உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/022.திருவூர் வெண்பா

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.22. ஊர் வெண்பா

[தொகு]

இலக்கணம்:-

சீரார் பெரும் புகழுடைய நல்லூர் ஒன்றின் சிறப்பெல்லாம் தெளிவுற எடுத்துரைக்கும் பாடற்பொருண்மையில் வெண்பா யாப்பினால் பாடப் பெற்றதால் ஊர் வெண்பா எனப் பெயர் பெறுவதாயிற்று.

ஊனமில் வெள்ளைபத் தூர் வெண்பா
வாக வுரைப்பார்களே 
- நவநீதப் பாட்டியல் 41
வெண்பா வாற்சிறப் பித்தூ ரொருபான்
பாவிரித் துரைப்பதூர் வெண்பா வாகும்
- முத்துவீரியம் -1096
வெண்பாவி னாலூர் சிறக்கவீ ரைந்துசெயுள்
விள்ளுமூர் வெண்பாவதாம் 
- முத்து வீரியம் 1096

தென் திசையின் கயிலாயம் என்று தீர்க்க தரிசிமார்களால் கண்டு விண்டெழுதப்பெற்ற, கர்த்தாதி கர்த்தர் பிரம்மப் பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்களால் நிர்மாணிக்கப்பெற்ற மெய்குண்டம் என்னும் மெய்வழிச் சாலை குருஷேத்திரத்தைப் பற்றி புகழ்ந்து இன்னிசை சிந்தியல் வெண்பாவால் பாடப்பெற்றது இப்பனுவல்.

திருவூர் வெண்பா

இன்னிசைச் சிந்தியல் வெண்பா

காப்பு

சீராரும் தெய்வமணி ஆர்புகழைப் போற்றியே
ஊர்வெண்பா பாட உவந்தேனால் நற்சிரமார்
தார்புனைந்தார் தாள்மலர்கள் காப்பு

நூல்

வரதர் பரமதனின் மாண்புரைக்கப் போந்தார்
பரதபுரி என்று பகரலாம் சாவா
வரந்தருவார் வள்ளல் பிரான். (1)

பயங்கொண்டார் பாரோர் எமன்படரை எண்ணி
அயன்அரன்மால் ஒருருவாம் ஆண்டவரைச் சார்ந்து
ஜெயங்கொண்டம் என்றினிது செப்பு. (2)

தேஜோ மயம்கொண்ட ராஜநிலைக் கேற்றிவைத்த
ராஜாதி ராஜரெங்கள் நாயகர்வாழ் அவ்விடத்தை
ராஜஸ்தான் என்றே நவில். (3)

அத்தீ அறிவித்து முத்தி வழங்கியருள்
சித்தி அளிக்குமெங்கள் தெய்வபிரான் சாலைதனை
அத்திபுரம் என்றழைக்க லாம். (4)

குருபரர்வந் திந்தஎழிற் சேத்திரத்தில் ஆண்டு
அருட்பிர வாகம் பொழிதலால் இஃதை
குருச்சேத்ரம் என்றினிது கூறு. (5)

வையக மாந்தர்தம் வாழ்வினில் வந்தினிது
மெய்விடியும் மெய்த்திருப்பம் மேவியதால் இவ்வூரை
மெய்த்திருப்பத் தூரென்று சொல். (6)

சித்தர் தலைவரெங்கோன் சிந்தை இரங்கியருள்
புத்தமுதம் ஈந்து புரந்தருள்செய் பாக்கியத்தால்
சித்தூரென் றிவ்வூரைச் சொல். (7)

தேர்ந்து தெளிந்தறிந்து தெய்வீக மெய்யுணர்ந்து
ஆர்ந்து அறவாழி அம்புயத்தாள் பற்றுவதான்
தேரூர்இஃ தென்றே தெளி. (8)

குருமணியின் பேர்தயவால் கொள்ஞான கர்ப்பம்
அருட்தங்கி வான்மறைகள் ஈதலால் இஃது
கருவூரென் றேயினிது கூறு. (9)

பேரின்ப சித்திப் பெருவாழ்வை ஈந்தருள
நேர்நிகரில் ஞானமதி நன்றாய் செழித்துவளர்
சீரூர் எனவிதனைச் செப்பு. (10)

பாராதி அண்டம் படைத்துப் பரஞானம்
சீராகத் தந்தருளும் சீர்மையதால் இப்பதியைப்
பாரூர் எனப்பகர லாம். (11)

தேவாதி தேவன் திருவுருக்கொண் டீங்குற்று
தேவர்களை ஈன்றெடுத்து வாழ்விக்கும் நற்செயலால்
தேவூர்என் றேயினிது செப்பு. (12)

அரங்கர்வந் தாருயிர்க்கு அற்புதம்செய் தாரனந்தர்
சிரமாலை தான்புனைந்த தெய்வமெய்ச் சாலை
அரங்ஙனூர் என்றழைப்பர் காண். (13)

மெய்சார்ந்த மாந்தர் மேலாம் பதம்பெறவே
ஐயர் திருவுள்ளம் ஆரருள்செய் சீர்சாலை
மெய்யூர் எனக்கூற லாம். (14)

அருளரசர் மெய்வழியை அம்புவியில் நாட்டி
பெருவரங்கள் நல்கும் பெருந்தயவால் பொன்னரங்கம்
அருட்பதியென் றார்ந்துரைக்க லாம். (15)

திருவரங்கத் தேவர்பெற ஆர்மறைகள் தாம்துலங்க
குருமணியாம் கோமகனார் தாமிலங்கு இந்நகரை
திருநகரம் என்றுபுகல் வாம். (16)

குருபகவான் பொன்வாய் மலர்மலர்ந்து கோதில்
அருள்ஞான பாக்கியங்கள் ஆர்ந்தளித்தார் தெய்வக்
குருவாயூர் என்றிதனைக் கூறு. (17)

நேமிசார் நல்லிடத்தே மாமுனிவர் கூடுவர்காண்
தூமெய் வழியனந்தர் மாமுனிவோர் ஆதலினால்
நைமிசா ரண்யமென நாட்டு. (18)

சீலர் அனந்தாதி தேவர் குருகொண்டல்
கோலம் திகழ்தெய்வம் ஈங்குறலால் இஃது
மூலத்தா னம்காண் மொழி. (19)

காந்தம் கவர்வதுபோல் கண்ணியத்தா ரார்வமுடன்
ஆர்ந்தீங்கு ஆண்டவர்தாள் அண்டிப் பணிந்துறலால்
காந்தாரம் சாலை அறி. (20)

கோவே குலதெய்வ தேவேசர் கொற்றவரும்
மூவா முதல்வர் முனிக்கரசர் ஆள்பதியால்
கோவூர் இஃதென்றே குறி. (21)

குமரர் தனிகைமணி கண்டமுத்துப் பேழை
அமரர் பதியங்கோன் ஆண்டவர்கள் சாலை
அமரா பதியென்று சொல். (22)

பரனே தவம்புரிந்து சன்னதம்பல் ஏற்றார்
அரனீங் கனந்தர்குலம் உற்பவித்து ஆண்ட
பரங்கிரி என்றே பகர். (23)

அணிவிளங்க அற்புதமெய்ஞ் ஞானம் துலங்க
மணிதுலங்க மாற்றிப் பிறப்பித்த மெய்யூர்
மணியனூர் என்னும்பே ரூர். (24)

காலனை வென்றொழித்து காலம் கடந்தாதி
மூலமாய் நின்ற முழுமுதல்வர் வாழ்பதியை
மூலனூர் என்றே மொழி. (25)

எல்லாம்வல் லாரென்னும் எம்பெருமான் ஆண்டவரை
நல்லார் பணிந்துய்ந்து நன்குவதி நற்பதியை
நல்லூர்என் றேநவில லாம். (26)

நன்றுடையார் ஆண்டவர்கள் நற்கயிலை மாமேருக்
குன்றுடையார் கோலம்கண் டுய்ந்நோர்கள் வாழ்பதியைக்
குன்றத்தூர் என்றினிது கூவு. (27)

கள்ளம் இலார்நெஞ்சை அள்ளும் குருவினருள்
வெள்ளம் அனந்தருள்ளில் தேக்குறலால் இந்நல்லூர்
பள்ளத்தூர் என்றே பகர். (28)

வயல்சார் வளநகரம் வானாடர் சாலை
இயல்மெய் குண்டமெனும் ஏர்பதியைச் சீரார்
வயலூரென் றேவழங்க லாம். (29)

வண்ணமணிக் கண்ணபிரான் வில்விஜயர்க் கேஞானக்
கண்ணளித்து விஸ்வமதைக் காட்டியபோல் காட்டியதால்
கண்ணனூர் என்றேகழற லாம். (30)

குருமங்க லம்கொண்டு கூற்றினின்று
திருஅனந்தர் என்னும் திருக்குலத்தோர் வாழும்
பெருமங்க லம்எனவே பேசு. (31)

பொங்கிவரும் ஆகாய கங்கைப் பிரவாகம்
சங்காமற் பாய்ந்தனந்தர் சாவாமற் காத்தலால்
பொங்கலூர் என்றினிது போற்று. (32)

திருக்காட்டி ஞானத் தெளிவூட்டி எல்லார்க்
கருட்காட்டி அன்புடையோர் உய்யச் செயலால்
திருக்காட்டுப் பள்ளியெனச் செப்பு. (33)

அரியயன்மால் ஒருருவாய் அம்புவியிற் போந்து
தெரியவருள் ஞானத் தெளிவூட்டும் இவ்வூர்
அரியனூர் என்றுரைப்பர் காண். (34)

வேல்கொண்டு வெம்மறலி வீயவருள் வாணர்பொற்
கால்கண்டு உய்ந்தார் கனியனந்தர் ஆதலால்
வேலூர் எனவே விளம்பு. (35)

நேரியர்தம் நெஞ்சில் நிலைகொள்ளும் என்சாமி
ஆரியர்வந் தாட்கொண்டு அன்பருளை ஈதலால்
ஆரியூர் என்றே அறி. (36)

செல்லாத மேனிலையில் செல்ல வழிகூட்டி
எல்லார்க்கும் எல்லாம்செய் வல்லார் திருஆணை
செல்லூர் இதுஎன்றே சொல். (37)

கூடாரை வென்றனைவர் கூடிக் குலவியிங்கு
வாடாது வாழ்ந்திடச்செய் வல்லார்கள் கூடுபதி
கூடலூர் என்றினிது கூவு. (38)

திங்கள் திருவதனர் எங்கள் குலதெய்வம்
மங்கா மணிவிளக்கு மாதேவர் இங்குறலால்
திங்களூர் என்றிதனைச் சொல். (39)

அருள்கனிந்து ஆருயிர்காத் தன்பரெல்லாம் உய்யத்
திருவருள்செய் தெய்வத் திருப்பதிகாண் இஃது
திருவியலூர் என்றினிது செப்பு. (40)

திருவூர் வெண்பா இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!