உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/013.திரு உந்தியார்

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.13. உந்தியார்[தொகு]

நூற்குறிப்பு :-

உந்தீ பற எனின் உன் தீமைகளெல்லாம் பறக்கக் கடவது என்னும் பொருள் பெறும். எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் ஒருதிரு தரிசனை இருவினைகளைப் போக்கவல்லது. மும்மலங்களையும் நீக்கவல்லது. ஆகலின் அவர்கள் திருவருளை எண்ணி இப்பனுவல் இயற்றப் பெறுகின்றது. பதினான்கு சித்தாந்த சாத்திரங்களில் திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் இயற்றியது திருவுந்தியார். அதனை அடியொற்றி இஃது இயற்றப்பெற்றதாமென்க.

திரு உந்தியார்

காப்பு

நந்தீ உறைநாதர் செந்தீவண் ணர்பொற்றாள்
வந்தித்துச் சிந்தித்து வாழ்த்திடுவேம் - உந்தீ
பறவென்று பாடிப் பரமொன்றி நாட
உறவொன்று பொன்னரங்கர் தாள்.

நூல்

நீதிந டவுசெய் நித்திய நின்மலர்
ஆதியே வந்தாரென் றுந்தீபற
அனாதியு மானாரென் றுந்தீபற. (1)

வேதியர் நாயகர் வேதங்கள் போற்றிட
வேதாந்தந் தந்தாரென் றுந்தீ பற
வானாடர் வந்தாரென் றுந்தீ பற (2)

இருளைக்கெ டுத்து இருதயத் தேயொளிர்
பொருளைக்கொ டுத்தாரென் றுந்தீபற
மருளும்ம றைந்ததென் றுந்தீபற. (3)

அதனைப்பெ றுதற்கு அதனைக் கொடுத்து
அதுவாக நின்றாரென் றுந்தீபற
அதுபெற்று உய்ந்தோமென் றுந்தீபற. (4)
பொருளெனப் பொய்யைப் பிடித்துத்தி ரிந்தேன்மெய்
பொருளினைப் பெற்றேனென் றுந்தீபற
மருளும்ம றைந்ததென் றுந்தீபற. (5)

ஒன்றாகி நின்றவர் ஒன்றில்ஒன் றிநின்று
நன்றாகி நன்றார்க்கும் உந்தீபற
நன்றேஇ னிஎன்றும் உந்தீபற. (6)

இரண்டாகி நின்றதை ஒன்றாக்கி நம்முள்
இரண்டறக் கலந்தாரென் றுந்தீபற
இரண்டில்லை ஒன்றேயென் றுந்தீபற. (7)

முக்கோணச் சக்கர முச்சந்தி யில்வைத்து
தக்கோனெ னச்செய்தார் உந்தீபற
எக்காலும் சாவில்லை உந்தீபற. (8)

நாற்கரத் தாலேந லமாய்வ ணங்கிட
வேற்கரத் தார்செய்தார் உந்தீபற
கார்க்கும்தீ கைகொண்டார் உந்தீபற. (9)

ஐந்தொழி லாற்றும்நம் ஐயர்ஐந் தைஆண்டு
ஐந்தினைக் காட்டினார் உந்தீபற
ஐந்துக்குள் ளாக்கினார் உந்தீபற. (10)

ஆறுதெ ருவாடி அன்னை அருள்நாட
ஆறுத லைத்தந்தார் உந்தீபற
மாறுத லைப்பெற்றாய் உந்தீபற. (11)

ஏழ்நிலைக் கம்பத்தில் இன்பங்கொ ழித்திட
ஏழ்பிறப் பாக்கினார் உந்தீபற
வாழ்நிலை கண்டோமென் றுந்தீபற. (12)

எட்டும்இ ரண்டும்இன் னதெனக் காட்டியே
எட்டாத தெட்டினார் உந்தீபற
எட்டில்இ னிக்கும்நன் றுந்தீபற. (13)

ஒன்பது வாயிற்கு ரம்பையுள் தன்பதம்
என்பது இஃதென்றார் உந்தீபற
அன்பது வேபரம் உந்தீபற. (14)

பத்தில்ப லனருள் சித்தர்த லைவர்எம்
அத்தன்அ டிபோற்றி உந்தீபற
பித்தம்தெ ளிந்திடும் உந்தீபற. (15)

பத்தோடு ஒன்றாய்ப் பணிந்திருந் தேனெனை
அத்தோடே சேர்த்தாரென் றுந்தீபற
சித்தாடு வித்தகர் உந்தீபற. (16)

பன்னிரண் டில்நான்கு பாழாகா வண்ணமே
என்னிரண் டில்செய்தார் உந்தீபற
பொன்னரங் கத்தையர் உந்தீபற. (17)

வையகம் வானகம் ஏதும்ஈ டில்நன்றி
செய்யாமற் செய்தாரே உந்தீபற
மெய்யாக மெய்யாக உந்தீபற. (18)

பொய்யாத பொன்னம்ப லத்தையர் பேதைக்கு
நையாத வாழ்வீந்தார் உந்தீபற
உய்யுமா றிஃதொன்றே உந்தீபற. (19)

சேற்றிற்கி டந்தேனைச் செங்கரத் தாற்தொட்டு
ஆற்றினி லிட்டனர் உந்தீபற
போற்றிப்ப ணிந்தினி துந்தீபற. (20)

வேதம்வி ளங்கமெய்ப் போதம்து லங்கிடப்
பாதம்அ ருளினார் உந்தீபற
ஏதம்அ றுந்ததென் றுந்தீபற. (21)

சீதனம் வித்தியா தத்துவம் ஏழெனக்
காதலர் தந்தாரென் றுந்தீபற
வேதனை தீர்ந்ததென் றுந்தீபற. (22)

மண்தீண்டாப் பாதம் அருளிஎ ளியேங்கள்
வீண்தீண்ட வைத்தாரென் றுந்தீபற
என்னாண்ட நாயகர் உந்தீபற. (23)

ஓரடி யாலிவ் வுலக மளந்தவர்
சீரடி தந்தாரென் றுந்தீபற
சாலையில் வந்தாரென் றுந்தீபற. (24)

ஆரண வேத கலைக்கதிபர் எங்கள்
மாரணம் தீர்த்தாரென் றுந்தீபற
பூரணம் தந்தாரென் றுந்தீபற. (25)

வாடியெ னப்பற்றி மாடியிலேற்றியே
கோடியைக் காட்டினார் உந்தீபற
வாடிடோம் நாமினி உந்தீபற. (26)

சிட்டைப்பி டித்தெற்கு எட்டிரண் டும்தந்து
நட்டம்த விர்த்தாரென் றுந்தீபற
மட்டில்பே ரின்பத்தார் உந்தீபற. (27)

வஞ்ச மறலிக்கு அஞ்சிக்கி டந்தேற்கு
கஞ்ச மலர்த்தாள்தந் துந்தீபற
சஞ்சலம் தீர்ந்ததென் றுந்தீபற. (28)

அருவும் உருவும் அறிவாம் உருவினர்
அருள்கொண்டு வந்தாரென் றுந்தீபற
திருவருள் தந்தாரென் றுந்தீபற. (29)

இருளாழி தன்னில் இழிந்திளைத் தோர்களை
அருளாழி சோர்த்தா ரென் றுந்தீபற
அமிர்தம் பெருகிய துந்தீபற. (30)

பூமணந் தன்னில் பொருந்திய பேதைக்கு
வாமணந் தந்தாரென் றுந்தீபற
தாமணந்து கொண்டார் உந்தீபற. (31)

சோமன திக்கரை சொக்குங் கரும்பீந்து
சீமாட்டி யாக்கினார் உந்தீபற
நாமாட்டி உய்ந்தோ மென்றுந்தீபற. (32)

வேண்டிய தெல்லாம் வழங்கும் பிடியென்று
காண்டீபம் தந்தாரென் றுந்தீபற
தாண்டினோம் இக்கரை உந்தீபற. (33)

தீண்டிம யக்கிப்பே ரின்பத்துள் ளாழ்த்தினார்
பாண்டியர் தாள்பணிந் துந்தீபற
பூண்டுகொள் மெய்யணி உந்தீபற. (34)

சாவினை நோக்கிச் சகத்தே கிடந்தோர்க்கு
தேவியருள் செய்தார் உந்தீபற
சாவினின்று மீட்டார் உந்தீபற. (35)

மூவா முழுமுதல் வாலைக் குமரிதான்
தேவாதி தேவியென் றுந்தீபற
நாவார வாழ்த்தியுய்ந் துந்தீபற. (36)

சட்டென எந்தன் கரம்பிடித் தென்னவர்
பொட்டொன்று வைத்தாரே உந்தீபற
இட்டம் கனிந்தது உந்தீபற. (37)

அங்கிங்கும் ஓடி அலைந்தே திரிந்தோர்க்குக்
கங்கணம் பூட்டினர் உந்தீபற
தங்கண மாக்கினார் உந்தீபற. (38)

எங்கள் தவமேரு ஏர்தவ மாளிகை
இங்கே அறம்வலம் உந்தீபற
பொங்கி மகிழ்ந்துசுற் றுந்தீபற. (39)

சுற்றிச் சுழன்று திருவடி சார்ந்துநீ
பற்றிப் படிந்திரு உந்தீபற
வெற்றிக் களிப்புற்று உந்தீபற. (40)

முற்றத் தெளிந்த முனைவர் உறைபதி
சற்றே பணிந்திரு உந்தீபற
பொற்றாள் கதியென உந்தீபற. (41)

படைகொடு காலனும் பற்றாது காத்திட
விடையேறி வந்தாரென் றுந்தீபற
கடையேனும் உய்ந்தேனென் றுந்தீபற. (42)

கங்கை நதிக்குள் களித்துக்கி டந்தேனை
யமுனைக்க ரையேற்றி உந்தீபற
செங்கைபற் றிமணந் துந்தீபற. (43)

கங்கைக்க ரையோரம் காசிக்குச் சென்றுநீ
கயிலாயம் சேர்ந்திருந் துந்தீபற
காண்பது வைகுண்டம் உந்தீபற. (44)

வெறித்துவா ரந்தனில் வீழ்ந்துகி டந்தேனை
அறித்துவா ரம்சேர்த்தார் உந்தீபற
குருத்துவா ரம்கண்டு உந்தீபற. (45)

சாரத மேறியே பாரதம் வந்தார்க்கு
சீரதம் தந்துய்ந்தார் உந்தீபற
பூரத மேறிடு உந்தீபற. (46)

பாரதம் பாடிக் குருக்ஷேத்தி ரமோடி
நாரதம் கண்டிடு உந்தீபற
வேறெதும் வேண்டாமென் றுந்தீபற. (47)

அச்சரம் ஐம்பத்தொன் றேயளித் தார்சரம்
நற்சர மாயிற்று உந்தீபற
மச்சின்மே லேற்றினார் உந்தீபற. (48)

ஏழ்நிலை மாடத்துள் ளேறடி என்றெற்கு
வாழ்நிலை காட்டினார் உந்தீபற
சூழ்நிலை கோட்டினார் உந்தீபற. (49)

வேர்மேல்கீழ் வாதுகள் விஸ்வச்சு லாமெனும்
விருட்ச நிழல்படிந் துந்தீபற
வெவ்வினை தீர்ந்ததென்று றுந்தீபற. (50)

பகரம்அ றியாத பேதைநா யேனுக்கு
அகரம்அ ளித்தாரென் றுந்தீபற
அனைத்திற்க துமுதல் உந்தீபற. (51)

ஒன்றுதான் தேகமென் றுளறித்தி ரிந்தேற்கு
நன்றுநான் குதந்தார் உந்தீபற
பொன்றாத மெய்த்தெய்வம் உந்தீபற. (52)

தூலம்சூக் மம்கார ணம்மகா காரணம்
நாலும்காட் டியாண்டார் உந்தீபற
வேலவர் மெய்த்தெய்வம் உந்தீபற. (53)

சங்குசக் ரம்துடி சூலம்கிள் நாமமும்
இங்கணிந் தார்கண்டு உந்தீபற
இனிப்பிறப் பில்லையென்று றுந்தீபற. (54)

அண்டோற்பத் திசெய்து அனைத்தும் செயவல்லார்
பிண்டோற்பத் திதந்தார் உந்தீபற
எண்டிசையும் போற்றி உந்தீபற. (55)

அடைத்த தொருவாசல் அறுத்ததொ ருவாசல்
படைத்தவர் காட்டினார் உந்தீபற
கடைத்தேறத் தாள்பணிந் துந்தீபற. (56)

சட்டென்று மூச்சைப்பி டித்திட்டார் சாலையர்
கட்டிஅ ஜபைக்குள் உந்தீபற
நிட்டைக்குள் ளாக்கினார் உந்தீபற. (57)

வீணாயிங் கேவிளை யாடித்தி ரிந்தேற்கு
வீணாதண் டீந்தனர் உந்தீபற
கோணாதி னிதிங்கு உந்தீபற. (58)

கெடுமூலம் தன்னில் கிடந்தேனை உய்ந்திட
நடுமூலம் தந்தாரென் றுந்தீபற
தொடுமூலம் இஃதொன்றே உந்தீபற. (59)

கற்பகத் தில்உற கணவரோ டின்புறக்
கற்பகந் தந்தாரென் றுந்தீபற
கட்டிக்கொண் டாரெனை உந்தீபற. (60)

எண்டிசை சுற்றி இழுத்துக்கொண் டோடியே
குண்டலிக் குள்வைத்தார் உந்தீபற
விண்டிடவொண் ணாது உந்தீபற. (61)

மிடிமைத விர்ந்திட மடிமைகெ டுத்தெனை
அடிமைகொ ண்டாரென்று உந்தீபற
விடிந்தது உய்ந்தோமென் றுந்தீபற. (62)

ஒன்றாய்ப் பலவாய் உளதா யிலதாகி
நின்றாரைக் கண்டோமென் உந்தீபற
பொன்றாத வாழ்வுற்றாய் உந்தீபற. (63)

எங்கும்நி றைபரர் எங்களுக் காகவே
இங்கோர்உ ருவுற்றார் உந்தீபற
அங்கத்தெ மைஏற்றார் உந்தீபற. (64)

வம்பர்க்க ரியவர் அன்பர்க்கெ ளியவர்
உம்பர்த லைவரென் றுந்தீபற
எம்பிரான் ஆண்டவர் உந்தீபற. (65)

சிந்தைநி றைந்தொளிர் விந்தை தவப்பெருந்
தந்தைபொன் னரங்கரே உந்தீபற
எந்தைப தம்போற்றி உந்தீபற. (66)

நெஞ்சைப்பி ளந்தனர் பித்தெடுத் தங்கணே
விஞ்சைப தித்தாரே உந்தீபற
துஞ்சலொ ழிந்தது உந்தீபற. (67)

ஆணெனச் சென்றேனைப் பெண்ணென ஆக்கியே
பூணணி பூட்டினார் உந்தீபற
வேணியர் வித்தைகொண் டுந்தீபற. (68)

நானென் றிருந்தோரைத் தானென ஆக்கியே
மோனத்தி ருத்தினர் உந்தீபற
ஞானவ ரோதயர் உந்தீபற. (69)

ஒருமொழி யால்பல திருமறை யும்தெளி
அருமைத்தி ருவருள் உந்தீபற
ஒருமெய்த் தவமேரு உந்தீபற. (70)

காண்பதெல் லாம்உங்கள் காட்சிசா லையையா
பூண்பதுங் கள்பதம் உந்தீபற
வான்பதம் தந்தீர்கள் உந்தீபற. (71)

வெத்திப்ப யலென்னைச் சித்தம்க ளித்தேற்றார்
பித்தரென் றார்சரி உந்தீபற
அத்தன்ப தம்கதி உந்தீபற. (72)

வம்படி பண்ணி வளைத்துஇ ழுத்தொரு
கொம்புமு ளைப்பித்தார் உந்தீபற
உம்பர்த லைவர்காண் உந்தீபற. (73)

சாவோலை தன்னைக் கிழித்திட்டுச் சீருயர்
நாவோலை தந்தாரென் றுந்தீபற
பூமேல்ந டந்தாரென் றுந்தீபற. (74)

சேவடி நாடிச்சி ரந்தாழ்த்திப் போற்றினேன்
பூவடி தந்தாரே உந்தீபற
பாவடி என்றாரே உந்தீபற. (75)

நானானென் றெண்ணி மயங்கிக் கிடந்தேனே
தான்நானே என்றாரே உந்தீபற
தானானே பாடினேன் உந்தீபற. (76)

வேதம் எழுத்தல்ல மெய்யான சற்குரு
சேதம்ப டாதிரு உந்தீபற
நீதம்கண் டுய்வாயே உந்தீபற. (77)

நாதர்தி ருவடிந ண்ணிய பேருற்ற
சீதனம் மெய்யென்று உந்தீபற
மாதனம் பெற்றோமென் றுந்தீபற. (78)

பீற்றற்பி றப்பைப்பி றப்பென்றி ருந்தேனை
மாற்றிப்பி றப்பித்தார் உந்தீபற
ஆற்றின்து றைகண்டோம் உந்தீபற. (79)

உள்ளமைப் பெட்டகத் துண்மை அறிவித்து
கள்ளங்கெ டுத்தாரென் றுந்தீபற
வெள்ளம்அ ருள்பாய்ந்த துந்தீபற. (80)

விபத்துத னைவேண்டி விண்ணப்பம் செய்தேற்கு
சிபத்துதந் துகாக்கும் உந்தீபற
அபத்தந்தொ லைந்ததென் றுந்தீபற. (81)

தந்தையும் தாயும் தலைப்பட்ட சற்குரு
விந்தையா வும்தெய்வம் உந்தீபற
சிந்தைக வர்கள்வர் உந்தீபற. (82)

பந்தந்த னைக்காட்டிப் பந்தம்கெ டுத்தவர்
சொந்தமெ னக்கவர் உந்தீபற
சுகந்தங்கொ டுத்தவர் உந்தீபற. (83)

வாடா மலர்சூடும் தேடாப்பெ ருஞ்செல்வர்
கோடாயி தங்கொண்டார் உந்தீபற
வீடாண்ட ருள்தெய்வம் உந்தீபற. (84)

தேனின்இ னியவர் வானின்க னியவர்
ஊனின்உ யிரவர் உந்தீபற
கானின்த வகொண்டல் உந்தீபற. (85)

மண்தீண்டாப் பாதமு ளரியர் மக்கட்காய்
மண்தீண்ட வந்தாரென் றுந்தீபற
விண்தீண்டப் பற்றிக்கொள் உந்தீபற. (86)

பொன்னாட்டு மாமன்னர் அன்னாட்டு வித்துக்காய்
இன்னாட்டில் வந்தாரென் றுந்தீபற
தன்னாட்டில் கொண்டாரென் றுந்தீபற. (87)

சந்திர வட்டச் சிலாசன மேறியோர்
எந்திர வள்ளல்காண் உந்தீபற
மந்த்ரவு ருவவர் உந்தீபற. (88)

தேவசிங் காசனர் ஜீவசிம் மாசனம்
மேவயிங் கேறினர் உந்தீபற
ஜீவர்கள் உய்யவே உந்தீபற. (89)

சாதிச்சிக் கெல்லாம் அறுத்தோட்டி யெங்களை
நீதிக்குள் ஆக்கினர் உந்தீபற
வேதியர் நாயகர் உந்தீபற. (90)

பண்பாண்ட பாட்டையர் அன்பாண்டு தந்தாரிவ்
விண்பாண்டி நாடரை உந்தீபற
தென்பாண்டி நாடரென் றுந்தீபற. (91)

மங்காத வாழ்வும் வரமும் அருள்செய்தார்
எங்கள் தவமேரு உந்தீபற
தங்க மகாமேரு உந்தீபற. (92)

எக்கோடி காலத்தும் யாரும் செய்யாத்தவம்
எந்தை இயற்றினார் உந்தீபற
எக்காளம் ஊதியே உந்தீபற (93)

ஜீவன்முத் தியென்று செப்பும் வழக்குண்டு
தேகமுக்தி இன்று உந்தீபற
ஏகன்அ ளிப்பாரென் றுந்தீபற (94)

சொத்துசு தந்திரம் சற்குரு என்றெண்ணல்
முத்திக்கு வித்தாகும் உந்தீபற
சத்யநெ றிப்படிந் துந்தீபற (95)

ஏழ்பாவந் தன்னில் இடறா நெறிபற்றி
ஆழ்வோம் பேரின்பத்துள் உந்தீபற
வாழ்வோம் என்றென்றுமே உந்தீபற (96)

தான்பெற்றோ மென்றே தருக்கித் திரிவோரைக்
கோன்பற்ற மாட்டாரென் றுந்தீபற
ஊன்வற்ற உருகிடு உந்தீபற (97)

ஓர்மெய்யின் பாட்டுக் குரியோர்கள் ளமின்றி
சீர்மெய்யில் உய்வார்காண் உந்தீபற
பார்முற்றும் மெய்வழி உந்தீபற (98)

சரணா கதியென்று தானற்று நின்றார்க்கு
மரணாவஸ் தையில்லை உந்தீபற
சரணாம்பு யம்கதி உந்தீபற (99)

தோட்டில்பெ ருந்தேட்டு தெய்வத்திருவருள்
காட்டும் குருவந்தார் உந்தீபற
மீட்டார் உய்ந்தோம் உய்ந்தோம் உந்தீபற (100)

கூட்டுக் குரியவக் காலன்பறந்தோடச்
சீட்டுக் கொடுத்தாரென் றுந்தீபற
வாட்டம் தவிர்த்தாரென் றுந்தீபற (101)

காத்தாரைக் காத்தார் கமழ்செண்பகவாசம்
பூத்தாரைப் பற்றுவோம் உந்தீபற
நாத்தா மலையாரென் றுந்தீபற (102)

என்றுமே எங்குமே எல்லாமாய் இருப்பவர்
இன்று சாலைநின்றார் உந்தீபற
நன்றுபற் றிஉய்வோம் உந்தீபற. (103)

உத்யோவன த்தவத் தோங்கும் தெய்வத்தினால்
சித்தியோங் கும்என்று உந்தீபற
முத்தி பூர்ணமாகும் உந்தீபற. (104)

வெம்பிக்கை வீழ்ந்துநர கேகிடாமலே
நம்பர்க்கை காக்கும்என் றுந்தீபற
நம்பிக்கை கொண்டுய்மின் உந்தீபற. (105)

ஆட்டம்எல்லாம்விட்டு நாட்டம்நற் றாள்பற்று
வாட்டம் தவிர்த்திடும் உந்தீபற
தேட்டம்தெய் வத்தருள் உந்தீபற. (106)

வையகம் வானகம் முற்றும்உய் யும்வழி
மெய்வழி ஒன்றேயென் றுந்தீபற
மெய்வழி பற்றின் றுந்தீபற. (107)

மெய்யாய்ப் பிறவிக் கடல்தாண்டும் ஓர்புனை
ஐயர் திருவடி உந்தீபற
எய்தும்பே ரின்பமென் றுந்தீபற. (108)

திரு உந்தியார் இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!