உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/080.மெய்ப்புகழ்ச்சி மாலை

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



80.புகழ்ச்சி மாலை

[தொகு]

இலக்கணம்:-

தலைமகளின் புகழ்தனைப் பலபட விதந்தோதும் பொருண்மையுடையது புகழ்ச்சிமாலை. 
அகவலடி கலி யடியு மயங்கிய
வஞ்சியின ரிவையர் மாண்பை ரைப்பது
புகழ்ச்சி மாலையின் பொருளாகும்மே
- முத்துவீரியம் 1057
மயக்க அடிபெறும் வஞ்சிப்பாவால்
வியத்தகு நல்லார் விழுச்சீர் உரைத்தல்
புகழ்ச்சி மாலை ... யாம் எனநவில்வர் 
- இலக்கண விளக்கம் 866
சிலதகவ லடியுடன் கலியடி மயங்கிவஞ்
சிப் பாவினான் மாதர்கள்
சீர்மையைக் கூறல்பு கழ்ச்சியின் மாலையாம்
- பிரபந்ததீபிகை  - 12
புகழ்ச்சி மாலையே பூவையர்சிறப்பை
அகவலடியும் கலியடியும் மயங்கிய
வஞ்சிப்பா வால் வழுத்துதல் முறையே 
- பிரபந்ததீபம்  - 31

சர்வ அண்டாண்ட கோடிகளையும் ஈன்று புறந்தந்து, காத்து, அருளி, மறைத்து, அழித்தல் என்னும் ஐந்தொழில் இயற்றும் அன்னையாகிய பிரம்மப் பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்களே அனைத்திற்கும் தலைவி. அவ்வன்னையின் அருட்பெரும் திருப்புகழைப் பராவுவது இந்நூல்.

மெய்ப்புகழ்ச்சி மாலை

காப்பு

கலிவிருத்தம்

என்னை யோர்பொரு ளாகவும் ஏன்றவள்
அன்னை ஆதி பராபரை வான்புகழ்
தன்னைப் பாடிப் பராவிட வேண்டியே
மன்னு பொன்னடி வாழ்த்துதும் காப்பிதே!

நூல்

குறளடி வஞ்சிப்பா
(அகவற்றூங்கல் ஓசையான் ஒன்றா வஞ்சித்தளையானியன்றது)

சீர்திகழ்எழில் செம்மலரடி
பார்புகழ்நிறை பார்பதியிவள்
ஆர்சிறப்பினள் அங்கருவினில்
நீர்மைமிக்குற நல்லுயிரெலாம்
பேர்பெருந்தய வாலிங்கீன்றனள்
நேரியல்பினள் ஆக்கல்காத்தலும்
பாரதம்புரி பேர்வலிமையள்
கார்த்திடுமழ கார்கரத்தினள்
கீர்த்திமிக்குறு கண்மணியிவள்
பூரணம்மெனத் தான்பொலிந்தனள்
இன்னவள்
பதின்வ யதினள் பாங்கினள்
இதம்சி றந்துமே எம்முயிரானவள் (1)

ஊரலாமலைச் சாரலிலொரு
நேர்நிகரிலாச் சோலைதன்னிலே
சாலையென்றொரு ஊரியற்றினள்
மேலைமெய்ம்மருந் தாலுயிர்க்கெலாம்
சீலமிக்குற ஜீவபண்டிதம்
செய்துசற்சன ராக்கினள்மனு
உய்திபெற்றுயர் ஓங்கமரரென்
றாக்கியேயருள் தேக்கிமெய்வழிக்
காக்கியுன்னத பாக்கியம்தரு
உத்தமி
மார்க்கக்கா ரியென்னு மாண்பினள்
தீர்க்கு மேபவ வெவ்வினை யாவுமே (2)

தாயெனஅமு தம்தருபவள்
நேயமிக்கவள் நாடுபேர்களைத்
தூயதேவராய்ச் சீரொடாக்குவள்
ஆயனந்தர்தம் ஆர்குலம்மது
ஓரிறையவள் ஓர்குலமெனும்
பூரணியிவள் காரணியெனத்
தாரணிவரும் சத்யசீலியாம்
ஆரணமிவள் ஆகமம்மிவள்
செங்கரத்தினள் தீமைகண்ணுறில்
பொங்கியேயெழு சங்கரியிவள்
துங்கஎழில்
மங்காத் தவம்புரி மாதவி
எங்களை அருகணைத் தின்னருள் புரிபவள் (3)

அருணயந்தவள் ஆதிபராபரை
பெருந்தயவுடை பேரரசியிவள்
கருணைவாரிதி காளியுமிவள்
திருவுடைபெருந் தேவியுமிவள்
விருந்தமுதருள் வள்ளலுமிவள்
மருந்துமானவள் வல்லெமன்தனைச்
செருக்களத்தினில் செற்றவளிவள்
வருந்துஜீவனை வாழவைப்பவள்
அருந்துணையுயிர்க் கானவளிவள்
குருதயாநிதி கொற்றவையிவள்
பரிந்து
பணிபவர் பிணிதவிர் பண்பினள்
அணியெனத் திகழும் அன்னையின்னவள் (4)

ஆத்தாளிவள் அன்புளோர்தமை
காத்தாளிவள் கனியனந்தருள்
பூத்தாளிவள் வெம்பவவினை
தீர்த்தாளிவள் தேனார்மொழி
அருள்வாரிதி அழியாநிதி
இருளிரிந்திட ஒளிவிரிந்திட
கருணையங்கடல் கைப்பொருளிவள்
தருமதீபிகை தங்கமேரிவள்
பொருந்துமன்பரின் பெரியநற்றுணை
பெருந்தவத்திரு பேர்தயாநிதி
அரும்புணை
பிறவியின் கடல்கடந் திடஅருள்
இறைவியின் பதமலர் என்றுநின் றிலங்குமே (5)

சேமமிங்குறச் செய்தயாநிதி
காமவல்லியும் கன்னியும்மிவள்
கவுரியானவள் குண்டலியிவள்
சவுரியந்தரும் தருமநாயகி
சத்தினியிவள் தங்கநாச்சியாம்
பத்தினியிவள் பார்பதியிவள்
உத்தமியிவள் ஓங்காரியிவள்
சித்தமார்சிவ காமியின்னவள்
தாயகம்மெனத் தாங்கிநிற்பவள்
தூயகத்தினில் தங்கிவாழ்பவள்
ஆய்மதிச்
சிந்தையுள் என்றும் செழித்திடும்
எந்தாய் தாள்மலர் ஏற்றி இறைஞ்சுதும் (6)

ஆதிசத்தியும் ஆங்கலைவலாள்
நீதியோர்திரு வாகநின்றவள்
ஓதுவோருளத் தோங்குமுத்தமி
சீதனமிவள் தேவிவாலையாம்
அம்மணியிவள் ஆதிநாயகி
எம்மையாளுடை தாய்மணியிவள்
சொல்லரும்சதுர் வேதமாயினள்
எல்லையில்கரு ணைவடிவினள்
சிம்மவாகினி தீமைமாள்வுற
செம்மலர்திருத் தாளருள்தரு
அம்மை
வெம்பி றவிப்பிணி வீறிட
தம்ப தம்தந்தாள் தாய்மணி நற்றுணை (7)

நிர்க்குணத்தினள் நீள்தவப்பெரும்
பொற்குணத்தினள் போற்றுமன்பரின்
சற்குணத்தினில் சார்ந்துறைபவள்
வெற்றிகைப்பெரு வேற்கரத்தினள்
நற்றிருத்துறை நண்ணுவோர்பணி
கற்றவர்தொழந் தங்கும்பூந்துறை
மற்று(ப்)பற்றிவள் மாமணிச்சரம்
முற்றும்கற்றவள் மாகலைமகள்
தெற்றெனத்தெளி தேவிவாலையாம்
அன்னையே
பொன்னரங் கம்மெனும் மன்றினில்
நன்னலம் நல்கிடும் என்னுயிர் இன்பமே! (8)

வேதநாயகி வேணியாமிவள்
சோதிநாயகி தூமணியிவள்
மாதவத்திரு மார்க்கமாதிவள்
பூதலத்திடை போதரும்இறை
நீதியோர்திரு வானநேமியள்
ஆதித்தாயிவள் அன்பெனும்திரு
ஓதுவோருணர் உற்றமெய்ப்பொருள்
வேதனையெமன் வீய்ந்திடஅருள்
மூதுரைதரும் வாணியின்னவள்
போதமே
வேதமாம் நாதமாம் நீதமாம்
பாத மூலமே பற்றி உய்குவாம் (9)

கலைவாணியாம் கமழ்செண்பக
மலர்வாசனை மென்மேனியள்
நலமேநிறை நாமமாமணி
குலதேவியிவள் கோதிலா அணி
உலகுய்வுற உற்றாளிவள்
கலகம்செயும் எமன்வாதனை
விலகும்வரம் மிக்கேயருள்
அலகில்திரு விளையாட்டயர்
தலமெய்வழி சார்ந்தோர்உயும்
குலம்யாவுமே கோடேறிடும்
கோதிலார்
நீதமாய்க் காதல்கொண் டன்புறில்
ஆதியேதுணை யாகவிண் ணேறுவர் (10)

மெய்ப்புகழ்ச்சி மாலை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!