திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/047.செய்ந்நன்றி சாற்று

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



✫ 47. செய்ந்நன்றி சாற்று[தொகு]

நூற் குறிப்பு:-

பதினெண் சித்தர்களுள் அழுகணி சித்தர் ஒருவர்.அப்பெருஞ் சித்தர் பெருமான் அவர்கள் தங்கள் குருகொண்டல் அவர்களின் அருட் செயலை நினைந்து நினைந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து, ஓவாத அன்பெழுங் கண்ணீரதனால் நனைந்து நனைந்து நிற்பது அவர்தம் தன்மையாயிற்றாகலான் அவர்கள் அழுகண்ணீர் சித்தர் என அழைக்கப் பெற்றார்களெனச் சான்றோர் கூறக் கேட்டதுண்டு.அவர்தம் பாடற்சந்தம் இதயத்தைக் கவர்வதாயிற்றாகலான் அச்சந்தத்தில் இப்பாடல்கள் இயற்றப் பெற்றுள்ளன.

காப்பு

ஆற்றிற் கிடந்தும் அதுகடக்கும் நற்றுறையாம்
மாற்றிப் பிறக்கும் வகைதருவார் மெல்லடியை
போற்றிப் பணிந்து பிறவியறச் செய்துரையை
ஏற்றி வரம்பெறவே என்புன்சொல் செய்ந்நன்றி
சாற்றிக் கவிபாடத் தாள்மலரே காப்பாமே!

நூல்

மேல வளச்சீல மெய்யாட்சி செய்யரசே
கோலஞ் சிறக்கஒரு குருமேனி கொண்டருளி
ஞாலம் புரக்க நயந்தீரே நாயகரே!
ஞாலம் புரக்க நயந்த திருவுளத்தால்
சாலையெனும் மெய்ப்பதியைச் சமைத்தீரே ஆண்டவரே! (1)

சீலம் நிறைந்தஎழில் சற்சனரை மக்களெனக்
காலம் கடந்த கலிக்கடையில் தேர்ந்தெடுத்து
வால குருஇறைசூல் வான்மெய் மருந்தளித்தீர்
வாலகுரு மெய்யளித்து வன்பிறவிக் கட்டறுத்தீர்
ஏலப்பசு மேனி எழில்கோவே ஆண்டவரே! (2)

வேதமெல் லாம்திரண்டோர் மேனிகொண்டு வையகத்தில்
நாதரென வந்து நற்புவியும் கற்பகமும்
போத மெலாம்வழங்கும் பொன்னாட்டு மாதவரே!
போதம் வழங்கியெமைப் புதுயுகத்தின் வித்தாக்கும்
சீத மலர்ப்பாதம் திருக்காப்பு ஆண்டவரே! (3)

நீதம் நெறிசமயம் நிகழ்த்தும் தவமனைத்தும்
மாதவர்நும் பொற்றாள் வழங்குமருள் பெற்றிடவே!
கோதற்ற மெய்ப்போதம் கொண்டுய்தி மிக்குறவே!
தீதகற்றும் மெய்யருளும் தவநாதா எங்கோவே
நாதிநுங்கள் பாதம் நாடிநின்றோம் ஆண்டவரே! (4)

அசைந்தசைந்து பொற்றேர் ஆடிவரும் சாயலென
இசைந்தமதி யில்தவழும் என்சாமி உங்கள்நடை
வசந்தருது மென்காற்று வழியுமெழில் தேனருவி
நிசந்தழுவி நெஞ்சகத்தில் நிற்குறையா அக்காட்சி
நிசக்காட்சி காணாமல் நெஞ்சழிந்தேன் ஆண்டவரே! (5)

இசைகனிந்த பண்ணே எழில்சிகரச் சித்திரமே!
வசையில்லா வானிதியே! மடைதிறந்த வான்கங்கை
திசைகடந்த திருப்புகழே! திருவோங்கு பாண்டியரே!
அசைவில் குணக்குன்றே! அருள்புரிவீர் ஆண்டவரே!
அருள்வேண்டி சாமியுங்கள் அடிபணிந்தேன் ஆண்டவரே! (6)

வஞ்ச எமன்படரும் மரணமென்ற வாதனையும்
நெஞ்சம் தடுமாறி நிலைகலங்கச் செய்யுதையா!
அஞ்சியுங்கள் பாதம் அடைக்கலமென் றேபணிந்தேன்!
அஞ்சா திருவென்று அபயம் அருள்புரிந்து

தஞ்சம் அளிக்கவென்று தாள்பணிந்தேன் ஆண்டவரே! (7)
வானமுதம் கொள்ளும் திருவாயால் வையகத்தே
தேனும்மா வப்பம் தெளிநீர்பால் தாதையோடு
கோன்அமுது கொண்டீர் குருமணியே! என்கோவே!
தீன தயாளரென்னும் தேவாதி தேவாநும்

மாணடிகள் போற்றி வணங்குகின்றேன் ஆண்டவரே! (8)
கானகம்உத் யோவனத்தில் கனதவத்துப் பொன்னரங்கில்
வானவரும் தானவரும் வந்துபணி மெய்ப்பதியில்
ஈனப் புலைக்கடையேன் எளியேனை ஏற்றீரே!
தேனமுதச் சிந்தைத் திருவினுக்கு என்கடவேன்

வானரசே பொற்றாள் வணங்குகின்றேன் ஆண்டவரே! (9)

மூவா முழுமுதலே! முத்தியருள் வித்தகரே!
தேவரெல்லாம் போற்றும் தவமேரே! ஆண்டவரே
ஜீவனெங்கள் சிந்தைச் சிம்மாசன மேறி
பாவ விமோசனம்செய் பாலிப்பு மிக்கருளும்
தேவாதி உங்கள்பதம் தோத்தரித்தேன் ஆண்டவரே! (10)

பொய்ப்பொருளைத் தேடிப் பேயாய் அலைந்தேற்கு
மெய்ப்பொருளைத் தந்தருளி விண்ணாட்டு வித்தாக்கி
உய்ப்பதற்க வதாரம் உவந்த தவத்தரசே!
எய்ப்பெனுமே மன்வருங்கால் இடர்கடத்தும் மெய்த்துணையே!
வைப்புநிதி நும்மலர்த்தாள் வணங்குகின்றேன் ஆண்டவரே! (11)

வேதம் விளங்காமல் மெய்யும் துலங்காமல்
பேதம் அறுக்காமல் பிறவிநோய் தீராமல்
சேதம் படவிருந்த ஜீவர்களை உய்வித்த
மாதவரே மாமருந்தே மணிமந்த்ர ஔஷதமே!
பாதம் பணிந்து சரணடைந்தேன் ஆண்டவரே! (12)

இருளிற் கிடந்து எமனுக்கே ஆளாகி
மருளைச் சுகமென்று மயங்கிக் கிடந்தேற்கு
அருளமுதம் ஈந்து அழியா வரமளித்த
குருநாதா! எங்கள் கோவே! கதிநிதியே!
அருட்தாள் அடைக்கலமே ஆதரிப்பீர் ஆண்டவரே! (13)

ஆவிநின்ற ஈசர் அருட்பதத்தைச் சாராமல்
பாவிஎமன் கையில் பலியாக நின்றேனை
தேவியருள் பாலித்துத் திருவருள்செய் மெய்த்தேவே!
ஆவியுங்கள் பாதம் அடைக்கலம்காண் ஆண்டவரே!
பூவடிகள் போற்றிப் பணிந்துநின்றேன் ஆண்டவரே! (14)

ஊரு தெருவாடி உளறிப் புலம்புமெனை
ஆறு தெருவாட அருள்புரிந்தீர் ஆண்டவரே!
சீரும் சிறப்புகளும் சீதனமும் வானிதியும்
பேரும் புதுமைகளும் பெரிதும் உவந்தருள்செய்
நேரும் நிகரில்லா நற்றவமே ஆண்டவரே! (15)

படையோடு ஏமன் பகடேறிச் செய்யிடர்தீர்
விடையேறும் பெருமாளே! வித்தாதி கர்த்தாவே!
கடையேன் கதிபெறவே கருணைத் தயவருளும்
கொடைகொடுத்த கோமானே! குணாநிதியே ஆண்டவரே!
அடைக்கலம் அம்புயத்தாள் ஆதரிப்பீர் ஆண்டவரே! (16)

வித்தாரம் சத்தாரம் மிக்கருளி வானகத்து
முத்தாரம் தந்த முழுமுதலே ஆண்டவரே!
சித்தாரம் ஈந்த செழுநிதியே உங்கள்பதம்
புத்தாரம் எங்கள் பிறவிப்பிணி மருந்து
சித்தர் கணத்தலைவா திருத்தாள் சரண்அரசே! (17)

பஞ்சோ இமயப் பனிபெய் சிகரமிதோ
எஞ்சி மழைபொழிந்து இலங்குகின்ற வெண்முகிலோ!
என்சாமி சீர்சிரத்தின் எழிலார் திருச்சிகைகாண்
மிஞ்சாது நெஞ்சம் மலரடியே தஞ்சமையா
அஞ்சலெனும் செஞ்சொலனே அடிபணிந்தேன் ஆண்டவரே! (18)

பட்டயமோ வான்பிறையோ பரந்தாமர் திருநெற்றி
வட்ட மதி முகத்தில் வளைந்ததிரு வாள்புருவம்
இட்டம் அருள் பழுத்த இருகுவளைத் திருவிழிகள்
மட்டில்லாப் பேரழகார் வடியும் திருநாசி
கட்டழகர் உங்கள் கழல்பணிந்தேன் ஆண்டவரே! (19)

திருவார் முருக்கிதழின் செம்பவளப் பொன்னெழில்வாய்
அருளாள் திருநா அரவிந்த மெல்லிதழோ
திருப்பல்முத் துச்சரமோ செம்மாது ளைவரிசை
குருவார் திருமுகந் தான் கதியொளிரும் வான்மதியோ
அருள்பொழியும் திருமுகத்தின் அழகினுக்கு ஒப்புளதோ? (20)

மாங்கனி யனைவடிவ வளைகதுப்புப் பொற்கன்னம்
பூங்குவளைக் கண்கள் பொலிசங்கு மென்மிடறு
பாங்கானை மத்தகமாம் பரந்த திருமார்பம்
வீங்கு முழவனைய வெற்றித்தார் பூண்திருத்தோள்
ஓங்குமெங்கள் மெய்யரசின் உயரழகுக் கேதிணையே! (21)

பொன்னா லியல்முழவுப் பொலியுமெழில் பக்கங்கள்
தண்ணார் எழில்கதலித் தண்டு திருத்தொடைகள்
கிண்ணம் கவிழ்த்தனைய குமிழார் திருமுழந்தாள்
வண்ணவெண் கலம்விளங்கி வைத்தனைய முன்தாள்கள்
கண்குளிரக் காணிலுயிர்க் களிபொங்கும் உய்ந்திடுங்காண் (22)

மண்மாது மேனி மகிழ்ந்துய் திருனடஞ்செய்
ஒண்ணெழிலார் மென்பதமெம் உயிர்பூண்ட தாள்மலர்கள்
விண்பதும ரேகை விளங்கும் திருவழகு
பண்ணலங் காரர் எழிலைப் பார்க்கில்உயர் பேரின்பம்
கண்ணாளர் நாயகரின் கனிந்தஎழிற் கேதிணையே! (23)

பூங்கொத்து மெல்லசைவும் பொலிதேர் உருள்கனிவும்
பாங்கார் குழவி பயிலும் தளர்நடையும்
தேங்கமழ்தார் பூணரசே (அந்தத்) திருனடையைக் காண்பதென்றோ
நாங்கள் உயிர்களிக்கும் நளினச் சிரசசைவும்
ஈங்கதனைக் காணாது இன்னுயிர்கள் வாடுதம்மா (24)

பூங்குயில்கள் கூவப் பொன்மயில்கள் ஆடிவா
வீங்குபுகழ் அனந்தர் மெய்வேதம் ஓதிநிற்க
ஓங்கும் விராட்தவத்தில் யுகத்தீர்ப்புக் காயமர்ந்தீர்
பாங்கு பொலியும்திரு பரிமளிக்கும் காட்சியினை
ஈங்கு காணாநெஞ்சம் இளைத்துமிக வாடுதையா (25)

நாங்களோ உம்மை நாடிவந்து வேண்டிநின்றோம்?
தாங்களல்ல வோஎம்மைத் தயவால் எடுத்தணைத்தீர்
ஓங்கும் தவத்தரசே! உயர்கருணைத் தேன்கடலே!
தூங்காத ஆண்மைத் துரையே! கழல்பணிந்தோம்
தாங்கி எமைக் காக்கத்திருத் தாள்பணிந்தோம் ஆண்டவரே! (26)

நெஞ்சமெல்லாம் பொய்யுள் நினைவெல்லாம் வஞ்சகம்காண்
பஞ்சைப் பயலென்னைப் பரிந்து எடுத்தணைத்து
வஞ்ச மறலிபல்லைக் கெஞ்ச உதைத்துஎழில்
கஞ்ச மலர்த்தாளும் செஞ்சொலணி ஆபரணம்
எஞ்சாது தஞ்சமருள் இன்கருணைக் கென்கடவேன (27)

நாட்டமெல்லாம் காமம் ஓட்டமெல்லாம் தோகையர்பின்
வாட்டமுற்ற பேதையெனை வலிந்தடிமை கொண்டருளி
வாட்டம் தவிர்த்த வளவரசே! வானரசே!
ஈட்டம் உமது இனிய தயவினுக்கு
காட்டும் கடன்நன்றி கழறறியேன் ஆண்டவரே! (28)

தன்னாலும் புத்தியில்லை தகையோர் இனிதெடுத்துச்
சொன்னாலும் புத்தியில்லை தடுமாறி நின்றேனே
இன்னாள் வலிந்தெடுத்து இமையவருள் சேர்ப்பித்த
மன்னாதி மன்னா வளர்தவத்து மேரேறே
என்னா ருயிர்க்கடனை எங்ஙனம்தீர்ப் பேனரசே! (29)

காசுக்குப் பின்னோடி கனிந்து பணிவிடைசெய்து
ஓசுக்கு ஆசையுற்ற உன்மத்தப் பேயனெனை
நீசனென்றும் பாராமல் நன்கு உவந்தணைத்தீர்
ஈசரே உங்கள்அருள் இன்கருணை வாரிதிக்கு
வாசமுடன் நன்றியெங்ஙன் வழங்கிடுவேன் ஆண்டவரே! (30)

ஊருக்கு உத்தமன்போல் உட்காமப் பித்துடையேன்
பேருக்கு மெய்யன்போல் பிறழ்ந்து திரிந்தேனை
ஆருக்கும் கிட்டாத அமரர்பதத் தேற்றிவைத்தீர்
சீருக்குச் சீரளித்த தெய்வமே உங்களுக்கு
நேரும்நி கருமுண்டோ நன்றியெங்ஙன் நான்புரிவேன் (31)

இருட்குவையுள் இன்பமெண்ணி இளைத்துக் கிடந்தேற்குப்
பொருட்குவையாம் சங்கனிதி பதுமனிதி தானளித்து
அருட்குருவே தாங்களிங்கு ஆண்டுகொண்ட மாண்பெண்ணில்
மருட்குவைகள் மாளுதையா மயக்கம் ஒழியுதையா
திருவார் மலர்த்தாள் சரணம் அடைக்கலமே (32)

மூவாசை விட்டேனோ மூன்றும்தத்த மிட்டேனோ
முன்னான்கு ஆண்டுகளாய் முறைபணியும் செய்தேனோ
தேவாதி தேவா திருஅங்கத் தேற்றீரே!
சாவா வரமளித்த தருமதுரை பேரிரக்கம்
ஆவா உமது அருட்தயவுக் கென்கடவேன் (33)

செய்ந்நன்றி சாற்று இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!