உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/094.அருள் மும்மணி மாலை

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.94. மும்மணிமாலை

[தொகு]

இலக்கணம்:-

மூன்று மணிகளால் ஆன அணி அழகு தருவது போல் மூன்று வகையான பாக்களால் புனையப்பட்ட மாலை இதுவாகும். மூன்று வகைப் பாக்களாவன : நேரிசை வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரியப்பா ஆகும்.

மிகுந்த வெள்ளை கலித்துறை அகவல்
விருத்தம் மும்மணி விளம்பும ந்தாதி
- பன்னிரு பாட்டியல் : 152
மன்னிய வெண்பா கலித்துறை மன்னர்பா
முன்னிய முப்பால் மும்மணி மாலை
- வெண்பாப் பாட்டியல் 38

இம்மூன்று வகைப் பாக்களாலும் பிரம்மப் பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்களைப் போற்றி அந்தாதித் தொடையாகப் பாடப் பெற்றுள்ளது.

அருள் மும்மணி மாலை

காப்பு

நேரிசை வெண்பா

ஆன்றஎழில் மும்மணிதந் தாட்கொண்ட ஐயர்புகழ்
மூன்று மணிமாலை யால்பரவக் - கான்றொழுகு
வான்கருணை பொங்கி வரமருளும் பொன்னரங்கக்
கோன்திருவார் பொன்மலர்த்தாள் காப்பு

நூல்

நேரிசை ஆசிரியப்பா

அருட்பெரும் மெய்வழி ஆண்டவர் சீரார்
திருப்பெரும் சன்னிதி சார்ந்தவிப் பேதை
பதமலர் பணிந்து வணங்கிய போழ்து
இதமிகும் ஏந்தல் இனியநற் றிருவுள்
கருணையார்ந் தன்பு கனிந்தருட் கடைக்கண்
இருவினை பொடிய என்பவம் விடிய
மெல்லெனத் தடவி மெய்பதித் துயிருள்
வல்லிரு ளோட்டி வளரொளி யேற்றி
ஆண்டதோர் மாட்சியை எண்ணில்
மாண்டதென் பிறவி வாழிநின் கொற்றம்! (1)

கட்டளைக் கலித்துறை

கொற்றவர் கோதறு மாமலர்ச் சேவடி கண்டற்றே
அற்றது தொல்வினை அச்சுறு மாரணத் துன்பமெலாம்
நற்றவர் பூமலர் நாவருள் பொங்கிட நான்மறைகள்
தெற்றென வேதெளி வுற்றன தேடரு வானிதியே! (2)

நேரிசை வெண்பா

வானிதியை ஈயும் வளவரசே மாணடியாம்
கோனிதியே மெய்யார் குபேரநிதி - தேனிதியாம்
தெய்வீக மெய்வழியே உய்வழியாய்ச் சீர்பெருகும்
வையத்திற் கொப்பில் பரிசு (3)

நேரிசை ஆசிரியப்பா

பரிசெனக் காகிய பண்ணகர் பாதம்
பெரிதிதற் கீடிலை யெனுமுயர் நீதம்
அரியயன் ஆர்சிவம் ஓருரு நாதம்
தரிசினை தந்தருள் தெய்வமெய் வேதம்
குருமணி திருநிறை மறைதரு போதம்
அருள்கனி அமுதளிக் கும்பிர சாதம்
ஒருதனித் தலைமையே மெய்வழி தெய்வம்
வருகைதந் தாதரித் தேற்றதால் உய்ந்தேம்
கருமுதல் காத்தனை ஐயா!
பெருகருட் கொண்டல் வான்கொடைக் கையா! (4)

கட்டளைக் கலித்துறை

வான்கொடைக் கையால் வரந்தர உய்ந்தது வையகமே!
தானென் றகந்தை அழிந்து விடிந்தது மெய்யகமே!
கோனென் குபேரகு ணாநிதி தந்தயு கோதயமே!
தேனிறை ஆழியுள் ஆழ்ந்து நொதித்த இருதயமே! (5)

நேரிசை வெண்பா

இருதயத்துள் இன்பமழை பெய்யத் துளிர்த்து
வருதயமே வானரசே! மென்றாள் - கருதியபேர்
ஏமன் அமல்கடந்து சேம நிதிகுவிந்து
தோமறுமெய் வாழ்வுறச்செய் தீர். (6)

நேரிசை ஆசிரியப்பா

தீராப் பிறவிப் பிணியும் தீரும்
பேராப் பவந்தீர்ந் தினிமை சேரும்
சீரார் ஞானச் செங்கோல் ஓச்சும்
மேரே அமுதத் தேனைப் பாய்ச்சும்
நீரே உலகின் நிலைக்கள மானீர்!
பாரோர் உய்யப் பேர்நெறி யானீர்!
ஏறா நிலமிசை ஏற்றிவைத் தீரே!
மாறா மங்கா வாழ்வுதந் தீரே!
பேர்தனி கைத்திரு பெம்மான்
பார்புகழ் மெய்வழி தெய்வம் எம்மானே! (7)

கட்டளைக் கலித்துறை

எம்மா ருயிர்க்குள் இனித்துக் கிடக்கும் சுவைக்கரும்பே!
சும்மா யிருக்கும் சுகோதயம் பூத்த மலர்அரும்பே!
அம்மா!என் அத்தா! அருட்குரு தெய்வம் உயர்பெரும்பேர்
எம்மா தவரும் இயம்பில் நலந்தரும் நின்பெரும்பேர் (8)

நேரிசை வெண்பா

நின்பெரும் பேருரைப் போர்நித்யர் நீடிய
இன்புறு மாண்பினர் எங்கோவே! - அன்புவடி
வானவரே! வானமுதத் தேனவரே! எவ்வுயிர்க்கும்
கோனவரே! கோதில்மணி யே! (9)

நேரிசை ஆசிரியப்பா

ஏகன் அனேகன் இணையடி பணிபவர்
தாகம் தணிக்கும் தயைமிகு பெருந்தவ
ஆகம கலைகட் கதிபர்பே ரின்ப
போகம தருளும் பேரருள் அன்பர்
சாகாக் கலைதரும் சாயுச்ய நாதர்
ஏகாப் பெருவெளிக் கேற்றிடும் போதர்
பூகயி லாயப் பார்பதி கணவர்
ஆகுமெய் வழிதரு அரும்பெருங் குணவர்
சேகர யோகருட் ஜோதி
மாகதி யருளுமெய் மார்க்கரே! ஆதி! (10)

கட்டளைக் கலித்துறை

ஆதியும் மத்தியும் அந்தமும் ஆகிய ஆண்டகையே!
நீதியர் நித்தியர் நிர்மலர் எம்முயிர் பூண்நகையே!
சோதியர் சேதமில் வான்பதம் ஈந்திடு மாதகையே!
வேதியர் மாமலர்ச் சேவடி யேஎமைப் பாதுகையே! (11)

நேரிசை வெண்பா

பாதோத கம்சர்வ பாவம் தவிர்த்திடுங்காண்
வேதாக மம்தெளி வாக்கிடும்தாள் - ஓதா(து)|r}}
உணர்வுக்குள் உள்ளுணர்வாய் ஓங்கித் திகழ்ந்து
பணர்விரிக்கும் பண்ணகர்பொற் றாள் (12)

நேரிசை ஆசிரியப்பா

தாள்மலர் எந்தன் சிந்தையுட் பூக்கும்
ஆள்கைசெய் ஐயர்மெய் அருள்தனைத் தேக்கும்
நாடொறும் புதியவர் நமைமெ(ய்)யுள் ஆக்கும்
தேடரும் நிதிதரும் சீருயிர் காக்கும்
ஈடிணை யற்றெம திருவினை நீக்கும்
பூடக மறைகளின் மறைவினைத் தீர்க்கும்
ஆடகப் பொன்னரங் கையரின் சீர்க்குள்
ஏடகக் கற்பக மாமலர் பூக்கும்
நாடிமெய் யனந்தர்கள் ஆர்க்கும்
வீடடைந் துய்ந்திட மாமதி கூர்க்கும் (13)

கட்டளைக் கலித்துறை

கூருயிர் மெய்ம்மதிக் கோமான் கொழுமலர்ச் சேவடியே!
பேருயர் வான்கதி பெற்றுயத் தோதுரை நாவடியே!
சீருயர் பேரணி என்சிரம் சூடுமுன் பூவடியே!
பாரக முற்றுமு யக்கதி சாலைப்பூங் காவடியே! (14)

நேரிசை வெண்பா

காவகத்தே மாதவஞ்செய் தாருயிர்கள் காத்தருளும்
தேவகத்தைத் தோத்தரிப்பாய் என்நெஞ்சே! - நாவகத்தே
ஓவாது ஓங்குபுகழ் நால்வேதம் ஓதுவதே
சாவாமைத் தோதென்று செப்பு. (15)

நேரிசை ஆசிரியப்பா

செப்பற் கரியநின் திருப்புகழ் போற்றுதும்
ஒப்பில் பதமலர்க் கென்னுயிர் சாற்றுதும்
அப்பனின் அம்புயப் பதம்பணிந் தேற்றுதும்
பொற்புடைத் திருவுயர் நாமமே கூற்றகல்
தெப்பமாம் மெய்வழி தெய்வமே! ஏற்றருள்
எப்பொழுதும்மற வாதநற் பேற்றினை
துப்பெனக் காயினீர் தந்தெமன் மாற்றுமின்
இப்புவிக் கிரங்கியெம் மாருயிர்க் கிரங்கிடும்
மெய்ப்பதம் தருந்தவ மேரே!
உய்ப்பதம் கதிநிதி அனைத்துமே நீரே! (16)

கட்டளைக் கலித்துறை

நீரே எமக்குயிர் நேசராம் தேசிக நாயகரே!
பேரான நாடுடைப் பெம்மான் பெருந்துறை மேயவரே!
சீரோங்கு தெய்வச் சிரோமணி எம்முயிர்த் தாயகரே!
ஆராத னைபுரிந் தேத்துதும் அத்தனே தூயகரே! (17)

நேரிசை வெண்பா

தூயமெய்ச் சிந்தையெனும் ஜீவசிம் மாசனத்தே
மேய தவத்தரசே! மேரேறே! - தாயே!
சகலவுயிர்க் கர்த்தாவே! தங்கள்பொற் பாதம்
அகலாத வாழ்வெற் கருள். (18)

நேரிசை ஆசிரியப்பா

அருட்பிர காச ஆருயிர் மணியே!
குருபெரு மானே! கோதிலா அணியே!
பெருகிடும் அமுதம் பொங்கும் வாரிதியே!
கருகிட வினைபவம் ஒளிக்குலக் கதிரே!
அருட்குலம் விளங்க அமுதருள் நதியே!
திருக்குல அனந்தா தியர்வளர் பதியே!
மருட்கெட ஞானம் வழங்குயர் நிதியே!
திருவுரு எழில்மிகும் தேவே!
அருண்மணித் திருத்தாள் எமக்கொரே கதியே! (19)

கட்டளைக் கலித்துறை

கதியொன்று உங்கள் கழலார விந்தம் கணக்கடங்கா
நிதியொன்று நின்திரு வாய்மலர்த் தேனமு தாம்மொழிகள்
விதிவென்று மெய்யாம் மதிதந்த வேந்தே! எளியனுக்கும்
பதிநன்று தந்த பரிசினுக் கென்கட வேனய்யனே! (20)

நேரிசை வெண்பா

ஐயா ரடைவித்த ஆதியிறை அம்புயத்தாள்
மெய்யாய்ப் பணிந்தவர்கள் மிக்குய்வர் - துய்ய
மணிவிளக்கெம் ஆருயிரில் ஏற்றி அருளார்
அணிவிளக்காய் ஆக்கும் இனிது. (21)

நேரிசை ஆசிரியப்பா

இனிதெனக் காக்க ஈந்தருள் ஏந்தல்
முனிவர்கட் கரசு மூதுரை வேந்தர்
தனிமுதற் பெருமான் சாலைஆண் டவர்கள்
தனிகையர் வள்ளல் தம்மொடும் கூடி
பனிகுளிர் வெயிலால் புயல்மழை பசியால்
தனித்திடர் பட்ட சளம்வரை யளவோ
கனிநமக் கீயக் காய்ந்தவென் சாமிக்
கினியொரு இணைதான் இயம்பவும் படுமோ
தனித்தயா நிதியே! தஞ்சம்
இனிக்கதி நீரே! எமக்கிலை பஞ்சம். (22)

கட்டளைக் கலித்துறை

பஞ்சமுத் ராலம்பர் பாரோர் உயக்கதி யான வெம்மான்
கஞ்சம லர்ப்பதம் காத்துக் கனிந்திரு என்நெஞ்சமே!
துஞ்சலி லாத்தவத் தோன்றலென் னாருயிர்த் தேவாதியே!
வஞ்சஎ மன்படர் வீய வரந்தரு மாதங்கமே! (23)

நேரிசை வெண்பா

மாதங்கம் மெய்வழி தெய்வம் தொழுபவர்க்
காதங்கம் என்றுமில் அம்புவியீர் - சேதங்கள்
வாரா நெறியருளும் வள்ளல் பதாம்புயமே
சீரோர்கள் சேரும் தலம். (24)

நேரிசை ஆசிரியப்பா

தலமிது கண்டவர்க் கினிப்பிறப் பில்லை
குலகுரு தெய்வ பதாம்புயம் தில்லை
நலமுயர் மெய்வழிச் சாலைமெய் யெல்லை
பலமிகு ஏமன் படர்துய ரில்லை
நிலமிசை முன்பினும் இவர்க்கிணையில்லை
அலகிலர் சோதியர் அருண்மண முல்லை
வலமிகு நித்திய வாழ்வருள் தெய்வம்
கலைபல ஓதா துணர்த்திடும் ஐயர்
நிலைபெறு மெய்த்தவம் ஓங்க
அலைவறுத் தாள்துரை ஆர்புகழ் வீங்கும். (25)

கட்டளைக் கலித்துறை

ஆர்புகழ் போற்றும் அனந்தாதி தேவர்க்குள் யானுமொரு
பேர்கொள வேண்டிப் பணிந்தேனம் போருகப் பொற்பதமே!
பேராயி ரம்உடைப் பெம்மானே! மெய்வழிப் பொன்னரங்கில்
நேராரு மில்ஞானச் செங்கோல்செய் நித்தியர் ஆண்டவரே! (26)

நேரிசை வெண்பா

நித்தியர் ஆண்டவர் நற்றாள் பணிவதும்
பத்தியம் கைப்பிடிப் பண்பதுவும் - சத்திய
சுத்தரொடு தோள்சேர்த்து வித்தகர்பொற் றாளார்ந்து
மெத்தவணக் கம்புரிதல் சால்பு (27)

நேரிசை ஆசிரியப்பா

சால்புடை தேசிகர் தயைகனி திருவுளம்
சாலைவாழ் அனந்தருள் தமியனும் ஒருவனாய்ச்
சீலமோ டேற்றது தீர்த்தது பவப்பிணி
தூலப் பிணிக்குலம் தொலைந்தது அருளால்
மேலைமெய்ம் மருந்தருள் மெய்வழி தெய்வம்
ஏலவல்லவ ரென திணையிலா நாயகர்
வாலறிவினர் பெருங் கோமகன் வாமணர்
காலந் தாட்டிய காரணர்
ஞாலத் துற்றதான் நல்லுயி ருய்ந்ததே. (28)

கட்டளைக் கலித்துறை

உய்ந்திடச் சீர்திரு ஒப்பிலி அப்பன் உவந்தினிதே
நைந்திடும் ஆருயிர் நற்கதி நற்புவி நண்ணிடவே
பைந்தமிழ்ப் பொன்னரங் கத்திருச் சாலையிற் போந்தினிதே
மெய்த்தவர் வான்வரம் ஈந்ததோர் வாய்மை விளம்பரிதே! (29)

நேரிசை வெண்பா

அரியன வற்றுளே மிக்கரிதாம் மாட்சி
பெரிதிற் பெரிதுதிரு நாமம் - துரியபதம்
தந்தருளும் எந்தையடி தாழ்ந்து பணிந்தேற்றி
வந்தித்து வாழ்வோம் இனிது! (30)

அருள் மும்மணி மாலை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!