திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/017.கலியை வெல் உழிஞை மாலை
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
✫17.உழிஞை மாலை
[தொகு]மாற்றரசன் ஒருவன் தம் நாட்டு மதிலை முற்றுகையிட, மதிலுக்குரிய அரசன் உழிஞை (சிறுபூளைப்) பூவைச் சூடி மாற்றரசனை எதிர்த்துப் பொருது வென்று அக்கோட்டையைக் கைப்பற்றிக் கொள்ளல் உழிஞையாகும். இது குறித்துப் பாடுதல் உழிஞை மாலை.
முழுமுதல் அரணம் முற்றலும் கோடலும் அனைநெறி மரபிற்று ஆகும் என்ப - தொல்காப்பியம் -பொருளதிகாரம் 66
மாற்றா ரூர்ப்புறம் வளைதர வுழிஞை வனைந்து காலாள் வளைப்பது கூறல் உழிஞை மாலையா முணருங் காலே - முத்து வீரியம் 1076
மருவலர்க ளூர்ப்புறஞ் சூழவே யுழிஞைப்பூ மாலைசூ டித்தானையான் மதியினை யூர்வளைந் தாலென வளைப்பதை வழுத்தலே யுழிஞை மாலை - பிரபந்த தீபிகை -17
உழிஞை மாலையே ஒன்னலர் ஊர்ப்புறம் ஒருங்குடன் வளைக்க உழிஞைத்தார் சூடிப் படைசெலும் பண்பைப் பகர்தல் என்ப - பிரபந்த தீபம் -13
எப்பாட் டானும் முஃபதியம்பின் அப்பெயர் வர்க்கத்து அவ்வம் மாலை - பிரபந்த மரபியல் -17:9 -10
உலகியல் இச்சைகள் என்னும் மாயையை வென்று தெய்வீக நன்னாட்டத்தில் ஈடுபடச் செய்யும் போர் ஒன்றுள்ளது. அதனைச் செய்து ஒழுக்க சீலர்களை உருவாக்க பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் செய்யும் அறப்போர் இதுவா மென்க.
கலியை வெல் உழிஞை மாலை
காப்பு
கலி விருத்தம்
எழில்பொ ழிதரு இன்பவ ரோதயர்
அழிக லியர ணைவளைத் தக்கலி
ஒழியப் பண்ணும் ஒருபெரும் போர்தனை
உழிஞை மாலைபா டப்பதம் காப்பிதே!
நூல்
கலிவிருத்தம்
கலி நிலை
உலகம் எங்கும் கலியன்கொ டுஞ்செயல்
கலகம் செய்யும்மக் கள்இடர் கொள்ளவே
இலகு மெய்ம்மை மயக்குறச் செய்துமே
நலங்கே டுற்றிடு மோர்நிலை யுற்றதே! (1)
கலியனின் அரண்
கல்சு தையிலா தேயியன் றமதில்
வல்க லியனின் வெல்லரி யஅரண்
இல்லை யாரும்இ தனைக்கைப் பற்றவே
வல்லன் என்று மனப்பால் குடிக்குமே! (2)
கலியாட்சியின் வாயில்கள்
கலிய னாட்சியே காசினி எங்குமே
வலிய பேரரண் வாய்த்து விளங்கிட
நலிந்து ஞாலம் நெறிமறந் திங்கணே
மெலிய லானது மெய்யுணர் பண்பெலாம். (3)
புரட்டு ருட்டுகள் பொய்ம்மொழி பேசுதல்
முரட்டுத் தீக்குணம் வஞ்சகம் கள்ளுணல்
இருட்டு ளம்புகை ஏற்றும் உயிர்வதை
பரட்டு முள்வனம் போல்வன பண்புகள். (4)
நீதி யர்க்கிடர் செய்யும் கொடுந்திறம்
ஆதி யைமறந் தல்வழி ஏகுதல்
பேதித் துள்ளம் புலைகொலை காமத்தால்
சேதிக் கப்பெறல் சீரழிந் தாழுதல். (5)
செய்ந்நன் றிமறத் தல்பிறர்க் கின்னலே
செய்தல் நம்பிக்கை துரோகம் இயற்றுதல்
ஐவழி யும்அ னீதத்துள் ஆக்குதல்
நைவ ழியினில் நானிலம் ஆழ்ந்ததே! (6)
மற்ற வர்மெச்ச வன்முறை கோலுதல்
பெற்ற வர்தமைப் பேணிடா ஈனமும்
கற்ற வர்க்கிடர் கண்ணிய மின்மையும்
நற்ற வர்சொல் நம்பிடாப் பாவமே! (7)
வெற்றி கைப்பெற வீண்வழி ஏகுதல்
நற்றி றம்மறந் தேநெறி மாறுதல்
குற்ற மேகுறி கீழ்க்குணம் கொள்ளுதல்
சொற்றி றம்புதல் தீமையே கைக்கொளல். (8)
மதவெ றிகளும் சாதிச்சண் டைகளும்
இதம்கெ டுத்துமே இன்னல் புரிந்தன
இதமு யிர்இறை சார்தலென் றெண்ணிலார்
மதமெ தற்கென வையகர் ஓர்கிலார். (9)
சாதித் துதெய்வத் தாள்மலர் சேர்தலே
சாதி யின்பொருள் என்றுநி னைந்திலார்
நீத மின்றிய சாதிக்க லவரம்
பூத லத்தினில் பொங்குதல் காண்மினே! (10)
மன்னா திமன்னர் மண்டியிட் டேபணிந்(து)|r}}
தன்சொல் தாண்டா தேபுகழ்ந் தேத்திட
என்னை யாரும்மி கைப்பா ரிலையென்று
தன்னுள் ஆணவம் கொண்டான் கலியனாம். (11)
இன்ன னம்பல ஈனச் செயல்களால்
மன்னன் வெங்கலி பன்கொடுங் கோலினான்
வின்னம் செய்தான் வியன்புவி எங்கணும்
மன்னுயிர்க் குயிர் வாழ்வுற லின்றியே. (12)
இங்ங னம்கலி ஆட்சினி கழ்த்துங்கால்
தங்க மேருஎன் தெய்வத் தயாநிதி
பொங்கு வான்புகழ் பொன்னரங் கையர்தான்
இங்கு அக்கலியை வெல மேயினார். (13)
புவனம் யாவும்ப டைத்தளித் தாள்கைசெய்
தவனெம் மெய்வழி தெய்வத் தனிப்பிரான்
அவனி பொய்க்கலி ஆட்சியின் மீண்டிட
அவத ரித்தனர் மெய்வழிச் சாலையில். (14)
அன்று தாங்கள் படைத்ததன் வண்ணமே
நன்று மக்கள் நலம்பெற ஓர்ந்தனர்
என்றும் எங்குமே ஈடில்மெய் மாதவர்
தென்றி சைக்கயி லாய பருவதர். (15)
மக்கள் பொய்யன் கலிப்பகை யின்கையில்
சிக்கிச் சீரழி கின்றனர் அன்னவர்
துக்கம் நீங்கிச் சுகமுயர் வாழ்வினில்
எக்களித்துளம் இன்புற வேட்டனர். (16)
வரம்பி லாற்றல்வ ரோதயர் எம்பிரான்
உரமி குதவ மாட்சியி னால்கலி
அரச னைவென்று வாகையும் சூடினர்
பரமர் மெய்வழி தெய்வம் பராவுவாம். (17)
திரிபு ரம்எரித் தார்சிரித் தென்னையர்
துரிய நற்பத மேகடந் தாள்பவர்
பெரியர் என்னாளும் எக்காலும் எங்குமே
அரியர் வெங்கலி யின்அரண் பற்றுமே! (18)
புண்ப டுத்திடு ஆயுத மின்றியே
பண்ப டுத்தினர் பாழ்கலி வீயவே
எண்ணி லாதவ சன்னதா லங்கிர்தர்
அண்ணல் செய்த அறம்மிளிர் போரிதே! (19)
அதிர வெற்றிநிச் சயித்துத் தொடங்கியே
உதிரம் சிந்திடா தேசெய்த போரிது
அதம்செய் தேகலி ஆட்சியை வீழ்த்தியே
இதய நாயகர் எம்பிரான் வென்றனர். (20)
நோக்கி னால்கலி யன்வலி நைந்தது
ஆக்கியோ னெங்கள் ஆண்டவர் ஆர்திரு
வாக்கி னால்மற லியமல் வீய்ந்தது
பாக்கி யம்அனந் தாதியர் பெற்றது. (21)
ஓர்எ ழுத்தெனும் மாத்திரைக் கோல்கொடு
சீர்அ ழுத்தினர் தெய்வத் தனிப்பிரான்
பார்மி சைப்படர் வெங்கலி யின்அமல்
தீர்ந்தெ ழுந்தது மெய்வழி ஆட்சியே! (22)
ஆதி யெங்கள் அருந்தவ மாமுனி
நீதி யாம்அர சோச்சினர் வெங்கலி
வேதி யர்திருத் தாளைவ ணங்கியே
மேதி னியினின் றேஓட லாயினன். (23)
தைபி றந்தது தெய்வவ தாரமே!
ஐவ ழியிடர் அஞ்சியொ டுங்கியே!
பொய் பறந்தது புன்மை யொழிந்ததே!
மெய்பி றந்தது மேதினி யுய்ந்ததே! (24)
வேத வேதியர் மெய்வழி ஆண்டவர்
பாத மூலம் பணிந்தவர் உய்ந்தனர்
பாத கன்கலி யாட்சிம றைந்தது
நீதி யாட்சி நிறைந்து ஒளிர்ந்ததே! (25)
ஐயர் பொன்னரங் கர்திரு ஆட்சியில்
பொய்க்க லியனின் புன்மை பொடிந்தது
செய்தி ருச்செயல் ஜென்மசா பல்யமே!
வைய மெங்கணும் மெய்வழி ஓங்கவே! (26)
திருமு கதரி சனைசெய் ஜீவர்கள்
இருவி னையற எய்தும் பெரும்பதம்
இருள்க லியினில் இல்லைபே ரின்பமார்
அருள்அ ரசர்மெய் ஆண்டவர் மாட்சியே! (27)
கலிய ரசனின் ஆட்சிஐ யாயிரம்
வலியர் கல்கிவந் துகிரே தாயுகம்
பொலியச் செய்தனர் பொன்னரங் கையர்காண்
நலிவி னியிலை நானில மாந்தர்க்கே! (28)
ஏழ்ச துர்யுகத் தும்கலி யாற்றலால்
வீழ்ம னுக்குலம் அல்லலின் மீண்டதே
வாழ்ம னுமகன் மெய்வழி ஆண்டவர்
சூழ்ந்து வெங்கலிக் கோட்டைகைப் பற்றவே! (29)
எல்லை யில்லா இடர்பிணி மாரணத்
தொல்லை தீர்ந்தது தெய்வத்த யவினால்
எல்லாம் வல்லவர் எம்பிரான் மெய்வழி
வல்லார் ஆண்டவர் வான்புகழ் வாழியே (30)
- மெய்வழி பக்தி இலக்கியங்கள்
- மெய்வழி அடியார்களின் படைப்புகள்
- சமய இலக்கியம்
- அகரமுதலான வரிசையில் படைப்புகள்
- இறையியல்
- சிற்றிலக்கியங்கள்
- திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108
- கவிதைகள்
- திரட்டு நூல்கள்
- 2017 படைப்புகள்
- பாடல்கள்
- தற்கால புலவர்களின் படைப்புகள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றிய 108 வகைப் பிரபந்தங்கள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் படைப்புகள்