திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/011.திரு இரட்டைமணி மாலை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.11. இரட்டைமணி மாலை[தொகு]

இலக்கணம்:-

இருவேறு வகைப்பட்ட மணிகளை ஒன்றன்பின் மற்றொன்று என்ற முறைமையில் வைத்துக் கோக்கப் பெற்ற மணிமாலை போன்று இருவேறு வகையான யாப்புகள் ஒன்றன்பின் மற்றொன்று எனத் தொடர்ந்து வருமாறு பாடப்பெறும் இலக்கியவகை இஃதாதலின் இரட்டை மணி மாலை எனப்பெயர் பெறுவதாயிற்று.

வெண்பா முதலாகக் கலித்துறை பின்வரும்
இந்த இருப திரட்டைமணி மாலை.
- பன்னிரு பாட்டியல் 151
ஆதி அந்தம் வெண்பாக் கலித்துறை
ஏதம் இன்றி வருவது இரட்டைமணி மாலை
அதுவே நாலைந் தியலும் என்ப
- பன்னிரு பாட்டியல் 86
கருதும் வெண்பாக் கலித்துறை விரவி
இருபது வழுத்துவது இரட்டைமணி மாலை
- பிரபந்த மரபியல் 8
இருபஃ தந்தா தித்துவெண் பாவும்
கட்டளைக் கலித்துறை யுங்கலந் துரைத்தல்
இரட்டை மணிமாலை யென்மனார் புலவர்
- முத்துவீரியம் 1049

இந்நூலின் பாட்டுடைத் தலைவர் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் இருபது பாடல்களும் அந்தாதியாய் வர யாக்கப்பெற்றுள்ளது. (கட்டளை கலித்துறையும் நேரிசை வெண்பாவும் முறையானே இருபது அந்தாதித் தொடையால் பாடப்பெற்றது)

திரு இரட்டைமணி மாலை

காப்பு

நேரிசைவெண்பா

அருண்மணியென் அன்னை திருமணித்தாள் போற்றி
இருமணியால் மாலைபுனைந் தேத்தப் - பொருளைத்
தருமணியே! எந்தன் குருமணியே! வேண்டில்
வருமணிநின் மென்மலர்த்தாள் காப்பு!

நூல்

கட்டளைக் கலித்துறை

அம்மா! அருள்மார்க்க அன்னாய்அம் போருகப் பொற்பதங்கள்
எம்மா ருயிர்க்குள் எழில்நடம் செய்திட ஈடிணையில்
சும்மா யிருக்கும் சுகோதயம் பொங்கிடும் சீரனந்தர்
தம்மோ டிருக்கத் தயைசெய் தயாபரி தாள்தஞ்சமே! (1)

நேரிசை வெண்பா

தஞ்சம் எனஅடைந்த தற்பரரைத் தாமேற்று
வஞ்சஎமன் வாதனைதீர் வாசுகியே! - வஞ்சமிலா
நெஞ்சகமே கோவில்கொள் நேரிழையே! அஞ்சுகமே!
பஞ்செனப்போம் பாழ்வினை இன்னே! (2)

கட்டளைக் கலித்துறை

இன்னே இனிய இதந்தந் திறவாப் பதந்தருமெய்
அன்னே எனது அழுக்கா றிதயம் அதுமுமது
பொன்னா ரனிச்ச மலரடி ஏறத் தகுதியின்றே
தன்னே ரிலாநின் தயவது ஏன்றது தாயுளமே! (3)

நேரிசை வெண்பா

உளமே புகுந்தென் உயிர்க்கமுதம் ஈந்த
வளமே! வளரும்பே ரின்பக் - களமே!
நலமே! எனக்களிக்கும் நற்றாளைப் போற்ற
வலமேயென் நாவில் அருள். (4)

கட்டளைக் கலித்துறை

அருள்வாய் அடியார்கள் ஆழ்வர்கள் நின்றன்மெய் யான்றபுகழ்
திருவோங்கப் போற்றியே செப்பிய நாற்கவி சொல்லவெற்குப்
பொருள்வாய் தருவாய் பொன்னரங் கேறிய மார்க்கமணிக்
குருவாய் எழுந்தனை கோமதி வான்புகழ் கூறுதுமே! (5)

நேரிசை வெண்பா

கூறற் கெளிதோ குலதெய்வ தேவி!இங்(கு)|r}}
ஆறைந்தும் மூன்றெட்டாய் ஆனவளே - மாறாத
பத்துவய தானகன்னி பாரனைத்தும் ஈன்றளித்த
வித்தகிமெய் வேதமுதல் நீ! (6)

கட்டளைக் கலித்துறை

நீயே அனைத்துள் நிறைந்தாய் நின்னுள் யாவும்கொள்
வாயே வனிதா மணியே! ஒளியே! அணியழகே!
தாயே தவவான் மகளே! தலைவீ! சீர்தனிகைச்
சேயே உயிர்க்குப் புகலே! திருவே! ஓர்கதியே! (7)

நேரிசை வெண்பா

கதியாய் எனக்கு விதியாய் மதியாய்
பதியாய் விளங்குபரா சக்தி - நிதியாய்
புதிதாய்த் தினம்பூக்கும் பொன்மலர்வான் கங்கா
நதியான போகாப் புனல். (8)

கட்டளைக் கலித்துறை

போகாப் புனலாகப் பொற்றாள் தனிலே சார்ந்ததனால்
வேகாகத காலாக விண்ணோர் தலைவிக் கடிமையுடை
சாகாத் தலையாகச் சாயுச் யமதில் நிலையாக்கும்
ஏகாப் பெரிய நிலைதனக் கேற்றிடும் மெய்த்தாயே! (9)

நேரிசை வெண்பா

தாயே தனிப்பேர் தயவாலே உய்யவைத்
தாயே அனைத்துயிர்க் கும்அருள் - வாயே
திறந்து வரம்வழங்கும் தெய்வமே! ஞாலத்(து)|r}}
அறந்தருநின் அம்பொற் பதம் (10)

கட்டளைக் கலித்துறை

பதமலர் நோகப் படிமிசைப் போந்த பரம்பொருளே!
இதமிக என்பால் இரங்கிலை யேல்என் கதியென்னாம்
சதமெனும் செல்வம் திருவடிப் பேறே! சகத்தினிலே
அதமிக வேபுரி ஏமன் இடர்தவிர் ஆரணங்கே! (11)

நேரிசை வெண்பா

ஆரெனக்கு உற்றார் அகங்கனிந் தாதரித்துச்
சீரெனக்குத் தந்த திருமகளே! - பாருலகில்
சாவாமை சாயுச்யம் தந்தாளும் நின்தாளை
ஓவாது போற்றல் பணி. (12)

கட்டளைக் கலித்துறை

பணியென்ப துன்னைப் பராவுதல் சாலைப் பராசக்தியே!
அணியென்ப துன்றன் அம்போ ருகப்பதம் என்சிரத்தே
மணிநின்ற பேரொளி ஆரெழில் மாதேநின் ஆரமுதால்
தணிகின்ற தாபமூன் றும்பிற விப்பிணி தாய்ஆதியே! (13)

நேரிசை வெண்பா

ஆதிநின் தாளுக் கணிகலன்கொள் என்னுயிரை
நீதித் திருவுருவே நித்தியமே - மேதினியில்
பற்றென்ப துன்தாளைப் பற்றுதலே ஏழையெற்கு
மற்றுப்பற் றில்லாமற் செய் (14)

கட்டளைக் கலித்துறை

செய்யாமற் செய்ந்நன்றிக் கென்கட வேனென தாருயிரை
ஐயாறு சேர்கென ஆண்டனை அன்னாய் அகிலவர்க்கு
மெய்யாறு தந்து மயக்கம் தவிர்த்தனை மாதவமே!
உய்யாறு உன்திரு நாமம்ஓ வாதுரைத் தின்புறலே! (15)

நேரிசை வெண்பா

இன்ப வடிவம் எனக்கருளும் ஏந்திழையே!
அன்பே வடிவான அன்னையே! - தென்போங்கச்
சிந்தை குடிகொண்ட தேவாதி தேவியே!
விந்தைஎனை யும்ஆண்ட தே (16)

கட்டளைக் கலித்துறை

தேவியண் டாண்டம் கடந்தொளிர் பேர்வடி வம்உடையாய்
ஆவிநின் றேயிலங் கார்பளிங் கன்னாய் அணுவிலணு
கூவிநின் றிந்தக் குவலயம் உய்கரு ணைக்கடலே!
நாவில்நின் றுன்சீர் நவிலத் திறன்அருள் நாயகியே! (17)

நேரிசை வெண்பா

நாயகியே! நற்றாள் நடஞ்செய் தமுதருள்செய்
தாயகமே! வான்மெய் தருதயவே! - தூயகத்தே
என்றும் பரிமளிக்கும் ஈடிணையில் கற்பகமே!
பொன்றாத வாழ்வளித்தாய் போற்றி! (18)

கட்டளைக் கலித்துறை

போற்றி வணங்கினேன் பொன்னரங் கம்மா!நின் பூம்பதமே
ஏற்றி இறைஞ்சிநின் னார்திரு நாமம்ஓ வாதுரைசெய்(து)
ஊற்றெழும் கண்ணின்நீ ராலபி டேகம் உடற்றிடுவேன்
மாற்றறி யாப்பசும் பொன்னெனும் அன்னையை வாழ்த்துவனே! (19)

நேரிசை வெண்பா

வாழ்த்தி வணங்கல் எனதுபணி வானமுதில்
ஆழ்த்தி அரவணைத்தல் நும்தயவு - பாழ்த்த
வினைகெடுத்த வேணியரே! மெய்த்தாயே! என்றும்
நினைப்புகழ ஆற்றல் அருள். (20)

திரு இரட்டைமணி மாலை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!