திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/068.நறு நொச்சி மாலை
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
✫ 68. நொச்சி மாலை
[தொகு]இலக்கணம்:-
பகை அரசனால் முற்றுகையிடப்பெற்ற தன் மதிலைக் காக்கும் பொருட்டு கோட்டைக்குள் இருக்கும் அரசன் நொச்சிப்பூச் சூடிப் பொருதுவது நொச்சி மாலை எனப் பெயர் பெறும்.
கோலிய மாற்றார் கோட லின்றி நொச்சி வேய்ந் தகலெயி னோக்குந் திறனை வழுத்துதல் நொச்சி மாலை யாகும். - முத்து வீரியம் 1075
நொச்சி மாலையே நொச்சித்தார் சூடி ஊர்ப்புறத்து ஊன்றிய ஒன்னலர்க் கோடாமல் கோட்டையைக் காக்கும் கொள்கையைக் கூறலே - பிரபந்த தீபம் 47
கமையாய்ப் புறத்தகத் தூன்றிவலி பேசிடும் கள்ளர்கட் கோடலின்றிக் கந்த நொச் சியின்மாலை சூடித்தன் மதில் காத்தல் கழறனொச்சியின் மாலை - பிரபந்த தீபிகை 16
பகர் மதிலைக் காக்குமது நொச்சி - சிதம்பரப் பாட்டியல் 38
புறத்தூன்றிய மாற்றார்க் கோடலின்றி நொச்சிப்பூ மாலை சூடித்தன் மதில் காக்குந் திறங் கூறுவது - தொன்னூல் விளக்கவுரை 20
கலியென்னும் மாயை அரசனால் முற்றுகையிடப்பெற்ற நரனின் இதயமாளிகையில் குடியேறி, அந்நரனை மனுவாக்கி, மறுபிறப்பருளி, அம்மனுவைத் தேவனாக்கி, உய்கதியடையச் செய்யும் அறப்போரினை எங்கள் குலதெய்வ தேவேசராகிய பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் செய்கிறார்கள்; வெற்றி பெறுகிறார்கள் என்னும் பொருண்மையுடையது இந்நூல்.
நறு நொச்சி மாலை
காப்பு
அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்
நச்சினார்க் கினியர் தெய்வ
நாயகர் திருத்தாள் போற்றி
நச்சுடைக் கலியன் தன்னை
நற்றவர் வெல்ல வென்று
நொச்சியின் மாலை சூடி
நல்லரண் காத்தல் பாட
இச்சையுற் றேனென் தேவே!
இருமலர்ப் பதங்கள் காப்பே!
நூல்
கலிவிருத்தம்
ஆதிதேவன்
ஆதி தேவன் அவதரித் திங்ஙனே
நீதிக் கோட்டை நிறுவி அறஞ்செய்யும்
வேத மெய்ம்மை விளங்குமெய்ச் சாலையை
தீது டைக்கலி யன்முற்று கையிடும் (1)
பரமர்
யாவு மேபடைத் தேவளர் வித்திடும்
தேவ தேவன் படைப்பினைத் தீவழி
மேவ வைத்திடு வேனென்று வெங்கலிப்
பாவி தன்னைஎ திர்க்கும் பரமரே! (2)
கலி
வஞ்ச கண்கலி வையக மாந்தரை
வெஞ்ச மர்தனில் வீழ்த்திட எண்ணியே
நெஞ்சில் எண்ணிப்பல் லாயுதம் ஏந்தியே
மிஞ்சி முற்றுகை யிட்டனன் இங்ஙனே! (3)
காமம்
காமம் என்னும் கடியவல் லாயுதம்
சேமம் தன்னையே சீரழித் தெம்மனோர்
தீமைக் கஞ்சாத தீவழி போக்கிடும்
மாமணி யர்தம் மக்கள் மயங்கிடும் (4)
குரோதம்
குரோதம் என்னும் கொடியப டையினை
விரோத மாக எழுப்பிச் செலுத்தினான்
வரோத யர்தம் மக்களின் நெஞ்சுளே
துரோக மாகச் செலுத்தி நெருக்கினான் (5)
மோகம்
மோக மென்னும்வீ ணப்ப டைஅருட்
தாகம் மிக்கவர் தம்மைஇ டர்செயும்
நாக நஞ்சென நல்லர் கலங்கிட
வேகங் கொண்டு மயக்கம் மிகச்செயும் (6)
மதம்
மதமெ னும்கொடு வெங்கலி விஞ்சியே
இதமகி தம்ம னைத்தும் கெடுத்துமே
பதம்பெ றவரும் பாண்டியர் மக்களை
வதம்செ யவ்வென வீறி எழுந்திடும் (7)
லோபம்
லோப மென்னுமத் தீக்குண வெம்படை
பூப தியினர் மக்களை வெல்லவே
கோபம் கொண்டு குணத்தைக் கெடுத்துமே
பாபம் செய்யப் பணித்தது வஞ்சமாய் (8)
சாதிவெறி
சாதி யின்வெறி என்னுமவ் வேற்படை
நீதி தன்னை அழித்திட வீறியே
வேத வேதியர் சார்ந்திடு மாந்தரை
தீது செய்திடத் தூண்டிட லானதே (9)
புலையுணல்
புலையு ணல்எனும் பேதகப் பண்பது
நலமி ழந்திட நாசம்செய் ஓர்படை
குலகு ருபதம் போற்றுபுண் ணியரை
பலமொ டேஎதிர் செய்தது காண்மினே! (10)
கொலை
கொலையெ னும்கொடு பாதகத் தீங்கது
நிலையில் நெஞ்சரை வஞ்சகம் செய்தது
வலையில் வீழ்மரை போலக்கெ டுக்குமே
கலகம் செய்கொடும் பாதக மாமிது (11)
களவு
களவு சூது பொய் வஞ்சகத் தீங்குகள்
உளம்பு குந்துமக் கள்நெறி மாறவே
அளவில் தீங்குகள் அன்னவை செய்தன
துளபத் தாளினர் தோன்றலர் போந்த கால் (12)
கள்
கள்ச்சா ராயமாம் போதைப்பொ ருட்படை
உள்ளம் மற்றுடல் யாவும் கெடுத்தன
கள்ளன் அந்தக் கலியனின் ஆயுதம்
வெள்ளம் போல புரண்டிவண் மேவின (13)
புகை
புகையெ னும்பகை பூதலத் தோர்க்களை
அகம்பு றம்கெட அதம்செய லானது
சுகம்ம திப்புபோல் தோற்றம் கொடுத்துமே
இகப ரம்இரண் டும்கெடச் செய்ததே (14)
சன்னதம்
என்பி ளகத்த வம்செய்து சன்னதம்
பன்னி ரண்டு பதிந்த திருக்கரர்
மன்னு மாதவர் மாட்சியர் ஆட்சியில்
வின்னம் செய்யுமவ் வெங்கலி வீய்ந்ததே (15)
மெய்வழி
மெய்வ ழிக்கதி ரோன்சுடர் வீச்சினால்
பொய்ம்ம லங்கள் பொடிந்து மடிந்தன
ஐயர் மெய்வழி ஆண்டவர் சாலையில்
வெய்ய ஏமன் வெருவி மறைந்தனன் (16)
கிரணக்கதிர்
ஓர்க திர்கிர ணத்தில் விலகிடும்
கூரி யகொடும் காரிருள் போலுமே
ஆர்ப்ப ரித்து எழுந்தக லிப்படை
வேர்ப றித்த மரமென வீழ்ந்ததே (17)
எங்கள் நாயகர்
பொங்கு தீக்குண வெம்படை கொண்டுமே
வெங்க லியனும் முற்றுகை யிட்டனன்
எங்கள் நாயகர் தங்க மகாமேரு
பொங்கி யேயெழுந் தேகலி வென்றனர் (18)
திருக்கடைக் கண்ணோக்கம்
மிக்க டர்ந்தேதோர் முட்புதர்க் கானகம்
அக்கி னிபட்ட ழிந்து நீறானபோல்
சொக்கர் எம்மான் திருக்கடை நோக்குற
துக்கம் செய்கலி தோற்று மடிந்தனன் (19)
தண்ணளி
மண்மக்க கள்தமை விண்மக்க ளாக்கிடும்
அண்ணல் சாலை அருட்பெருஞ் ஜோதியர்
புண்ப டுத்திக் கலியர சாட்சியை
தண்ண ளியரு ளால்வதம் செய்தனர் (20)
ஆக்ஞை
மெத்த தற்புகழ்ந் தார்ப்பரி வெங்கலி
முத்தர் தம்தலை வர்எங்கள் சீருயர்
அத்தன் மெய்வழி ஆண்டவர் ஆக்ஞையால்
எத்தி ஓடி ஒழிந்தது புன்கலி (21)
திருவருள்
அயல வன்கலி ஆரிருள் மண்டியே
துயர்செய் காலம் திருவருள் கூட்டிட
இயல்வை குண்டர் இமைய வர்வந்து
மயர்வ றுத்தனர் மெய்ந்நிலை நாட்டினார் (22)
மறுபிறப்பு
வீண்வி ளைபவ வேடிக்கை காட்டியே
வீணன் வெங்கலி மாந்தரை மாய்த்தனன்
ஆண்கு ருவென ஐயன்வந் தேயெமை
மாண்பு ளோராய் மறுபிறப் பாக்கினர் (23)
அவா அறுத்தல்
மண்ணின் ஆசையால் மாந்தர் படும்துயர்
எண்ணி லாக்கலி ஏறி மிதித்திடும்
அண்ணல் வந்து அவாஅறுத் தாற்றலால்
விண்ண வரென ஆக்கியே மீட்டனர் (24)
பெண்ணாசை
பெண்ணின் ஆசைப்பெ ருக்கிந்த ஞாலத்தில்
எண்ணம் தன்னில் எழுந்துயிர் வாட்டிடும்
கண்ணி யம்கார் ஜீவமெய்ப் பண்டிதர்
விண்ணின் செல்வம் வழங்கியுய் வித்தனர் (25)
உறக்கமில் தவம்
புறப்ப கையோர் படையன்று மாந்தரீர்!
அறப்ப கையன் அழிகலி ஆசைகள்
உறக்க மில்தவம் ஓங்கு வலிமையால்
அறவே அன்னவை யாவும் மடிந்தன (26)
நான்
நான்எ னதென நத்திடும் ஆணவம்
தான்க லியனின் தன்பெரு ஆயுதம்
வான வர்எங்கள் மெய்வழி ஆண்டவர்
ஈனம் மாற்றி இறைநெறிக் காக்கினார் (27)
தரிசனை
ஒருத ரிசனை இருவினை தீர்த்தது
கருகிக் காமம் கழிந்தொழிந் தேகிற்று
மருகி மருகிக்கண் ணீர்வழிந் தன்பர்கள்
உருகி நெஞ்சம் உவந்தபேர் உய்ந்தனர் (28)
ஒருமொழி கீதை
உயிரினிக்கும் ஒருமொழி கீதையால்
செயிரெ னும்கலி தீர்ந்து மடிந்தனன்
அயர்வில் எந்தை அருட்செய் திறத்தினால்
துயர்க ழிந்துமெய்ச் சுடரும் எழுந்தது (29)
மனுமகன் வேலை
இனிக்க லியனுக் இங்கிலை வேலையே
தனியு கம்செயல் மனுமகன் வேலையே
தனித்த லைமையைப் பணிவதெம் வேலையே
நனியெ மைக்காத்தல் நாதரின் வேலையே (30)
- Subpages
- மெய்வழி பக்தி இலக்கியங்கள்
- மெய்வழி அடியார்களின் படைப்புகள்
- சமய இலக்கியம்
- அகரமுதலான வரிசையில் படைப்புகள்
- இறையியல்
- சிற்றிலக்கியங்கள்
- திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108
- கவிதைகள்
- திரட்டு நூல்கள்
- 2017 படைப்புகள்
- பாடல்கள்
- தற்கால புலவர்களின் படைப்புகள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றிய 108 வகைப் பிரபந்தங்கள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் படைப்புகள்