திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/087.திருப்பெருமங்கலம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
✫ 87. பெருமங்கலம்[தொகு]

இலக்கணம்:-

ஒர் அரசன் தான்பிறந்த நாளன்று அருள்சுரந்து சிறையில் உள்ள மக்களை விடுதலை செய்து புரக்கும் சிறப்பினை எடுத்துக்கூறுவது பெருமங்கலம் எனக் கூறலாகிறது.

சிறந்த நாளின் செற்றம் நீக்கிப்
பிறந்த நாள்வயின் பெருமங் கலமும்
- தொல்காப்பியம் -பொருளதிகாரம் -88
அறந்தரு செங்கோல் அருள்வெய் யோன்
பிறந்தநாள் சிறப்புரைத் தன்று
- புறப்பொருள் வெண்பாமாலை :கொளு -211
பெருமங்கலமே பெரும்பயன் நாட்களில்
சிறைவிட் டொழிக்கும் சிறப்பினைச் செப்பலே
- பிரபந்த தீபம் -90

இவ்வுலக அரசர்களின் அரசும் அருளும் ஆட்சியும் மாட்சியும் அனித்தியம் (நிலையற்றவை). கால வரையறைக் குட்பட்டவை. ஆயின் பொன்னுலக அரசரின் பூரண ஞானச்செங்கோலாட்சியின் அரச நியதியும், திருவருளும், திருவாட்சியும் மக்களை இன்றும், என்றும் சிறையினின்று விடுவிக்கும் திருவருளைப் புரிந்துகொண்டேயிருக்கும். அத்தகையர் பிரம்மப் பிரகாச மெய்வழிச் சாலை ஆண்டவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இப்பனுவல் யாக்கப்பெற்றுள்ளது.

திருப்பெருமங்கலம்

காப்பு

நேரிசை வெண்பா

வருமெங் குலதெய்வ வானரசே! தங்கள்
பெருமங்கல மினிதே போற்ற - அருட்தாள்
திருமங்க லம்மெய் தருமங்க லம்வான்
குருமங் கலம்என்றும் காப்பு

நூல்

நேரிசைக் கலிவெண்பா

வானோங்கு வள்ளலெம்மான் பொன்னரங்கர் தாள்வாழ்க
தேனோங்கு வாக்கமிர்தச் சீர்வாழ்க! - கானோங்கு
சாலை வளநாடர் தங்களரும் பேர்வாழ்க!
கோலந் திகழ்மெய்ச்செங் கோல்வாழ்க! - காலங்கள்
கண்ட தனிகைவள்ளல் தந்தமுத்துப் பெட்டகமே!
விண்டெமக்கு மெய்யை வழங்கரசே! - பண்டு
பழுத்தமறை சீரோர் வழுத்துமறை தர்மம்
கொழுத்தமறை மெய்வழியில் எம்மை - இழுத்தமர்த்தி
வம்பில் பதம்வழங்கித் தெம்பும் திடனளித்த
செம்பொற் றிருத்தாளே வாழியரோ! - பைம்பொன்னார் (10)
மேனியரே! மேலவரே! மாதவர்கள் கோனவரே!
ஞானியரைக் கானகத்தில் நன்றிருத்தி - வானறம்செய்
தேவாதி தேவா! திருக்கயிலை வாசரெனும்
மூவா முதல்வயெங்கோன் மூத்தவரே! - சாவா
வரமருளும் எம்சாமி மாமணியே! - வள்ளால்!
பெருமங்க லம்புகலப் போந்தேன் - தருமங்கள்
ஒன்றி இணைஉருவே! உத்தமரே! என்னாவில்
நன்றிருந்து பாடுவிக்க நாடிநின்றேன் - அன்றொருகால்
தேவ மகாசபையில் தீர்மானம் செய்தவண்ணம்
பூவுலகில் போந்தருள்செய் பொன்மனத்து - நாவரசே! (20)
கொங்குத் திருநாட்டில் குருசெய்க் குலமகனார்
தங்கம் ஜமாலுசேன்பேர் சற்சனர்க்கும் - துங்கஎழில்
மானனையாள் மாது பெரியதாய் அன்னையாம்
தேனனைய செம்மொழியாள் தேவிக்கும் - வான்பரிசாய்
ஆர்கலியில் அம்புவியில் ஆருயிர்கள் தாமுய்ய
மார்கழி மாதம் நிறைநாளில் - சீர்ஒளிரக்
கோழிகூ வும்வேளை கூடிநின்று வானோர்கள்
வாழிவா ழியென்று வாழ்த்திசைக்க - ஆழியெலாம்
ஐயா! வருகென் றலையோசை ஆர்ப்பரிக்க
மெய்யா வருகவெனப் புள்ளிசைக்க - துய்யவர்கள் (30)
கந்தருவர் மாமுனிவோர் கிம்புருடர் கின்னரர்கள்
வந்தொருங்கு கூடி வழுத்திநிற்க - முந்திக்
கதிரோன் கிரணக் கரத்தால் வணங்க
மதியம்மேல் வானின்று வாழ்த்த - பதியவரே!
என்றும் புதியவரே! எங்கள் கதியவரே!
பொன்றா நிதியவரே! பூத்தெம்முள் நின்று
வளர்கருணை வாரிதியே! வாழியமெய்க் குன்றே!
தளர்வறியாத் தானவரே! ஞானம் - கிளர்ஒளியே!
சாதிகளின் கர்த்தாவே! சற்சனரே! வாழியென
நீதியொடு நற்குலங்கள் நின்றிசைக்க - மேதினியில் (40)
எல்லா மதங்களுமே எம்பெருமான் வாழியென
பொல்லாப் பிணக்கொழிக்கப் போற்றிசெய - நல்லாற்றின்
வையம் செழிக்கவந்த மெய்வழியை, மெய்ம்மதத்தை
ஐயா! தருகவென ஆர்ந்திசைக்க - மெய்யாக
மெய்யாக மந்திரங்கள் யாவும் ஒருங்கிணைய
துய்யத் திருவோங்கத் தோத்தரித்து - உய்யவென
வந்து அவதரித்த மாதவரே! மாமேரே!
சிந்தை நிறைந்திலங்கும் தேசிகரே! - எந்தாயே!
மாசு மறுவில் மதிமுகத்தை ஓரொருகால்
தேசு நிறையத் தரிசித்தோர் - தூசாய் (50)
இருவினையும் தீர்ந்து திருவிளையும் மெய்யாம்
பொருள்விளையும் தங்கள் அருளார் - குருபலமும்
தங்கும் தவமாட்சித் தண்ணளியும் ஓங்கும்
பொங்கும்பே ரின்பவெள்ளம் போதருமால் - எங்களையர்
சின்னஞ் சிறுவயதில் செல்லம் வளர்ந்தோங்கி
இன்னினிய கல்வி இனிதுகற்று - நன்னயமாய்ப்
பெற்றோர் உளமுவப்பப் பேராளர் - கோகுலத்தை
நற்கோல் பிடித்து நனிமேய்த்தீர்! - நற்றேவே!
சீராகத் தாம்வளர்ந்து தேர்ந்து பலகலைகள்
பேராளர் தாம்கற்றுப் பேரழகாய்ப் - பாரோர்போல் (60)
நன்மணமும் கொண்டீர்கள்! பொன்மகவும் ஈன்றெடுத்தீர்!
பொன்மனத்தில் பேர்செல்வம் தான்பெருக்க - வன்மையதாய்
எண்ணமது கொண்டு இயல்வானி கம்செய்தீர்
வண்ணமதாய்ச் செல்வமுற்று வாழ்ந்திருந்தீர் - அண்ணலவர்
வான்தனிகை வள்ளல்பிரான் வந்துமக்கு வான்செல்வம்
தான்தரவும் தான்பெற்ற பேரின்பம் - ஊன்உருகத்
தீரத் துறவுகொள்ளச் சிந்தைசெய்து ஒட்டிநின்ற
பேராத பாசத்தைப் பேர்த்தெடுத்து - சீராரும்
அன்புமனை செல்லமகள் ஆர்ந்தசுற்றம் தான்துறந்து
இன்பமெலாம் தீங்கெனவே எற்றிவிட்டுத் - தன்பெருமான் (70)
பின்தொடர்ந்து சென்றீரே பேராளா! வான்வரங்கள்
முன்அடர்ந்து நும்முளத்தே மிக்கேற - பொன்படர்ந்த
நன்மேனி நற்றகையர் நல்லாசான் கட்டளையால்
தென்னன் மறிமேய்த்த தென்புகல்வேன் - இன்மொழியால்
பொன்பரங்குன் றேறிப் புரிகதவம் என்றுரைப்ப
தன்பரன்சொல் தானேற்ற தண்ணளியர் - என்புருகச்
செய்த தவத்தின் சிறப்புரைக்க வல்லாரார்
எய்ததவச் சன்னதங்கள் எண்ணரிய - உய்திபெற
வையகத்தோர் பெற்றோங்க வான்வரங்கள் - தந்தருள
ஐயருமக்(கு) அன்பாணை யிட்டார்கள் - செய்யதிரு (80)
பொன்மனத்தார் பாட்டையர் தன்பிரிவால் தான்கலங்கி
தன்னந் தனியேகித் தான்பட்ட - இன்னல்கள்
எண்ணிலவாய்ப் பெற்று எதிர்ப்புகளெ லாம்வென்று
மண்ணவரை வானவராய் மாற்றிவிட்ட - அண்ணல்
திருப்புத்தூர் தன்னில் திருமணமும் தான்கொண்டீர்
அருட்பெற்ற மக்கள்பலர் ஆகப் - பெருக்குற்றார்
அம்மையொடு ஹஜ்யாத் திரைநைமி சாரண்யம்
செம்மைமிகச் சென்றுவந்தீர் தேவேநும் - மெய்ம்மையது
ஓங்கிடுங்கால் தீயோரால் உள்ளமது நைந்தீர்கள்
பாங்காகத் தென்மதுரைப் பட்டணம்சார்ந்(து) - ஆங்குப் (90)
பரன்மேட்டில் பொன்னரங்கம் ஸ்தாபித்துப் பண்போங்க
அரன்நீர் அதிலாட்சி செய்தீர் - உரமாக
ஆங்கில நாட்டார் அமர்செய்ய ஆலயத்தைத்
தாங்களே கொண்டிடவும் தாம்விழைந்தார் - தாங்கள்
மலைப்புற்ற போதும் மாற்றுவழி யின்றி
விலைபெற்று வேற்றூர்சென் றாய்ந்து - நிலைபெறவே
ஊழிவிதி கூட்டயிந்த ஊரல்மலைச் சாரல்வந்து
ஆழிவாழ் ஐயர் அமர்ந்தீர்கள் - வாழ்வளிக்க
நீதியர சாட்சி நிகழ்த்தினீர் எங்கோமான்
ஆதியர சாட்சி அதுபுரிந்தீர் - மேதினியில் (100)
ஆணவம்மா யைகன்மம் என்னும் அரக்கரெலாம்
வேணபடி மாந்தர் தமைப்பிடித்து - வீணாக்கும்
காமம்கு ரோதம்மோ கம்மதம் மாற்சரியம்
தீமைமிகு லோபமெனும் வல்லரக்கர் - சேமம்
குறைக்கும் கொடுவழியால் காசினியுட் புக்கு
சிறைக்குள் மனுக்குலத்தைத் தேக்கும் - மறைக்கும்
சாதி மதவெறிகள் தாம்புகுந்து மாந்தர்களைச்
சேதப் படுத்தினர்காண் அக்காலம் - நீதிமன்னர்
சாலைதெய் வம்வந்து தங்கள் தபோபலத்தால்
மேலே குறித்த கொடியவரைக் - கோலம் (110)
சிதைத்தீர்கள் மெய்யை விதைத்தீர்கள் - தாளால்
உதைத்தீர்கள் தீங்குகளை மண்ணில் - புதைத்தீர்கள்
சாமி அவதரித்த நாள்தொட்டு இப்பெரிய
பூமிதனில் பொய்யருகி மெய்யோங்கும் - நேமியரால்
எல்லோரும் நல்லோராய் ஏற்றமுற்றார் - நல்லாற்றால்
வல்லாராய் எல்லாரும் வாழ்ந்திருந்தார் வையகத்தில்
இல்லாதார் கல்லாதார் இல்லானார் - தொல்லுலகில்
சாவுக்குச் சாவு மணியடித்து நித்தியமெய்
மேவக் கொடிநாட்டி மண்ணகத்தில் - தேவகுலம்
பூவுலகில் ஓங்கிடவும் பொன்னுலகம் ஈங்குறவும் (120)
ஆவனவும் செய்தீர்கள் ஆண்டவர்கள் - சேவடியைப்
போற்றிப் பணிந்தோர் பிறவிப் பிணியற்றார்
ஏற்றி இறைஞ்சினோர் ஈனமெலாம் - மாற்றமுற்றார்
வில்வேல் தண்டாயிதமும் சூல்கொண்டு வெம்பகையை
வெல்வார் கொடுமைகளும் வீய்ந்தழிய - சொல்வாக்கே
செல்வாக்காய் எண்டிசையும் ஏற்றமிகு - நல்வாக்கால்
வேதம் விளங்கா மறைந்திருக்க மெய்யாம்
போதம் துலங்கிடவும் செய்தீர்கள் - மாதவரே
மந்திரங்கள் எல்லாமே தன்திறந்தோற் றம்காட்டி
மன்திறமாய் நின்றனகாண் வானவர்கோன் - நும்திறத்தால் (130)
சாதிகளும் சத்தியமாய் நித்தியமாய் ஒத்தனகாண்
நீதிநிறை சர்வமதம் ஒன்றாகி - ஆதிமதம்
தோற்றம் கொடுத்ததுகாண் ஏற்றம் பொலிந்துகொடும்
கூற்றம் அழிந்ததிந்தக் கோனிடத்தே - மாற்றம்
நிகழ்ந்ததுகாண் இப்பெரிய நீள்புவியில் மெய்ம்மை
திகழ்ந்ததுகாண் என்சாமி சீர்மை - புகழ்ந்ததுகாண்
என்சிறுநா என்னிறையே ஏரார்நும் மாட்சிசொலல்
தன்தொழிலாய்க் கொண்டதுகாண் தேர்ந்து. (138)

திருப்பெருமங்கலம் இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!