உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/063.சிவரத்தின மாலை

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.63. நவரத்தின மாலை[தொகு]

நூற்குறிப்பு:-

நவ ரத்தின மாலை என்பது ஒன்பது ரத்தினங்களால் ஆன மாலை என்னும் பொருள்படும். வயிரம், நீலம், முத்து, பவளம், மணி, பச்சை (மரகதம்), கோமேதகம், பதுமராகம், வைடூரியம் என்னும் ஒன்பது வகை ரத்தினங்களால் ஓர் அழகிய மாலை புனைந்தாற் போல ஒன்பது வகையான யாப்புகள், பாவினங்கள் விரவி வருவது நவரத்தின மாலையாம் என்க என்னை ஆண்டு கொண்ட குருபரர் குல தெய்வ தேவேசர் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு அவர்களின் திவ்வியத் திருப்புகழை விதந்தோது முகத்தான் இப்பிரபந்தம் இயற்றப் பெற்றுள்ளது.

சிவரத்தின மாலை

காப்பு

நேரிசை வெண்பா

ஐயா உமது அணிதிகழும் பொற்றாட்கு
மெய்யாய் நவரத்தின மாலை சொல - துய்யா
வரந்தருவீர் பாடத் திறந்தருவீர் யாப்புத்
தரந்தருவீர் தேவே சரண்.

நூல்

வயிரம்

இன்னிசை வெண்பா

சரணம் வயிரத் திருமேனி தெய்வம்
மரணம் தவிர்த்தெமையாள் மாதவத்தார் பூதலத்தே
வந்த மனுக்குலத்தோர் வானகத்தார் ஆகவெனத்
தந்தருள்செய் பொன்னரங்கர் காண் (1)

நீலம்

கட்டளைக் கலித்துறை

காண்டற் கரிய திருக்காட்சி காட்டும் கனதவத்தார்
வேண்டு வரந்தருநீல மணிமிடற் றாரெங்கள் கோன்
தாண்டப் பவப்பிணிக் கோர்புனை யாயிலங் கெம்மாருயிர்
மீண்டனந் தாதியர்க் குள்ளெற்றி வைத்த வரோதயரே! (2)

முத்து

எண்சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

உதயம்செய் அருட்ஜோதி தெய்வம் இந்த
உலகுய்ய அவதரித்தார் மாட்சி விந்தை
மதியமுதம் பொங்கிவரும் ஆழி எங்கோன்
மனுக்குலத்தோர் அதிலாழ்ந்து முத்தெடுத்து
இதயமதில் அணிகலனாய்ப் பதித்துக் கொண்மின்
இடர்கடந்து மகிழ்வடைந்து என்றும் வாழ்வீர்!
கதியருளும் கமலபதி சாலை ஐயர்
கழல் பற்றி உய்ந்திடவே உலகீர் வம்மின் (3)

பவளம்

நேரிசை ஆசிரியப்பா

உலகீர் வம்மின் ஒருதனித் தலைவர்
அலகில் ஜோதியர் அறமொரு திருவினர்
அகில மனுக்குலம் அனைத்தும் உய்ந்திட
சகல வரங்கள் சன்னதம் பலவும்
மனுமகன் ஏற்றனர் வரந்தரு திருவினர்
அனவர தம்தவத் தருட்பெரும் தயவால்
பருவுடல் தாங்கினர் பாரகம் தழைத்தது
திருவுரு ஏற்றனர் ஜீவர்கள் செழித்தனர்
பவளவாய் மலர்ந்து பன்மறை பகர்ந்தனர்
தவத்திருச் செம்மலர் தரும்அருள் அமுதம்
அண்ணல் வழங்கினர் அருட்பெருஞ் செல்வம்
வண்ண வண்ணமாய் வழங்கிட மாந்தி
இன்னல் தவிர்ந்து இறப்பொழிந் துய்ந்தேம்
நன்னலம் கொழித்து நல்லுல கெய்தினம்
இப்பெரும் பரிசு எமக்கருள் புரிந்திட
எப்பெரும் பாடுகள் அப்பன் அடைந்தனர்
ஒப்பிலா வாய்மையர் உற்றவெந் துயர்கள்
செப்புதற் கெளிதோ செவிகள் நைந்திடும்
உள்ளம் பற்றி எரிந்திடும் நீரின்
வெள்ளம் ஆவியாம் வெம்மலை உருகிடும்
கடலும் சுவறிடும் கானம் எரிந்திடும்
உடலும் வெந்திடும் அம்மவோ! அம்மவோ!
பாடெலாம் பட்டனர் பரம தயாநிதி
பாடெதும் இன்றிப் பாமரர் எளியேம்
ஞானச் செல்வம் நயந்தனம் நல்கினர்
வானக் கொடையை வழங்கினர் மாதவர்
அன்னையாய்த் தந்தையாய் அரியசற் குருவாய்
பின்னைமற் றெங்கள் பெருங்குல தெய்வமாய்
எல்லா மாகி இருந்தவ மாட்சிமை
சொல்லவல் லேனோ! சொல்லவல் லேனோ!
சிறியபுன் நாவால் செப்புதற் கியலேன்
வறியன்சொற் செல்வம் மிக்குளேன் அல்லன்
ஆயினும் ஆசை அடங்கிலேன் சாமி
தாயினும் மிக்க தயவுடைத் தெய்வம்
நாயினும் கடையேன் விழைவினை ஏற்றது
மாயிரு ஞாலத் துள்ளநாள் முற்றும்
பாடிப் பரவுவேன் பேதையேன்
நாடிப் போற்றி நற்சங் கூதுவேன்! (4)

மணி

தரவு கொச்சகக் கலிப்பா

ஊதுமினோ எக்காளம் ஓங்கொலியால் வாழ்த்திடுங்கள்
ஓதுமினோ வேதாந்தம் ஓசையிடு மின்மணிகாள்
வேதமுர சேஅதிர்ந்து மெய்ம்மணியின் சீருரைமின்
பாதமலர் மணிஒளியால் பவஇருள்தீர்ந் துய்யுமினே! (5)

பச்சை (மரகதம்)

வஞ்சி விருத்தம்

உய்யக் கேண்மின் இச்சை
வையும் இடையில் கச்சை
செய்யும் தடையோ பச்சை
ஐயர் அருளும் பிச்சை
(6)

கோமேதகம்

கலிப்பா

வனந்த னில்ஒரு மாதவச் சாலை
வித்து நாயகர்உத் யோவனச் சோலை
அனந்தர் ஆதியர் வணக்கமிக் காலை
அருண்மெய் கண்டவர் தோத்திரமாலை
இனங்கோ மேதகம் போல்உயர் சீலம்
இன்ப நாயகர் அருள்திருக் கோலம்
தினம்பு தியவர் திருத்தயை மூலம்
தெய்வ பாக்கியம் தந்திடும் சாலை
(7)

பதுமராகம்

அறுசீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

சாலையிற் பதும ராகம்
தெய்வமெய் உணர்வோர் மோகம்
சீலர்மெய்ஞ் ஞானத் தாகம்
சீருள மேபரி பாகம்
மேலைமெய் வழிமருந் துண்டு
மெய்தரி சனமே கண்டு
காலனை வென்றார் இன்று
கர்த்தாதி கர்த்தர் நன்று
(8)

வைடூரியம்

எழுசீர்க் கழி கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்

நன்றுவை டூர்ய நல்லொளி போன்ற
நற்றிருத்தாள் துணையுண்டு
வென்றெம படரை வெற்றிமேடேற்றும்
மாதவர் தரிசனை கண்டு
என்றுமெண் டிசையும் எந்தைநற் புகழை
எடுத்திசைப் பதுஎன்றன் வேலை
குன்றுடை யார்எம் குலதெய்வம் கோயில்
கொண்டது மெய்வழிச் சாலை.
(9)

சிவரத்தின மாலை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!