திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/058.அறிதுயிலெடை நிலை

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.58. துயிலெடை நிலை[தொகு]

இலக்கணம்:-

மன்னன் ஒருவன் தன் பள்ளியறையிலோ அல்லது பாசறையிலோ இன்துயில் கொண்டிருக்க, தண்ணெனும் இனிய விடியற் பொழுதில் அவனைத் துயில் எழுப்ப வேண்டிப் பாடுவது துயிலெடை அல்லது துயிலெடைநிலை என்பதாம்.

துயிலெடை நிலையே தோன்றல் பாசறையில்
வயவரை வென்று மகிழ்ந்துசெய் துயிலினைச் 
சூதர் புகழ் பாட்டால் துதித்து எழுப்புதல்
- பிரபந்ததீபம் 61
தாவில் நல்லிசை கருதிய கிடந்தோர்க்குச் 
சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்
- தொல்காப்பியம் பொருளதிகாரம் 88
அடுதிறல் மன்னரை அருளிய எழுகெனத்
தொடுகழல் மன்னனைத் துயிலெழுப்பின்று
- புறப்பொருள் வெண்பாமாலை; கொளு 197
சூதர் வாழ்ந்த மாகதர் நுவல
வேதா ளிகரொடு நாழிகை இசைப்ப
இமிழ்முர சிரங்க பேறுமாறு சிலைப்பப்
பொறிமயிர் வாரணம் வைகறை இயம்ப
- மதுரைக்காஞ்சி 670 -673

மன்னரைத் துயிலெழுப்புவதாகப் பாடப்பெற வேண்டிய துயிலெடை நிலை விண்ணவர் தலைவரைத் துயில் எழுப்ப பக்தி இயக்க காலத்தில் பயன்படுத்தப்பட்டது. எம்பெருமான் ஊண் உறக்கம் அற்றவர்கள். ஓயாத்தவத்தில் உற்றவர்கள். பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களை அனந்தாதி தேவர் என்னும் சிரோபூஷணம் அணிந்தவர்கள் தவத்திலிருந்து எழுப்புவதாக இத்திருப்பள்ளி எழுச்சி பாடப்பெற்றுள்ளது.

அறிதுயிலெடை நிலை (திருப்பள்ளியெழுச்சி)

காப்பு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியச் சந்த விருத்தம்

இமையவர் தலைவரென் இறைகுரு வாகும்
எழில்மல ரிணையடி துணையென லாகும்
எமையொரு பொருளெனத் திருவுள மேற்கும்
இதுபெரு பரிசென எமதுயிர் ஏற்கும்
தமையுணர் திறம்தரு தனிகையர் செல்வர்
தளிரடி பணிபவர் மறலியை வெல்வர்
உமைமல ரணையினின் றெழுகென விழையும்
உரைமணிக் குமதருள் காப்புயிர் தழையும்

நூல்

ஒளிவிரி கதிர்குண திசையினில் உதயம்
உலகிருள் விலகிடும் மலர்ந்ததெம் இதயம்
களிமொழி யமுதருள் கலையர சுமையே
கதிபெற வணங்கிடப் பணித்தனிர் எமையே
துளியருட் தரிசனை பவவினை விலக்கும்
சுடரொளி திருமுகம் அறிவினைத் துலக்கும்
வெளிவர விழைந்தனம் தவகுகையிருந்தே
மெய்வழி தெய்வமே! ஆருயிர் மருந்தே!
(1)

அலைகட லெனத்திரள் அனந்தர்கள் வணங்கும்
அமிழ்தென மான்மியம் ஓதியிங் கிணங்கும்
தலைவர்நும் சன்னிதி திருமுனர் பணியும்
தவவரம் தருகெனப் பதம்சிரம் அணியும்
பலமதம் குலமிவண் சமரச மாகும்
படர்செறி பிணக்குகள் விலகியே ஏகும்
கலைமணி யேதவ தரிசினை தாரும்
கண்ட வற்றேஎம துயிர்களி கூரும்.
(2)

மறைபல மந்திரம் திருவுருக் காட்டும்
மனவிரு ளிரிந்திடும் மதிதெளி வூட்டும்
துறையிது மெய்வழி தொடர்பவர் வாழ்வர்
தோத்தரிப் போர்பெரும் இன்பத்தில் ஆழ்வர்
சிறையெனும் பிறவியின் பிணிதனை மாற்றும்
ஜென்மசா பல்யமாம் திருவினில் ஏற்றும்
இறைவர்மெய் வழியர சேயெழுந் தருள்வீர்!
எமதுயிர் செழித்திடு மொழிஅமு தருள்வீர்!
(3)
கூவிடும் குயில்களும் கிளிகளும் கொஞ்சும்
களிமயில் அகவும்புள் ளினக்குரல் விஞ்சும்
தேவ! நின் மறைமணி ஓதிடும் வாயர்
திருவுயர் அனந்தர்கள் அமரர்கள் நேயர்
ஆவிநின்றே யொளிர் ஆண்டவர் பாதம்
அண்டின பேர்க்கிலை என்றுமே சேதம்
தேவதே வேதிரு தரிசனம் வழங்கும்
திவ்விய நாமமெய் வாய்கள் முழங்கும்
(4)

தவவிர தரும்எக் காளமும் ஊதும்
துந்துமி எழும்எழும் என்றொலி மோதும்
தவமணி ஓம்ஓம் எனஒலி முழங்கும்
தாளங்கள் கிண்கிணி ஓசை வழங்கும்
சிவகுரு வரதரென் மெய்வழி தெய்வம்
திருவருள் பெறவரு ஜீவர்கள் உய்வம்
பவமற தவதரி சனைதனைத் தருக!
பரப்பிரம்ம மேசாலை ஆண்டவர் வருக! (5)

தரிசனை பெறவரும் அறமிளிர் அனந்தர்
தவவணக் கப்பலன் பெறவுமு னைந்தார்
அரியயன் சிவன்ஒரு திருவுரு வாகும்
ஆண்டவர் ஆலயம் சாலையி தாகும்
தெரிவுறு எங்குல தெய்வமெய் யிறைவர்
சிந்தையி லென்றுமே நீங்காது உறைவர்
அரிதரி தாம்திரு தரிசனை வேண்டும்!
அற்புதக் கற்பக மேஎன வேண்டும்!
(6)

வழிவழிச் சந்ததி உங்களைத் தொழுவார்
வானவர் அனந்தர்கள் என்றவர் எழுவார்
முழுமுதல் இறைதரும் மெய்ந்நிலைப் போதம்
முனிவரர் தொழுதெழும் மறைமணி யோதும்
அழிவிலா நித்தியர் அமுதர்பொன் னரசர்
அனைத்துயிர்க் குயிரெனும் அரியவிண்ணரசர்
எழில்பொழி குருகுல தவமணி மேரே!
எழுந்தருள் தரிசனம் தந்தருள் வீரே!
(7)

ஆடகப் பொன்மணிக் கதிர்கள் புலர்ந்து
அழகொளிர் இறைபத மலர்கள் மலர்ந்து
கூடக உயிர்மணி உயர்நலம் உறவே
குலகுரு மெய்வழி இறைவர்வந் துறவே
ஈடிலா தவப்பெருந் துறையின்பொன் னரசே
இனியமெய் வழிபடர்ந் திடுஞான முரசே
தேடிவந் துமைப்பணிந் தனம்எழுந் தருள்வீர்
தினமும்நும் தரிசனை பெறவரம் அருள்வீர்
(8)

பொலிந்தது கதிர்குலம் ஒளிர்ந்தது உலகம்
புகுந்துமெய் மலர்ந்தது விடிந்தவிண் ணுலகம்
வலிந்தென துளம்புகுந் தாண்டமெய் மணியே
வரந்தரு திருவினர் வழங்கிடும் அணியே
மலிந்தழிந் தொழிந்தது வல்வினை சாபம்
மகிழ்ந்தனந் தர்கட்குத் தீர்ந்தது தாபம்
நலந்தரு பொன்னரங் கரசரே! எழுமின்
நம்புநல் அனந்தர்கள் முகங்களில் விழிமின்!
(9)

வாழிய சாலையர் திருவரு ளாட்சி
வளர்கமெய் வழிக்குல உயிர்பெறும் மீட்சி
வாழியஉல கெலாம் தெய்வமொன் றென்றே
மதம்குல இனப்பிணக் கினியிலை நன்றே
வாழிய மெய்வழி ஆண்டவர் தயவே
வந்தருள் தந்தனர் மன்னுயிர் உயவே
வாழிய நித்யமெய் மன்பதை எங்கும்
வருகவே திருவருட் பேரின்பம் பொங்கும்!
(10)

அறிதுயிலெடை நிலை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!