திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/062.எழில் நவமணிமாலை
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
62. நவமணிமாலை
[தொகு]இலக்கணம்:-
நவமணிமாலை அதாவது ஒன்பது மணிகளால் ஆனமாலை என இலக்கணச் சான்றோர் வகுத்துள்ளனர்.
வெண்பா முதலா வேறோர் ஒன்பது நண்பாக் கூறல் நவமணி மாலை - இலக்கணவிளக்கம் 837
அந்தாதித்து வெண்பா வாதிய பாவும் பாவினமு மாக வொன்பது செய்யு ளணிபெறச் செப்புவதுதான் நவமணி மாலையா நாடுங்காலே - முத்துவீரியம் 1051
நவமணி மாலை நாட்டுங் காலை நவிலும் இலக்கண வெண்பா முதலா வேறுபடு பாவால் இனமுதல் அந்தாதித்து இசைப்பர் ஒன்பா னே - பிரபந்த தீபம் 25
விருத்தமொன் றந்தாதித் தொன்பது வழங்கல் நவமணி மாலை - பிரபந்த மரபியல் 11
எம்பெருமானை ஒன்பது வகையான பாக்களால் அந்தாதித்துப் பாடும் பொருண்மையுடையது இந்நவமணி மாலை.
எழில் நவமணிமாலை
காப்பு
இன்னிசை வெண்பா
ஒன்றே குலம்தெய்வம் ஒன்றே எனமூலர்
அன்றுரைத்த நீதம் அனைத்தும் நிறைவேற்ற
நன்றே எழுந்தருள்செய் நாதா நின்தாள்காப்பு
என்றும் மறவோம் அருள்.
நூல்
1. நேரிசை வெண்பா
அருளமிர்த வாரியது பொங்கி உலகோர்
மருளொழிய இன்பம் வழங்கும் - பெரும்பதமாம்
மெய்வழியில் உய்யவைத்த ஐயரடி கைபிடித்தோம்
தெய்வமே! காப்பீர் எமை. (1)
2. சிந்தடி வஞ்சிப்பா
எமதிறைதரும் அருளமுதுண இருவினையறும்
எமபடர்பயம் இடர்துயர்கெடும் இனியவாழ்வுறும்
அழிவிலாப்பதி அதுநிலைபெறும் மதிதெளிவுறும்
வழியிதற்கெலாம் வளருமெய்வழி வழிப்படுவதே
அறுவகைப்பிழை அறவொழித்திடு நெறிதனிலிரு
மறுபிறப்புறு குருதிருமணி வயிறதனிலேபிறப்புறில்
துறக்கமே திறக்குமே தரணியீர்!
சிறக்கவே மெய்வழி தொடர்வதே செய்வழி. (2)
3. வெள்ளொத்தாழிசை
செய்வழி காணாத் தெளியா உலகீர்க்கு
உய்வழி காட்டிக் குலம்நெறி ஒன்றென்று
மெய்வழி தந்தார் பரன்
சாநெறி யேகிச் சகமெல்லாம் வீழ்நாளில்
தூநெறி காட்டித் துரியபதம் ஈந்தார்காண்
வானாடர் வள்ளல் பிரான்
தன்னைத் தலைவரைத் தானறி யாமாந்தர்
தன்னைத் தலைவரைத் தானறி வான்நெறியாய்த்
தன்னையே காட்டும் பரன். (3)
4. அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பரனெனுமெய் வழித்தேவே பதமலரே கதியெனவே பற்றி உய்ந்தேம்
சிரமலரே உமதுபதம் படிந்திடவே பணிந்தனம்முத் தாபம் தீர்ந்தோம்
கரமதுவே திருப்பணிக்கே பதமதுவே அறவலம்செய் பணிக்கே ஆக்கி
இருவிழிகள் தரிசனைக்கே செவிகளருள் அமுதுபெறச் செய்தோம் தேவே! (4)
5. அடிமறிமண்டில வெளிவிருத்தம்
தேவா! தேவா! தோத்தரிக்கின்றோம் குருநாதா!
மூவா முதல்வா! மாதவ வேந்தே குருநாதா!
ஓவா தின்பம் ஈந்தீர் உய்ந்தோம் குருநாதா!
சாவாத் தன்மை தந்தீர் சரணம் குருநாதா! (5)
6. ஆசிரியத் தாழிசை
நாதர்ஆதி ஞாலம் உய்ய
நீதி மெய்யை நிலைக்கச் செய்ய
போதந் தார்காண் போற்றி! போற்றி!
வேதம் யாவும் மெய்கொண் டிங்கண்
தீதில் காட்சி, கேள்வி ஈந்து
சாதல் மீட்டார் போற்றி! போற்றி!
ஓதும் உன்னும் மக்கள் ஓங்கும்
நீதம் ஒன்றே என்றே செய்த
பாதம் போற்றி! போற்றி! போற்றி! (6)
7. கலிவிருத்தம்
போற்றி மெய்வழி தெய்வப் பதாம்புயம்
ஏற்றிப் பாடி இறைஞ்சி வணங்குவாம்
கூற்றை வென்றிடும் கோதில் வரந்தரு
ஆற்றல் சான்றவர் ஐயர்மெய்த் தெய்வமே! (7)
8. கட்டளைக் கலிப்பா
தெய்வ மென்பது மெய்வழி தெய்வமே
தீதிலாநெறி சேர்தரு தெய்வமே
உய்வ திங்கினி துற்றவர் மீண்டிடும்
உறுதியற்றவர் கூற்றினில் மாண்டிடும்
செய்வ தென்பது தெய்வ வணக்கமே
சீரிலாதவர் நரகிற் கிணக்கமே
மெய்வழி தெய்வப் பாசுரம் பாடுவோம்
மாத வர்திரு வான்புகழ் நீடவே (8)
9. பஃறொடை வெண்பா
நீடாழி சூழுலகில் நீதி மனுக்குலந்தான்
வாடாத் தவனெறியில் வாழவென்று தேடரிய
மெய்ச்செல்வம் தன்னை மிகவருளும் எங்களுயிர்
தெய்வத் திருமலர்த்தாள் தோத்தரித்தேன் ஐயர்தம்
செந்தா மரைப்பாதம் தேன்பிலிற்ற மாந்தியுயிர்
நந்தா விளக்கெரிய நாங்களுய்ந்தோம் சிந்தா
மணிகொடுத்து வானாடர் மாதவத்தாள் பெற்ற
அணிகொடுத்து எங்களையும் ஆண்டார் பணிந்துய்ந்தோம்
மாரணத் துன்பம் தவிர்ந்து நிகரற்ற
ஆரணம் ஆகமங்கள் அத்தனைக்கும் காரணமாய்
எல்லாம்வல் லார்க்குற்ற ஏர்புடைய சந்ததியாய்
பொல்லாப் பிறப்பொழிந்து புண்ணியராய்க் கல்லாரும்
கற்றோரும் இன்பக் களிப்படையச் செய்தயவை
எற்றே எளியேன் இசைப்பேனோ பொற்றாளைப்
பற்றிச் சிரஞ்சூடிப் பாருலகோர் மெய்வழியார்
பெற்றபிள்ளை என்றுமிகப் பேசிடவும் சுற்றித்
திரிவேனென் சிந்தையில் தெய்வஅருள் பொங்கிப்
பெரிதைப் பெரிதென்று பாடி அரிதான
சற்சங்கம் சேர்ந்தினிது சாயுச்யம் தந்தருளப்
பொற்றாளைப் போற்றும் பணிந்து. (9)
- Subpages
- மெய்வழி பக்தி இலக்கியங்கள்
- மெய்வழி அடியார்களின் படைப்புகள்
- சமய இலக்கியம்
- அகரமுதலான வரிசையில் படைப்புகள்
- இறையியல்
- சிற்றிலக்கியங்கள்
- திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108
- கவிதைகள்
- திரட்டு நூல்கள்
- 2017 படைப்புகள்
- பாடல்கள்
- தற்கால புலவர்களின் படைப்புகள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றிய 108 வகைப் பிரபந்தங்கள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் படைப்புகள்