண்டு தலைவரின் புகழைப் பாடுவதாக அமைப்பது அம்மானை எனப்பெறும்.

திரு அம்மானை

காப்பு

பெம்மான் பெருந்துறையார் பொன்னரங்கர் வான்புகழை
அம்மானையாய்ப்பாட ஆர்வமுற்றேன் - அம்மையொடு
அத்தனும் ஆன்ற குருதெய்வம் சாலையம்மா
முத்திக்கு காப்புங்கள் தாள்.

நூல்

ஒப்புமை பற்றி வந்த ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பா

ஆதிபிரம்மம்

ஆதி பிரம்மம் இந்த அகிலத்தில் வந்துஎழில்
நீதியுருத் தாங்கிவந்த சேதியென்ன அம்மானை?
நீதியுருத் தாங்கிவந்த சேதிதனைக் கேட்டிடிலோ
ஆதியருட் ஜோதி அம்பலவர் வான்கருணை
நீதியுரு மேதினியில் நடம்புரிந்து நித்தியமாம்
நீதி நடவினுக்கு நேர்ந்தது காண் அம்மானை (1)

சாதி ஒன்று

நீதி நடவினுக்கு ஆதிமூலம் இனிதாய்
மேதினியில் மிக்கருள்செய் சீதனமென் அம்மானை?
மேதினியில் மிக்கருள்செய் சீதனத்தை சொல்வேன்கேள்
வாதனையார் சாதிகள்தாம் வன்முறைசெய் வெம்மையற
மேதினியிற் சாதி ஒருநிரப்பாய் மிக்காண்டு
சாதிகுலம் பிறப்பறுத்துச் சாதித்தார் அம்மானை (2)

சமயம் ஒன்று

இமையோர் தமையாளும் அமலனாதிப் பெருமான்
நமையாண்டு நற்புவியில் நிகழ்த்தியதென் அம்மானை?
நமையாண்டு நற்புவியில் நிகழ்த்தியதை நவிலுவன்கேள்
தமைத்தந் தெமைக்கொண்ட தெய்வம் திருவிளங்க
நமையாண்டு நானிலத்து நண்ணி நிலவுகின்ற
சமயமெ லாம்ஒன்றாய் திருவுயர்த்தார் அம்மானை (3)

இமையோர்

சமயங்கள் சாதியொன்றாய்த் தண்ணருள்செய் தருமதுரை
இமையோர் திருக்குலத்திற் கென்செய்தார் அம்மானை?
இமையோர் திருக்குலத்திற்(கு) இயற்றியதை இயம்புவன்கேள்
அமையா தலைக்கழிந்து அம்புவிவாழ் தேவர்களை
இமையோர் வாழ் மெய்ப்பதியொன் றியற்றியுக வித்துகளாய்
அமரவைத்து அந்நாட்டிற் காக்கினார் அம்மானை (4)

ஒருவனே தேவன்

தாம்தம் குலம்சமயம் தான்பெரிதாய்க் காமமுற்ற
பூமியினிற் பொன்னரங்கர் புரிந்ததென்ன அம்மானை?
பூமியினிற் பொன்னரங்கர் புரிந்தசெயல் புகலுவன்கேள்
சாமியெங்கள் தர்மதுரை தனிக்கருணைப் பேர்தயவால்
பூமியினில் ஒன்றுகுலம் பெருந்தேவரும் ஒருவர்
நேமமிது சேமமென நிகழ்த்தினார் அம்மானை (5)

மெய் காணல்

விண்ணாளு நாதர் வேதாவை வானமரர்
கண்ணாளர் என்று கழறியதேன் அம்மானை?
கண்ணாளர் என்று கழறியது ஏனெனிலோ
மண்ணகத்தே வந்தேநான் மறைதெளியா மாந்தரிரு
கண்ணிருந்தும் மெய்காணாக் கசடர்களைக் காணவைத்து
விண்ணளித்த வேந்தர் விமலர்காண் அம்மானை (6)

பொன்னரங்கர்

பூதலத்தின் மேதலத்தார் பொன்னரங்கர் தேவர்களின்
காதலரென் றெல்லோரும் கழறியதேன் அம்மானை?
காதலரென் றெல்லோரும் கழறியது ஏனெனிலோ
போதலரும் செண்பகப்பூ பொன்மேனி தண்ணருளால்
காதலர்ந்து வேதத்தின் காய்கனிந்து தேன்பிலிற்ற
மாதவர்தாம் செய்த மதுரத்தால் அம்மானை (7)

பிரணவம்

ஓமெனவும் ஊமை எழுத்தெனவும் ஓதரிய
தாமெனவும் செப்புமொரு தன்மையென்ன அம்மானை?
ஓமதனை ஊமையென ஓதியது ஏனெனிலோ
ஓமென்னும் பிரணவமே ஒருருவாய்த் தோன்றிவந்து
சேமமிகு மந்திரங்கள் சேர்ந்தொருங்காய்த் தாம்விளங்கத்
தாம்காட்சி தந்த தவச்செல்வம் அம்மானை (8)

மறைகள்

கற்றோர் களித்திருக்கும் காரணத்தைக் கல்லாதார்
பெற்றோங்கி இன்பம் பெறுவதெங்கன் அம்மானை?
கல்லார் களிப்படையும் கர்த்தர்செயல் யாதெனிலோ
பொற்றாள் திருநடத்தால் போதிமரத் தண்ணிழலில்
நற்றேவர் ஓர்நொடியில் நான்குமறை நான்குயுகம்
கற்றுக் கடந்துசெல்லக் கற்பிப்பார் அம்மானை (9)

தேவர்

தேவரென்போர் வானுலகோர் பூவுலகிலில்லை யென்று
பூவுலகோர் செப்புவது பொருந்துமோ அம்மானை?
தேவரென்போர் பூவுலகில் தாமுறைதல் செப்புவன்கேள்
ஆவா இதுஉலகின் ஆரதிச யம்அறிமின்
ஜீவர்களைத் தெய்வம் மணிவயிறேற் றீன்றெடுத்து
தேவரென ஆக்குவது தரணியில்தான் அம்மானை (10)

தில்லை

கண்டவர்கள் விண்டதில்லை விண்டவர்கள் கண்டதில்லை
பண்டை யுரைபுகலும் பான்மையென்ன அம்மானை?
பண்டை யுரைபுகலும் பான்மை தெளிந்திடுவீர்
விண்டறியா மெய்ம்முதலை மெய்த்தவசா யுச்யர்எங்கள்
அண்டர்கோன் விண்டதுவும் அமரர்கள் கண்டதுவும்
தொண்டர் பராவுமுயர் தில்லைகாண் அம்மானை (11)

திருவோங்கு மெய்வழி தெய்வம்தம் கைச்சாத்தை
குருஆண் என்றிங்கன் குறித்ததேன் அம்மானை?
குருஆண் என்றிங்கன் குறித்ததொரு காரணம்கேள்
பெருங்கருணைப் பேராளர் பெம்மான் பெருந்துறையார்
வருஆண்க ளென்பவரை வஞ்சியா ராக்கிஇன்பப்
பெரும் போகம் தாம்புரிந்த பெற்றியாலம்மானை (12)

மகதி

மகதியென வானகத்தார் மாதவரைப் போற்றிசெயும்
தகுதியென்ப தென்னவென்று சாற்றுங்காணம் மானை?
தகுதியது என்னவென்று சாற்றிடுதல் ஏனெனிலோ
சகத்தில் பிறந்துவந்து தம்மைத் தலைவரெனும்
அகத்தீஅ றியாமல் அகதியாய்ச் சார்ந்தவரை
மகாதீயில் வேதித்து மாற்றியதால் அம்மானை (13)

தன்னடக்கம்

என்னரங்கர் தன்னைமிக ஏரார்ந்த மாதவர்கள்
பொன்னரங்கர் என்று புகன்றதேன் அம்மானை?
பொன்னரங்கர் என்று புகன்றதுதான் ஏனெனிலோ
இன்னமுத வாரிதியாம் எழிலாரும் எங்கோமான்
தன்னை அடைந்தறிந்த தற்பரரைப் பொன்னாக்கி
தன்னடக்கம் செய்யும் திருச்செயலால் அம்மானை (14)

ஜீவப்பிரயாணம்

இன்னாத சாவிற் கிலக்காகு மாந்தரெல்லாம்
பொன்னாடர் கைப்பட்டுப் பெற்றதென்ன அம்மானை?
பொன்னாடர் கைப்பட்டுப் பெற்றதனைச் செப்புவேன்கேள்
மன்னுதவக் கிள்நாம வானாடர் பேர்தயவால்
மன்னுயிர்கள் ஜீவப்பிரயாணம் பெற்று யர்ந்து
அன்னாட்டு வித்தெனவே ஆகினார் அம்மானை (15)

தயவு

எத்திக்கும் போற்றும் எம்பெருமான் வந்திங்கு
முத்திகார் ணம்என்று மொழிந்ததேன் அம்மானை?
முத்திகார் ணம்என்று மொழிந்ததுதான் ஏனெனிலோ
பத்திமலர் பூத்து பதமலரை நாம்காக்க
அத்தன் திருவுளத்தின் அருட்தயவால் ஆதரித்து
முத்திநமைக் கார்க்க முனைந்ததால் அம்மானை (16)

முத்தி பூர்ணம்

வித்தகர்தாம் இந்த வியனுலகில் தோன்றிவந்து
முத்திபூர் ணம்என்று விளம்பியதேன் அம்மானை?
முத்திபூர் ணம்என்று விளம்பியதை விள்ளுவன்கேள்
முத்திபூர் ணம்என்று விளம்பியதும் அன்னாட்டு
வித்தெடுக்க வந்தசெம்மல் வித்தி விளைவுக்கே
முத்திநம்முள் பூர வழங்குகொடை அம்மானை (17)

உத்தியோவனம்

உத்யோ வனசித்தி கானகம் என்றனந்தர்
சித்தம் குளிர்ந்திங்கன் செப்புவதேன் அம்மானை?
சித்தம் குளிர்ந்திங்கன் செப்புவதைச் செப்புவன்கேள்
உத்யோ வனசித்தி கானகந்தான் நாமுய்யும்
உத்தியதும் சித்தியதும் ஓங்குவதும் உய்வதனால்
அத்தன் அருளியது அத்தாலே அம்மானை (18)

உருமால்

பெருமான் நமக்கெல்லாம் பெரிதாய்ச் சிரோமகுடம்
உருமால் அருளி உவந்ததேன் அம்மானை?
உருமால் அருளி உவந்ததுதான் ஏனெனிலோ
உருமால் அருளி உவந்ததுவும் மெய்யிற்
திருமால் பெருஞாலத் தவதாரம் செய்துருவாய்
வருமால் உருமால் வழங்கினார் அம்மானை (19)

அங்கத்தினர்

சங்கத்தில் சேர்ந்த சற்சனரை மெய்த்தெய்வம்
அங்கத்தி னர்என் றழைத்ததேன் அம்மானை?
அங்கத்தி னர்என் றழைத்ததுதான் ஏனெனிலோ
அங்கத்தில் ஏற்று அழியா வரமருளி
தங்கமாய் ஆக்கித் தம்மெய்யுள் கொண்டதனால்
அங்கத்தி னர்என் றறைந்தார்காண் அம்மானை (20)

காஷாயம்

வேஷப் புலையர் மிகப்பல்கு பாரிதனில்
காஷாயம் தந்தாரேன் கர்த்தர்தான் அம்மானை?
காஷாயம் தந்த காரணந்தான் ஏனெனிலோ
பாஷாண வஞ்சஎமன் படர்கடத்தி நற்கதியாம்
காக்கின்ற சாயமெனும் கதிஉயிரில் தான்பதித்துக்
காஷாயம் தந்தனரே கர்த்தர்காண் அம்மானை (21)

உபதேசம்

உபதேசம் என்றுசொல்லை ஓதுகின்ற இவ்வுலகில்
உபதேசம் ஐயர்தந்த உண்மையென்ன அம்மானை?
உபதேசம் ஐயர்தந்த உண்மையது என்னெனிலோ
இத்தேசந் தன்னில் இறந்தழிந்து போவோரை
அத்தேசத் தேற்றி அருள்புரியும் அச்செயலே
உபதேசம் என்ற உண்மையுணர் அம்மானை (22)

மெய்ப்பொருள்

பொருளென்று பொய்ப்பொருளைப் பற்றியலை இக்காலம்
பொருளொன்று தந்தனரே பொன்னரங்கர் அம்மானை
பொருளொன்று தந்ததின் பெருமைகேள் என்சகியே
பொருளென்று பொன்னாட்டு மெய்பொருளைப் பொன்னரங்கர்
இருள்சேர் வினைகெடவும் இப்பிறவி வெம்பிணிதீர்
அருளை அணிவித்தார் ஆண்டவர் அம்மானை (23)

மெய்ப்பாதம்

பாததீட் சையென்று பாவிகால் தூக்கிசிர
மீதுவைக்கும் இக்காலம் மெய்ச்செயலென் அம்மானை?
பாதமென்றால் மண்படியும் பாதமல்ல என்தோழி
வேதம் விளங்குமெழில் மண்தீண்டா மெய்ப்பாதம்
சீதனமாய்த் தந்தருளும் தெய்வத் தயவொன்றே
பாததீட்சை யென்று பகுத்தறிவாய் அம்மானை (24)

குருவே பிரம்மம்

அருளால்ஐ யாயிரம்பேர்க் கன்புமணம் கொண்டார்
பெரும்பிரம்மச் சாரியென்ற பேரேன்கா ணம்மானை?
பெரும்பிரம்மச் சாரியென்று புகல்பொருளைக் கேளுமம்மா
ஒருபிரம்மம் இப்புவியில் உவந்துசாரி யாடியருள்
குருபிரம்மம் வந்துமணம் கொண்டுயிரைக் காத்தார்
பெரும்பிரம்மச் சாரியென்று பேர்படைத்தார் அம்மானை (25)

இறவா வரம்

வாடா நெறிமுழங்கும் வானவர்கோன் வையகத்தில்
கோடா யிதம்கொண்ட கோலமென்ன அம்மானை?
கோடா யிதம்கொண்ட கோலம் உரைத்திடிலோ
வாடும் உயிர்ப்பயிர்க்கு வளங்கொடுத்து வானமுதம்
ஈடின்றிப் பாய்ச்சி இறவா வரமளிக்கும்
தேடுகூடத் தரசின் திருவருள்கா ணம்மானை (26)

வேதியர்

வேதம் புகழ்பாடும் மெய்வழிதெய் வத்தினுக்கு
வேதியரென் றோர்நாமம் விளம்பியதேன் அம்மானை?
வேதிய ரெனறோர்றநாமம் விளம்பியதைக் கேட்டிடிலோ
வேதித்து மெய்ப்புடத்தில் விளைத்து மெருகேற்றி
ஆதிது ணையான அம்புயத்தா ளிற்பதித்து
பேதப் பிறப்பறுத்த பெருஞ்செயலா லம்மானை (27)

தனிகையர்

முனியரசு நாயகர்க்கு முன்னுரைக்க வநதார்
தனிகை வள்ளலென்றபெயர் தானேன்காண் அம்மானை?
தனிகை வள்ளலென்றபெயர் தான்வந்த தேனெனிலோ
இனியோர் திருக்கைதான் ஈடாமோ கற்பகத்தின்
கனிகொடுத்துப் பொற்பதத்தைக் காசினிக்குத் தாமளித்தார்
தனிகையுயர் வள்ளல்காண் தன்னையறி அம்மானை (28)

அருளமுதம்

அமிர்தமென்று வாயுணவை அகிலத்தோர் தாமயங்க
அருளமிர்தம் அண்ணல் அருளியதென் அம்மானை?
அமிர்தமென்று அண்ணல் அருளியதன் மாட்சிமைகேள்
மருள்சேர் மறலிகெட வானமிர்தம் தாம்வழங்கி
மயக்கம் தவிர்த்திட்டு வன்பிறவிக் கட்டறுத்து
அருளமிர்தம் தந்தார் அறிந்துய்வாய் அம்மானை (29)

சதுரகிரி

பூவினிலே ஏற்றிப் புனல்ஜென்மம் தான்கொடுத்து
சாவினின்று மீட்டார் சதுரர்காண் அம்மானை!
சாவாமை தந்த சதுரர் திருச்செயல்கேள்
சாவினின்று மீட்டுச் சதுரகிரி மீதேற்றி
தேவியவர் பூத்துநின்றார் சீர்பெற்றோம் அம்மானை
கோவானூர்ப் பொட்டலுப்புக் கொடுத்தார்கா ணம்மானை (30)

வாக்கரும்பு

பேக்கரும்பு தந்துஅருள் நோக்கரும்பு பூத்ததிரு
வாக்கரும்பு தந்தாரே வகையென்ன அம்மானை?
வாக்கரும்பு தந்ததனால் மெய்வாழ்வு வந்ததம்மா
வாக்கரும்பு தந்தந்தப் பேக்கரும்பு தானினிக்க
வாக்கரும்பின் தன்கசப்புத் தான்மாய மெய்யினிக்க
ஆக்கரும்பு தான்செழித்த தறிந்துய்வாய் அம்மானை (31)

மெய்த் தெய்வம்

முற்றத் துறந்த முனியரசு நின்னை மணந்(து)
எற்றினார் வானுலகிற் கென்றாயே அம்மானை!
எற்றினார் வானுலகில் என்வாழ்வில் மெய்விடியும்
முற்றுந் துறந்ததெல்லாம் மறலிபடர் வன்பிறவிப்
பற்றறுத்து மெய்யிற் பதித்தார்காண் அம்மானை
வெற்றியென்ப தெல்லாமெம் மெய்த்தெய்வம் அம்மானை (32)

சுதந்திரம்

கொத்தடிமை யாக்கிக் கொடுத்தார் சுதந்திரமென்
றெத்தா லுரைத்தாய் இதுஎங்கன் அம்மானை?
கொத்தடிமை யாக்கிக் கொடுத்த சுதந்திரம்கேள்
செத்தழுகும் பேதைகட்குச் சாகா வரமருளும்
வித்தகர்க்குக் கொத்தடிமை மீளேன்கா ணம்மானை
இத்தைச் சுதந்திரமென் றியம்பினே னம்மானை (33)

கற்பகம்

கற்பகத்தி லில்லாக் கடையாளைத் தாமணந்து
கற்பகத்தைத் தந்தாரே கற்பகர்காண் அம்மானை!
கற்பகத்தைத் தந்த கண்ணாளர் மாட்சிமைகேள்
கற்பகத போவனத்தில் கன்னியெனைத் தாமணந்து
பொற்புகும்பே ரின்பமிகு போகமதில் தான்திளைக்கத்
தற்பரத்தில் ஆழ்த்தினார் தானவர்காண் அம்மானை (34)

திருநாமம்

ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமிலார் என்றார்கள்
பெருநாமம் ஆயிரமாய்ப் பேசுகின்றாய் அம்மானை
பெருநாமம் ஆயிரமாய்ப் பேசுவதன் காரணம்கேள்
பெருநாமம் ஆயிரமோ பல்கோடி செப்பிடலாம்
வருநாமம் எல்லாம் மணவாளர் நாமமம்மா
திருநாமம் செப்புபவர் ஜென்மமுய்யும் அம்மானை (35)

வானவர் கோன்

ஆடுமேய்த் திட்டவரை அன்புமனம் கொண்டினிது
வீடுபெற்றே னென்று விளம்புகின்றாய் அம்மானை
வீடுபெற்றே னென்று விளம்புவதன் நியாயம்கேள்
ஆடுமனப் பேயாட்டம் அடக்கிதிருத் தாள்தொழுவத்
தூடடைத்து வீடளித்து வாடுயிர்கள் தாம்செழிக்க
ஆடவர்காண் வானவர்கோன் அருள்கொடுத்தார் அம்மானை (36)

அங்கத்தினர்

செங்க நதிக்கரையின் சீர்கரும்பு தந்தருள்வார்
கங்கணம்தான் காப்பதுவும் கட்டியதேன் அம்மானை?
கங்கணம்தான் காப்பதுவும் கட்டியதும் ஏனெனிலோ
பொங்கிவரும் பேரருளால் பொற்பதியின் நற்பதியில்
அங்கணத்துள் ஏற்று அன்னாட்டு வித்தெடுத்துத்
தங்கணத்துள் ளாக்கும் தனிக்கருணை அம்மானை (37)

விபூதி

விபூதி வெண்மைநிறச் சாம்பலென்றார் அம்மானை
விபூதி யின்பொருளை விளம்பிடுவாய் அம்மானை
விபூதி யின்பொருளை விளம்புவதன் காரணம்கேள்
விபூதி வெற்றிதரும் பூப்போன்ம் அருட்ஜோதி
விபூதி கங்காளன் பூசும்நீர் மங்காது
விபூதி ஏமனஞ்சும் வெண்குளிசம் அம்மானை (38)

நாமம்

நாமமென்றால் வெண்செம்மைக் கோடிடலோ அம்மானை
நாமம் தரிக்கு(ம்)பொருள் நன்றுரைப்பாய் அம்மானை?
நாமம் தரிக்கு(ம்)பொருள் நன்றுரைப்பேன் கேளடியே
நாமம்நம் பேர்விடுத்து நற்றவர்தம் பேர்சூட்டிச்
சேமம் செழிக்கவைக்கும் சீராளர் மாட்சிமிகும்
நாமம் தரிக்கிலெமன் நாடான்காண் அம்மானை (39)

அருட்பெருஞ் சோதி

அருட்பெருஞ் சோதியென அகல்விளக்கை ஏற்றுகின்றார்
அருட்பெருஞ் ஜோதியென்ன ஆய்ந்துரைப்பாய் அம்மானை
அருட்பெருஞ் ஜோதியென்ன அறிவிப்பேன் கேளம்மா
அருட்பெருஞ் ஜோதியருள் அமுதம் வழங்கியுயிர்
இருட்குலம் தாண்டி இதயப் பிரகாசம்
அருட்பெருஞ் சோதி தனிக்கருணை அம்மானை (40)

வித்தகம்

வித்தகமென் றால்விபரம் அறிதலென்றார் அம்மானை
வித்தகமென் றாலென்ன விரித்துரைப்பாய் அம்மானை
வித்தகத் தின்விபரம் விரித்துரைப்பேன் கேளம்மா
வித்தைப் பதித்து விளைந்துயிர்ப்ப யிர்விளங்கி
அத்தனடி பற்றிநின்று அருள்பெறல்காண் அம்மானை
சித்தம் சிவன்பாலே வைப்பதுகாண் அம்மானை (41)

முத்தாபம்

முத்தாப மென்றே மொழிகிறார் என்னவெனச்
சித்தம் தெளிந்திடவே செப்பிடுவாய் அம்மானை
முத்தாபத் தின்விபரம் மொழிகின்றேன் கேள்மணியே
சித்தம் ஜெகமிருக பாயபயம் துர்மரணம்
வைத்திறுதி நாள்கசப்புத் திண்டாட்டம் துன்பநிலை
முத்தாப மென்றே மொழிகின்றார் அம்மானை (42)

சாயுச்யம்

காலம் கடந்த கலிக்கடையில் நம்பெருமான்
ஏலவல்லார் ஆற்றும் இயல்கொடையென் அம்மானை?
ஏலவல்லார் ஆற்றும் இயல்கொடைதான் யாதெனிலோ
காலன்கைப் பட்டழியும் காசினியோர் தம்மையெலாம்
சாலோகத் தில்இருந்து சாயுச்யம் ஏற்றிவைத்தார்
வால குருவிறைசூல் வள்ளலவர் அம்மானை (43)

சமரசம்

நீதி நிறைந்தபொருள் நித்தியர்நம் நாதாந்தர்
மேதினியில் வந்தியற்று நீதமென்சொல் அம்மானை?
மேதினியில் நீதியர் நீதம் நிகழ்த்துவன்கேள்
வேதியர்நம் வேதாந்தர் வையகத்து மாந்தர்களைச்
சாதிகுலம் பிறப்பறுத்து சமரசமெய் தாம்கொணர்ந்தார்
சாதனைசெய் தெய்வமம்மா தாள்பணிவாய் அம்மானை (44)

ஜோதி தரிசனம்

குருகொண்டல் கோமகனார் குவலயத்தே மண்ணவர்க்கு
தருமதுரை தருபரிசு சாற்றிடுவாய் அம்மானை
குருகொண்டல் ஈந்தருள்செய் கோதில் பரிசதுவும்
பெருகுவரம் தந்தருளி பேரின்ப சித்தியதும்
அருட்ஜோதி தரிசனமும் அழியா நிதியதுவும்
தருகொண்டல் வான்வள்ளல் தாள்பணிநீ அம்மானை (45)

எமன் கை தீண்டாமை

அருட்சிவம்போற் றாமலிந்த அகிலத்தோர் மாள்காலம்
புரட்சி செய்தார் பொன்னரங்கர் புகலதனை அம்மானை
அருட்சிவம்தான் அம்புவியில் ஆற்றும் புரட்சியது
வறட்சிமிகு வையகத்தில் வான்அமுத மாரிபெய்து
திரட்சிகொளச் சீர்வரங்கள் சாவா வரமருளி
மருட்சியெமன் கைதீண்டா மாண்பளித்தார் அம்மானை (46)

குருகுல வாசம்

குருகுலவா சம்செய்யும் கோதில் அனந்தர்கட்கு
தருகுவரம் என்னவென்று சாற்றிடுவாய் அம்மானை
குருகுலவா சத்தோர்கள் கொள்பரிசு யாதெனிலோ
மருகிடுமுத் தாபமதை மாற்றி மறலிதவிர்த்(து)
இருள்கெடுத்(த) அருள்கொடுக்கும் இன்பமிகு பண்பர்மெய்ப்
பொருள்கொடுக்கும் பொன்னரங்கர் பதம்பணிவாய் அம்மானை (47)

வாடா நெறி

வாடா நெறிமுழங்கும் வளவரசர் பொன்னரங்கர்
ஈடில் பெருஞ்செல்வம் ஈந்ததென்ன அம்மானை?
வாடா நெறிமுழங்கும் வளவரசர் ஈந்தசெல்வம்
நீடாழி சூழ்உலகில் நித்தியத்தைத் தந்தருளி
கோடான கோடிக் குருவருளை வானார்மெய்
நாடாளும் நன்மார்க்கர் நல்கினார் அம்மானை (48)

மெய்ப் பதம்

இதமுயர்ந்த எம்பெருமான் ஈடிணையில் மாட்சியர்தான்
மதமென்று தாம்வகுத்த வழியுரைப்பாய் அம்மானை
மதமென்று நம்பெருமான் வகுத்த நெறியதுகேள்
மதமாம் இறையடிசேர் மறுவில் சுகம்பெறற்கே
நிதம்புதியர் நித்தியமார் நெறிவகுத்து நற்றவர்மெய்ப்
பதம்பெறவே சீதனங்கள் பாலித்தார் அம்மானை (49)

செவி உணவும் ஜீவ உணவும்

தேவாதி தேவர் திருக்கயிலை வாசரினால்
பூவுலக மாந்தர்கள்தாம் பெற்றதென்ன அம்மானை?
தேவாதி தேவரிடம் பூவுலகோர் பெற்றதுகேண்ம்
ஜீவ உணவுமணம் செவியுணவும் வாயுணவும்
தேவா அமிர்தமெலாம் தந்தருளி உய்வித்தார்
மூவா முதல்வர்பதம் வாழ்த்திடுவாய் அம்மானை (50)

சாவா வரம்

ஆனகத்தே தான்சேர்ந் தருள்புரியும் அண்ணலெனும்
வானகத்தார் வையகத்தில் வழங்கியதென் அம்மானை?
வானகத்தார் வையகர்க்கு வழங்குகொடை கேளம்மா
தேனகத்தார் தேவபிரான் தாரணியிற் போந்தருளி
ஜீவர்களைத் தேவர்களாய்ச் சீருயர்த்தி என்றென்றும்
சாவா வரமளித்தார் தாள்பணிவாய் அம்மானை (51)

பரபோகம்

தேகம் நமக்களித்த தேவபிரான் பேரின்ப
போகம் பெறஅருள்செய் பெற்றிசொல்வாய் அம்மானை
போகம் அருள்செய்தார் பெற்றி உரைப்பேன்கேள்
ஆகமங்கள் ஆர்மறைகள் அத்தனையும் தான்தெளிய
யூகம் அருளிபர போகம் தனிலாழ்த்திச்
சோகம் தவிர்த்தாண்டார் சொக்கேசர் அம்மானை (52)

தூண்டா மணிவிளக்காய்த் துலங்குதவ கோமானாம்
ஆண்டவர்கள் தாள்பணிந்தாய் யாதுபெற்றாய் அம்மானை?
ஆண்டவர்கள் தாள்பணிந்து அண்டினபேர் பெற்றசெல்வம்
ஆண்டுகொண்டு அண்டியவர்க் கழியா நிதிக்குவையை
மாண்டழியா மீட்பதுவும் வாழ்வாங்கு வாழ்வதுவும்
ஈண்டினிது நித்தியமும் இனிதளித்தார் அம்மானை (53)

தீர்த்தம்

ஜீவப்ர யாணமெனச் செப்பும் திருச்செயலின்
தேவ அடையாளச் சீருரைப்பாய் அம்மானை
ஜீவப்ர யாணத்தின் தேவ அடையாளம்
மூவா முகமலர்ச்சி மென்மை கசப்பின்மை
தேவதீர்த் தம்ஏற்றல் தேகம் துவளல் மணம்
மேவும் திருமேனி மண்தீண்டா அம்மானை (54)

தன்னொழுக்கம்

மன்னாதி மன்னருமே ஆற்றரிய மாட்சிசெயல்
பொன்னரங்கர் பூதலத்தே செய்ததென்ன அம்மானை?
பொன்னரங்கர் பூதலத்தே புரிந்த செயல்களாய்
தன்னொழுக்கம் சாவாமை சகலமத குலமொன்றாய்
இன்னலிலா தன்னாடு ஏகும் பெருஞ்செயல்கேளாய்
என்னிறைவர் என்சாமி இனிதுசெய்தார் அம்மானை (55)

ஜென்ம சாபல்யம்

நந்தா விளக்கேற்றி நாலுவர மும்கொடுத்தார்
பைந்தார் துளபரென்றாய் பைங்கிளியே அம்மானை
பைந்தார் துளபரருள் நந்தா விளக்கேற்றி
சிந்தா குலம்தவிர்த்து ஜென்மசா பல்யமருள்
செந்தா மரைபோலும் தாள்கள் தரைபடிய
வந்தாண்டு கொண்டார்வான் வள்ளலெங்கோன் அம்மானை (56)

அந்நாட்டு வித்து

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பரம்பொருள்காண்
பின்னைப் புதுமையர்தம் பெற்றியென்ன அம்மானை?
முன்னைப் பழம்பொருளார் பின்னை புதுமையினால்
அன்னையாய்த் தந்தையுமாய் ஆன்றகுரு தெய்வமென
தென்னா டுடைசிவனார் தேவாதி தேவபிரான்
இந்நாட்டில் அந்நாட்டு வித்தெடுத்தார் அம்மானை (57)

பேதமிலா நெறி

வேதமோர் மேனிகொண்டு வையகத்தில் வந்ததனின்
நீதமுரை நெஞ்சுவப்ப நேரிழையே அம்மானை
வேதமோர் மேனிகொண்டார் நீதம் உரைப்பேன்கேள்
வேதமெ லாம்திரண்டு மெய்ம்மேனி கொண்டிவர்ந்து
பேதமி லாநெறியைப் பூதலத்தி லேநிறுவி
சேதமிலா வாழ்வில் சேர்த்துவைத்தார் அம்மானை (58)

பிறவா நெறி

பிறவா நெறியென்று பேசுகின்றார் பூவுலகோர்
அறவோர் உரைசெய்த அவ்வழிசொல் அம்மானை
பிறவா நெறியென்று பேசுவது யாதெனிலோ
இறவாத இன்பத் தினிதாழ்த்தி மீண்டும்
பிறவாது பேரின்ப வாழ்வருளும் பெம்மானை
மறவாது வாழ்த்தியிந்த மாண்புறுவாய் அம்மானை (59)

நித்திய முத்தி

எத்திறத்தும் எவ்வெவரும் எக்காலும் செய்தறியா
முத்திப் பெரும்பதத்தின் மாட்சியுரை அம்மானை
முத்திப் பெரும்பதத்தின் மாட்சி யதுகேளாய்
நித்தியமுத் திச்செயலை நீடுழி வாழ்ந்துய்யும்
சித்தி நிலைப்பிடத்தின் சீரோங்கு மெய்ஞ்ஞானம்
அத்திபுரத் தையர் அருள்புரிந்தார் அம்மானை (60)

திரு அம்மானை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!