திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/050.திருத்தசாங்கத்தயல்

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



✫50. தசாங்கத்தயல்[தொகு]

இலக்கணம்:-

தசாங்கம் என்னும் இலக்கியம் அரசனின் பத்துவகை உரிமைப் பொருள்களைப் பற்றிப் புகழ்ந்து பாடுதல். அரசனைப் பாடும் போது ஆசிரிய விருத்தப் பாவால் பாடுவது மரபு. அரசரொருவரின் பெயர், மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, குடை, பறை (முரசு), கொடி, செங்கோல் ஆகிய பத்து உறுப்புகளைப் பற்றி, பதினான்கு சீர் ஆசிரிய விருத்தத்தால் பாடப் பெறுவதாகும்.

அரசன் தசாங்க மாசிரிய விருத்தம்
ஐயிரண் டறைவது தசாங்கத் தயலே
- முத்துவீரியம் 1102
பெறுமன்ப னங்கத்தை யாசிரியம் பதினாலு
பேசற் றசாங்கத் தயல்
- பிரபந்த தீபிகை 24
தசாங்கத் தயலே தார்பதி அங்கம் ஈர்
ஐந்தும் ஆசிரிய விருத்தத்து அறைதலே
- பிரபந்த தீபிகை 69

எங்கள் குல தெய்வ தேவேசர் ஞான சிங்காதன பீடமேறி அருளரசாட்சி நடாத்தியருளும் ராஜாதிராஜர். எனவே அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு இப்பனுவல் இயற்றப்பெற்றுள்ளது.

திருத்தசாங்கத்தயல்

காப்பு

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

பூவுல குய்யப் போந்த
பொன்னரங் கையர் வாழ்க
நாவில்சொற் பொருள்வ ழங்க
நற்பதம் பற்றும் மன்னோ
தேவநாட் டரசர் வாழ்க
திருத்தசாங் கத்த யல்ஆம்
பாவினைப் பாடி யேத்த
பதமலர் காப்பதாமே.

திரு நாமம்

பதினான்குசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நாமம் ஆயிரத் திற்கும் ஒருரு
நாதர் சாலைமெய் யாண்டவர்
நலம்பு லமையர் தினம்பு தியவர்
நன்ம லர்ப்பதம் போற்றுவோம்
சேமம் ஆயி ரத்துள் சீர்திகழ்
ஜென்ம சாபல்யம் பெறுவதே
செப்பு தற்கரி தாகும் பொன்னரங்
கையர் வான்புகழ் மாட்சியே
ஆம னுகல்கி அருட்பெ ருஞ் ஜோதி
ஆண்ட வர்மெசி யாவென்பர்
அரியர் வான் மக திகுரு
வாகும் நன்மார்க்க நாதரே
ஓமு தல்உரு மந்த்ர ரூபர்காண்
உலக மாமறை திருவுயர்
உத்தமர் பெருந் திருவு ளத்தய
வாலே உய்ந்தது எங்குலம்
(1)

திருமலை

எங்க ளாருயிர் பொங்கி இன்னருள்
தங்கி ஓர்உரு வாகியே
இணையி லாததோர் எழில்மி ளிர்ந்திட
இமய மேருவாய் நின்றதே
மங்கி டாதொளி வீசு ஞானமார்
மணி கொழித்திடு மாமலை
மரக தம்கோமேத கம்மதும்
வைரமும் வைடூரியம்
எங்கு மெவருமே கண்ட றிந்திடா
ஏரெ ழில்சிரோ ரத்தினம்
இனிய ஐந்தலை நாகமீன்றிடு
ரத்தினம் ஜீவ ரத்தினம்
தங்க வாழ்வுறு சாவு றாநிலை
தருகு மூலிகை சந்தனம்
தாழ்வ கன்றிடத் தேவ வாசனைத்
திரவியம் மிகு மாமலை
(2)

திரு நதி

மலையி லங்குச ரோவ ரம்அது
மானசம் எனும் நாமமே
வற்றி டாஆ காய கங்கையாம்
வாழும் ஜீவனார் மாநதி
அலைம லிந்திடு ஆற்றில் மூழ்குவார்
அறுவர் பாவங்கள் வானதி
அதுபெ ருகியே வளந்த ரஎம(து)|r}}
ஆரு யிரெலாம் செழித்ததே
கலைம லிந்திட நலமி லங்கிட
கடுகி யேஅது பாய்ந்திட
கனிந்துயிர்ப் பயிர் விளைவுறும் பவ
கசடெலாம் கடந் துய்குவார்
தலையுயர்ந்திட உயிர் நலம் பெற
தருகு மாவரம் சாமியே
தான்ப ணிந்தவர் வாழ்வு ஓங்கிடும்
தரும மெய்வழிச் சாலையே!
(3)

திருநாடு

சாலை யாம்வளர் கயிலை நாடிது
சற்ச னாதிகள் வாழ்பதி
சர்வ வேதமா மறை துலங்கிடும்
சத்ய சீலர்தம் நாடிதாம்
ஏல மாமலை எங்குல தெய்வம்
இனிய ஞானச்செங் கோல்புரி
இன்ப நாடிது துன்ப ஏமனின்
இடர்க டத்தியே வீடுற
ஞால மீதுஅஞ் ஞான மாய்கையால்
நல்லோர் துன்புறா வகையினால்
நற்ற வர்அருள் ஆர முதினை
நல்கி உய்த்திடு நாடிதாம்
ஆல முண்டவர் சாலை ஆண்டவர்
அனந்த ராதியர் ஓங்குற
அனைவ ரோர்குலம் ஓரி றைஎன
ஆக்கு சீருயர் நாடிதே!
(4)

திருஊர்

மாந்தர் மெய்வழி சார்ந்து தேவராம்
மாட்சிபெற்ற அனந்த ராம்
வாழு மோர்பதி சாலை ஊரிது
வையத் தில்நிக ரற்ற ஊர்
ஏந்தல் எந்தைஆ ருரர் திருவுளம்
எண்ணி யேபடைத் திட்டஊர்
இங்கு மங்களம் தங்க பேரருள்
பொங்க வானவர் தங்கும் ஊர்
வேந்த ருக்கெலாம் வேந்தர் எம்மிறை
வெங்க லிப்பகை வெவ்வினை
வென்று வெற்றிமே டேற்றி எம்மனோர்
மேன்மக் கள்என ஆக்கும் ஊர்
சாந்தி சாந்தியென் றண்டி னோர்க்கெலாம்
சாயுச்யம் அருள் வாணர் கோன்
சாலை ஆண்டவர் தாள் பணிந்திட
சிந்தை பேரின்பத் தோங்கும் ஊர்
(5)

திரு மாலை

ஓங்கு சீர்அனந் தாதி தேவர்கள்
உத்தமர் தங்கள் ஆருயிர்
ஓரெ ழில்மலர் மாலை யாகவே
வந்து தானணி எங்கள்கோன்
தேங்க மழ்நறுஞ் செண்ப கமணம்
சீர்து லங்கெழில் மேனியர்
செங்கம லத்திருத் தாள்ம லர்களில்
சேர்ந்த மண்ணவர் விண்ணவர்
பூங்கு யில்கிளி பூவை கூவிடும்
பொன்ம யில்களித் தாடிடும்
பொற்ச பையினர் சற்ச னர்தலை
தார்பு னைந்தமெய் ஆண்டவர்
பாங்க றிந்தவர் உய்கு வார்தெய்வ
பாதமே சிரம் சூடுவார்
பாண்டி யர்தமை வேண்டி னோர்பவம்
தாண்டு வார்என்றும் மாண்டிடார்
(6)

திருக்குடை

மாண்டி டாவரம் பெற்ற வானவர்
மாண்பு யர்திரு பொற்சபை
மாத வர்கொலு வீற்றி ருந்தருள்
வான்த வசிம் மாசனம்
பூண்டு எம்சிரம் பொற்றிருப்பதம்
தன்னில் ஓரணி யாகவே
பொற்ப தியெனும் நற்பதிதனில்
போய டங்கிடத் தந்தருள்
ஆண்டி லங்கிடு சந்த்ர வட்டவெண்
கொற்ற மார்குடை தான்மிளிர்
ஆரு யிர்க்கு நிழல்த ருகுடை
மெய்வ ழிக்குல தெய்வமே!
ஆண்டு கொண்டெமக் கருந்து ணைதரு
ஐய னேகொடைக் கையனே!
அருள் வரந்தரஇரு மைவி னைகெட
அமிர்தவாரியும் பொங்குமே
(7)

திருத்தவக்கொடி

பொங்கு மாங்கடல் போல்பு கழ்வளர்
பொன்ன ரங்கர்தம் திருமுனர்
போந்திடும் உயிர் மாதனம் பெறும்
பூதலத்தி லனோர் வம்மினே!
எங்கு மென்றுமே எவரும் செய்திடா
ஈடில் வான்தவத் தார் கொடை
இறப்பி லாவரம் அறப்ப லிஸ்வரர்
ஈகின் றார்பெற முந்துமின்
இங்கு வாருமென் றேகிள் நாமமே
இலங்கும் காவியும் வெண்கொடி
இணையி லாதபூ ராங்கொ டிகளும்
ஏறி விண்ணி லழைக்குதே
தங்க மாகிட வந்து சேர்மினே
தயாநி திபதம் சார்மினே
தரணி யெங்கணும் மெய்வ ழியிது
தகவு யர்ந்தினி தோங்கவே!
(8)

ஞானச் செங்கோல்

இனிது ஓங்குக செங்கோல் என்றிவண்
இப்பு வியர சென்னுவார்
இவர்கள் காலமும் ஒப்ப ளவுடன்
எல்லையும் வரை உண்டுகாண்
நனிதிகழ் உயர் நங்கள் சாலையர்
நாட்டும் ஞானச்செங் கோலது
நாடு காலமும் எல்லை ஒப்பது
நாமுரைக்க வல்லோமல்லேம்
தனியர செங்கள் தருமர் மெய்வழிச்
சாலை ஆண்டவர் ஆட்சியில்
சப்தபா பாதிகளும் இன்றியே
சமூகமெங்கும் இலங்குதே
முனிவ ராதிய மூத்தோர் நற்குடி
மகிழ்ந்து வாழுமெய்ச் சாலையே
முற்றும் நீதிச் செங்கோ லிலங்கிடும்
மெய்மை ஒங்கி விளங்குதே
(9)

தவமுரசு

விளங்கு மெய்வழிச் சாலை யம்பதி
வேந்தரின் திரு ஆட்சியில்
வெற்றியோங்கு முரசதிர்ந்திவண்
மெய்யர் தம்மை யழைக்குதே
களங்க மில்அனந் தாதி தேவர்கள்
கரதலந்தனில் ஓங்கியே
கர்த்தர் சன்னதிவ ணக்க மேசெய
கடுகி வாருமென் றிசைக்குமே
பளிங்கு மாமணி மேடை வீற்றுள
பாண்டி யர்தமர் ஆணையை
பாரகத்தினர் கேண் மினென்றுமே
பகருமே நகரா ஒலி
துளங்கு மெங்களின் மெய்க்கு லம்எனத்
'துடும் துடும்' என முழங்குமே
தூயர் மெய்வழிச் சாலை ஆண்டவர்
தாள் பணிந்தினி தேற்றுவோம்
(10)

திருத்தசாங்கத்தயல் இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!