உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



25.ஐந்திணைச் செய்யுள்

[தொகு]

இலக்கணம்:-

நிலங்கள் ஐவகைப்படுவனவாம், மலையும் மலையைச் சாந்த இடம் குறிஞ்சி நிலம் எனவும், காடும் காட்டைச் சாந்த இடம் முல்லை நிலம் எனவும், வயலும் வயலைச் சாந்த இடம் மருத நிலம் எனவும், கடலும் கடலைச் சாந்த இடம் நெய்தல் நிலம் எனவும், குறிஞ்சியும் முல்லையும் தம்மியல்பால் திரிந்து மாறித் தோன்றுவது பாலை நிலம் எனவும் கூறப்பெறும். இந்த ஐவகை நிலங்களும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளது சாலையம்பதி ஒன்றேயாம். எங்ஙனமோவெனின், இஃது ஊறல் மலையைச் சார்ந்துற்றமையின் குறிஞ்சி யெனவும், அருகில் நெருங்கிய கானகம்(காடு) அமைந்துற்றமையின் இஃது உத்தியோவன சித்தி கானகம் என்னும், முல்லை நிலம் ஆகலும், சாலையின் அமைப்பே (வயலும்) வயலைச் சார்ந்திருத்தலின் மருதம் எனவும், ஆலயம் மற்றும் வணக்கத் தலம் யாவும் மணல் பரப்பிய இடமாகலின் நெய்தல் எனவும், சாலையின் அருகு சார்ந்துற்ற பகுதி குறிஞ்சியும் முல்லையும் இயல்பிற்றிரிந்து தோன்றுகின்றமையின் பாலை எனவும் கூறப்பெறும் பொருத்தமுற்றிலங்குகிறது. மற்றும் அகமியத்துள்ளும் அவ்வாறே அமையப் பெற்றுள்ளதாமென்க. நிலம் திணை(ஒழுக்கம்) பொழுது மற்றும் யாவற்றையும் உலகியல் இன்பத்தினைச் (சிற்றின்ப நுகர்வினை) சார்ந்து பண்டைப் புலவர்கள் இலக்கியம் இயற்றியுள்ளனர்.

உரிப்பொருள் தோன்ற ஓரைந்திணையும்
தெரிப்பது ஐந்திணைச் செய்யுள் ஆகும்
- இலக்கண விளக்கம் 849
ஐந்திணைச் செய்யுளே அறையும் இடத்துப்
புணர்தல் முதலிய ஐயுரிப் பொருளும்
விளங்க ஐந்திணையின் விளம்புதல் என்ப
- பிரபந்த தீபம் 22
புணர்தன் முதலிய ஐந்துரிப் பொருளும்
அணிபெறக் குறிஞ்சி முதலிய வைந்திணை
இணையு மியம்புவ தைந்திணைப் பாவே
- முத்துவீரியம் 1043
வருபுணர்தல் முதலைந்துரிப்பொருள் பிரகாசிக்க
வரையாதி யையைந்திணை
வகுத்துச் சிறப்பித்தலைந்திணைச் செயுள் வெள்ளை
வஞ்சிகலி வணமகவலே
- பிரபந்த தீபிகை 8 

ஆயின் பரமாத்ம சொரூபராகிய எம்பெருமானைத் தலைவராகவும், ஜீவாத்மாவாகிய என்னை (எம்மனோரை)த் தலைவியாகவும் பாவித்து பேரின்ப சித்திப் பெருவாழ்வை அடிப்படையாகக் கொண்டு இயற்றப் பெறுவது இவ்விலக்கியம் ஆகும்.

மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்

காப்பு

நேரிசை வெண்பா

ஐந்திணை பாட அகம்விழையும் இவ்வெளிய
மைந்தனின் உள்ளிருந்து ஊக்குமினோ - மொய்ம்புகழ்சேர்
தேவே உமதுபதம் சீரடியே னின்சிரமேல்
ஒவா(து) அணிய அருள்.

குறிஞ்சி

புணர்தல் (இறைவருடன் இணைதல்) புணர்தல் நிமித்தம் (இணைதல் சார்பின்) காரணம் உடையது.

பாங்கி வரைவு (திருமணம்) வேண்டி தலைவரிடம் மொழிதல்

தண்ணாரும் கற்பகப்பூந் தென்றல் உலாவரும்சீர்
விண்ணாரும் ஊறல் மலைநாட - ஒண்டொடியாள்
நின்பதம்சேர் நன்மணம்கொள் வண்ணமிகு எண்ணத்தாள்
பொன்பதுமை ஆற்றாள் இனி. (1)

பாங்கி தலைவியிடம் அறிவுறுத்தல்

நறுமணமார் செண்பகப்பூ வாசமொளிர் மேனி
உறுதலைவர் ஊறல்மலை நாடர் - பெரும்பரிசாய்
பொன்னரங்கர் நின்னைமணந் தின்புறுதல் வேண்டி
நன்னயமாய் ஏற்பார் நயந்து. (2)

தலைவி தன்னுள்ளே எண்ணுதல்

வண்டாரும் மல்லிகை மணம்கமழும் தாரணிந்த
விண்டோயும் மேரு மலைநாடர் - தொண்டாரும்
மெல்லியலெ னைக்கலந்து நல்லறம்செய் நாட்டத்தார்
இல்லறம்யான் செய்வேன் இனிது. (3)

தலைவர் உரை

மாமுனிவோர் மாதவம்செய் மாமலைவாழ்ந் தேயிலங்கும்
தேமொழியாள் தேவத் திருநாட்டில் - பூமணம்சார்
உத்யோ வனத்தங்கே ஓங்கிவளர் காதலினால்
ஒத்துமணம் கொள்வேன் உவந்து. (4)

பாங்கி தலைவிக்கு நம்பிக்கை ஊட்டல்

அருவிமலை கொழிக்கும் ஆரமுது ஊறல்
பெருகுமெழில் பொன்னாட்டு மன்னர் - திருவிளங்கு
சேயிழையாள் நின்னைமணந் தின்பமுற வேட்டார்காண்
ஆயிழைநீ ஆறுதல் கொண்மின். (5)

தலைவி உரை

பொன்னார் மலர்வேங்கைப் புன்குபொலி கானகம்சேர்
மன்னர் வளநாடர் வேல்வேந்தர் - மின்னெழில்யான்
பொன்மாது என்பதால் நன்மணியர் என்னை மணந்(து)|r}}
இன்புறவே வேட்டார் இனிது. (6)

பாங்கி தலைவர்க்கு அறிவுறுத்தல்

மான்மரைகள் துள்ளும் மயில்நடஞ்செய் கோகிலமும்
தான்கூவும் கானகத்துக் கோவலரை - மானனையாள்
பூநேர் விழியழகி பொன்னரங்க ரைமணம்கொள்
தானே விழைந்தாள் தனித்து. (7)

பாங்கி தலைவிக்கு உறுதிகூறல்

கலைமான்கள் ஓடும் மயில்நடஞ்செய் கோகிலமும்
சிலைஓசை ஆர்க்கும் திருநாடர் - அலைமகள்போன்ம்
பொன்மணியே நின்விழைவால் அன்புவளர் நற்றுணைவர்
ஒண்மணம்ஆர்த் தோங்கும் அறி. (8)

மணிகொழிக்கும் கான்யாற்றான் யாறு மாவளஞ்சேர் நாடர்
அணிதிகழும் ஆரணங்கை ஆர்ந்து - அணிவிளக்கை
நீதித் திருமணம்கொள் ஆதி முழுமுதல்வர்
நாதர்பொற் பாதம் பணி. (9)

பாங்கி தலைவர்க்கு வேண்டுகோள் செய்தல்

திணைப்புனத்தே அஞ்சுகங்கள் செங்கதிர்கள் கொய்யும்
வினைமலசர் தேனடைகள் சேர்க்கும் - புனல் நாட
கனிமொழியாள் நின்னைமணந் தில்லறம்செய் நெஞ்சம்
தனிகொண்டாள் நன்றே அறி. (10)

முல்லை

ஆற்றி இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

தலைவர் என்று வருவார்?

கார்குலம் கண்டு களிமயில்கள் தாம்நடம்செய்
சீர்எழில் கொன்றை மலர்ந்தனகாண் - கார்காலம்
என்று அறியாரோ நம்தலைவர் இன்னல்தவிர்க்(க)|r}}
என்று வருங்கொல் உரை. (11)

அலைகின்ற உளம்

கொன்றைமுல் லைமலர்ந்து கொண்டல்கள் ஆர்ப்பவும்
நன்றேஅக் கார்காலம் வந்ததுகாண் - சென்ற
தலைவர்பே ரின்பமருள் சிந்தைசிறி தில்லார்
அலைகின்ற தென்றன் உளம். (12)

காத்தார் கடமை

காத்தல் தலைவர் கடமையென்று தானுணரார்
நீத்துச்செல் தன்மை நியாயமோ - பூத்தெழிலார்
கான்மலர்கள் வாசம்என் கண்ணாளர் பாற்சென்று
ஏனுரைக்க வில்லை நிலை? (13)

நீதம் அறியாரோ?

கோவலர் கொன்றைக் குழலூதி ஆமேய்ப்ப
மேவும்கார் மேகங்கள் மின்னார்ப்ப - ஆவல்மிகு
பேதையிங் குள்ளாளென் றெண்ணாரோ வான்தலைவர்
நீதம் அறியார்கொல் நெஞ்சே! (14)

குணமறிய மாட்டாரோ?

நின்றயிடம் அன்பால் நெகிழ்ந்தவிடம் கையிணைந்து
சென்றயிடம் எல்லாம்கண் டேங்குகின்றேன் - மன்றில்
மணம்புரிந்த மாதவர்தான் மாதென்றன் ஏங்கும்
குணமறிய மாட்டாரோ கூறு! (15)

கார்காலம் வந்ததை உணராரோ?

சாலைநக ராபோல் இடிமுழங்கி வான்பெய்ய
கோலமயில் ஆடமுல்லை தான்மலர - வேலேந்தும்
சீலமிகு நற்றலைவர் காணார்கொல் கார்காலம்
ஞாலமிசை நண்ணிய தென்று. (16)

ஆசீர்பதிக்க

என்னுயிரைக் கார்காலம் வந்ததறி யார்கொல்
பொன்னரங்க நாயகரும் பூதலத்தே - மின்னி
இடிமுழக்கி விண்பொழிநாள் என்துயரம் தீர
அடிவழங்கி ஆசீர் பதிக்க. (17)

தென்னாடு வந்ந சிவம்

மன்னா உலகத்து மன்னும்பே ரின்பமருள்
மன்னாதி மன்னரிங்கு வாராரோ - பொன்னரங்கர்
என்னுயிரில் இன்பக் களிநடம்செய் தின்பமருள்
தென்னாடு வந்ந சிவம். (18)

தூது உரைமின்

சிவகாமி என்றன் துயரம் அறியார்
தவமேரு தன்னே ரிலாதார் - புவனத்தே
கார்காலம் காதலியைச் சேர்காலம் என்றினிது
கார்முகில்காள் தூதுரைமின் கள். (19)

உயிர் தளிர்க்க மழை பொழிக

வாடும் பயிர்தளிர்க்க வான்பொழியும் தன்மைபோல்
தேடும் உயிர்தளிர்க்க வம்மின்கள் - கூடும்
திருநாளை எண்ணியெண்ணிச் சிந்தை நெகிழும்
ஒருபேதை இங்ஙுற்றாள் என்று. {{Pline|(20

மருதம்

ஊடலும் ஊடல் நிமித்தமும்

தலைவி கூற்று

நீரில் நெருப்பலர்ந்தாற் போலும்செந் தாமரைபூந்
தார்பூண் மருதநிலத் தார்தலைவர் - தேரூர்ந்து
என்பால்ஊ டல்கொண்டு ஏகினார் எண்ணியெண்ணி
என்தூங்கும் என்கண் இனி. (21)

தலைவர் கன்மனம் உடையவர் சொல்

தேனார்ந்து வண்டேகும் தன்மைபோல் என்றலைவர்
வானோர் எனையூடிச் சென்றார்காண் - பூநேர்
மென்மனத்தாள் எங்ஙன் சகிப்பேனோ அன்னவர்தான்
கன்மனத்தர் ஆனாரோ கூறு (22)

பிரிவாற்றாமை

சீலத்தார் சிந்தையினின் றென்றுமக லாரெனினும்
தூலத்தே ஊடலொடு சென்றார்காண் - கோல
வடிவழகைக் காணாத கண்ணென்ன கண்ணோ
பொடிகிறதென் நெஞ்சம் பிரிந்து (23)

உள்ளம் தேரின்பின் சென்றதே

தண்ணென்செஞ் சாலிவயல் சூழ்மருதத் தின்தலைவர்
எண்ணம் எங்ஙன்ஊடி ஏகியதோ - கண்ணின் நீர்
நில்லாது மன்னோ நெகிழ்ந்துருகிப் பேதையுளம்
செல்லும் அவர்தேர்ப்பின் னே (24)

நெஞ்சம் நொறுக்குண்டதே

வாளைபாய் பைங்கூழ் வயலூரார் ஊடினர்காண்
நாளோர் யுகமாயிற் றென்செய்வேன் - வாளாய்
அறுக்கின்ற தவ்வூடல் அந்தோஎன் நெஞ்சம்
நொறுக்குண்ட தெங்ஙன் உயும்? (25)

காட்சியை எங்ஙனம் மறக்கலாகும்?

அருளார் திருநோக்கும் ஆரமுதத் தேனார்
திருமொழியும் செண்பகமார் மேனி - பெருகுமெழில்
சிங்க நடையழகும் சீரோங்கு காட்சியெலாம்
எங்ஙன் மறக்கும் இனி. (26)

காட்சியை எங்கே காண்பது?

விழிநோக் கரவணைத்து விண்ணமுதம் விஞ்சும்
மொழியால் உயிர்களிக்கச் செய்யும் - எழிலாரும்
துங்கத் திருமணியர் பொங்கும் வடிவழகை
எங்கேகா ணும்என் விழி? (27)

பிறவிப் பயன்

காணாத காட்சியெலாம் காணுவித்து மாவரங்கள்
பூணார மெல்லாமும் பூணுவித்த - மாணெழிலார்
தென்னன் பெருந்துறையார் சீர்மேனி காண்கிலமேல்
என்னாம் பிறவிப் பயன்? (28)

உயிர்க் கின்பம்

உயிர்க்கின்பம் நல்கும் அயில்வேல்செங் கையர்
செயிர்தீர் திருக்காட்சிக் கீடில் - தயாநிதியர்
பேரெழிலைக் காணார் பிறந்தும் பிறவாதார்
நேர்நிகரில் என்தலைவர் காண். (29)

நற்பாக்கியம்

பிறவிப் பயன்வழங்கும் பேர்வள்ளல் எம்மான்
அறவாழி மெய்வழிதெய் வம்காண் - துறவோர்
பணியும்பொற் றாள்மலர்காண் அடிமைச் சிரமேல்
அணியும்நற் பாக்(கி)யம் அறி. (30)

நெய்தல்

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

காட்சி

கோங்கும்நெய் தல்மலர்ந்து தண்ணென் பொழிலாரும்
பூங்காவிற் போதருங்கால் தேரூர்ந்து - ஆங்கெழிலார்
காந்தருவர் போதந்தார் கண்ணகத்தே தான்புக்கு
ஏந்திழையெ னைக்கவர்ந்தார் காண். (31)

தலைவிக்குத் தலைவர் கையுறை வழங்கல்

கண்டவுடன் நெஞ்சிற் கழிபே ருவகையுற்றேன்
விண்டென் உணர்வையெங்ஙன் விள்ளுவேன் - வண்டார்தார்
தானணிந்த தானவரும் கோங்கமலர் தான்பறித்து
மானெனக்குத் தந்தார் மகிழ்ந்து. (32)

தலைவர் உரை

தெண்டிரைகள் ஆர்கடல்சார் தேம்பொழிலில் நின்றயிவள்
வண்டார் மலரணிந்த வான்மதிகாண் - கண்டற்றே
என்னிதய மாளிகையுள் புக்காள் இனிப்பிரியாள்
கன்னியிவள் பின்செல் மனம் (33)

தலைவியின் அழகை வியத்தல்

ஆய்கடலில் முத்துவிளை வுண்டாமால் ஆய்தொடியாள்
வாய்மடலில் முத்துவிளைந் துற்றனகாண் - சேயிழையாள்
சங்குக் கழுத்துடையாள் பொங்கும் உயிர்க்கினியாள்
திங்கள் வதனச் சிலை (34)

தலைவர் பிரிந்து ஏகும்போது தலைவியின்நிலை

தேரூர்ந்து என்னுயிரின் சீர்தலைவர் செல்வழியே
ஆர்ந்தூர்ந்து என்னியதம் ஏகியதே - பேரூரர்
தம்மை நினைந்தலைபோல் சிந்தை அலைகிறதே
இம்மைப் பயன்இணைவ தாம். (35)

வரைவு(திருமணம்) செய்வேட்கை

நெய்தல் மலர்சூடி நேரிழையாள் என்னிதயம்
கொய்தாள் குலக்கொழுந்து கோதில்லாள் - எய்தற்(கு)
அரிது இவள்காதல் ஆர்மணம்கொள் வேட்கை
பெரிதுகாண் என்னுயிரில் காண் (36)

தலைவி கடலலைகளை நோக்கி வினாதல்

யார்காதல் உற்றீர் கடலலைகாள் யானிங்கு
பேர்காதல் கொண்டாற்போ லேயலையும் - சீராளர்
என்தலைவர் ஈங்குற்றார் நன்மணம்கொள் ளென்றினிது
நின்மொழியால் நன்குரைமின் நன்று. (37)

தலைவி தென்றலைத் தூது விடல்

கடல் தழுவி நெய்தல் மணம்தழுவி தாழை
மடல்தழுவு மென்தென்றல் காற்றே - அடலேறு
என்தலைவர் கண்டு எனதுயிருள் விண்டே
நன்மணம்கொள் நாட்டம் நயந்து (38)

தலைவர் வரைவு உரைத்தல்

முத்தும்சங் கம்செறிந்த மென்மணம்நெய் தல்தலத்தே
சித்தம் கனிந்ததகைச் சேயிழையை - உத்தமர்தான்
காந்தருவ மார்மணம்கொள் ளும்என்று காரிகைக்கு
ஆர்ந்திருவென் றன்பாய் உரை. (39)

வரைவு (திருமணம்) நிகழ்தல்

எக்காளம் துந்துமிகள் ஏரார் மணியொலிக்க
தக்க நகரா நனிமுழங்க - சொக்கேசர்
பொன்னரங்க நாயகர்தான் பெண்மான் இளங்கலையை
நன்மணம் கொண்டார் நயந்து . (40)

பாலை

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

மகள் உடன்போக்குத்துறை மேற்கொண்டாளென நற்றாய் அரற்றல்

கொல்புலியா னைக்கூட்டம் கான்மாவும் கான்கோழி
வால்லாற லைக்கள்வர் வாழ்கானில் - மெல்லியலாள்
என்மகளைத் தானழைத்து ஏகினார் அத்தலைவர்
நன்மகள்எங் ஙன்தாங்கும் சொல். (41)

தலைவர் வல்லவர் எனினும் தலைவி மெல்லிய லன்றே?

முள்மரங்கள் வன்கரடி மிக்கிடர்செய் கானகத்தே
கள்வர்போல் என்மகளைக் கொண்டேகும் - தெள்ளியர் தாம்
ஆற்றல்மிக் காரெனினும் ஆற்றாளே என்செல்வி
ஏற்றாளேன் துன்ப நெறி? (43)

நல்லவர் தலைவரென்று எப்படி நம்பினாள்?

கடத்தற் கரியசுரம் தன்னில்என் கண்ணாள்
திடத்தநற் சிந்தையொடு சென்றாள் - திடமிகுந்தாள்
நற்றுணைவர் என்றுநம்பி நன்கேகும் துன்பியலை
என்னேதாங் கும்என் கிளி. (44)

அஞ்சாது கானகத்தே ஆரணங்கு அன்னவரோ(டு)

எஞ்சாது செல்கின்றாள் என்னாமோ - வஞ்சம்
அறியாத பேதைஎன் அஞ்சுகத்தை அன்பாம்
நெறிகூட்டிச் சென்றால் சரி. (45)

பாங்கி நற்றாய்க்கு ஆறுதல் கூறுதல்

நற்றாய் கவலலொழி நின்மகளின் நற்றலைவர்
கொற்றவர்காண் கூற்றைவெலும் ஆற்றலினர் - சற்றெதற்கும்
அஞ்சாத ஆண்மையர்பால் அன்புகொண்டான் அன்னைநின்
நெஞ்சமே அஞ்சா திரு. (46)

சென்ற கானகமே உத்தியோவன சித்திகானகம்

கானகமென் றேயதனை எண்ணாதே நற்றாயே
வானவருத் யோவனமாம் அஃதறிவாய் - தேனகத்தார்
வேணதெலாம் தந்தருளி மெல்லியட்கு மாணணிகள்
பூணுவிப்பார் துன்பம் ஒழி (47)

தலைவர் பாரவான் என்று கூறுதல்

அன்புகனி அஞ்சுகத்தை அத்தலைவர் ஏற்றதுதான்
இன்பமிகு பாக்கியமென் றெண்ணுமினோ - தென்பருளிச்
சீரெல்லாம் தந்து திருவிளங்ஙக் காத்தருளும்
பாரவான் பாங்கரசர் காண். (48)

அக் கானகத்தே ஆகாய கங்ஙை உளது

நீரில்லாக் கானகமென் றெண்ணாதே அன்னாய்கேள்
பேரில்லார் ஆயிரமாம் பேருடையார் - கார்க்கும் தீ
கைகொண்டார் ஆகாய கங்கைதனில் தாகம்தீர்
மெய்கண்டார் அத்தலைவர் தான். (49)

தலைவர் மூவா முதல்வர்

முப்பத்து முக்கோடி தேவர்களும் மூவர்களும்
செப்பொத்த மேனியரைச் சேவிக்கும் - ஒப்பில்லார்
தேவாதி தேவரவர் செல்லமக ளையேற்றார்
மூவா முதல்வரெனத் தேர். (50)

தலைவியைப் பொன்போற் பொதித்து காப்பார்

காலங்கள் எல்லாம் கடந்திட்ட காருண்யர்
சீலர் தவத்தரசர் தென்னாடர் - கோலமிக
நின்மகளை ஏற்ற அவர் நீடூழி வாழவைப்பார்
பொன்போற் பொதிந்துகொள்வர் போற்று. (51)

மெய்யூர் ஐந்திணைச் செய்யுள் இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!