திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/078.குரு திருவடி எழில் மணிமுடி

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.78.பாதாதி கேசம் [தொகு]

இலக்கணம்:-

பாதாதி கேசம் என்னும் இவ்விலக்கியம் பாட்டுடைத் தலைவரின் (அ) பாட்டுடைத் தலைவியின் அருள்திரு மேனியின் திரு அங்கங்களின் ஆரெழிலைத் திருப்பாதம் முதலாக திருமுடி வரை போற்றிப் புகழ்ந்துரைக்கும் ஆற்றான் இயன்றது

ஐதுவீழ் இகுபெயல் அழகுகொண் டருளி
நெய்கனிந் திருளிய கதுப்பிற் கதுப்பென
மணிவயிற் கலாபம் பரப்பிப் பலவுடன்
மயில் மயிற்குளிக்கும் சாயல் சாஅய்    
...............................................
குல்லையம் புறவிற் குவிமுகை அவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின் மெல்லியல் 
- சிறுபாணாற்றுப்படை-பாடலடிகள் 13-31.

என் தெய்வத்தாய் ஆதிபராபரை பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களாகிய மகத்தான சக்தியுடைய மார்க்கக்காரியின் பாதாதி கேச வருணனை இப்பனுவல்.

குரு திருவடி எழில் மணிமுடி

காப்பு

கலி விருத்தம்

மாதா வும்பிதா வும்குரு தெய்வமும்
தாதா தாங்களே தங்கள் திருஎழில்
பாதா திகேசம் பாட வரமருள்
போதா பொற்பத மேஎன்றும் காப்பதாம்

நூல்

திருமலரடி

கலித்தாழிசை

திருமிகு கமலமலர் திருவடி எனஇனிதே
பெருகிடு வரமருளப் பொலிகிற தழகொளிர
உருகிடத் தரிசனைசெய் உயிர்ப்பிணி தவிர்ந்திடுமே
கருகிடும் பவவினைகள் அருளுமெய் வழியிறையே (1)

இறைவிநின் இணையடியே பரவினர் உயர்வுறுமே
மறைகளின் தாயகமே மணியணி மலர்ப்பதமே
பிறவியின் கடல்கடக்கப் பெரும்புனை எழிலடியே
உறைவது எனதுயிர்தான் உயர்திரு வடிநிழலே (2)

திருநகம்

இறைதிருப் பதநகமே எழில்ஒளிர் மணியதுவே
குறைதவிர் ஒருவழியே கொழும்பவ ளம்திகழும்
நிறையழ இலங்கிடுமே நிமலரின் நகதளமே
மறைமுதல் வரின்எழிலை வரைவது எளிதளவே (3)

திருவடி அணிகள்

எளிதுகொல் பதஅணிகள் இலகிடு சிறப்பினையே
அளிமிகு அரனடியை அலங்கரித் ததன்பொலிவே
தெளிவுயர்ந் தவைமிகவே ஒளிர்சிறப் படைந்தனவே
களிசொலும் அழகினவே கழலிணை அணிந்ததனால் (4)

திருத்தாள் முழிகள்

இருஎழில் முழிகளுமே பொற்குமிழ் அனையனவே
பெரும்அழ கிலங்கினவே பதந்தனில் அமைந்தனவே
குருபத முளரிகளைப் பணிபவர் பவப்பிணிகள்
வெருவியங் கிரிந்தனவே வினைகளும் மடிந்தனவே (5)

திருமுன்தாள்

சுவர்ணம துருக்கினிதே வடித்தன போல்வனவே
தவத்திரு இறைவியுயர் திருமுனர் விளங்கிடுமே
உவப்புயர் முன்னடியே ஒளிர்ந்தன மிளிர்ந்தனவே
கவின்மிகு தவக்கன்னியே பதின்வய துடையவளே (6)

திரு இடை

படிமிசை எனைவளர்ப்பாள் பரையவள் இடையதுவே
துடியென விளங்கினவே தொடியணிந் திலங்கினவே
வடிவுடை திருமகளார் தவமுயர் பெருமகள்காண்
கொடியிடைக் கோமதித்தாய் குலம்வளர் அன்னையிவள் (7)

திருவுதரம்

எழில்மிகு திருவுதரம் இயல்திரு உந்தியதே
சுழிகுளம் ஒத்ததுவே திருமிக நிறைந்ததுவே
கொழித்தது அழகனைத்தும் கோதறு கோமகளார்
பொழில்வளர் பூங்கொடியாள் பொன்னரங் கம்மையிவள் (8)

திருக்கழுத்து

குலம்செழித் திடவருளும் குலமணி பரையவளே
நலந்திகழ் மிடறதுவே வலம்புரிச் சங்கதுவே
வலம்திகழ் அணிகலனார் மாதுநின் திருக்கழுத்தே
பலந்தரு அமுதுவிளை பெருகிடுத் தலமிதுவே (9)

திருமுகம்

திருமுக மண்டலமே அருள்நிறை மதியெழிலே
ஒருதிரு தரிசனையால் இருவினை தவிர்ந்திடுமே
குருமணி முழுமதியே கண்மணி நாயகியே
பெருகெழில் திருமுகமே பேசறும் பெரும்பொருளே (10)

திருவாய்

முருக்கிதழ் அதன்நிறமோ மென்கொவ் வைக்கனியோ
திருப்பவ ழச்செவ்வாய் திகழெழில் உரைவரையோ
அருள்மொழி மலர்திருவாய் அதரம்செங் கதிர்நிறமோ
அருண்மணி எனும்அன்னாய் அற்புத மறைபொழிவாய் (11)

திருப்பல்

செம்மா துளைக்கனியோ சீர்திகழ் முத்தாரம்
அம்மா நின்திருவாய் அழகொளிர் வரிசையது
கைம்மா தந்தமதின் கலையெழில் சிற்பமதோ
எம்மா ருயிர்களிகொள் இளநகை பிறங்கெழிலோ (12)

திரு நா

செந்தா மரைமலரால் செப்பம்செய் திருநாவோ
சிந்தா குலம்தவிர திருவாய் மொழிபொழியும்
பைந்தார் துளபமணி பைங்கிள்ளை என்தாயே
விந்தை மெய்ஞ்ஞானம் வழங்கும் கொடையரசி (13)

திருவாய்

திருவாய் மலர்ந்ததனால் செகமனைத்தும் மெய்ம்மலர்ந்து
திருவேத மாகமங்கள் யாவும் பொலிந்தனவால்
அருள்வாய் திருந்தகிலம் அண்டமெலாம் காட்டினையால்
தருமத்தாய் தங்கள் தாள்சிரமேல் சூடினமே (14)

திருநாசி

இமிழ்கடல் வரைபுவி தனில்வரு ஏந்திழையே
குமிழெனும் நாசிமிகு அழகது வடிவுடையாய்
கமழ்திரு வாசியள் ளின்மலர் போல்வதுவே
அமைந்தது மூச்சடங்கும் நிலையத மைந்ததுவே (15)

திருக்கண்கள்

கமலம லரெனும் குவளையென் றும்உரை
எமையரு ளொளியதால் அணைதிரு விழியது
இமைப்பிலா இருதிரு அழகொளிர் நயனமே
உமையவ ளெனும்என் அன்னைநின் திருக்கண்களே (16)

கருணைகொள் தலமது வினைதவிர் நோக்குடை
அருணனின் ஒளியதும் நாணுற ஒளிர்வது
குருமணி திருமகள் கருவிழி அருள்நிதி
ஒருதிரு நோக்கினால் புரமெரி திறத்தது (17)

அருள்பொழி மழையென தயைவளர் ஒளிதிகழ்
திருமலர் நயனம திணையிலா அழகின
ஒருதனித் தலைவிநின் குளிர்திருப் பார்வையால்
இருவினை மும்மலம் இரிந்திடும் அம்மையே (18)

திருப் புருவங்கள்

கோளரி வாளெனும் திருப்புரு வங்களே
தூளென வினைகளை நீக்குநன் நோக்கின
வாள்விழி மேல்விளங் காநிலை யுடையன
ஆளென ஆக்கிடு அருள்விழி மேல்நிலை (19)

திருநுதல்

வளர்பிறை எழிலது விளங்கிடு நுதலது
தளர்வொழி திருவுயர் பட்டயம் நெற்றியாம்
உளங்கவர்ந் திடுமழ கியஅருள் துறையது
தெளிவுடை மதிநுதல் காண்பவர் உய்ந்திடும் (20)

திருக்கூந்தல்

கார்முகில் ஒத்தன கருங்குழல் எழிலது
நீரதன் வீழ்ச்சியை நிகர்கொளும் மழகின
சீர்மிகு அறலென திருவிளங் கிடுசிறப்
பாரது கூந்தல்ப ராபரை நின்னதே (21)

திருவிரல்கள்

காந்தள்மெல் மலரனை செங்கர விரல்களே
பூந்தளிர் மேனியை பொற்கர மணிவிரல்
ஆர்ந்தமு தளித்திடு அருட்கரச் சிறப்பின
தேர்ந்தெமக் காசிசொல் திருமிகு கரவிரல் (22)

திருத்தோள்

வேய்வளைந் தனஎழில் தோள்களும் உடையைநீ
தாய்நினின் புயம்எனைத் தாங்கிடு திறத்தின
ஆய்மதிச் சிந்தையின் அன்னைநின் புயங்களே
தூய்மதி தடாம்புயம் திருநிறைந் தியல்வன (23)

திருமுகம்

மறுவிலா முழுமதி திருமுக எழிலினை
நறுமலர் செண்பக மணம்கமழ் மேனியை
உறுதவ மியற்றிடு ஒருதனித் தலைவிநீ
அறமிளிர் பொழிலெனும் அன்னையைப் போற்றுதும் (24)

திருவடிவம்

நிலவொரு திருக்கண் கதிரொரு விழியாம்
மலர்களின் குவைநிறை மேனியங் கங்களே
குலமகள் அன்னையின் கோதறு தரிசினை
அலகிலா விளையாட் டயர்உயிர்த் தாய்மலை (25)

செம்பவ ளத்திரு வாய்மலர் தேன்பொழி
அம்பிகை அமுதருந் தாருயிர் செழித்திடும்
உம்பரை ஈன்றருள் ஒருதிரு வயிற்றினள்
தம்பத மெய்வழித் தாய்மணி வாழிய! (26)

மார்க்கத் திருத்தவ மாதுஎம் வல்பிணி
தீர்க்கத் திருவுளம் கொண்டனை தேவியே!
கார்க்கும் திருக்கரக் காரிகை அன்னையே!
பார்க்குள் பதமலர் பற்றினேன் உய்யவே (27)

உயிரினுக் கொருஅணி உயர்தவத் திருமணி
அயர்வறு அமுதருள் அருட்கொடை அன்னையே
துயர்தவிர் திருவுயர் ஒருதனி முதல்வியே
நயமிகு தனிகையர் நற்றவப் புதல்வியே (28)

கலியனின் இடர்கெடவே கருணைசெய் குணநிதியே
வலியவன் எமன்படரை வெலுமொரு திடமுடையீர்
நலிவற உலகுயிர்கள் நலம்பெறும் ஒருதுறையே
ஒலியெனும் அருளமுதம் பெருகுறு தேன்மடையே! (29)

மதிநிறை அமுதவரே! மணிமொழி கனியவரே!
இதயம தனில்அமரும் எழிலர சிவர்அறிமின்
புதுயுகம் படைத்திடவே அவதரித் தருள்பவரே
முதுபெரும் முனியரசே கதியும் திருபதமே! (30)

குரு திருவடி எழில் மணிமுடி இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!