திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/018.அருள் உற்பவ மாலை

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



✫18. உற்பவ மாலை[தொகு]

இலக்கணம்:-

அரிபிறப்பு அல்லது உற்பவ மாலை எனச் சுட்டப்பெறும் திருமாலின் பத்து அவதாரங்களான:- 1.மச்சம் (மீன்), 2.கூர்மம்(ஆமை), 3.ஏனம் (வராகம்), 4.நரசிம்மம், 5.வாமனர், 6.பரசுராமர், 7.இராமர், 8.பலராமர், 9.கிருஷ்ணர், 10.கல்கி என்னும் இவற்றை முறையே எடுத்தோதிப் பாடிப்பரவி பாட்டுடைத் தலைவரைக் காத்தருளும்படி இறைவனிடம் விண்ணப்பிக்கும் வகையில் பாடப்பெறுவது.

சேலே ஆமை ஏனம் சிங்கம்
கோல வாமனன் மூவகை இராமர்
கரியவன் கற்கி எனவரு கடவுளர்
புரிதரு தோற்றம் தெரிதரப் பராஅய்ப்
பாட்டுடைத் தலைவனைக் காக்க வேண்டி
இனமொழி நாட்டி அகவல் விருத்தம்
ஒருபதியற்றுதல் ஆழியோன் பிறப்பே!
- பன்னிருபாட்டியல்  - 188
பகர் தெசப் பிராதுற் பவம்பத் தான
அரிபிறப்பு ஆசிரிய விருத்தம் பத்தால்
வாழ்கென வழுத்துதல் 
- பிரபந்த மரபியல் 18
உற்பவ மாலையே உலகு அளந்தோன் பிறப்பு
அற்புதம் ஈரைந்து ஆசிரியத்து அறைதலே
- பிரபந்த தீபம் -12
அரிபிறப் பீரைந் தனையுமாசிரிய
விருத்தத்தால் விளம்புவது உற்பவமாலை 
- முத்துவீரியம் -1065
உயர்மால் பிறப்பா சிரியவிருத் தத்தா
லுரைத்தல் உற்பவ மாலையே 
- பிரபந்ததீபிகை -13

இச்சிற்றிலக்கியத்தின் பாட்டுடைத்தலைவர் எம்பெருமான் பிரம்மோதய மெய்வழி சாலை ஆண்டவர்கள். சர்வ அவதாரங்களையும் அவர்களே எடுத்தார்கள் என்பதனைத் தெளிவாயுணர்ந்தமையினால் அந்தந்தத் தோற்றம் (அவதாரம்) பற்றிக் குறிப்பிட்டுப் போற்றி செய்தமையலாகிறது. ஸர்வம் பிரம்மமயம். ஒன்றே குலம் ஒருவனே தேவன். மக்களை உய்விப்பதற்காக இறைவன் அவ்வப்போது திருமேனி தாங்கி இப்பூவுலகில் வந்து, அவதரித்துத் தம்மை அண்டிய மக்களை ஜென்ம சாபல்யர்களாக்கித் தங்கள் திருவடி மலர்களில் ஏன்று கொள்வார்கள். இறைவன் மக்களுள் ஒருவர்போல் திருமேனி தாங்கி வரும்போது மாயை வசப்பட்ட மக்கள் அவர்களின் மாட்சிமையைச், சிறப்பை, அளவற்ற அற்புத ஆற்றலை உணர்ந்து கொள்ளாமற் போவதோடின்றி அவர்கட்குத்துன்பம் இழைத்தல், அவமானம் செய்தல் போன்றவையும் நிகழ்த்துவர்.

பரித்ராணாய ஸாதூணாம் விநாசாயஸ துஷ்கிருதாம்
தர்ம ஸம்ஸ்தாப னார்த்தாய  சம்பவாமி யுகே! யுகே!

இறைவன் சாதுக்களை இரட்சிப்பதற்காகவும் தீயோர்களைச் சம்ஹாரம் செய்வதற்காகவும் அவ்வப்போது தங்களைத் தாங்களே சிருஷ்டித்துக் கொள்கின்றார்கள். இறைவன் மொழி, இனம், தேசம், நிறம் என்னும் பேதம் கடந்தவர்கள். அனைத்து வேதங்களும் ஒரே இறைவனால் அருளப்பெற்றவை. இதனைத் தெளிந்து கொண்டால் மத, இன, மொழி, நாடு, சாதிச் சண்டைகள் வாரா. எங்கும் ஒற்றுமை, சமரசம், சமாதானம் நின்று நிலவும்.

அருள் உற்பவ மாலை

காப்பு

நேரிசை வெண்பா

பொற்புகுமெய்ப் பொன்னரங்க நாயகர்நும் வான்புகழை
உற்பவமா லைபாட உள்விழைந்தேன் - கற்பகர்நும்
நற்றாள் சிரஞ்சேர்த்தேன் நற்சொற்பொ ருள்அருள்க
பற்றொன்றே பாத மலர்.

நூல்

பதினான்கு சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

உலகெலாம் படைத்தளித் தருளியும் மறைத்தலோ
டழித்தலென ஐந்தொ ழில்செய்
ஒருதனிமெய் முழுமுதல்வர் உலகில்மெய் வழிநிறுவ
உவந்து யினிதவ தாரமாய்
நலமெலாம் திருக்கரத் தடக்கியே போதரும்
நல்மச்சம், கூர்மம், ஏனம்
நரசிம்மம் வாமனம் பரசுராமர் ராமர்
நந்தகோ பாலன் மற்றும்
பலராமர் கல்கியெனப் பாரினில் செப்பரும்
பத்தவ தார மென்பர்
பண்போங்க மாந்தர்க்கு பகருநல் அறநீதம்
பற்றினோர் சிலமாந்தரே
வலமோங்கு மாதேவர் மெய்வழி தெய்வமே
வந்தஅவ தார மெல்லாம்
வானோங்கு சீர்புகழ் வாழ்த்திப் பணிந்துமே
வருபிறவிப் பிணியக லுவோம் (1)

1. மச்சாவதாரம்

சத்திய விரதனென் றோர்மன்னன் தங்களைச்
சந்தித்து வந்தனம் செய்
ஜலதர்ப்ப ணத்திலே மச்சமாய்த் தோன்றினீர்
சாகரம் தனிலேகினீர்
மெத்தநீர்ப் பிரளயம் வருமோர் மரக்கலம்
மேவுமதில் மேலோர்களை
வித்துகள் விலங்குபுள் ளூர்வன என்பன
வகைவகை கலத்திலேற்றி
சித்த(ம்)சிவம் பால்வைத்து சேவித்தி ருவென்று
செப்பினீர் ஹயக்கிரீவன்
திருடிய மறைமீட்டுத் தந்துபுவி வாழவே
செய்ததிரு வோங்கு தேவே
முத்தர்கள் பணிந்தேத்து மோனவடி வேதங்கள்
மெல்லடிகள் போற்றி போற்றி
வையமிதில் மெய்வழியில் உய்யஎமை வைத்திட்ட
வள்ளலே போற்றி போற்றி (2)

2. கூர்மாவதாரம்

முனிவர்துர் வாசரின் சாபத்தின் விளைவினால்
மூவுலகு சோபைஅவிய
மெய்யர்நீர் சிந்தித்து தேவர்கள் மாளாது
வலிமைபெற வான்அமிர்தம்
கனிவுபெறத் திருப்பாற் கடல்கடைய வாசுகி
கயிறாக மந்த்ர மலையைக்
கொண்டுமத் தாகவே கூர்மமாய் அடிநின்று
கொடுத்தனிர் அமுதகலசம்
முனிந்துவரு ஆலகா லவிஷம் தனையுண்டு
மென் மிடற்றடக்கி நின்றீர்
மெய்யமுது நும்மக்கள் தம்முயிர் உய்யவே
மிகவேண்டி வைத்திருந்தீர்
தனிகைமணி குமரரென இனிதுவரு தருணமதில்
தந்தமுது மாளாவரம்
தருகுதிரு முனியரசு தயை பெருக மெய்வழி
தரணிமிசை ஓங்க! ஓங்க! (3)

3. வராகம்

சனகாதி முனிவர்க்கு ஜெயவிஜயர் எனுநாம
துவாரபா லகர்செய் தடை
சாபமத னால்காசி பர்மனைவி நிதிகர்ப்பம்
சார்ந்தரக் கர்ஆயி னார்
சினமோங்கு இரண்யாட்சன் இரண்யகசி புஎன்று
தேகமது தாங்கி நின்றார்
தேவர்க்கு மூவர்க்கு செய்தனர் கொடுமைகள்
திருமாலே தாங்கள் எழுந்து
இனமோங்கு வரஆகம் எனுமேனி கொண்டுநீர்
இரண்யாட்சன் தனைவதைத்தீர்
இப்பூமி இடர்தீர்த்து இனிதாம் மெய்ந்நெறிகொண்டு
இயங்கலாயிற் றன்று காண்
வனமோங்கு உத்தியோ வனசித்தி கானில்மெய்
வழிச்சாலை அதுமேவியே
வரமீந்து மக்களை ஜென்மசா பல்யரென
வாழவருள் தாள்கள் போற்றி (4)

4. நரசிம்மம்

நாராய ணாநமஹ வென்றேஅஷ் டாட்சரம்
நானிலத் தோங்கி நிற்க
நாமமது புகலாது இரண்யாய நமஹவென
நவில்க வென்றே வருத்தி
சூரன்இ ரண்யகசிபு யென்பானிப் பூமியில்
தேவர்கட் கிடர் விளைத்தான்
சுந்தரத் திருமகன் பிரகலாதன் அதைச்
சொல்லாம லேம றுத்தான்
பாராமல் மகனென்று பண்பிலாத் தந்தையும்
பல்வகையில் துயர் கொடுத்தான்
பகவான்நீர் நரசிம்ம அவதாரம் கொண்டுமே
பாவசங் காரம் செய்தீர்
சீரோங்கு மெய்வழி தெய்வமே! தாங்கள்அத்
திருச்செயல் செய்தரு ளினீர்
திருவளர்க வரமருள்க மெய்வழி தெய்வமே
திருவடிமென் மலர்கள் போற்றி! (5)

5. வாமன அவதாரம்

பிருகுகுல முனிவர்களைப் பேணியமா பலிமன்னன்
பிரகலா தர்பேரன் காண்
பெரியதோர் விஸ்வஜித் யாகமும் செய்ததால்
பெற்றனன் கொடிவில் பரி
பெருகுபடை தொடரஅம ராபதி மேற்சென்று
போர்செய்து வெற்றி கொண்டான்
பெருந்தவத் தேவர்கள் பேரிடர் கண்டுஎம்
பெருமான்அத் திருகரு வினில்
திருவுருவம் சிறியதாய் வாமனரென்றே தோன்றி
சென்றனிர் மாபலி யிடம்
திருவடியால் மூன்றடி மண்கேட்க மன்னனும்
சிந்தை கனிந்தே தந்தனன்
பெருகுதிரு வுருவுற்றுப் பூமியோ ரடியாலும்
பெரியவான் ஓரடி யாலும்
பலிசிரசில் மூன்றாம் அடிவைத்து ஆண்டனிர்
பரமரே போற்றி! போற்றி! (6)

6. பரசுராமர் அவதாரம்

ஜமதக்னி ரேணுகா தம்பதியர் செல்வராய்
தவபரசு ராம ரானீர்
தானவன் கார்த்தவீ ரியார்ச்சுனன் முனிவரின்
காமதே னுவைக்கவர்ந் தான்
தமதுதந் தைசொல்லைத் தட்டாமல் மன்னனைத்
தனது பரசால் வென்றனிர்
தாயைத் தமையரை வெட்டித் தந்தைவரம்
தன்னால் உயிர்ப்பித் தனிர்
இமையவர் ஜமதக்னி தனைக்கொன்ற அரசர்குலம்
இருபத்தோர் தலைமுறை யினர்
யாவரையும் வென்றிந்தப் பாவங்கள் தீரவே
ஏகினீர் தீர்த்த யாத்ரை
சமரசமெய் வழிதன்னை சகமிசைக் கொடுபோந்து
சகலமத குலமொன் றெனச்
சாதித்த எமபடரைச் சேதித்த தெய்வமே
தஞ்சமுங் கள்தாள் மலர். (7)

7. ராமாவதாரம்

ரகுவம்ச தசரதகு மாரராய் அவதாரம்
ராமபிரான் ஆயினீர்!
நன்முனிவ சிஷ்டர்வளர் மகவாகி கோசிகர்
நற்றவம் காத்தரு ளினீர்!
தகவுயர் ஜனகரின் சிவதனுசை நாணேற்றி
சீதையை மணம் கொண்டனிர்!
தாய்தாதை யுரைவண்ணம் சீதைலக் குவணருடன்
தவம் செய்யக் கானேகினீர்
தகவிலான் ராவணன் சீதையைச் சிறைகொள்ள
சுக்ரீவர் ஆஞ்ச நேயர்
தமதுதுணை கொண்டு தசகண்டன் தனைவென்று
சீதையைச் சிறை மீட்டினீர்
இகமதனில் ஒருசொல்இல் ஒருவில் கோதண்டமென
இராமராய் இலங்கி நின்றீர்
எமபடரு மடிபடவும் இனியமெய் வழிதந்து
ஏன்றதாள் போற்றி போற்றி (8)

8. பலராமர் அவதாரம்

பலராம ரெனுநாம மதுகொண்டு அவதாரம்
பாலகிருஷ் ணர்க்குத் துணையாய்
பலவகையி லவுணர்தம் படைதன்னை வென்றிகொள்
பலங்கொண்டீர் தாங்க ளய்யே
நலமோங்கு கோகுலம் நன்றுய்யத் துணையாற்று
நாயகர் பலராமர் நீர்
நத்திநின் றோர்கள்மிகு பத்திசெய் சத்திய
நாதர்மெய் வழியோங் கவே
குலமோங்கு அனந்தாதி தேவர்கள் குறைதீர்செங்
கோல்நிதம் தந்தனி ரன்றோ
கோமானே சாலைவளர் கோவே எமக்குவரு
கூற்றம் தடுத்தாள் கவே
தலமோங்கு மெய்வழிச் சாலைஆண்ட வர்தாள்கள்
சரண்செய்ய உய்வழி தரு
தவமோங்கு தெய்வமே தாள்தஞ்ச மாயினோம்
சரணார விந்தம் கதியே (9)

9. ஸ்ரீ கிருஷ்ணர்

தரும வசுதேவரும் தேவகித் தாயீன
தான்கோ குலம் வளர்ந்து
தாய்மாமன் கம்சன்செய் சதிவென்று பரந்தாமர்
தாய்தந்தை சிறைமீட் டினீர்
பெருநதியில் காளிங்கன் மேலேறி நர்த்தனம்
புரிந்துகோ வர்த்தன கிரி
பெருங்குடை யெடுத்துகோ குலம்காத்த கோபால
புகழ்து வாரகை யரசரே!
அருமைமிகு பஞ்சவரை ஆதரித் தர்ச்சுனர்க்
கருள்செய்து விஸ்வ ரூபம்
அதுகாட்டி கீதைதந் தகிலமுழு துய்யவே
அறவாழி தனில் துயின்றீர்
குருகொண்ட லாகவே அனந்தர்குல மோங்கவே
குவலயம் தனில்மெய் வழி
கொண்டுவந் தெமன்படர் வென்றுநன் றாள்கஎம்
குலதெய்வ மேபணிந் தேம் (10)

10. கல்கி

தருமமது தாழ்ந்துஅ தர்மமது மேலோங்கு
தருணமதில் அவத ரித்து
சாதுக்க ளைக்காத்துத் தீயோரை சம்ஹாரம்
செய்குவேன் என்ற வண்ணம்
பெருமைமிகு தமிழக மார்க்கபதி தன்னிலே
பெருந்தகை ஜமாலு சேனும்
பெரியதாயும் ஈன்ற பேரருள் பெருவள்ளல்
பெம்மான்மெய் வழி தெய்வமே
இருநிலத் தெங்கெவரும் எக்காலும் செய்யரும்
இறவாத வரம ளித்து
இப்புவியை இனிமாற்றி நற்புவியுற் பவம் செய்யும்
ஏரார் கல்கி மகதியே
அருள்மார்க்க நாதர்மெய் வழிஆண்ட வர்என்று
அற்புத நாம மேற்றீர்
அருமறைகள் தெளியவரு குருகொண்ட லேதங்கள்
அடிமலர்கள் தஞ்ச முற்றோம்! (11)

அருள் உற்பவ மாலை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!